சென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.
எனது வலைப்பூக்கள்:
ஊர்சுற்றி மற்றும் அறிவியல்பூ.
ஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது எனக்குத் தோன்றும் விசயங்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை இங்கு எழுதுகிறேன்.
அறிவியல்பூ - இது ஏற்கெனவே வலைச்சரத்தில் இயற்கை மகள் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எழுதும் இடுகைகளுக்கு அவற்றின் நம்பகத்தன்மை கருதி, அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறேன். வரும் நாட்களில் அறிவியல் பற்றி அதிகமாக எழுத ஆசைப்படுகிறேன். அறிவியல் பற்றி எழுதுவது எனக்கு அலாதி இன்பம் அளிக்கிறது.
வலையுலகிற்கு நுழைந்தது:
கூகிளாண்டவர்தான் காரணம். அதன் முழு விபரம் இங்கே - ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை.
நான் அதிகம் ரசித்த எனது இடுகைகள்:
- காதலின் முதல் SMS என்ற இடுகை, இயல்பாக அமைந்துவிட்ட ஒரு கதை.
- அப்போதே ஆசிரியராக மாறி வகுப்பெடுத்த இடுகைதான் வலை பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப் பிழைகள் ஓர் அறிமுகம் என்ற இடுகை.
- 'நாங்களும் தொழில்நுட்பமெல்லாம் பேசுவோம்ல' - பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி? என்று சொல்லித்தந்தேன். குரோம் மற்றும் சஃபாரி உலாவிகளுக்கு இந்த இடுகையையும் படியுங்கள்.
- முதல்முறையாக பின்னூட்ட மட்டுறுத்துதல் செய்ய வைத்த இடுகை நடிகர் விஜய் மீது நடத்தப்படும் மின்-வன்முறைகள்.
- 'அறிவியல்பூ' வில் ஆன்டி மேட்டரும்(!) ஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸும் அறிவியலும்
தலைமை ஆசிரியர் 'சீனா' அவர்களின் பன்னிரெண்டிற்கு மேற்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்த 'வலைச்சர ஆசிரியர்' பணியைச் செவ்வனே செய்வேன் என்று 'எட்டுப்பட்டி' ஜனங்களுக்கும் சொல்லி.... [மணியடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :) ]
அன்புடன்,
வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteபெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி?]]
ReplyDeleteரொம்ப உபயோகமாக இருந்திச்சி.
மீண்டும் அதற்கு நன்றி.
வாங்க தல!
ReplyDeleteவந்து கலக்குங்க!
best wishes!
ReplyDeletewelcome!
வாழ்த்துகள் தலைவரே :)
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteம்.. கலக்குங்க ஊர்சுற்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஉபயோகமான தகல்வல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்க!
வாழ்த்துக்கள் !!
நட்புடன் ஜமால்,
ReplyDeleteவால்பையன், Chitra,
நான் ஆதவன்,
முனைவர்.இரா.குணசீலன்,
பீர்|Peer, Ramya அக்கா,
அத்திரி,
எல்லோருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
அசத்துங்க நண்பா..வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க வாங்க ஊர்சுற்றி வாங்க ஜோன்சன்
ReplyDeleteநல்வாழ்த்துகள்