Thursday, January 28, 2010

வலைச்சரத்தின் நான்காம் நாள் : சிறுகதைகள்...

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.

(மு.வ.)

வலைச்சரத்தில் இன்று நான்காம் நாள். எழுதுவதில் மிகவும் சவாலானது சிறுகதை எழுவதுதான் என்பது எனது பணிவான எண்ணம். முதல் பத்தியிலேயே படிப்பவர்களை கவர வேண்டும். இறுதிவரை அவரை நம்மோடு வைத்திருந்து படித்து முடித்தவுடன் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்ந்து எழுதிவரும் எந்த ஒரு இடுகையாளரும் கண்டிப்பாய் ஒரு சிறுகதையாய் எழுதியிருப்பார். சிறுகதைகளில் நன்றாய் பரிமளிப்பவர்கள் தான் பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளராய் ஆக இயலும். அவ்வாறு சிறுகதைகளை எழுதும் பதிவர்களின் எனக்கு பிடித்தவைகள் இன்று.

முதலாவதாய் கு.ஜ.மு.க. என வலைப்பூவிலேயே ஒரு கட்சியை வைத்திருக்கும் இவரின் அழகான ஒரு சிறுகதையான முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும் படித்துப்பாருங்கள். என்ன அழகாய் ஒரு முருங்கை மரத்தை பின்னணியாய் வைத்து எழுதியிருக்கிறார். குடுகுடுப்பை, இது போன்ற சிறுகதைகளை நிறைய தாருங்கள்.

தீராத பக்கங்கள் மூலம் எழுதிவரும் மாதவராஜின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் “ம்மா.... ம்மா” எனும் இச் சிறுகதையினைப் படித்தோமென்றால் அப்படியே மனதை இறுக்கி இதுதான் உலகம் எனும் ஒரு வேதனையை வெளிப்படுத்தச் செய்யும். மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதுதானே உண்மை?

விசா பக்கங்களின் சிறுகதைகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். நான் படித்து ரசித்த இந்த உதடுகள் சுடும் !!!! எனும் திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதையினை படித்துப்பாருங்கள். கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

குழந்தைகளின் தொந்தரவுகள் இனிமையான அவஸ்தைதான். ஆயிரம்தான் அவர்கள் நம்மை படுத்தினாலும் அவர்கள் இல்லாமல்.... நினைத்துப் பார்க்கவே மனம் கஷ்டப்படுகிறது. இது மாதிரியான ஒரு நிகழ்வை மிகச் சாதாரணமாய் எப்படி சொல்லியிருக்கிறார் இரவி சுகா தனது நான்...நானாக வலைப்பூவில், தொல்லை - ஒரு நிமிட சிறுகதை யில்.

ஒரு சிறுகதையினை படித்து முடிவில் பெரிய திருப்பம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. இடையிலேயே நமக்கு முடிவு தெரிந்தாலும் சுகம் தான். கோமதி அரசு அவர்கள் தனது வலைப்பூவான திருமதி பக்கங்களில் எழுதிய இந்த திருப்பம் எனும் சிறுகதையினை படித்துப் பாருங்கள், குழப்பமில்லாமல் தெளிவாய் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை அழகாய் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு பாத்திரமாய் உருவெடுத்து போர்ட்ரெய்ட் கதைகள் என தனது என்னுள்ளே எனும் வலைப்பூவில் எழுதும் ஷங்கியின் இடுகைகள் கொஞ்சம் புதுமையாகவும் வித்தியாசமாயும் இருக்கும். இவரின் சமீபத்திய ஒன்றான உத்தமன் - போர்ட்ரெய்ட் படித்துப் பாருங்களேன், ஏன் சொல்கிறேன் எனபுரியும்...

கிராமச்சாவடி மூலம் அழகாய் அப்பா சைக்கிள் எனும் இடுகையில் கா.பழனியப்பன் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! அருமையான நடை, இன்னும் நிறைய இவர் எழுத வேண்டும். கவனிக்கத்தக்க ஒருவர்.

சைவகொத்துப்பரோட்டா எனும் வலைப்பூவில் கலக்கி வரும் அன்பரின் இடுகையில் இந்த முதல் கொலை எனும் இந்த சிறுகதையை படிக்க நேர்ந்தது. கொலை செய்வதைப்பற்றித்தான், எப்படி எழுதியிருக்கிறார் என பாருங்கள். படித்து தொடரப்பட வேண்டியவர்.

"ஆரண்யநிவாஸ்" ஆர் ராமமூர்த்தி, இதுதான் வலைப்பூவின் பெயர். இதில் கருப்புநிறத்தில் ஒரு பலூன் எனும் ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தது. மனிதநேயத்துடன் மிக அழகாய் இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்! கவனிக்கப்பட வேண்டிய ஒருவர்.

நான்கு நாட்கள் வெகு விரைவாய் கடந்து விட்டது. ஐந்தாம் நாளான நாளை இன்னுமொரு வித்தியாசமான வலைப்பூ அணிவகுப்பில் ஒரு வித்தியாசமான தொகுப்பில் சந்திப்போமா?

23 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சீரான பார்வை. சிறப்பான தேர்வுகள்
    நான்காம் நாள் வாழ்த்துகள் பிரபாகர்

    ReplyDelete
  3. ஒண்ணொண்ணா படிக்கிறேன். எல்லாம் நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்..படிக்காதவற்றை படிக்கிறேன்..நன்றி தல

    ReplyDelete
  5. சிறுகதை எழுத்தாளர் குடுகுடுப்பை கு.ஜ.மு.க வின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்கு நன்றி பிரபாகர்.:))

    ReplyDelete
  7. என் அறிமுகத்துக்கு நன்றி பிரபாகர். மற்ற அறிமுகங்கள் தரமானவை. படித்தவையும் படிக்க வேண்டியவையும் இருக்கின்றன...

    ReplyDelete
  8. அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆகா,... சிறப்பான பகிர்வு... நான்காம் நாள் வாழ்த்துகள் பிரப்பாகர்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள் நண்பரே.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்.நான்காம் நாள் வாழ்த்துகள் பிரபாகர்

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  13. நான்காம் நாள் கலக்கலுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமை... பார்க்கவேண்டும்...

    ReplyDelete
  16. நான்காம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. இடுகையை படித்த, வாழ்த்து சொன்ன அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நாளை சந்திப்போம்.

    பிரபாகர்.

    ReplyDelete
  18. அன்பின் பிரபாகர்,
    தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், என் வலைப்பூ அறிமுகத்திற்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  19. அருமையான அறிமுகங்கள்.
    நன்றி பிரபா.

    ReplyDelete
  20. நான்காம் நாள் வாழ்த்துக்கள்!

    என் கதையை அறிமுகப் படுத்தியதற்கு
    நன்றி.

    படிக்காதவற்றை படிக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete