வணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு.இன்னைக்கு எப்படிடா படத்த ஓட்டபோற கைப்புள்ளைன்னு நெனைச்சுட்டு இருக்குறப்ப,நம்ம மதுரையில இருக்குற மூன்று பாசக்கார பய புள்ளைகளை அறிமுகப்படுத்துவோம்னு "எப்பவும் போல உங்களை நம்பி களமேறங்கி இருக்கேன்,கவுத்திபுடாதீக.
நாளைக்கு ஒரு ஐந்து பெண் பதிவர்களையும்,சனிக்கிழமை ஒரு ஐந்து ஆண் பதிவர்களையும் போட்டு,ஞாயிறு அன்னைக்கு நன்றி சொல்லி டைட்டில் கார்டு போட்டுபுட்டு படம் காட்டுரத முடிச்சுகல்லாம்னு வந்துருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
பிரபு.எம்.: இவரு என்னோட உறவு க்கார பையன், மறந்து போய்,நான் அறிமுகப்படுத்தாம விட்டு,அப்புறம் அவன் பாட்டுக்கு மாமன்,மச்சுனன்னு கூட பாக்காம வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி விட்டா சிக்கலாயிடும்ல,சும்மாவே ..மதுரைக்குள்ள "ரெண்டு இட்லி ஒரு வடை வாங்கி கொடுத்தாக்கூட போதும்,எவனையும் குத்துறதுக்கு ஆள் ரெடியா இருக்கு,இந்த A.C வெள்ளத்துரை வந்து நேத்து ரெண்டு பேர என்கவுண்டர் , போட்ட பிறகுதான் மதுரை மூச்சு விடுது.மதுர வரலாற்றுல இந்த ரெண்டு நாளாத்தான்,எல்லா போலீஸ்
ஸ்டேசன்லயும் ஒரு F.I.R கூட போடுற துக்கு கேசே வரலையாம்.அல்லு சில்லு பூராம் சிட்டா பரந்துட்டாணுக.ஆனா இந்த கரை வேட்டிக்குள்ள ஒளிஞ்சு இருக்குற டவுசர்களை புடிக்க எத்தன வெள்ளைத்துர வந்தாலும் முடியாது.
சரி மேட்டருக்கு வருவோம்,நம்ம பிரபு இருக்காகளே பிரபு, ஒரு சாப்ட் வேர் எஞ்சினியர்.[network specialist].மலேசியாவில் வேலை பாக்குறார்.அவருடைய பெயரிலேயே வலைப்பதிவு எழுதுகிறார்.பார்பதற்கு சினிமா ஹீரோ மாதி இருக்கார்,நெறமும்,குணமும் பவுனு மாதி.[யாரும் பணம் போட்டு படம் எடுக்கணும்னா ஹீரோ ரெடி.]
இவர் எழுத்துகளில் வயதை தாண்டிய முதிர்ச்சி தெரிகிறது, பெரிய எழுத்தாளர்களிடம் உள்ள எழுத்து நடை இவரிடம் இயல்பாகவே இருப்பது,சிறப்பம்சம்.தமிழ் எழுத்துலகில் இவருக்கென ஒரு இடம் கிடைப்பது உறுதி,நம்ம கால்குலேசன் மிஸ்ஸாகாது. நீங்க மிஸ் பண்ணிடாதீக...போய் பாருங்கப்போய்.
----------------------------------------------------------------------------------------------------
மதுரை சரவணன்:பழகுவதற்கு இனிமையான தம்பி,மதுரையில் உள்ள,திருஞானம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிசெய்கிறார்,என்னுடைய தொழிற் சங்கத்தில் இவரும் உறுப்பினராக உள்ளார்.முழுக்க முழுக்க குழந்தைகள் கல்விக்கான வலைப்பூ நடத்துகிறார்.எல்லா பதிவுகளும் குழந்தைகள்,கல்விநலம் மனநலம் சம்பந்த மாகவே உள்ளது, வாசியுங்கள் உங்கள் குழந்தைகளை சரி பண்ண உதவியாயிருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
வெற்றி:பதிவுகளில் சர வெடி,அனாயாசமான எழுத்து நடை,இப்பவே இந்த போடு போட்டான்னா ....எதிர்காலத்தில் கலக்குவான் .நம்ம தம்பி வெற்றி பொறியியல் கல்லூரி மாணவர்,நக்கல்,நையாண்டி என எல்லா தளங்களிலும் இயங்குவது ரசிக்க முடிகிறது.நீங்களும் ஒரு நடை போய் பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------
இவர்கள் மூவரையும்,தொடர்ந்து பல பதிவுகள் எழுதி நம் இதயத்தை கொள்ளை கொள்ள,உங்களோடு சேந்து நானும் வாழ்த்துகிறேன்.
டிஸ்கி:அதிகமான பின்னூட்டங்கள் இடும் பதிவர்களுக்கு,தலா Rs-1000 பரிசாக வழங்கப்படும்.எனது ஈமெயிலில் உங்கள் Account number அனுப்பவும்.[cheque-Bounce- ஆச்சுனா கம்பெனி பொறுப்பேற்காது.
ஜெரி!!நான்காம் நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு///
ReplyDeleteவிட்டா புது சீதாயணமே எழுதிடுவீங்க போல இருக்கே!!!
வணக்கம் ஐயா!
ReplyDelete/வணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு///
ReplyDeleteவிட்டா புது சீதாயணமே எழுதிடுவீங்க போல இருக்கே!!!
படிக்க நீங்க ரெடின்னா எழத நான் ரெடி டாக்டர்.
வணக்கம் பழமை பேசி
ReplyDeleteஎன்னவாம் "ஐயா"பட்டம் போட்டு உங்க வசைய குறைக்க பாக்குறீக......
அதிகமான பின்னூட்டங்கள்
ReplyDelete/// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅதிகமான பின்னூட்டங்கள் ///
எப்போ எனக்கு செக் அனுப்புவீங்க ...
/// டிஸ்கி:அதிகமான பின்னூட்டங்கள் இடும் பதிவர்களுக்கு,தலா Rs-1000 பரிசாக வழங்கப்படும்.எனது ஈமெயிலில் உங்கள் Account number அனுப்பவும்.[cheque-Bounce- ஆச்சுனா கம்பெனி பொறுப்பேற்காது. ///
ReplyDeleteசெக் பவுன்ஸ் ஆகலின்னா செக்கே கிடையாதே !!
நல்லாத் தான் செக் வைக்கிறீங்க சார் .
அருமையான அறிமுகங்கள் . அனைவருக்கும் நிறைய வாழ்த்துகள் .
வாங்க ஸ்டார் ஜன்,வணக்கம், உங்களுக்கு மட்டும் வேணும்னா சொல்லுங்க அனுப்புறேன்,யாருட்டயும் சொல்லிபுடாதீக
ReplyDeleteprabhu.Mம கவனிச்சாச்சு மத்தவங்கள பார்க்கனும்.. கலக்குங்க.. என்னையும் அப்படியே அறிமுகபடுத்திடுங்க
ReplyDeleteநம்ம மதுரையில இருக்குற மூன்று பாசக்கார பய புள்ளைகளை அறிமுகப்படுத்துவோம்னு "//
ReplyDeleteஎறக்குங்க!! மதுரைக்கார ஆள் சும்மா இருக்கமாட்டீர்களே!! பசங்ககிட்டே சொல்லீட்டீங்களா?
/வணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு///
ReplyDeleteவிட்டா புது சீதாயணமே எழுதிடுவீங்க போல இருக்கே!!!
படிக்க நீங்க ரெடின்னா எழத நான் ரெடி டாக்டர்.
நீங்க ரெடி!!நமக்கு முதுகு தாங்காது சாமி!!!
பார்பதற்கு சினிமா ஹீரோ மாதி இருக்கார்,நெறமும்,குணமும் பவுனு மாதி.[யாரும் பணம் போட்டு படம் எடுக்கணும்னா ஹீரோ ரெடி.///
ReplyDeleteஉங்களை வச்சு முதல்ல எடுப்போம்..
"ரெண்டு இட்லி ஒரு வடை வாங்கி கொடுத்தாக்கூட போதும்,எவனையும் குத்துறதுக்கு ஆள் ரெடியா இருக்கு."
ReplyDeleteமதுரையின் சிறப்பைப் பற்றி எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
நான்காம் நாள் வாழ்த்துக்கள் ஜெரி சார்.
அறிமுகத்துக்கு நன்றி..
