Monday, August 17, 2009

புத்திசாலிகளுக்கான பதிவுகள்


கவிதைகள், கதைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை பதிவுகள் தான் பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன பதிவுலகில்.. ஆனால் அதையும் தாண்டி சுவை மிக்க பதிவுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று தான் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் பதிவுகள். புதிர்களுக்கு விடை சொல்ல மட்டும் அல்ல.. புதிர்களை கேக்கவும் அபாரமான திறமை வேண்டும்..

விடுகதைகள், குறுக்கெழுத்துப்புதிர்கள், புதிர்க்கணக்குகள் இப்படி மூளைக்கு வேலை வைக்கும் பதிவுகளைப்பற்றி இந்த இடுகையில் பார்க்கலாம்..

யோசிங்க :
மிக சுவாரஸ்யமான (இந்த வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன.. தெரிந்தால் சொல்லுங்களேன்) வலைப்பூ... இவரை அறிமுகப்படுத்த தேவையில்லை.. 2004 இல் இருந்து யோசிக்க வைத்து கொண்டிருக்கிறார்.. விதவிதமான புதிர்கள். எப்படித்தான் சேகரித்தார் என்று தெரியவில்லை. மொத்த இடுகைகள் முந்நூறை தாண்டி விட்டது.. (அம்மாடியோவ்..)

பொழுது போகாமல் கணினி முன்னால் இருக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக கழிக்க மிகச்சரியான தேர்வு, இவரது வலைப்பூ..

உதாரணத்துக்கு ஒரு கேள்வி:

தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?


இப்படி இன்னும் கலகலப்பான புதிர்களுக்கு சொடுக்குங்கள்:

குறுஞ்செய்தியில் குட்டி கணக்கு
வார்த்தை விளையாட்டு
கோலி

ஜன்னல் வழியே:

புத்திசாலிகளுக்கான இன்னொரு பதிவு.. வாரா வாரம் புதிர்க்கணக்குகள், கணித கேள்விகள் வெளியிடுகிறார். கட்டாயம் மூளையை கசக்க வைக்கும்.. நானும் முயற்சிக்கிறேன். இன்னும் ஒன்றுக்கு கூட சரியான விடையை கண்டு பிடிக்க முடிய வில்லை.. இந்த தளமும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இந்த வார கணக்குகள்


இலவசம்:

இன்னொரு பிரபலம். குறுக்கெழுத்து புதிர்கள் இவரது சிறப்பம்சம். பத்திரிகைகளில் குறுக்கெழுத்து பக்கத்தை முதலில் படிப்பவரா.. உங்களுக்கான தளம் இவருடையது. பொதுவாக தமிழ் பத்திரிகைகளில் குறிப்பிடும்படியாக குறுக்கெழுத்து போட்டிகள் வருவதில்லை. அந்த குறையை இவரது குறுக்கெழுத்து புதிர்கள் போக்குகின்றன..


இவரது குறுக்கெழுத்து புதிர்களை விளையாட இங்கு கிளிக்கவும் .

********

இந்த தொகுப்பு உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒரு சுவையான தொகுப்போடு அடுத்த இடுகையில் சந்திக்கலாம்..

கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியபடுத்தி, என்னை சிறப்பாக செயல்பட உதவுங்கள்..

நன்றி


13 comments:

  1. அப்படின்னா எங்களுக்கு இல்லையா பாஸ்

    ReplyDelete
  2. அட போட வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
    -வித்யா

    ReplyDelete
  3. வித்தியாசமான வலைப்பூக்களின் அறிமுகம். நான் இதுவரைப் பார்த்ததில்லை. சுவாரஸ்யமாகவே(எனக்கும் தமிழில் சரியாகத் தெரியவில்லை. ரசிக்கும்படி என்று சொல்லலாமா?) இருக்கின்றன. நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. இதுக்கு வந்து பின்னூட்டம் போடலைன்னா தலைப்பு பார்த்து நமக்கு சம்பந்தமில்லைன்னு போய்ட்டேன்னு ஆய்டும்கறாதால இந்த பின்னூட்டம்!

    ReplyDelete
  5. உன்கிட்ட மொதல்லயே சொன்னேன்ல, தலைப்புல என்னோட பேரப் போடதன்னு..!

    ReplyDelete
  6. யோசிங்க :

    இவரைமுன்பே படித்து இருக்கிறேன்.

    நீங்கள் பத்ரியின் கணக்கு பதிவினை படித்து இருக்கிறீர்களா...?

    http://kanakku.blogspot.com

    அருமையான பதிவு... துருதுஷ்டவசமாக பதிவினை அவர் தொடரவில்லை.

    ReplyDelete
  7. நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete
  8. புத்தி சாலிகளுக்காக ஒரு புத்திசாலியால் தேடிப் ப்டித்து அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் - நன்று லோகு

    நல்வாழ்த்துகள் - யாரது தியாகு - உன் நண்பனா

    ReplyDelete
  9. வித்தியாசமான அறிமுகங்கள்.. கலக்குங்க

    ReplyDelete
  10. நன்றி ஜமால் அண்ணா.. அது உங்களுக்கு மட்டுமான பதிவுகள்..

    நன்றி வித்யா அவர்களே

    நன்றி சேரல் அவர்களே

    நன்றி பரிசல் அண்ணா.. பின்னூட்டம் போட்டாலும், போடாட்டியும் நீங்க புத்திசாலி தான்..

    நன்றி ராஜு.. நீ அறிவாளிதான் ஒத்துக்குறோம்..

    நன்றி கிருஷ்ண பிரபு அவர்களே.. கணக்கு பதிவினை நீங்கள் சொல்லித்தான் பார்த்தேன்.. தொடராது வருத்தம்,.

    நன்றி ராஜா சார்..


    நன்றி சீனா அய்யா (தியாகு எனக்கு தெரியாது.. அவர் என் மேல் கொண்ட அன்பினால் எழுதியிருப்பார், அல்லது யதேச்சையாக நடந்து இருக்கலாம்)


    நன்றி கார்த்திக் அண்ணா..

    ReplyDelete
  11. வித்தியாசமான அறிமுகங்கள்

    ReplyDelete
  12. மிக்க நன்றி லோகு என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு. விடை கிடைக்கும் கணக்கு சுவையாக இருக்காது.கிடைக்காத விடையை தேடிச் செல்வதில் தான் இன்பமே இருக்கிறது.தொடர்ந்து நீங்கள் முயற்சிப்பதற்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  13. நன்றி சக்தி அவர்களே..

    நன்றி பாஸ்கரன் அண்ணா..

    ReplyDelete