பெண்களின் வாழ்க்கை முன்பெல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்தது.ஆனால் இன்றோ பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை எனலாம்.அவர்கள் அறிவுத்திறன் அதிகமுள்ளவர்கள்.(உடனே எதிர்மறை பின்னூட்டம் வேண்டாம்...இது உண்மை.) இதை பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
பெண் பதிவர்கள் சந்தனமுல்லை,விதூஷ்,தீபா,வித்யா,அமிர்தவர்ஷிணி அம்மா,இயற்கை,அன்புடன் அருணா,தாரிணிப்பிரியா,கோமா,புதுகைத் தென்றல்..இப்படி நிறைய சொல்லலாம்..(சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்..இப்பதிவிடும்போது என் கவனத்தில் வந்தவர்கள் இவர்கள்.அவ்வளவே)இவர்கள் பதிவெல்லாம் படிக்கையில் மனதில் உற்சாகம் பிறக்கிறது.பெண்கள் நிறைய எழுத வேண்டும்.ஒரு நாளைக்கு தமிழ்மணத்தில் கிட்டத்தட்ட 300 இடுகைகள் வருகின்றன.அதில் பத்து விழுக்காடு..அதாவது 30 இடுகைகள் கூட பெண்களுடையது அல்ல.
பெண்கள் எழுத நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.காலையில் எழுந்து...வீட்டு வேலைகளை முடித்துவிட்டு..குழந்தைகளுக்கு வேண்டுவனவற்றையும் கவனித்து..கணவரையும் அலுவலகத்திற்கு கிளப்பி..தானும் அவசர அவசரமாக வேலைக்குத் தயாராகி..பஸ்ஸையோ..தன் டூ வீலரையோ நம்பி..நகர டிராஃபிக்கில் தவழ்ந்து அலுவலகப் பணி முடித்து..மாலை வீடு திரும்பி..திரும்பவும்......
இதற்கிடையே..எழுதுவதற்கும் நேரம் ஒதுக்குவது என்றால்....சற்று இயலாத காரியம்தான்.ஆனலும் முயன்றால் முடியாதது இல்லை இன நிரூபித்து வரும் அனைவருக்கும் என் பாராட்டுகள்.நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர..இவர்களும் கவனிக்கப் படவேண்டியவர்கள்..இவர்கள் பதிவுகளையும் படியுங்கள்.பின்னூட்டத்தை வாரி வழங்குங்கள்.
கண்ணகி
ஒன்றே குலம் ஒருவனே தேவன்..என்ற வலைப்பூ.இவர் திறமை அறிய இங்கு செல்லுங்கள்
சித்ரா
கொஞ்சம் வெட்டிப் பேச்சு இவர் தன் வலைப்பூவிற்கு வைத்துள்ள பெயர்..ஆனால் வெட்டி எழுத்தல்ல..அதற்கு சான்று 'வெற்றியின் ரகசியம்'
கயல்விழி சண்முகம்
கயல்விழி (சண்முகம்)யின் கூர்வாள் அழகு..அதைப் பதம் பார்க்க சென்றிடுவீர்.அப்பத்தா அழகோ அழகு
அமுதா
என் வானம் என் எண்ணங்கள்..திறமை மிக்கவர் என்பதற்கு இவரது டிசிப்ளினே சாட்சி.அமுதா நிறைய எழுதுங்கள்
அம்பிகா
இவரைப் பற்றி சொல்வதுடன் இவரின் அழகம்மா இடுகையை வாசியுங்கள்
விக்னேஷ்வரி
2008 மார்ச் முதல் இதுவரை 58 இடுகைகளே இட்டுள்ளார்.அனைத்தும் முத்து.திறமையை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு சுணக்கம்.அதிகம் எழுதுங்கள்.
ஜெஸ்வந்தி
மௌனராகங்கள் வலைப்பூ பெயர் மட்டுமல்ல மௌனமாக எழுதியும் வருகிறார்.முன் பதிவருக்குச் சொன்னது இவருக்கும் பொருந்தும்.ஜெய்ப்பூர் முழங்கால் மூட்டு படியுங்கள்
நாளை சந்திப்போம்
நல்ல சுட்டிகள்.
ReplyDeleteஇதில் சிலர் புதிது(எனக்கு) இனி பார்க்கிறேன்.
நன்றிகள்.
இந்த வெட்டி பேச்சுக்கு தந்த பாராட்டுக்கும் அறிமுகத்துக்கும் நன்றிங்க. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பெண் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். தாங்கள் கூறிய அனைத்துப் பதிவர்களையும் படிக்க முயச்சிக்கின்றேன். நன்றி அய்யா. என்னுடைய பதிவில் உங்களைப் போன்று சில நகைச்சுவைகளைப் போட்டுள்ளேன். படியுங்கள் நன்றி.
ReplyDeleteதினமும் எழுதணும் என்பதுதான் பலரின் எண்ணம் நீங்களே சொல்லியிருப்பது போல் கடமைகளை முடித்து மிச்சம் இருக்கும் நேரத்தில் தான் எழுத முடிகிறது.
