Monday, December 7, 2009

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!


எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
- மகா கவி பாரதியார்

பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்

நான் யாருன்னு கேக்குறீங்களா?

எம்பேரு வசந்தகுமார்

ஊரு மதுரப்பக்கம் தேனி-லட்சுமிபுரம்புதுப்பட்டி ஆமாங்க கிராமத்தானுங்க...
(ஆமா உன் மூஞ்சியும் முகரகட்டையும், நீ எழுதுற பதிவுகளையும் கமெண்டுகளையும் பார்த்தாலே தெரியுது நீ கிராமத்தான்னு அங்க யாரோ முறைச்சு பாத்துட்டு சொல்றது கேக்குது...)

இப்போ கத்தார் நாட்டில் கட்டுமான துறையில் மின்னியல் பிரிவில் பணிபுரிகிறேன்...

பிரியமுடன்...வசந்த் என்ற வலைப்பூவில் எழுதி(கிறுக்கிட்டு)வருகிறேன்...
(அப்பிடியொரு வலைப்பூ இருக்கான்னெல்லாம் கேக்கப்புடாது)

வலையுலக வாழ்க்கை சரியா போன டிசம்பர்18 லிருந்துதான் ஆரம்பித்தது... இப்போ இந்த டிசம்பர்ல திரு.சீனா ஐயாவின் ஆசியால் வலைச்சரம் ஆசிரியராவும் ஆயிட்டேன்....
(அதத்தான் எங்களால நம்ப முடியலைன்னு தமிழரசி மேடம் கேக்குறீங்கதானே! )

இதுக்காக என் பெயரை சீனா ஐயாவிடம் பரிந்துரை செய்தது யார்ன்னு தெரியலை அவங்களுக்கும்,சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்...

முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. மிக நன்றாக எழுதுபவர்கள் போல் இலக்கியம் எல்லாம் படிக்கலை இலக்கணம் கூட சரியா தெரியாதுங்க..ஏதோ என் எண்ணத்தில் தோன்றியதை எழுத்துவடிவில் கொண்டுவந்து உங்களின் பார்வைக்கு வைப்பதுவரை என் வேலை முடிந்தது.. அவ்வளவுதான்... அதுக்கப்புறம் டார் டாராக்குறது எல்லாம் உங்க வேலை...

முதன் முதல்லா அப்பாவி முரு என்னை வலைச்சரத்தில அறிமுகப்படுத்திவச்சு ஆட்டத்தை ஆரம்பிச்சு வச்சாரு எனக்கு பிடித்த என் மேல் உண்மையான பாசம் வைத்திருக்கும் நண்பர்களாலும் அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டேன்..இப்போ நானும் இந்த வலைச்சர ஆசிரியர் ஆவேன்னு நினைச்சு கூட பாக்கலைங்க..(டேய் பொய்யெல்லாம் சொல்லாதன்னு நானே என்னைய கேட்டுக்கிறேன்)

இதுக்கெல்லாம் காரணம் என் இடுகைகளை படிச்சு தொடர்ந்து ஆதரவு தரும் என் நண்பர்களாகிய நீங்கள்தான்... எனக்கு முன்ன என்னோட சீனியர்ஸ் நிறையபேர் ஆசிரியரா பொறுப்பேற்ற வலைச்சரத்தில் நானும் ஆசிரியரா இருக்குறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க...

எனக்கு பதிவுகளை வாசிக்க பிடிக்கும்...என்னை பொறுத்த அளவில் ஒரு பதிவரா இருப்பதை விட ஒரு நல்ல வாசகனா இருக்கவே விரும்புறேன்..இந்த ஒரு வருடத்தில் நான் படித்த பதிவர்கள் எண்ணற்றோர்...அவர்களில் எனக்கு பிடித்த நன்றாக எழுதும் பதிவர்களையும், இன்னும் பதிவுலகத்துக்கு வந்து சில நாட்களே ஆனாலும் சிறப்பாக எழுதும் அனைவரையும் அறிமுகப்படுத்துவதில் எனக்குத்தான் பெருமை...

