Saturday, February 20, 2010

வலைச்சரத்தில் சிங்கங்கள்.

வணக்கம் நண்பர்களே,இன்று வலைச்சரத்தில் ஐந்து சிங்கங்களை அறிமுப்படுத்தப்போறேன்,என் இந்த பெயர் வைத்தேன் என்று சும்மா போய் பாருங்க,அப்ப..புரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------
D.R. அசோக்:என் இனிய நண்பர்,சென்னைக்காரர்,இவர் ஒரு பின்னூட்ட மின்னல்,"அறிதலில் காதல்"என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார்,கவிதைகளின் இளவரசனாக வலம் வருகிறார்.மனித மனத்தின் பேயோட்டமே இவரது கவிதைகளுக்கான கருப்பொருளாக இருக்கிறது.சென்று பாருங்கள்.வீச்சு தெரியும்.
--------------------------------------------------------------------------------------------------------------
துபாய் ராஜா:ராஜ சபை என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்,பயணக்கட்டுரைகள்,அனுபவம் என சகலமும் கலந்து கட்டி அடிக்கிறார்.போய் பாருங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
பால குமார்:மதுரைக்காரர்,பழக இனிமையானவர்,B.s.n.l.-ல் பொறியாளராக பணிசெய்கிறார்.ஒவ்வொரு பதிவுகளும் அசத்துகிறார்,பத்திரிக்கையை படிக்கும் உணர்வு வருகிறது.சோலை அழகுபுரம் என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.கவிதைகளையும்,வாழ்க்கை அனுபவங்களையும் படைக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கமலேஷ்:திருவாரூர் காரர்,தற்சமயம் சவுதியில் பனி செய்கிறார்,சுயம் தேடும் பறவை என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்,கவிதைகளில் பொறாமை வருகிறது,கட்டாயம் பாருங்கள்.நேர்த்தியான புகைப்படங்கள் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------
கருணாகரசு:எனக்கு பிடித்த இனியவர்,சிவப்பு சிந்தனை காரர்,ஈழ மக்களுக்கு என்னோடு தோள் கொடுக்கும் சக பதிவர்,கவிதைகளில் கோபம் கொப்பளிக்கிறது,கருணை மிதக்கிறது,அன்புடன் நான் என்ற வலைப்பூ வைத்துள்ளார்.போய் பார்த்தால் இந்த சிங்கங்களை புரியும்.
------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து வாருங்கள்....நாளும் ...அன்பில்....தொடர்வோம்.

24 comments:

  1. மாமா சொல்லிட்டீங்கள்ல... இதோ சிங்கங்களை ஒரு ரவுண்ட் அடிச்சு பாத்துட்டு வந்துர்றேன்!! :)

    ReplyDelete
  2. அனைவருக்கும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றிங்க...ஜெரி... மிக உயர்ந்த இடத்தில் என்னையும் நிறுத்தி அழகுபார்க்கும்....உங்க மனதிற்கு.

    ReplyDelete
  4. மிக்க நன்றி அண்ணே ! தொலைபேசி சொன்னதில் நெகிழ்வாக உணர்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களது அறிமுகம் படிக்கத்தூண்டுகிறது..இன்னும் பாலகுமார் மட்டும் பார்க்கவில்லை...

    ReplyDelete
  6. சிங்கங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அருமை. நன்றி..:) தொடருங்கள்.

    ReplyDelete
  8. ஆஹா எல்லாம் சிங்கம்தாம்லே .அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிக பெரிய ஹானர் சார், எதிர்ப்பாராத அதிர்ச்சின்னு சொல்லலாம், சந்தோஷமாயிருந்தது. பைத்தியக்காரன், ஜ்யோவ்(இன்னும் பலர்) பின்னூட்டம் எனக்கு வருவதில்லையே என்ற வருத்தம் இருந்தது.. நீங்க சிங்கம்ன்னதும் வருத்தங்கள் மறைந்து ஆனந்த பூ பூத்தது.

    சக சிங்கங்களுக்கு என் வாழ்த்துகள். ஜெரி சார் உங்கள் ஊக்கத்தற்கு நன்றிங்க. எழுதும் பொறுப்பையும் தந்திட்டீங்க.

    நெகிழ்வுடன்
    D.R.அஷோக்

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    டாக்டர் அசோக் .. வாழ்க.

    ReplyDelete
  11. இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
    துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான்

    ReplyDelete
  12. சிங்கங்களா இன்று!!! பார்ப்போம்!!

    ReplyDelete
  13. நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ஐவருமே ஒத்த கருத்துடையவர்கள் என்பதால் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உறவுகளைப் பிரிந்து தாய்மொழி பேச,படிக்க,எழுத முடியாமல் வாழு(டு)ம் எங்களைப் போன்றோருக்கு வலையுலகமும், உங்களைப் போன்ற நண்பர்களுமே மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வருகிறீர்கள். பணிப்பளு குறைய எழுதும் எங்களைப் போன்றோருக்கு இதுபோன்ற ஊக்கங்கள் மென்மேலும் சிறந்த பகிர்வுகளை அளிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும்,உள்ளத்திற்கு புத்துணர்ச்சியையும் தருகின்றன.

    மிக, மிக, மிக நன்றி ஜெரி சார். வலைச்சரத்திற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அருமையான அறிமுகத்துக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  15. D.R. அசோக்:என் இனிய நண்பர்,சென்னைக்காரர்,இவர் ஒரு பின்னூட்ட மின்னல்///

    இவருடைய பின்னூட்டம் இல்லாத இடமே இல்லை என நினைக்கிறேன்!!

    ReplyDelete
  16. ஜெரி சார் இன்றும் அசத்துறீங்களே ..

    துபாய் ராஜா என் நண்பர் . ( மற்றவரும் தான் ) .

    ReplyDelete
  17. //butterfly Surya said...
    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    டாக்டர் அசோக் .. வாழ்க//
    உலகசினிமா விமர்சகர் அண்ணண் பட்டர்பிளை சூர்யா வாழ்க வாழ்க

    @தேனம்மை நன்றி

    @தேவன்மாயம் நன்றி, உங்கள் பெயர் இல்லாத ப்ளோயர்லிஸ்டே இல்ல :)

    ReplyDelete
  18. வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் என் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  19. மிக்க நன்றி ஐயா, உங்களை போன்ற விழுதுகள் தரித்த ஒரு ஆலமரம் இந்த சிறு புல்லை ஊக்கப் படுத்தும்போது அதன் வேர்கள் மேலும் பலமடைந்து விடுகிறது.உங்களின் ஊக்கம் என் எழுத்துக்களை மேலும் நெறிபடுத்தும்.வலை சரத்திற்கும்,சகல பதிவர்களுக்கும், கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் , மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வாவ்!

    சிங்கங்கங்களுக்கு வாழ்த்துக்கள்!

    முதல் சிங்கம் என் மகன் என்பதால்...

    இப்படிக்கு
    கிழச்சிங்கம்

    ReplyDelete
  21. பாதி புதியவர்கள்....

    அசத்தல் அறிமுகங்கள்...

    பிரபாகர்.

    ReplyDelete
  22. பின்னூட்டத்தின் மூலம் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த,அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. சித்தப்பு இதெல்லாம் ஓவரு நீங்க கிழசிங்கமா? போட்டோவுல எனக்கு தம்பி மாதிரியிருக்கீங்க... இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கலாம் நீங்க.. சித்திகிட்ட இந்தமேட்டற உட்றாதிங்க.. :)))

    ReplyDelete
  24. அசோக் நண்பர்கள் என்ற பகுதியை இணைக்கவில்லை போலிருக்கு. மற்றவர்கள் அணைவரையும் ஏற்கனவே படித்துக்கொண்டுருக்கின்றேன். சிறப்பான அறிமுகம்.

    ReplyDelete