Wednesday, December 30, 2009

கவித்துவ அகமுகங்கள்...

பச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம்,  வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில் பொங்கல் இதெல்லாம் யாருக்குன்னாலும் படிக்கிறப்பவே ஒரு சில்லிப்பு உண்டாக்குதில்லையா?

எழுத்துல இதுக்கிணையா ஒன்ன சொல்லணும்னா கவிதையத்தான் சொல்ல முடியும். முக்கி, முனகி, யோசிச்சி, சொறிஞ்செல்லாம் இல்லாம மூச்சு மாதிரி அதுவா வரத எழுத்தாக்குற வித்தகர்கள் சிலர பார்ப்பமா?


ஒரு நா இந்த மனுசன் கவிதை கூப்டுச்சு. வலை மனை பேரே அன்புடன் புகாரி.  மனுசன் சுவாசிக்கிறதே கவிதையில போல. அதும் காதல் கவிதை. இவரு வலைப்பூக்கு போய்ட்டு வந்துற முடியாது. பளிச் பளிச்சுன்னு பூத்துட்டே இருக்கும். பாருங்க ஒன்னு ரெண்டு. அப்புறம் இங்கனக்குள்ளயேதான் கெடப்பீங்க.

பசு மாடு இருக்கே கடவுள் படைப்புல ஆகச் சிறந்தது அது. வைக்கோல தேச்சி குளுப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வெச்சி, மினு மினுன்னு இளம் வெயில்ல நிக்கிறப்ப பக்கத்துல இருந்து பார்த்திருக்கீங்களா? களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா? உயிர்ல உறைக்கும் அந்த வாசனை. சித்தப்பு, மகாப்பா, பா.ரா. இப்புடி எந்த பேர்ல கூப்டாலும் மக்காங்கர சொல்லுல அந்த நேசத்தையும் எழுத்துல தெரியிற அந்த வாசத்தையும் என்ன சொல்ல. பசு மாதிரி மனசு, தானே இவர் கவிதை தேடி அடையுதா இல்லையா?

வானவில் சூரியன் மாதிரி, நட்சத்திரம் மாதிரி எப்பவுமே இருக்கறதில்ல. ஆனா இருக்கிறப்ப என்ன வேலைன்னாலும் விட்டுட்டு அதுல சொக்காத மனுசப்பய உண்டுமா? வலையுலக வானவில் நவாஸூதீன். அவர் எழுத்தின் பதத்துக்கு இந்த ஒரு சோறு  போதாதா?


சுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லுன்னு எழுதினார். ஒரு கவிதை சொல்லுன்னா அது சொல்லும் சூர்யாகண்ணன்னு. கணினில ஒரு பிரச்சனைன்னா சூர்யாகண்ணன்ல தேடினா வழியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இவருக்குள்ள இருக்கிற கவிஞரை துறுத்தல் ஒண்ணில பாருங்களேன்.

கரிசல்காரன்: அதேதான்! கி.ரா.வ தந்த கோவில்பட்டிக்காரரு. புதுசா எழுத வந்திருக்கார்னா நம்ப முடியல. வலைப்பூக்கு புதுசு. கவிதையா, கட்டுரையா எதுன்னாலும் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு கிளம்பறப்ப புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி மனச அங்க விட்டுத்தான் வரவேண்டியிருக்கு.

அகல்விளக்கு ராஜா: வேலைப் பளு காரணமா அதிகம் எழுத முடியறதில்ல போல. எழுதின வரைக்கும் அட போட வைக்கும் எழுத்து. முயற்சி இருக்கு. திறமை இருக்கு. நல்லா வரும் இந்த புள்ள.


செ.சரவணக்குமார்: செ.சரவணக்குமார் பக்கங்கள் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பல எழுத்தாளர்களின் அறிமுகத்தை பார்க்கலாம் இவர் பக்கத்தில். என் ராசா கி.ராவை அறிமுகம் செய்த அழகுக் கட்டுரை இதோ.


22 comments:

  1. ஆஹா,

    அய்யா சொல்ற எல்லாத்தையும் தொடர்ந்து படிச்சிட்டு வர்றொம்ங்கறத நினைச்சாலே சந்தோஷமாயிருக்கு.

    வலையின் மாந்தரை
    வகையாய் காட்டியிங்கு
    வலைச்சர நாயகராய்
    வலம்வரும் அய்யா நீர்

    அழிவில்லா தமிழ்போல
    ஆயுசு நூறு தாண்டி
    நல்லா பல கருத்துதிர்த்து
    நலமோடு வாழுதற்கு

    இறையவனின் பாதம் தொட்டு
    இறைஞ்சி வணங்குகிறேன்.