இப்போ சுயபுராணத்துக்கு போவோமா( வேண்டாம்டா சாமீ அத உன்னோட வலைப்பூவுலதான் பார்த்துட்டு மெர்சலாயிப்போய் இருக்கோமேன்னு நீங்க சொன்னாலும் புதுசா வாசிக்கிறவங்களும் உங்களை மாதிரியே இதப்படிச்சுட்டு மெர்சல் ஆகவேணாமா?)

பொதுவா நான் படங்களை ரசிப்பது உண்டு சினிமா படமில்லப்பா போட்டோபடம் அதில் நகைச்சுவையா இரு இடுகைகள்

அப்புறமா என்னோட இந்த 32 கேள்விகள் 32 நபர்களிடம் படிக்காதவங்க படிச்சுடுங்கப்பா (ஒருத்தரோட 32 கேள்வி பதில்களையே படிக்கமுடியாது இதுல 32 பேரா இப்போ உன்னோட 32 பல்லையும் உடைக்கப்போறேன்னு பிரியாக்கா சொல்றா)

பின்ன மேக கூட்டத்துக்கிட்ட நான் பேசிய மேகமும் நானும்
(ஆமா நீதான் ஆடு,மாடு,கோழி,நாய் எல்லா பாஷையும் படிச்சவனாச்சே மேக பாஷை மட்டும் படிக்காமயா விட்ருப்பன்னு சுசிக்கா கேக்குறா)

தொடர் பதிவா நான் அறிமுகப்படுத்தி பதிவுலகையே வலம் வந்த தேவதையின் வரங்கள்
(அந்த தொடர் பதிவ அனுப்புன மவ ராசன் நீதானான்னு நைனா நற நறன்னு பல்ல கடிக்கிறதான)

பின்பு என்தங்கை பிரியாக்கு நான் எழுதிய சொர்கத்துக்கு ஒரு கடிதம்
(இதுக்கு பதில் கடிதம் எழுதிய தங்கை சந்தியாக்கும் அதை வெளியிட்ட தேவதை இதழுக்கும்,அதை அனுப்பிவைத்த ரம்யாக்காக்கும் நன்றி)

சமையல் விமர்சனம் மாதிரி எழுதிய பிரியாணி - விமர்சனம்
(சினிமா விமர்சனமே படிக்க முடியல இதுல பிரியாணிக்கு வேற விமர்சனமா?ன்னு நவாஸ் சொல்றாரு..)

(மும்தாஜ்தான் கேள்விப்பட்டுருக்கோம் முனிம்மா யாருன்னு கலையரசன் கேட்டாலும் கேப்பான்)

சும்மா கருத்து கந்த சாமி மாதிரி எழுதுன
(நீ திருந்தவே ஆயிரம் கருத்து சொல்லணும் இதுல நீ கருத்து சொல்றியாக்கும்ன்னெல்லாம் கேக்ககூடாது ஆமா..)

பிரபல காதல் கதையாகிப்போன கிட்னாப்
(இந்த இடுகைக்கப்பறம் வர்ற மின்னஞ்சல் ரசிக,ரசிகைகள் தொல்லை தாங்க முடில்லப்பா)

அப்புறமா அப்போ அப்போ கவிதைன்னு கிறுக்குனதுல வந்த ஒரு கிறுக்கல்

இப்போ சொல்லுங்க நான் எழுதுனது எல்லாமே கிறுக்கல்தான...
(போதுண்டாப்பா... உன்னோட சுய புராணத்தை முடிச்சிட்டியாடான்னு பெரு மூச்சு விட்டுட்டீங்கதானே..)நாளைக்கும் அதற்க்கு அடுத்த நாளும் இன்று அளித்த ஆதரவைப்போல் தொடர் ஆதரவளிக்கும் படி கேட்டுக்கிறேன்...
(இன்னைக்கே தாங்க முடியல இன்னும் ஆறு நாளா ஷ்ஷப்பா கண்ணக்கட்டுதே...)

நன்றி நாளைக்கு மீண்டும் சந்திப்போம்...
ப்ரியமுடன்...வசந்த்

73 comments:

  1. சுயபுராணம் சூப்பர்.

    //முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. //

    எல்லாரும் அப்படித்தான் :)

    ReplyDelete
  2. வலைச்சர வாழ்த்துகள்! கலக்குங்க!

    ReplyDelete
  3. ஆட்டம் இங்கயும் ஆரம்பமா?
    வாழ்த்துக்கள்.

