Thursday, March 18, 2010

வியாழன் - புத்தகம்.

                இன்னைக்கும் நாளைக்கும் எனக்கு மிகவும்பிடித்த விஷயங்களையே எழுத இருக்கிறேன் என்று சொன்னதை யாருமே கண்டுகிட்டதா தெரியலை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்  இன்றும் எழுதியிருக்கிறேன். கடந்த ஒரு ஆறு ஏழு வருடங்களாகவே வியாழன் என்றவுடன் நினைவிற்குவருவது, ஆனந்தவிகடன். எங்க குடும்பமே ஒருகாலத்தில் விகடனில் தீவிர வாசகர்கள், எனக்கு எஸ்.ராவை அறிமுகம் செய்ததே ஆ.வி தானே. ஆக இன்று வியாழன், ஆனந்தவிகடன் புத்தகம்,  எனக்கு பிடித்த விஷயமும் புத்த்கம்தான், படிப்பது. ஆக இன்று இந்த புத்தக புழுக்கள், என் நண்பர்கள்.



நான் வாசித்த தமிழ்புத்தகங்கள்

              கிருஷ்ணபிரபு, நண்பன். எனக்கும் கிருஷ்ணபிரவுவிற்குமான அறிமுகத்தை என் பதிவுகளில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். நான் இதுவரை ஒன்பது சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஏதாவது ஒண்ணு ரெண்டு நல்லா இருந்தா, உங்களின் வாழ்த்துக்கள் இவருக்கே உரித்தானது. ஒருவேளை எதுவுமே லாயக்கில்லை என்றால், தயவுசெய்து இவருக்கு ஒரு மெயில் பண்ணி திட்டிடுங்க. இவரது வலைப்பதிவு இதுதான்  இவருடைய வாசிப்பனுபவம் அலாதியானது. என் பொறாமைக்குரிய நபர்களில் முதல் பத்து இடங்களில், நீ இருக்க கிருஷ்ணா....



                       சேரல், ஞானசேகர், பீமோர்கன் என சிலரால் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் புத்தங்களுக்கான வலைப்பதிவு. இவர்கள் அனைவருமே தனித்தனியாக பதிவெழுதி வந்தாலும் இப்படி ஒத்த சிந்தனையுடன் இணைந்து வாசித்தும் எழுதியும் வருவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் வெகு எளிதாக சாத்தியப்படுதியிருக்கிறார்கள். ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகர்களுக்கு இவர்களது அறிமுகம், நிறைய உதவியாய் இருக்கும். என்னை கவர்ந்த இவர்களது சில அறிமுகங்கள்,

குருதிபுனல் , பெய்தலும் ஒய்தலும்., பதேர் பாஞ்சாலி, வாய்மொழியில் உலவும் வரலாறுகள்





                   லேகா, வண்ணதாசனின் சிறுகதைகளின் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தபோது, கூகிளின் தேடலில் இவரது பதிவு அறிமுகமானது. புத்தகத்திலுள்ள, தனக்கு பிடித்தமான வரிகளை மேற்கோள் காட்டி எழுதிவருகிறார். அனேகமாக அந்த ஓரிரு வரிகளே புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக இருகிறது. இன்னும் இவரது பதிவுகளை முழுவதும் வாசிக்கவில்லை. கொஞ்சம் வாசித்த்தற்கே இன்னும் இத்தனை புத்தகங்களை படிக்கவில்லையா என்று குற்றஉணர்ச்சி வருகிறது. எஸ்.ராவின் நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற புத்தகத்தின் அறிமுகபதிவு, வண்ணதாசன் சிறுகதைகள் புத்தகத்தின் அறிமுகபதிவு, குற்றாலம் சென்று வந்த இவரது பயணகுறிப்பு, குற்றாலம் பற்றிய எந்த செய்தியும் எனக்கு ஆயாசம் தருவதேயில்லை. குளிக்க குளிக்க அலுக்காத குற்றாலம் படிப்பதிலும் அப்படியே. நன்றி லேகா.

                 இவர்களுடைய பதிவுகளை தயவுசெய்து முழுமையாக படியுங்கள், உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது இவர்களின் பதிவுகளில். இன்னும் நிறையபேர் புத்தகங்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள், இருப்பினும் என் நண்பர்களையே முன் நிருத்தியிருக்கிறேன். மேலும் புத்தக விமர்சனம், அறிமுகம் எழுதும் பதிவர்களை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருந்தால், இங்கே பின்னூட்டத்தில் தெரியச்செய்யுங்கள், எனக்கும் உதவியாய் இருக்கும்.

           நாளைக்காவது என்ன ஸ்பெசல் சொல்லுங்க? ஒரு டிப்ஸ் சொல்லட்டுமா? எனக்கு இதுவும் மிகவும் பிடித்தமான விஷயம்தான். இன்னும் ஒன்று நாளைக்கு வெள்ளிகிழமை வேறு.

 :-)

17 comments:

  1. அனைவருக்கும் இந்த இரவு இனிய இரவாக அமையட்டும், காலை சந்திப்போம். :-)

    ReplyDelete
  2. சினிமாதானே..:))

    ReplyDelete
  3. நல்ல பகிர்தல் முரளி.
    :)

    ReplyDelete
  4. எனக்கு இதுவும் மிகவும் பிடித்தமான விஷயம்தான். இன்னும் ஒன்று நாளைக்கு வெள்ளிகிழமை வேறு.

    பக்தி..... சரியா.

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள் தல.. நாளைக்கு சினிமாவா? அசத்துங்க..

    ReplyDelete
  6. உங்கள் பகிர்வுகள் அருமையாக இருக்கு முரளி

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு.நாளை ஓவியம் சரியா?

    ReplyDelete
  8. நாளைக்கும் நல்ல தேர்வுகளா இருக்கும்னு சொல்லுங்க. அருமை.

    ReplyDelete
  9. நல்ல பகிர்தல் முரளி.

    ReplyDelete
  10. Thanks for sharing about me Murali...

    ReplyDelete
  11. இன்னைக்கு நிறைய தீணி போட்டிருக்கீங்க நண்பா...

    நாளைக்கு புகைப்படம், இல்லன்னா சினிமா... அப்டிங்களா?

    ReplyDelete
  12. அறிமுகத்துக்கு மிக்க நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  13. வெள்ளி கிழமை வேறென்ன சினிமா தான்.

    நல்ல அறிமுகங்கள் முரளி

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு நண்பா...
    அடுத்து சினிமா தான்.....
    :-)

    ReplyDelete
  15. புத்தக அறிமுகங்கள் அருமை - புதுமை - நன்று நன்று முரளி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete