Wednesday, February 10, 2010

கவிதையாய் கசிந்துருகி..!!!

உலகின் அதி உன்னதமான கலைஞர்கள் என்று கவிஞர்களை சொல்லலாம். சந்தோசம், துக்கம், வெட்கம், கோபம், வெறுப்பு, பயம் என எல்லா உணர்வுகளையும் கவிதைகளில் காண முடியும். தனக்கான வார்த்தைகளைத் தேர்ந்து எடுப்பதில்தான் ஒரு சிறந்த கவிஞன் முழுமை அடைகிறான். இப்படித்தான் கவிதைகள் இருக்க வேண்டும் என்றோ, இதுதான் நல்ல கவிதை என்றோ எந்த வரையறையும் கிடையாது. எந்த வடிவத்தில் இருந்தாலும், படித்து முடிக்கும்பொழுது, நம் மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தக் கூடுமாயின் என்னைப் பொறுத்தவரை அதுதான் நல்ல கவிதை.

நம் பதிவுலகில் கவிஞர்களுக்கு பஞ்சமே கிடையாது. இணையத்தில் எழுதப்படும் கவிதைகளை நான் இரண்டு வகையாக பார்க்கிறேன். சொல்ல வரும் விஷயத்தை நேரடியாக சொல்லி வாசகனுக்கு எளிதாகப் புரிய வைப்பது ஒரு வகை. சிக்கலான சொல்லாடல்கள் மூலம் வாசகனை கவிதை பற்றி சிந்தக்கத் தூண்டுவது இன்னொரு வகை. தங்களுடைய கவிதைகளால் வாசிப்போர் மனதைக் கொள்ளை கொண்ட கவிஞர்களைப் பற்றியதுதான் இந்த இடுகை.

என்.வினாயகமுருகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று யோசிப்பவர்களுக்கு.. அகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக "கோவில் யானை" என்கிற இவருடைய தொகுப்பு வெளியாகி உள்ளது. எளிதான கவிதைகளின் மூலம் நம் மனத்தை கொள்ளை கொள்பவர். ஆரம்ப காலத்தில் புரிந்த கொள்ள சற்றே கடினமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது தன்னுடைய நடையை மாற்றிக் கொண்டு விட்டார். என்னை மிகவும் கவர்ந்த ரயில் விளையாட்டு பற்றிய அவருடைய கவிதை இங்கே..

தாய்மண் மீதான நேசத்தையும், இன்றைய சூழலில் அங்கே நடக்கும் கொடுமைகள் பற்றிய தன்னுடைய கோபத்தையும் கவிதைகளில் வெளிப்படுத்துபவர் தோழி ஹேமா. "வானம் வெளித்த பின்னும்" என்ற தளத்தில் எழுதுபவர். என்றேனும் தம் தலைவர் திரும்பி வரக்கூடும் என்கிற அவருடைய நம்பிக்கை இங்கே கவிதையாக..

மறைமலை நகரில் வசித்து வருகிறார் ஷீ-நிசி. மிக எளிமையாக, ரொம்பவே கம்மியாக எழுதக் கூடியவர். இவருடைய எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு சிறுகதைக்கான கரு ஒளிந்திருக்கும். மீனவர்களின் வாழ்வைப் பற்றி அவர் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு..

சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளில் அடிக்கடி இவருடைய பெயரை நீங்கள் பார்க்க இயலும் - ச.முத்துவேல். சமீப காலமாக "சாளரத்தில் தெரியும் வானம்" என்ற கவிஞர்கள் பற்றிய கட்டுரைத் தொடரொன்றை தடாகம் மின்னிதழில் எழுதி வருகிறார். இவரும் நேரடியான அர்த்தம் கொண்ட கவிதைகளை எழுதக் கூடியவர்தான். கனவையும், காமத்தையும் ஒன்றாகப் பேசும் அவருடைய இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.

"உழவன்" என்கிற பெயரில் எழுதி வருகிறார் நண்பர் நவநீதகிருஷ்ணன். தொலைந்து போன வாழ்வின் சந்தோஷ தருணங்களையும், அன்றாட வாழ்வின் கசப்பான உண்மைகளையும் கவிதைகளாக எழுதுபவர். "மழை" பற்றிய அவரின் இந்தக் கவிதை மிகச் சிறப்பானது.

ஏழுதோசை என்று நண்பர்களால் செல்லமாக கிண்டல் செய்யப்படுபவர் பிரியத்துக்கு உரிய தோழி "எழுத்தோசை" தமிழரசி. பிரிவு , ஊடல் பற்றிய இவருடைய கவிதைகளின் ரசிகன் நான். துணையைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் மக்களைப் பற்றிய இந்த கவிதையை படிக்கும்பொழுது நம்மையும் அறியாமல் மனதில் ஒரு மெல்லிய சோகம் தோன்றுவதை தவிர்க்க இயலாது.

திண்ணை.காமில் தொடர்ச்சியாக எழுதி வருபவர் நாவிஷ் செந்தில்குமார். மெலிதான சோக உணர்வைத் தாங்கி நிற்பவை இவருடைய கவிதைகள். "கண்டதைச் சொல்லுகிறேன்" என்கிற இந்தக் கவிதையின் மூலமாகவே நாவிஷ் எனக்கு அறிமுகமானார். பதிவுலகில் இருந்து வெளிவரும் அடுத்த கவிதைத் தொகுப்பு இவருடையதாக இருக்க வேண்டும் என பிரியப்படுகிறேன்.

நண்பர் மண்குதிரை மொரிஷியசில் வசித்து வருவதாகக் கேள்வி. சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். எளிதில் வார்த்தைகளில் வசப்படாத விஷயங்களை கவிதையாக மாற்றக்கூடியவர். மாயங்கள் நிறைந்த கனவொன்றை பற்றிப் பேசும் அவருடைய இந்தக் கவிதை உங்களையும் பிரம்மிக்க வைக்கும்.

தமிழின் முதல் ஜென் கவிதைகளை எழுதியவர் நண்பர் நரன். இலக்கிய வட்டாரத்தில் பரவலாக கவனத்தைப் பெற்று வருகின்றன அவருடைய கவிதைகள். "யாத்ரீகனின் குறிப்புகள்" என்ற பெயரில் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். அவருடைய ஒரு சில ஜென் கவிதைகள் இங்கே..

" பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் " - நேரடியான கவிதைகளின் மூலம் மனதை ஈர்க்கிறார் . ஞானிகள் உருவாகும் கதை பற்றிய அவருடைய இந்தக் கவிதை நீங்கள் ரசிக்க..

வெகு சமீபத்தில்தான் இவரைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. டோடோ (TOTO ) என்ற பெயரில் எழுதுகிறார். எந்த விதமான குழப்பமும் இல்லாமல் தான் நினைப்பதை தெளிவாக சொல்லி வாசிப்பவர்களை வியக்க வைக்கிறார். மெல்லிய சிரிப்பை வரவழைக்கும் அவருடைய கவிதை ஒன்று உங்களுக்காக..

கவிதைகளைப் பற்றி பேசும்பொழுது இவர்களைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. "அகநாழிகை" பொன்.வாசுதேவன். என்னைக் கவிதைகளைப் படிக்க வைத்தவர். அடுத்தவர் பா.ராஜாராம். எப்படி இவரால் மட்டும் தான் பார்க்கும் அத்தனை விஷயங்களையும் அழகான கவிதைகளாக மாற்ற முடிகிறது என்று என்னை வியக்க வைப்பவர். கடைசியாக, நேசமித்திரன். இவருடைய கவிதைகளைப் புரிந்து கொள்ள தனியாக ஒரு அகராதியே தேவைப்படும் என்று நான் கிண்டல் செய்வதுண்டு. அறிவியல், சரித்திரம் , இசை என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் இவர் எப்படி தெரிந்து வைத்து இருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைப்பவர். அடுத்த மாதம் ஊருக்கு வருகிறாராம். நிறைய சந்தேகங்களோடு சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

புத்தகம்

புயலிலே ஒரு தோணி

தன் வாழ்நாளில் இரண்டே நாவல்கள் எழுதியவரை தமிழ் இலக்கிய உலகம் தன் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அவர் ப.சிங்காரம். அவருடைய நாவல்கள் - புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்தோனேஷியாவில் நடக்கிற கதைதான் "புயலிலே ஒரு தோணி". இதை கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். இந்தோனேஷியா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் வெவ்வேறு ஊர்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தன என்பதை, அந்த காலத்து மண்ணின் மைந்தர்களையும் நம்கண் முன்னே நிறுத்துகிறார் சிங்காரம். ஆரம்பத்தில் கிரகித்துக் கொள்ள சிரமமாக இருந்தாலும், மொழி பழகியவுடன் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்ளுவது புத்தகத்தின் சிறப்பு. அருமையான வாசிப்பனுபவத்தை தரக்கூடியது.

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - ரூ.180 /-

உலக சினிமா

Pedar

உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.
சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar. நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.

திரைப்படத்தைப் பற்றிய அண்ணன் butterfly சூர்யாவின் பதிவு இங்கே..