    //(இந்த இடுகைக்கப்பறம் வர்ற மின்னஞ்சல் ரசிக,ரசிகைகள் தொல்லை தாங்க முடில்லப்பா)//

    எல்லோரும் கேட்டீங்களா :)

    ReplyDelete
  4. வலைச்சர வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அன்பின் வசந்த்

    வருக வருக

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  8. ஆகா!

    நல்ல தேர்வு சீனா ஐயா!

    வசந்த்

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள் நண்பா

    இனி இந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுப்பா!!

    ReplyDelete
  9. நாளைக்கும்மா........சாமி எங்கள காப்பாத்த ஆளே இல்லையா.....



    நல்லாயிருக்கு வசந்த் continue... :))

    ReplyDelete
  10. தேனி காரனாய்யா நீயி.

    ரைட்டு.

    இந்த வாரம் "வலைச்சர(ம்)"த்துல ராணி தேனீ நீ. !

    ReplyDelete
  11. சுயசரிதம் சூப்பரப்பு... நடத்து..

    ReplyDelete
  12. ஆரம்பம் அருமை வசந்த். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    //தேவதை இதழுக்கும்,அதை அனுப்பிவைத்த ரம்யாக்காக்கும் நன்றி//

    நான் அனுப்பவிருந்தேன். கிடைத்து விட்டதா:)? நல்லது.

    ReplyDelete
  13. வலைச்சர வாழ்த்துக்கள் வசந்த்!!

    ReplyDelete
  14. Welcome sir.......nalla oru kalaku kalakunga. vaalthukal.

    ReplyDelete
  15. nice narration --best of luck...

    vij

    ReplyDelete
  16. வாழ்த்துகள்! கலக்குங்க!

    ReplyDelete
  17. முதல்நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
    அசத்துங்க.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் நண்பரே :))

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சகோதரா

    விஜய்

    ReplyDelete
  20. //

    நான் யாருன்னு கேக்குறீங்களா?


    எம்பேரு வசந்தகுமார் //

    வலையுலகில் எங்கள் வசந்தகாலம் நீ....

    ReplyDelete
  21. //...(ஆமா உன் மூஞ்சியும் முகரகட்டையும்,//

    நல்லாயிருக்குன்னு நம்பி தானா அப்பு படம் போட்டு இருக்க..கவலை படாத நாங்க பொருத்துக்கிறோம்...

    ReplyDelete
  22. //நீ எழுதுற பதிவுகளையும் கமெண்டுகளையும் பார்த்தாலே தெரியுது நீ கிராமத்தான்னு //

    திறமைக்கு முன் கிராமத்தான் என்ன நகரவாசி என்ன?

    ReplyDelete
  23. வாழ்த்துகள் வசந்த்.

    ReplyDelete
  24. //இப்போ கத்தார் நாட்டில் கட்டுமான துறையில் மின்னியல் பிரிவில் பணிபுரிகிறேன்...//

    கொஞ்சமுன்ன கிராமத்தானா இருந்த வசந்த தானே?

    ReplyDelete
  25. //....(அதத்தான் எங்களால நம்ப முடியலைன்னு தமிழரசி மேடம் கேக்குறீங்கதானே! )//

    அதான் நம்பமுடியவில்லை உன்னை இத்தனை நாளா எப்படி கூப்பிடாமல் இருந்தாங்கன்னு....

    ReplyDelete
  26. //இலக்கியம் எல்லாம் படிக்கலை இலக்கணம் கூட சரியா தெரியாதுங்க..ஏதோ என் எண்ணத்தில் தோன்றியதை எழுத்துவடிவில் கொண்டுவந்து உங்களின் பார்வைக்கு வைப்பதுவரை என் வேலை முடிந்தது.. //

    என்னே ஒரு தன்னடக்கம்....

    ReplyDelete
  27. //இப்போ சுயபுராணத்துக்கு போவோமா//

    அப்ப இன்னும் சொல்லையா? இவ்வளோ நேரம் சொன்னது எல்லாம்?

