Monday, November 23, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்...

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், பரிந்துரை செய்த ரம்யா அக்காவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சர மற்றும் வலைபதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஒரு சென்னை வாசி. கல்லூரி முடித்து தற்போது கணினி துறையில் பணி புரிந்து வருகிறேன். 2008ல் வலை பதிவு எழுத ஆரம்பித்து 30க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதில் கதை, கவிதை, மொக்கை என பல. நான் ஆங்கிலத்தில் (Mr-Message) என்ற ஒரு வலைபதிவும் எழுதிவருகிறேன்.

இயல், இசை, நாடகம் என அனைத்தயும் வளர்த்த நம் தமிழ். இப்போது நமது வலைப்பதிவர்கள் மூலமாக வளர்கிறது.ஒவொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதை தேடி நாம் நம் வாழ்வில் வெற்றி என்னும் கொடியை நாட்ட வேண்டும். அந்த பணியில் வலைசரத்தின் பங்கு மிகவும் வியக்கும் அளவிற்கு உள்ளது.

தினமும் அறிமுகம் பகுதியில் நான் எழுதவிருக்கும் இல்லை அறிமுகபடுத்தவிருக்கும் முகங்கள் நீங்கள் அறிந்தவராகவும் இருக்கலாம் அறியாதவர்களாகவும் இருக்கலாம். அந்த அறிமுக படலத்திற்கு நான் அளித்த தலைப்பு இது: (பறவைகள் பல, குஞ்சுகள் சிலபல/பலசில, முட்டைகள் சில)

பறவைகள் பல: இதுவரை பல பதிவுகளை வெற்றிகரமாக பதித்து வலையுலகில் நிலையான இடம் பிடித்த பறவைகள்.

குஞ்சுகள் சிலபல/பலசில: இடைப்பட்ட இவர்கள் பதிவுகள் பல எழுதி சில வெற்றியும் கண்டவர்கள்.

முட்டைகள் சில: புதிதாக பதிவுலகில் பல கனவுகளுடன் நிலையான இடம் பிடிப்பதற்க்காக எழுத ஆரம்பித்திருக்கும் சில முட்டைகள்.

தினமும் மூன்று அறிமுகம்: ஒரு பறவை, ஒரு குஞ்சு, ஒரு முட்டை:

பத்ரி சேஷாத்ரி - எண்ணங்கள் புத்தகம், அரசியல், தொலைத்தொடர்பு, கல்வி, அறிவியல், சமூகம், பயங்கரவாதம், தொழில், வர்த்தகம் அனைத்து துறைகளைப்பற்றி இவர் பதிவுகள் மிகவும் தெளிவாக கூறும்.

மெய்யப்பன் - "அனாமிகா" பாமரனின் பிதற்றல்கள் கவிதைகளை சரமாக தொடுப்பவர் இவர்.

ராசு கோவை - இவர் உபயோகமான குறிப்புகள் கொண்ட இணைய தளத்தையும், இவர் அனுபவங்களையும் வலைப்பதிவின் மூலம் கொடுத்து வருகிறார்.

தினம் ஒரு தித்திப்பு 1:

ஆசைகளில் நியாயம் இருக்கும் போது நமது ஆசைகள் பிறர் உரிமைகளை பாதிக்காத போது ஆசைகளினால் நமக்கு உண்மையான ஈடுபாடு நிரந்திரமாக துவங்கும் போது ஆசைகள் நமது மனதில் திடமான வலுப்பெறும் போது அவை லட்சியமாகிறது.

இதுவரை நாம் எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்பதை பொறுத்ததல்ல லட்சியம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இது நாள் வரை இருந்திருக்கலாம். நாளை எதிர்காலத்தில் எங்கே போக விரும்புகிறோம் என்பதை பொறுத்ததே லட்சியம். லட்சியம் தீர்மானிக்க பட்டு விட்டால் நாளடைவில் பாதை அமையும், பாதையில் நடக்கத் துவங்கும் போது லட்சியம் தீபமாய், ஒளியாய் வழிகாட்டும்.

சந்திப்போம், சிந்திப்போம்...

20 comments:

  1. me the first.

    முதல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //சந்திப்போம், சிந்திப்போம்...//

    நாமிருக்கும் நிலமையில் சிந்திப்போம், சந்திப்போம்ன்னுல வரணும்?

    ReplyDelete
  3. Thank U Very much for introducing my blog. Definetly I will write to my best

    Raju

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வணங்காமுடி..!!!

    சேவாக் மாதிரி முதல் பால்லயே ஆரம்பிச்சிருக்கீங்க..!!!

    Keep rocking..!!

    ReplyDelete
  5. \\நாளை எதிர்காலத்தில் எங்கே போக விரும்புகிறோம் என்பதை பொறுத்ததே லட்சியம். லட்சியம் தீர்மானிக்க பட்டு விட்டால் நாளடைவில் பாதை அமையும், பாதையில் நடக்கத் துவங்கும் போது லட்சியம் தீபமாய், ஒளியாய் வழிகாட்டும்\\

    நல்ல கருத்து, தினமும் வரட்டும்

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.:)

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. ஆரம்பமே அசத்தலா, அடிச்சு ஆடுங்க வணங்காமுடி:)

    ReplyDelete
  9. சிக்கனமாக எழுதி, நேர்த்தியான அறிமுகங்கள்!

    சிறப்பாக வலைச்சர ஆசரியர் பணி தொடர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. முதல் நாள் வாழ்த்துக்கள்

    அசத்தலான ஆரம்பம்!

    சிந்தனைக்கு சரியான தீனி தினமும் கிடைக்கும்போல் தெரிகிறது.

    வளரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  11. நன்றி புதுகைத் தென்றல்
    நன்றி செ.சரவணக்குமார்
    நன்றி அப்பாவி முரு
    நன்றி ராசு
    நன்றி அ.மு.செய்யது
    நன்றி நிகழ்காலத்தில்...
    நன்றி வானம்பாடிகள்
    நன்றி ரம்யா
    நன்றி கலை அக்கா

    அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. வளரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  14. அண்ணே!

    செளக்கியமாணே!

    ரொம்ப நாளாச்சே பார்த்து!

    ReplyDelete
  15. அன்பின் அண்ணன் வணக்காமுடி
    அருமையான துவக்கம் -
    பறவைகள் குஞ்சுகள் முட்டைகள் என அறிமுகப் படுத்தும் பாங்கு பாராட்டத் தக்கது.

    தினம் ஒரு தித்திப்பு = நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்

    nannatsha

    ReplyDelete
  16. நல்ல தொடக்கம்!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. வாழ்த்துகள் அண்ணன் வணங்காமுடி!

    தொடந்து ஒரு வாரத்துக்கு கலக்குங்க!

    ReplyDelete
  18. அண்ணன் வணங்காமுடி ஊரில் இல்லாத காரணத்தால் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ரம்யாவாகிய நான் நன்றி கூறிக் கொள்கிறேன்!

    நன்றி Mrs.Menagasathia
    நன்றி திகழ்
    நன்றி ஜோதிஜி. தேவியர் இல்லம்.
    நன்றி வால்பையன்
    நன்றி சீனா ...
    நன்றி செந்தில் நாதன்
    நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி

    ReplyDelete
  19. //அண்ணன் வணங்காமுடி ஊரில் இல்லாத காரணத்தால் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ரம்யாவாகிய நான் நன்றி கூறிக் கொள்கிறேன்!//

    செல்லாது செல்லாது!
    அண்ணே வந்தே ஆகணும்!

    ReplyDelete