22 comments:

  1. "கவிதையாய் கசிந்துருகி..!!!//

    நல்லா உருக்கிட்டீங்க..:))

    ReplyDelete
  2. புயலிலே ஒரு தோணி பகிர்வுக்கு நன்றி..:))

    ReplyDelete
  3. விழிக்கொடை பற்றிய விழிப்புணர்வுச் செய்தி நன்று!
    -அரிமா இளங்கண்ணன்

    ReplyDelete
  4. கவிப்பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியிருக்கீங்க கார்த்தி

    ReplyDelete
  5. அறிமுகமான அத்துனை பேருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. //ஷங்கர்.. said...
    நல்லா உருக்கிட்டீங்க..:)) புயலிலே ஒரு தோணி பகிர்வுக்கு நன்றி..:))//

    நன்றி நண்பா

    // Arima Ilangkannan said...
    விழிக்கொடை பற்றிய விழிப்புணர்வுச் செய்தி நன்று!-அரிமா இளங்கண்ணன்//

    வலைச்சரம் சார்பாக எனது நன்றிங்க

    //பிரியமுடன்...வசந்த் said...
    கவிப்பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியிருக்கீங்க கார்த்தி அறிமுகமான அத்துனை பேருக்கும் வாழ்த்துகள்//

    :-))))))

    ReplyDelete
  7. நன்றி கார்த்தி.சாதாரணமாக எல்லோரையும் காண்கிறேன்.ஸ்ரீநிசி எங்கே?ரொம்பக் காலமாக் காணோமே !

    ReplyDelete
  8. வலைச்சரத்திற்கு நன்றி.நண்பர் கா.பா வுக்கு அன்பும் வாழ்த்துகளும் நன்றிகள் நெஞ்சிலிருந்து

    சக கவிஞர் பெரு மக்களுக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அருமையான தேர்வுகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  10. கார்த்தி

    அத்தனையும் அருமையான சுட்டிகள் - தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமை நன்று - ஒண்ணொண்ணாப் போய் படிச்சிடறேன்

    ReplyDelete
  11. //ஹேமா said...
    நன்றி கார்த்தி.சாதாரணமாக எல்லோரையும் காண்கிறேன்.ஸ்ரீநிசி எங்கே?ரொம்பக் காலமாக் காணோமே//

    நண்பர் நலமாகவே இருக்கிறார் தோழி.. கொஞ்ச நாட்களாக எழுதுவதை குறைத்து இருக்கிறார்

    //நேசமித்ரன் said...
    வலைச்சரத்திற்கு நன்றி.நண்பர் கா.பா வுக்கு அன்பும் வாழ்த்துகளும் நன்றிகள் நெஞ்சிலிருந்து//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. //Chitra said...
    அருமையான தேர்வுகள். மிக்க நன்றி.//

    :-)))))))

    //cheena (சீனா) said...
    கார்த்தி அத்தனையும் அருமையான சுட்டிகள் - தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமை நன்று - ஒண்ணொண்ணாப் போய்
    படிச்சிடறேன்//

    நன்றிங்க ஐயா.. கண்டிப்பா படிங்க..

    ReplyDelete
  13. அருமையான தேர்வுகள்.....

    ReplyDelete
  14. ஆசிரியரின் தேர்வில் நான் அகப்பட்டதில் அகமகிழ்ந்தேன் பாண்டியன்.....இதில் பலர் நண்பர்கள் என்பதில் பெருமிதம்.. திகட்டாமல் தித்திக்கிறது உங்கள் தொகுப்பு....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்கள். தங்கள் ரசனை ஆச்சரிய படுத்துகிறது

    ReplyDelete
  16. புயலிலே ஒரு தோணி அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  17. //Sangkavi said...
    அருமையான தேர்வுகள்.....//

    வாழ்த்துக்கு நன்றி நண்பா

    //தமிழரசி said...
    ஆசிரியரின் தேர்வில் நான் அகப்பட்டதில் அகமகிழ்ந்தேன் பாண்டியன்.....இதில் பலர் நண்பர்கள் என்பதில் பெருமிதம்.. திகட்டாமல் தித்திக்கிறது உங்கள் தொகுப்பு....வாழ்த்துக்கள்//

    தமிழுக்கு நன்றி

    ReplyDelete
  18. //மோகன் குமார் said...
    அருமையான அறிமுகங்கள். தங்கள் ரசனை ஆச்சரிய படுத்துகிறது//

    படிக்க படிக்க தானா வளருரதுதானே நண்பா ரசனையும்

    //மீன்துள்ளியான் said...
    புயலிலே ஒரு தோணி அறிமுகத்திற்கு நன்றி//

    படிச்சு பாருங்க.. அசந்துருவீங்க..

    //"உழவன்" "Uzhavan" said...
    நன்றி நண்பா//

    Most Welcome thala..:-)))

    ReplyDelete
  19. கார்த்திகைப்பான்டியனால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கவிஞர்களுக்கும் குறிப்பாக ஹேமாவுக்கும் நேசனுக்கும் ராஜாராமுக்கும் பூங்குன்றனுக்கும் வினாயக முருகனுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் கவிஞர்களே ...

    ReplyDelete