    ReplyDelete
  28. அன்பு வசந்த் உன் பதிவுகள் எனக்கு கிட்ட தட்ட மனப்பாடம்.. நீ தன்னடக்கதில் எவ்வளவு உன்னை குறைத்து சொல்லிக்கிட்டாலும் எங்க எல்லாரும் தெரியும் உன் திறமை நீ என்றும் எங்களால் பாராட்டப்படுவாய்..வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்..தமிழ்

    ReplyDelete
  29. வலைச்சர ஆசிரியருக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்!

    பணியை செவ்வனே செய்து முடிக்கவும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  30. சுயபாரானமே அசத்துதே கலக்குங்க சகோதரா:)

    ReplyDelete
  31. //
    தேவதை இதழுக்கும்,அதை அனுப்பிவைத்த ரம்யாக்காக்கும் நன்றி
    //

    நன்றி எதுக்குயா கடமையை தானே செய்தேன்!

    ReplyDelete
  32. //
    முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்..
    //

    கிறுக்கலே இவ்வளவு அசத்தலாய்யா இருக்கட்டும் இருக்கட்டும் :)

    ReplyDelete
  33. //
    ....(அதத்தான் எங்களால நம்ப முடியலைன்னு தமிழரசி மேடம் கேக்குறீங்கதானே! )
    //

    ச்ச்சேச்சே! அவங்க அப்படி எல்லாம் கேக்கமாட்டாங்க!

    அவங்க ரொம்ப நல்லவங்க :)

    ReplyDelete
  34. வாங்க வசந்த் !! வாங்க!!!

    ReplyDelete
  35. அடடே!! வாங்க...வாங்க! பூங்கொத்துக்களோட வாழ்த்துக்கள்! கலக்குங்க!

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் மச்சான்..

    ReplyDelete
  38. வாழ்த்துகள் வசந்த்...

    கலக்குங்க..

    ReplyDelete
  39. //
    சின்ன அம்மிணி said...
    சுயபுராணம் சூப்பர்.

    //முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. //

    எல்லாரும் அப்படித்தான் :)//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  40. //சந்தனமுல்லை said...
    வலைச்சர வாழ்த்துகள்! கலக்குங்க!//

    நன்றி முல்லை மேடம்

    ReplyDelete
  41. //பூங்குன்றன்.வே said...
    ஆட்டம் இங்கயும் ஆரம்பமா?
    வாழ்த்துக்கள்.

    //(இந்த இடுகைக்கப்பறம் வர்ற மின்னஞ்சல் ரசிக,ரசிகைகள் தொல்லை தாங்க முடில்லப்பா)//

    எல்லோரும் கேட்டீங்களா :)//

    நன்றி பூங்குன்றன் அட உண்மையத்தானப்பா சொன்னேன்..

    ReplyDelete
  42. // T.V.Radhakrishnan said...
    வலைச்சர வாழ்த்துகள்//

    நன்றி டி.வி.ஆர்

    ReplyDelete
  43. //அண்ணன் வணங்காமுடி said...
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...//

    நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  44. // cheena (சீனா) said...
    அன்பின் வசந்த்

    வருக வருக

    நல்வாழ்த்துகள்//

    நன்றி சீனா ஐயா

    ReplyDelete
  45. //ஜீவன் said...
    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...!//

    நன்றி ஜீவன்

    ReplyDelete
  46. // S.A. நவாஸுதீன் said...
    ஆகா!

    நல்ல தேர்வு சீனா ஐயா!

    வசந்த்

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள் நண்பா

    இனி இந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுப்பா!!//

    நன்றி நவாஸ்

    ReplyDelete
  47. //D.R.Ashok said...
    நாளைக்கும்மா........சாமி எங்கள காப்பாத்த ஆளே இல்லையா.....



    நல்லாயிருக்கு வசந்த் continue... :))
    //

    நன்றி அசோக் சார்

    ReplyDelete
  48. //சத்ரியன் said...
    தேனி காரனாய்யா நீயி.

    ரைட்டு.