ReplyDeleteஉங்களுக்காக என் பதிவு தினத்துக்கு ஒண்ணாவது கண்டிப்பா வரும்.
:)) அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அன்பின் டிவிஆர்
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் - அனைத்துப் பதிவுகலூக்கும் சென்று வந்தேன் - படித்தேன் - மறுமொழி இட்டேன் - அனைத்துமே அருமை
நல்ல பணி நண்ப டிவிஆர்
நல்வாழ்த்துகள்
இதில் சிலர் ஏற்கனவே அறிந்த பதிவர்கள் என்றாலும் சிலர் புதியவர்கள் எனக்கு அவசியம் தொடர்வேன் நன்றி ராதா..வாழ்த்துக்கள்
ReplyDeleteஎழுதுவது என்பது அவரவர் மன உந்துதலின் தீவிரத்தைப் பொறுத்தது. பெண் எழுத்தாளர்கள் பிரபலமானவர்களில் சிவசங்கரி போன்றவர்களுக்கு
ReplyDeleteமற்ற வீட்டு வேலைகள் இல்லையா இல்லை அதை அவர்கள் புறக்கணித்தார்களா ? இல்லையே !
டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் இன்னொரு உதாரணம். நான் பணிபுரிந்த பயிற்சிக்கல்லுரியின் முதல்வர் பெண்மணிதான். காலையின் தன்
குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்து அவர்களைக் கல்லூரிக்கு அனுப்புவது முதல், கணவரைக் கண்ணாகப் பார்த்து அவர் தேவைகளையெல்லாம்
சரியே செய்து அவரையும் அலுவலகத்தையும் அனுப்பியபிறகும் அவர் எழுதுகிறார்.
எழுதாது இருப்பதற்கு முதற் காரணம் மனத்தயக்கம். தான் எழுதுவதில் தனக்கே ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டால், எழுதுவது என்பது கடினமல்ல என்றே
நினைக்கிறேன்.
நான் படிக்கும் தமிழ்ப் பதிவுகளில் சிலவற்றின் ஆசிரியர்களின் குடும்பப்பொறுப்பு மிகவும் அதிகம் . இருக்கும்பொழுதும் அவர்கள் எழுதுகிறார்கள் என்றால்
அந்த மன உந்துதலும் தன்னம்பிக்கையும்தான் அதற்கு அடித்தளம்.
சுப்பு ரத்தினம்.
மிக்க நன்றி ராதாகிருஷ்ணன். எழுத்தின் மீதான ஆர்வமும் உந்துதல் மட்டுமேதான் காரணம்.
ReplyDeleteசமயம் நிறைய கிடைக்கும் நாட்களில் இரவு நேரத்தில் பதிவுகளைத் தயார் செய்து ரிலீஸ் செய்கிறேன். :))
நல்ல அறிமுகங்கள். சித்ராவும் கண்ணகியும் இதுவரை படித்ததில்லை. இன்றே படித்து விடுகிறேன். நன்றி.
அழகிய முன்னுரை! அறிமுகம் செய்து வைத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வலைச்சரத்தில் சுட்டியது ஆனந்த அதிர்ச்சி...உண்மையாகவே எனக்கு ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது...நன்றி சார்...பெண்களின் பொறுப்புகளை கஸ்டங்களையும் நன்றாகச் சொன்னிர்கள் சார்..பெண் பதிவர்கள் சார்பாக நன்றி சொல்லுகிறென்..உங்களைப்போன்று , நிறைய பதிவர்கள் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மறுபடி எங்கள் நன்றிகள்...உங்கள் ஊக்கம் எங்கள் ஆக்கம்.பல பெண் பதிவர்களின் அறிமுகச்சுட்டிக்கும் நன்றி சார்..
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் ..
ReplyDeleteபெண்கள் எல்லாத் துறையிலும் கோலோச்ச வேண்டும் .
புது அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
/இவர்கள் பதிவெல்லாம் படிக்கையில் மனதில் உற்சாகம் பிறக்கிறது/
ReplyDeleteஅட! இதைப் படித்தவுடன் எனக்கும் உற்சாகம் பிறந்தது!
வலைச்சர வாழ்த்துகள் நண்பரே! என் வலயத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்றையவர்களில் சித்ரா தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள். அவர்கள் வலையங்களையும் படிக்கிறேன்.
ReplyDeleteஅறிமுகப்பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சார்.
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் பெண் பதிவர்கள் பட்டியலில் 'காஞ்சனா இராதகிருஷ்ணன்' நற்சுவை பதிவர் விடுபட்டுள்ளார்.
ReplyDeleteஆசிரியப்பணியின் இரண்டாம் நாள் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு நன்றி
ReplyDeleteஉங்கள் கணிப்பில் நானும் இடம் பெற்றிருக்கிறேன் என்று அறிய சந்தோஷம்
ReplyDelete