வணக்கம் நண்பர்களே!
பழகப் பழகப் பாலும் புளிக்கும்னு சொலவட இருக்கில்ல. பத்து நாளுக்கு மேல நானும் புளிக்காம இருக்க ரொம்பவே முயற்சிக்கிறேன். புதியவர்கள் அறிமுகம் பண்ணலாம்னு தேடி வரப்ப, எனக்குப் புதியவர்களா பிரமிக்க வைக்கும் பதிவர்களும் கிடைக்கிறாங்க. புதியவர்களும் நிறைய கிடைக்கிறாங்க.
ரொம்பவே வருத்தப் பட வைக்கும் ஒரு விடயம், ரொம்ப அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான பல புதியவர்கள் சென்ற வருடம் முழுதும் 3 அல்லது 4 படைப்புகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். சிலரின் வலைமனை எழுத்தை நெருங்க முடியாமல் செய்கிறது. அலறும் பாடல்கள், தேவையில்லாத விட்ஜெட்கள், செயலறச் செய்யும் லிங்குகள் என்று.
ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கு. உங்கள் எழுத்தும், படுத்தாத வலைமனையும் தான் அவசியம். கொஞ்சம் முயன்றால் நிறைய எழுதலாம். இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா?
சின்னச் சின்னக் கதைகள், பக்திப் பாடல்கள், ஆன்மீகக் கட்டுரைகள் கொண்ட வலைப்பூ அடியாரின் இந்து முரசு. மதங்களுக்கப்பாற்பட்டு நன்னெறி சொல்வதே ஆன்மீகம். அதிலும் சின்னச் சின்னக் கதைகள் மதம் கடந்து இறையுணர்த்துமாயின் அதை விட சிறந்த வழியென்ன இருக்க முடியும். அப்படி ஒரு கதை எந்நாளும் ஏகனோடிரு.
இன்றைக்கு கிடைத்த என் புதையல் மகேஷின் துக்ளக். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன் தெரியவில்லை. டிஜம்பர் மீஜிக் ஜீஜன் இன் சென்னை என்ற தலைப்பே சிரிக்க வைக்கிறதெனில் அந்த இயல்பான நையாண்டி அருமை. புதியவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் இவர் எழுத்தை (என்னையும் சேர்த்துதான் சொன்னேன்).
ஒலி வங்கியும் ஊமை நிழல்களும். தலைப்பே சொல்கிறதல்லவா? இது வித்தியாசமானதென. ஆம். இரவுப் பறவை என்ற வலைப்பூ முழுதும் வித விதமான வித்தியாசமான கவிதைப் பறவைகள்.
மந்திரனின் மந்திர ஆசைகள் என்னை மிகவும் கவர்ந்தது. நியாயமான கோபம் வெளிப்படுத்தும் இடுகைகள் வாழ்க்கையில் சுற்றியிருப்பனவற்றை பார்க்கும் பார்வை புதியது. வக்கிரம் யாருக்கு என்ற இந்த ஒரு இடுகை போதும் அவரின் திறமை சொல்ல.
சரணின் இளையபாரதம் ஒரு வித்தியாசமான வலைப்பூ. சமூக அக்கறையுடனான இடுகைகள், தொலைக்காட்சி அனுபவங்கள் என பலதரப்பட்ட தேர்ந்த எழுத்துகள் படிக்க கொட்டிக் கிடக்கிறதிங்கே. பர்ஸ் தொலைவது குறித்த அட்டகாசமான இடுகை இது.
அக்பரின் சிநேகிதன் சிநேகமான ஒரு வலைப்பூ. கலகலவென இருக்கும் இவர் வலைப்பூவின் ஒரு பூ, சின்னப்பூ சொல்லும் அழகாய் ஒரு கவிதை, அம்மாவை நினைவுறுத்தி.
சதீஷ் கவிதைகளின் கண்ணீர் தருணங்கள் இந்தப் புதிய பதிவரிடம் நிறைய எதிர் பார்ப்பைத் தருகிறது. எழுதுங்கள் நண்பரே.
டயானாவின் அறிந்ததும் அனுபவமும் ஒரு அனுபவம். அழகான ஈழத்தமிழில் அருமையான ஓர் கருத்துள்ள இடுகை. மின்னஞ்சலில் வலம் வந்தது என்றாலும் இந்தத் தமிழ் ஈர்க்கும்.
நல்லது நண்பர்களே! நாளை சந்திப்போமா?

துக்ளக் மகேஷ், மந்திரன், சினேகிதன் தவிர ஏனையவை புதிய அறிமுகங்கள்... படிக்கிறேன் அய்யா!
ReplyDeleteபிரபாகர்.
நீங்க அறிமுகம் செய்து வைத்த எல்லாமே சூப்பர்னு சொல்ல நான் இன்னும் எதையுமே வாசிக்கல ஆனா நீங்க மத்தவங்களுக்கு கொடுக்குற ஊக்கம் ரொம்ப ஆரோக்யமானது என்ன மாதிரி சும்மா ஒப்புக்கு ஒரு பதிவு எழுதிட்டு தேமேன்னு இருப்போரையும் "நாமலும் எழுதலாமேன்னு" தூண்டுது
ReplyDeleteHats off
அன்பின் பாலா
ReplyDeleteஅக்பர் மகேஷ் தவிர அனைவருமே எனக்குப் புதியவர்கள் - சென்று வந்தேன் அவர்கள் வீட்டினிற்கும் - வாழ்த்துகளோடு
நல்ல பணி - நல்வாழ்த்துகள் பாலா
//நீங்க மத்தவங்களுக்கு கொடுக்குற ஊக்கம் ரொம்ப ஆரோக்யமானது //
ReplyDeleterepeateyy
மிக்க நன்றி பாலா.... உங்கள் வலைப்பூவும் அருமை... அடிக்கடி படித்து வருகிறேன்....
ReplyDelete.நல்லா தேடி தேடி கண்டு புடிச்சி அறிமுகப் படுத்துறீங்க. அருமை.
ReplyDeleteஅக்பர் தவிற எல்லோருமே எனக்கு முற்றிலும் புதியவர்கள். அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி பாலா சார்.
ReplyDeleteஅருமை தொடருங்கள்..தொடர்கிறோம்..:))
ReplyDeleteபுல்லாய் மாறலாம் சரி
ReplyDeleteஅது என்ன அவள் பல்லாய் மாறும் ஆசை
அதீதக் காதல் வானம் பாடி
HAPPY NEW YEAR
ungkaloda innoru blog il comment poda mudiyala vanam padi
plz look at that
so antha comments inge vanthuruchu
அருமை சார்..
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். நன்றி
ReplyDeleteநல்ல தேடல்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார்.
ReplyDeleteமற்ற பதிவர்களும் மென் மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.
@@நன்றி பிரபாகர்
ReplyDelete@@நன்றி ராஜ சுப்ரமணியம்
@@நன்றி சீனா சார்
@@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி மஹேஷ்
@@நன்றி சித்ரா
@@நன்றி நவாஸூதீன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி தேனம்மை. (அது பேக் அப் வலைப்பூ)
@@நன்றி அம்மா
@@நன்றி ஜெஸ்வந்தி
@@நன்றி வசந்த்
@@நன்றி அக்பர்