ReplyDelete//இப்பவே இந்த போடு போட்டான்னா ....எதிர்காலத்தில் கலக்குவான்//
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறீங்க :))
பிரபு நல்லா எழுதுறாரு..ஆனா தமிழிஷ்ல இணைய மாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு..கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்..அப்போதுதான் நிறைய பேருக்கு தளம் தெரிந்து படிக்க வருவார்கள்..
ReplyDeleteமதுரை சரவணன் பதிவில் பாலோயர் வசதி இருப்பது போல் தெரியவில்லையே..?
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி சார்.
ReplyDeleteஎனக்கு சந்தோஷம் வந்தா அதை மறைச்சுட்டு இயல்பா நடந்துக்குற அளவுக்கு வாழ்க்கையில் இன்னும் பக்குவம் பழகல..... மாமாவுடைய பதிவில் என் அறிமுகத்தைப் படித்துவிட்டு ரொம்பவே சந்தோஷப் பட்டேன்.... இவ்வளவு பாசமான உரிமையான மாமாவை எனக்கு அடையாளம் கண்டுகொடுத்ததே ஒரு பதிவர் சந்திப்புதான் என்று சொன்னால் நம்பமுடியுமா என்று தெரியவில்லை :)
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி மாமா.... உங்க கால்குலேஷன்ல நல்ல மார்க் வாங்கியிருக்கிறேன்... ஸோ இனிமேல் கவனமா எழுதணும்னு புரியுது..... நான் உண்மையிலேயே நினைக்கல மாமாவின் நேர்கொண்ட பார்வையில், அவரின் வலைச்சர வாரத்தில், என் எழுத்துக்கு ஓர் அறிமுகம் கிடைக்கும்னு.... அப்போ நானும் "பதிவர்" ஆகிட்டேன்!! :)) ஜாலி ஜாலி!! ஹாஹா
வெற்றி... இன்றுதான் தமிழிஷில் உங்க யோசனைப்படி சேவாக் பற்றிய பதிவை இணைத்தேன்... நன்றி...
மதுரைக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//
ReplyDeleteடிஸ்கி:அதிகமான பின்னூட்டங்கள் இடும் பதிவர்களுக்கு,தலா Rs-1000 பரிசாக வழங்கப்படும்.எனது ஈமெயிலில் உங்கள் Account number அனுப்பவும்.[cheque-Bounce- ஆச்சுனா கம்பெனி பொறுப்பேற்காது.//
விலாசம் கொடுங்க ஆட்டோ விலே
வந்து வாங்கிக்கிறேன்
asaththunga sir:)
ReplyDeleteவெற்றி தொடரட்டும். உங்களுக்கு வெற்றியைத் தரட்டும்.
ReplyDeleteவலைச்சர பதிவுகளுக்கு வாழ்த்துகள் ஜெரி.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி:))
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ஆசிரியரே
ReplyDeleteவெற்றி - இளமை புதுமை.
ReplyDeleteசரவண்ன் - கருத்துப் பெட்டகம் பிரபு.எம். - இனிய ஆச்சர்யம்.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDelete/// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அதிகமான பின்னூட்டங்கள் ///
எப்போ எனக்கு செக் அனுப்புவீங்க ...
//
ஸ்டார்ஜன் !! நான் முன்னாடியே புக் பண்ணி விட்டேங்க!!!
வெற்றி said...
ReplyDeleteமதுரை சரவணன் பதிவில் பாலோயர் வசதி இருப்பது போல் தெரியவில்லையே..?
//
உண்மைதான்!!
வாழ்த்துக்கள் ஜெரி.
ReplyDeleteஆகா நமூரு பசங்களப் பத்தி அறிமுகமா - சரி சரி
ReplyDeleteமாமனுக்கும் மச்சானுக்கும் நல்வாழ்த்துகள்
பிரபு பெற்றி - நல்வாழ்த்துகள்
படிச்சுடரேன் எல்லாத்தெயும்
அறிமுகங்களுக்கு நன்றி ஜெரி
ReplyDeleteஇதில் நான் மதுரை சரவணனைப் படித்து இருக்கிறேன்
பின்னூட்டம் வழியாக என்னை ஆதரித்த அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்,நன்றி,நாளும் ...அன்பில் ...தொடர்வோம்.
ReplyDeleteஜெரி வேலை மிகுதியால் படிக்க இயலவில்லை. இன்று தான் அனைத்தையும் பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்.