வணக்கம் நண்பர்களே...
தினம் ஒரு தித்திப்பு:
புத்த ஞானியிடம் போர்வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றை கேட்டான். அவன் கேட்ட கேள்வி சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? இவை இருப்பது உண்மைதானா?
அந்த புத்த ஞானி நீ யார் என்று கேட்டார்? அவன் அதற்கு நான் அரசரின் பாது காவலன் என்றான். அதற்கு அந்த புத்த ஞானி உன்னை பார்த்தால் பிச்சை காரன் போல் தெரிகிறாய் உன்னை எப்படி அந்த அரசர் பாதுகாவலனாக வைத்துக்கொண்டார் என்று சிரித்தார். அந்த வீரனுக்கு கோபம் பொங்கியது. உடனே அந்த வீரன் உடைவாளை உருவினான். அப்போது அந்த புத்த ஞானி கூறினார் ஓ கத்தி வேறு வைத்திருக்கிறாயா? அந்த கத்தி மழுங்கிப்போய் இருக்கிறது என்றார். உருவிய கத்தியுடன் அவர் பக்கத்தில் வந்தான் வீரன்.
அப்போது அந்த புத்த ஞானி நீ இப்போது நரகத்தின் கதவை திறந்து விட்டாய் என்றார். இதை கேட்ட வீரன் பின்வாங்கினான். அவனது கத்தியை உரையில் சொருகினான். அப்போது அந்த புத்த ஞானி சொன்னார் இப்போது உன் கேள்வியின் மறுபாதிக்கு பதில் கிடைத்து விட்டது. நீ இப்போது சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்டாய்.
அன்பு, இனிமை, உண்மை, மலர்ச்சி, வளர்ச்சி, உதவி, ஆரோக்கியம் என்ற எண்ணங்களை மனதின் உள்ளே விடும்போது நாம் சொர்க்கத்தை உருவாக்குகிறோம். வறுமை, பொறாமை, சினம், பயம், என்ற நோய் கொண்ட எண்ணங்களை உள்ளே விடும் பொது நாம் நரகத்தை உருவாக்குகிறோம்.
தினமும் அறிமுகம்:
அதிரைக்காரன் - வெட்டிப் பேச்சு - (அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.) இவரது பதிவுகள் மிகவும் அருமையானதாக இருக்கும். இவரது இந்த பதிவுகள் அவரது எழுத்துக்கு எடுத்துக்காட்டு
தேசிய விலங்காக கழுதை தேர்வு,
தொழிலுக்கேற்றப் பெயர் (அல்லது) பெயருக்கேற்ற தொழில்
தேசிய விலங்காக கழுதை தேர்வு,
தொழிலுக்கேற்றப் பெயர் (அல்லது) பெயருக்கேற்ற தொழில்
ஹரன்பிரசன்னா - நிழல்கள் (தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?) புத்தகக் கண்காட்சி, கவிதை, அரசியல், அறிவிப்பு, அறிவியல் புனைகதை, ஆன்மிகம், ஆவணப் படம், கட்டுரை, குறுநாவல், கூட்டம், சிறுகதை, நாடகம், நிழற்படங்கள், நையாண்டி என அனைத்திலும் தேர்ந்தவர்
பிஸ்கோத்து பயல் - மொக்கை பதிவு எழுதுவதில் நல்லவரு, வல்லவரு...
சந்திப்போம் சிந்திப்போம்...
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதினம் ஒரு தகவல் தென்கச்சி மாதிரி தினம் ஒரு தகவல் அண்ணன் வணங்காமுடி!!
ReplyDeleteகதை நன்றாக உள்ளது. இப்போது எனக்கு சொர்க்கமா இல்லே நரகமா :)
//அன்பு, இனிமை, உண்மை, மலர்ச்சி, வளர்ச்சி, உதவி, ஆரோக்கியம் என்ற எண்ணங்களை மனதின் உள்ளே விடும்போது நாம் சொர்க்கத்தை உருவாக்குகிறோம்.
ReplyDelete//
ஆரோக்கியமான இந்த எண்ணங்களை கடைபிடித்தால் சொர்க்கமே!:)
//
ReplyDeleteவறுமை, பொறாமை, சினம், பயம், என்ற நோய் கொண்ட எண்ணங்களை உள்ளே விடும் பொது நாம் நரகத்தை உருவாக்குகிறோம்.
//
இது கொஞ்சம் யோசிக்கணும்:) விட்டுட்டா நல்லதுதான்....
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDelete///
தேவா..
கலக்குங்க!!
ReplyDeleteஅப்போது அந்த புத்த ஞானி நீ இப்போது நரகத்தின் கதவை திறந்து விட்டாய் என்றார். இதை கேட்ட வீரன் பின்வாங்கினான். அவனது கத்தியை உரையில் சொருகினான். அப்போது அந்த புத்த ஞானி சொன்னார் இப்போது உன் கேள்வியின் மறுபாதிக்கு பதில் கிடைத்து விட்டது. நீ இப்போது சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்டாய்//
ReplyDeleteஅடக்கச் சொல்றீக!! அடக்கிக்குவோம்!!
புத்த ஞானியின் தத்துவக் கதை அருமை...
ReplyDeleteஅன்பின் அண்ணன் வணங்காமுடி
ReplyDeleteநல்ல விதமாகச் சென்று கொண்டிருக்கிறது - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள்
புத்த ஞானியின் அறிவுரை அருமை
புத்த ஞானியின் தத்துவக் கதை அருமை...
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
நன்றி RAMYA
ReplyDeleteநன்றி தேவன் மாயம்
நன்றி கிருஷ்ண பிரபு
நன்றி cheena (சீனா)
நன்றி Mrs.Menagasathia