    இந்த வாரம் "வலைச்சர(ம்)"த்துல ராணி தேனீ நீ. !//

    நன்றி சத்ரியன்

    ReplyDelete
  49. //கலகலப்ரியா said...
    சுயசரிதம் சூப்பரப்பு... நடத்து..//

    நன்றி பிரியாக்கா

    ReplyDelete
  50. //ராமலக்ஷ்மி said...
    ஆரம்பம் அருமை வசந்த். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    //தேவதை இதழுக்கும்,அதை அனுப்பிவைத்த ரம்யாக்காக்கும் நன்றி//

    நான் அனுப்பவிருந்தேன். கிடைத்து விட்டதா:)? நல்லது.//

    மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  51. // SUFFIX said...
    வலைச்சர வாழ்த்துக்கள் வசந்த்!!//

    நன்றி சஃபி

    ReplyDelete
  52. // VISA said...
    Welcome sir.......nalla oru kalaku kalakunga. vaalthukal.//

    நன்றி விசா

    ReplyDelete
  53. //Anonymous said...
    nice narration --best of luck...

    vij//

    ஓஹ் அவங்களா நீங்க நன்றிங்க...

    ReplyDelete
  54. // அமுதா said...
    வாழ்த்துகள்! கலக்குங்க!//

    நன்றி அமுதா

    ReplyDelete
  55. //ஹேமா said...
    முதல்நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
    அசத்துங்க.//

    m நன்றி ஹேமா..

    ReplyDelete
  56. // நிகழ்காலத்தில்... said...
    வாழ்த்துகள் நண்பரே :))//


    நன்றி கபிலன்

    ReplyDelete
  57. //கவிதை(கள்) said...
    வாழ்த்துக்கள் சகோதரா

    விஜய்//

    நன்றி விஜய்

    ReplyDelete
  58. // தமிழரசி said...
    அன்பு வசந்த் உன் பதிவுகள் எனக்கு கிட்ட தட்ட மனப்பாடம்.. நீ தன்னடக்கதில் எவ்வளவு உன்னை குறைத்து சொல்லிக்கிட்டாலும் எங்க எல்லாரும் தெரியும் உன் திறமை நீ என்றும் எங்களால் பாராட்டப்படுவாய்..வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்..தமிழ்//

    நன்றி தமிழரசி மேடம்

    ReplyDelete
  59. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    வாழ்த்துகள் வசந்த்.//

    நன்றி ஆதி சார்

    ReplyDelete
  60. // RAMYA said...
    சுயபாரானமே அசத்துதே கலக்குங்க சகோதரா:)//

    நன்றி சகோ...

    ReplyDelete
  61. //தேவன் மாயம் said...
    வாங்க வசந்த் !! வாங்க!!!//

    நன்றி தேவா சார்

    ReplyDelete
  62. //அன்புடன் அருணா said...
    அடடே!! வாங்க...வாங்க! பூங்கொத்துக்களோட வாழ்த்துக்கள்! கலக்குங்க!//

    நன்றி பிரின்ஸ்

    ReplyDelete
  63. //வால்பையன் said...
    வாழ்த்துக்கள் தல!//

    நன்றி தல

    ReplyDelete
  64. //வினோத்கெளதம் said...
    வாழ்த்துக்கள் மச்சான்..//

    நன்றி மச்சான்

    ReplyDelete
  65. //sarathy said...
    வாழ்த்துகள் வசந்த்...

    கலக்குங்க..//

    நன்றி சாரதி

    ReplyDelete
  66. //முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. //

    அட நம்ம கேசு...
    வாழ்த்துகள் வசந்த்...
    சுயசரிதை நல்ல வந்துருக்கு...
    இன்னும் ஆறு நாட்கள் பதிவிற்கு ஆவலுடன்...
    காத்திருக்கிறேன்....
    வலைச்சரம் பிரம்மாண்டம்...!!!!

    ReplyDelete
  67. வாழ்த்துகள் வசந்த் ...

    ReplyDelete
  68. //seemangani said...
    //முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. //

    அட நம்ம கேசு...
    வாழ்த்துகள் வசந்த்...
    சுயசரிதை நல்ல வந்துருக்கு...
    இன்னும் ஆறு நாட்கள் பதிவிற்கு ஆவலுடன்...
    காத்திருக்கிறேன்....
    வலைச்சரம் பிரம்மாண்டம்...!!!!//

    நன்றி சீமாங்கனி

    ReplyDelete
  69. // நட்புடன் ஜமால் said...
    வாழ்த்துகள் வசந்த் ...//

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  70. //ஜெஸ்வந்தி said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி ஜெஸ்ஸம்மா

    ReplyDelete
  71. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அறிமுகமே அசத்தல்//

    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete