அன்பின் பதிவர்களே
கடந்த சூலை 13ம் நாள் துவங்கி 19ம் நாள் வரை வலைச்சரத்தின் ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய அருமை நண்பர் ஆ.ஞானசேகரனை வாழ்த்தி விடையளிக்கும் பதிவு இது.
சூலை 19 / 20 - இன்னாட்களில் நான் அயலகம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்த படியாலும் - இணையம் - தமிழ் எழுத்துரு இல்லாத காரணத்தினாலும் அவருக்கு வாழ்த்துரை இடுகை இட இயலவில்லை.
நண்பர் ஞானசேகரனின் அயராத உழைப்பும் தளராத பொறுமையும் பாராட்டுக்குரியவை. ஏழு நாட்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களின் சிறந்த இடுகைகளாக இருநூறுக்கும் மேற்பட்ட இடுகைகளின் சுட்டிகள் கொடுத்து ஏற்ற பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றியதற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை வலைச்சரம் சார்பினில் பொறுப்பாசிரியர் என்ற முறையில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவர் பெற்ற மறுமொழிகளோ ஏறத்தாழ 350.
நன்றி ஞான சேகரன் - நல்வாழ்த்துகள் ஞான சேகரன்
சீனா
-------------
சோதனை மறுமொழி
ReplyDelete// cheena (சீனா) said...
ReplyDeleteசோதனை மறுமொழி//
:)
சோதனை பின்னூட்டம் !
நன்றி அய்யா
ReplyDelete