அன்பின் சக பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் பழமை பேசி அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று - தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்து - மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூறு மறுமொழிகள் பெற்றுள்ளார். அவர் அறிமுகப் படுத்திய பதிவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபத்து ஒன்று ஆகும்.
அவர் புதுமையான முறையில் இடுகைகளில் சங்க காலப் பாடல்களில் ஒன்றினை அறிமுகப் படுத்தி அதற்கு விளக்கமும் அளித்து அதன் பின்னர் அறிமுகப் படலத்தினை அரங்கேற்றி இருக்கிறார். சில இடுகைகளில் நமக்குத் தெரியாத - வழக்கொழிந்த சொற்களையோ - வட்டார வழக்குச் சொற்களையோ அறிமுகப்படுத்தி அதற்கும் பொருள் கூறி இருக்கிறார். பல சொற்களுக்கு எதிர்ப்பதங்கள் கூறி - அவைகளைப் பயன் படுத்த வேண்டுமென வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.
நான் இடுகைகள் இடும் போது பழமை பேசி வந்து தலயில் குட்டுவாரே அல்லது குட்டிக்கொள்வாரே எனப் பயந்து சொற்களைக் கவனமாகக் கையாளுவதுண்டு. அமெரிக்க நாட்டில் பணி புரிந்தாலும் தமிழை மறவாமல் - குறிப்பாக கோவையின் வட்டாரச் சொற்களை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.
நண்பரை நல்வாழ்த்து கலந்த நன்றி கூறி வலைச்சரத்தின் சார்பினில் விடை அளிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து 10ம் நாள் துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நமது மதுரையைச் சார்ந்த நண்பர் ஸ்ரீ அவர்கள். "சொல்லிக்கற மாதிரி எதுவுமில்ல" ன்னு தன்னடக்கத்துடன் அறிமுகம் தருகிறார். அவரது அனுபவங்கள், சிந்தனைகள், படித்தவைகள் போன்றவற்றினை இடுகைகளாக இடுவதற்காகத் துவங்கப்பட்ட பதிவு " ஸ்ரீ ". இவர் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறார்.
அருமை நண்பர் ஸ்ரீ அவர்களை வருக வருக என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சீனா......
----------------
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி பழமைபேசி
ReplyDeleteவருக ஸ்ரீ
அன்பின் ஜமாலு - காத்துக்கிட்டு இருப்பீங்களோ - நன்றி
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நன்றி பழமைபேசி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீ!
அனைவருக்கும் நன்றி!
ReplyDeleteமற்றும் பின்தொடர இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்!