Sunday, January 17, 2010

நன்றி அரவிந்த் - வருக வருக ராதாகிருஷ்ணன்

அன்பின் சக பதிவர்களே

அருமை நண்பர் அரவிந்த் எடுத்த செயலை - ஏற்ற பணியினை பொறுப்பாகச் செயல்படுத்தி வாரம் முழுவதும் இடுகைகள் இட்டு பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி நம்மிடமிருந்து மனம் மகிழ விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வலைச்சரம் குழுவின் சார்பாக
வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து, நாளை 18.01.2010ல் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர்
தமிழா தமிழா என்ற பதிவினில் எழுதி வருகிறார். 19.02.2008 முதல் இன்று வரை 876 இடுகைகள் இட்டிருக்கிறார்.

இவர்
:

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். 30 ஆண்டுகளாக சௌம்யா தியேட்டர்ஸ் என்ற பெயரில் நாடகக் குழு நடத்தி வருகிறார். இதுவரை 15 நாடகங்கள் மேடையேற்றி..1000 முறைகளுக்கு மேல் நடந்துள்ளன. சொல்லக் கொதிக்குது நெஞ்சம் என்ற நாடகம் நாடக விழாவில் பரிசு பெற்றது. இதை டெலி ஃபிலிம் ஆகவோ.. திரைப்படமாகவோ எடுக்க சில தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார். பாரத ரத்னா என்ற நாடகம் ..பரிசு பெற்றதுடன்..இலக்கியச்சிந்தனை அமைப்பினரால் 2005 க்கான சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விருது பெற்றது. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கலைமகள்,புதிய பார்வை ஆகிய பத்திரிகைகளில் வந்துள்ளன.

நண்பர் டிவிஆரை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக தருக என வரவேற்று நல்வாழ்த்துகளுடன் , ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன் சீனா

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. பாராட்டுகள் அரவிந்த். வாங்க வாங்க டி.வி.ஆர்.:)

    ReplyDelete
  3. அய்யா,

    வணக்கம்! உங்களின் எழுத்துக்களை படிக்க ஆர்வமாயிருக்கிறேன்...

    பிரபாகர்.

    ReplyDelete
  4. வருக. வருக. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வருக... வருக... அண்ணன் டி.வி.ஆர் அவர்களே...

    ReplyDelete
  6. பாராட்டுக்கள் அரவிந்த்!

    டி.வி.ஆர்,

    இவ்வளவு பெரிய முகவரி இருக்குன்னு இப்பதான் மக்கா அறிகிறேன்.நன்றி சீனா அய்யா!கலக்குங்க டி.வி.ஆர்!

    ReplyDelete
  7. நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  8. இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள் சென்ற வார ஆசிரியருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி சீனா சார்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete