ஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.
நசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.
குடுகுடுப்பை : நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.
நசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா ? அது உங்களுக்கு இருக்கா? சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.
குடுகுடுப்பை : ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர். ரொம்ப பகடியா எழுதறாப்ள.
அதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .
திடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .
தன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.
பெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம், கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .
நசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா?
குடுகுடுப்பை : நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ?
நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?
குடுகுடுப்பை : யாழ்ப்பாணம் கள்ளும், கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார். போதுமா?
நசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு?
குடுகுடுப்பை : அது லோக்கல் ஆளுதான், ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார். இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.
இந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.
நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?
குடுகுடுப்பை : இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பாருங்க, பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.
நசரேயன் : வழியுதா? அப்ப ஒகே ?நமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
குடுகுடுப்பை : அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம், இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம், நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன். இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க, பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும். அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது. கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.
நசரேயன்: என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்
குடுகுடுப்பை : ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார், நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன், நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.
நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.
குடுகுடுப்பை : போட்டிரலாம் ஆனால் அவரு பேர "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.
நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?
குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.
பிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.
//
ReplyDeleteபிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.
//
போட்டாச்சுபா...
ஆமா...உங்களை உங்க கடைப்பக்கம் காணோமேன்னு தேடிக்கிட்டு இருந்தா இங்க என்ன பண்றீங்க...
//நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?//
ReplyDeleteதளபதி காரியத்தில கண்ணாத்தான் இருக்காரு
(ஓட்டு போட்டாச்சு)
எனக்கு ஒரு கனவு பாட்டாவது கொடுங்க
ReplyDeleteஅருமை அருமை குடுகுடுப்பை - புதிய முறையில் அறிமுகம் - நல்வாழ்த்துகள்
ReplyDelete// நசரேயன் said...
ReplyDeleteஎனக்கு ஒரு கனவு பாட்டாவது கொடுங்க
//
உங்களுக்கு ஒரு பாட்டு இருக்காம். தூங்கிக்கிட்டு இருக்குற கன்னிகாவைப் பாத்து - "மலர்களைப் போல் தங்கையை" ரீமிக்ஸ் போட்டுருக்காங்களாம்.
:-) நல்லாருக்கே இந்த அறிமுகம்!! ஆனாலும் நசரேயன் தனித்துத் தெரிகிறார் - கடைசி வரியிலே...:)))
ReplyDeleteஷண்முகப்பிரியன் சாரை சரியான முறையில் தமிழ்திரை உலகம் பயன்படுத்தவில்லை என்பது எனது தனிப்பட்ட கணிப்பு.
ReplyDeleteவித்தியாசமான ஒரு அறிமுகம். நகைச்சுவையுடன், அவரது பல பதிவுகளை வெளிச்சமிட்டது, எளிதானதில்லை. ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஷண்முக பிரியன் அவர்களை மிக சிறப்பாக பாராட்டி இருக்கின்றீர்கள் குடு குடுப்பை... நன்றி
ReplyDelete