    பிரபாகர்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுகள் சார்...நன்றி.

    ReplyDelete
  3. தேர்ந்தெடுத்த அறிமுகம், ஓவ்வொன்றும் ஒரு மணம்.
    சொல்லத்தான் வார்த்தையில்லை..

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  4. அன்பின் பாலா

    அருமையான அறிமுகங்கள் - சுட்டியதைத் தொடர்ந்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு வந்தேன்.

    நன்று நன்று நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  6. கலக்குங்கண்ணா...

    கூடவே நம்ம அண்ணன் பிரபாகர் கவிதை பின்னூட்டத்தை கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ச்ச்டாப் பண்ணச் சொல்லுங்கப்ப்ப்ப்ப்போய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  7. நல்ல அறிமுகம்........

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  8. அட..

    என்னியும் உள்ளார இழுத்து விட்டதுக்கு
    தாங்க்ஸ் அண்ணா...

    ReplyDelete
  9. /////பச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம், வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில் பொங்கல் இதெல்லாம் யாருக்குன்னாலும் படிக்கிறப்பவே ஒரு சில்லிப்பு உண்டாக்குதில்லையா?/////

    உண்மை உண்மை. இதை படிக்கும்போதே சிலிர்ப்பதும் உண்மை.

    ReplyDelete
  10. பாலா சார்,

    பெரியவங்க மத்தியில என் பேரும் இருக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன சொல்றதுன்னு தெரியலை.

    நெகிழ்ச்சியா இருக்கு சார்.

    ReplyDelete
  11. புரிகிற மாதிரி இருக்கும் கவிதைகளுக்கு நான் ரசிகன், அந்த வகையில் இவையனைத்தும் அருமை!

    ReplyDelete
  12. நீங்கள் கூறிய வலைப்பூக்கள் அனைத்தும் அருமை. அதைக் அறிமுகப் படுத்தியவிதம் அதனினும் அருமை.

    தூள் கிளப்பறீங்க அண்ணே.

    ReplyDelete
  13. தலைவா! என்னையும் அறிமுகப் படுத்தினதுக்கு.. நன்றி சொல்லவே தலைவா எனக்கு வார்த்தையில்லையே! ...

    (சாரி லேட்டு.., வழக்கம்போல உங்கள பாமரன் பக்கங்கள்...ல காத்துகிட்டு இருந்தேன்.., )

    ReplyDelete
  14. அருமை தொகுப்புகள்

    வாழ்த்துகளும் நன்றியும்.

    ReplyDelete
  15. அழகான அறிமுகங்கள்... அசத்துங்க..

    ReplyDelete
  16. முதல் பத்தியே கவிதைங்க.

    நிறைய படிக்காம விட்டிருக்கேன். அறிமுகத்திற்கு நன்றி சார்.

    ReplyDelete
  17. 3வது நாள் வாழ்த்துக்கள் ஆசானே...

    ReplyDelete
  18. அனைத்து அறிமுகங்களும் அசத்தல்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அசத்தல்கள் தொடரட்டும்

    ReplyDelete
  19. அழகான அறிமுகங்கள்..நன்றி..:-))

    ReplyDelete
  20. @@ நன்றி பிரபாகர்.
    @@நன்றி பலாபட்டறை
    @@நன்றி ஆரூரன்

    ReplyDelete
  21. //cheena (சீனா) said...

    அன்பின் பாலா

    அருமையான அறிமுகங்கள் - சுட்டியதைத் தொடர்ந்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு வந்தேன்.

    நன்று நன்று நல்வாழ்த்துகள்//

    நன்றிங்க சீனா.

    ReplyDelete
  22. @@நன்றி முகிலன்
    @@நன்றி கதிர்
    @@நன்றி சங்கவி
    @@ நீ இல்லாமலா? நன்றி ராஜா.
    @@ நவாஸ் எனக்குப் பெருமை. நன்றி.
    @@ நன்றி அருண்.
    @@ நன்றிங்கண்ணே.
    @@ ஆஹா சூர்யா. நவாஸையும் சூர்யாவையும் நான் சுட்ட முடிந்தது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தலைவா.
    @@வாங்க ஜமால். நன்றிங்க.
    @@ நன்றியம்மா.
    @@ நன்றி பின்னோக்கி.
    @@ நன்றி வசந்த்
    @@ ஆஹா வாங்க ப்ரொஃபசர். நாளைக்கும் வரணும்:))

    ReplyDelete