அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..
என் உண்மையான பெயர் சேக் மைதீன். நான் இப்போது சவூதி அரேபியாவில் கணனி பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. 2 வருடத்துக்கு ஒருமுறை தாயகம் சென்று திரும்புவேன்.
நான் ஸ்டார்ஜன் என்ற புனைப்பெயரில் நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்திலும் நாளைய ராஜா என்ற வலைப்பக்கத்திலும் எழுதி வருகிறேன். நான் இதுவரை நிலா அது வானத்துமேல யில் 134 இடுகைகள் எழுதியுள்ளேன்.
இன்று முதன்முதலாக வலைச்சரத்தில் ஆசிரியராக வாய்ப்பு அமைந்துள்ளது.இந்த பதிவுலகில் எழுதவந்த பின்னர் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் அனைவரும் கிடைத்துள்ளீர்கள். எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் என்முயற்சிகளுக்கு ஆதரவும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னவென்று நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை.
நான் நாளையராஜாவில் பதிவு எழுத ஆரமபித்தவுடன் எனக்கு முதன்முதலாக என் பக்கத்துக்கு வந்து வாழ்த்திய பழனி டாக்டர் சுரேஷ் அவர்களை மறக்கவே முடியாது. அதுபோல நிலா அதுவானத்துமேல யிலும் அவர்தான் முதல் பின்னூட்டம் இட்டார். அதுமாதிரி எனக்கு முதன்முதலாக பாலோயர் ஆக ஆனவர் என் இனிய நண்பர் முரளிகண்ணன் அவர்கள்.
தொடர்ந்து புதியவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் கோவி.கண்ணன் அவர்களும், நான் வலையில் எழுதப் போகிறேன் என்றதும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்த என்னுடன் பணிபுரியும் என்னுடைய அருமை நண்பருமான அக்பரும் மறக்க முடியாதவர்கள்.
நான் உங்களில் ஒருவனாக எழுதுவதற்கு முக்கிய காரணம் சிறுவயதுமுதல் ஆர்வம் மிகுதியாக உண்டு. எங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசலின் பேஷ் இமாம் மர்ஹூம் பத்ஹுல்லாஹ் ஹஜரத் அவர்கள் தினமும் பிள்ளைகளுக்கு அரபிமொழியில் குர்ஆன் ஓதுவதற்கு கற்றுக் கொடுப்பார்கள். நான் தினமும் அவரிடம் குர்ஆன் ஓதுவதற்கு அதிகாலையில் செல்வேன். ஹஜரத் அவர்கள் பாடங்கள் மட்டுமல்லாமல் பொதுவான விஷயங்களை பற்றி பிள்ளைகளுடன் விவாதிப்பார்.
அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அவர் பல சமூகநல கட்டுரைகள் பத்திரிக்கைகளுக்கு எழுதுவார். அப்போது எனக்கு, அவர் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எனலாம். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்து நான் பள்ளி ஆண்டுவிழாவில் பேசி முதல்பரிசு பெற்றேன். தொடர்ந்து பள்ளிப் போட்டிகளில் பரிசுபெறும்போதெல்லாம் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்தவர்.
உங்களுக்கு என் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டதுக்கு இவரும் ஒரு காரணம். மேலும் என்னை பற்றி தெரிந்து கொள்ள நண்பர் ஷங்கி அழைத்த நானும் என் வரலாறும் தொடர்பதிவில் காணலாம்.
என்னுடைய எல்லா இடுகைகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன்.
எனக்கு பிடித்த என் அறிமுக இடுகைக்கு பின்னர் திகில் அனுபவ இடுகையும் எனக்கு பிடிக்கும்.
மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளிகால நினைவுகளும் பதின்ம வயது நினைவுகளும் என்னை வந்துவந்து மறுபடியும் அந்தகால கட்டத்துக்கு செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும்.
சினிமா விமர்சனங்கள் நான் எழுதியிருந்தாலும் இது சிந்தனை செய்யவைத்திருக்கிறது.
கவிதைகளில் நான் மூழ்கியது இதுவே முதல்முறை...
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கேள்வி பதில் இடுகைகளில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து உங்கள் பூக்களைத் தூவுங்கள், அதை வலைச்சரமாக தொடுக்க ஆவலாக உள்ளேன்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
ஜமாய் ராஜா ஜமாய்!
ReplyDeleteஒரு வாரமும் அதிரடியாய் பல பதிவர்களை அறிமுகப்படுத்த வாழ்த்துகள்.
வலைச்சரத்தின் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.
போலாம் ரை..ரைட்..!
ReplyDelete:-)
வாழ்த்துகள் அண்ணாச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா! வாரப்பணியை செம்மையாய் செய்து அசத்துங்கள்...
ReplyDeleteபிரபாகர்.
ரைட்டு, வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஅருமையான சுய அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
வருக வாழ்த்துக்கள் அசத்துங்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகம்.வாழ்த்துகள்.
ReplyDeleteஜொலிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!
ReplyDeleteஅண்ணே! ஸ்டார்ஜன் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி, இங்கேயும் நட்சத்திரமாக ஜொலிப்பீங்க! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநிலா அது வானத்து மேல!
ReplyDeleteஸ்டார்ஜன் Sir.. வாழ்த்துக்கள்..
சரம் கோர்க்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே.
ReplyDelete// சவூதி அரேபியாவில் கணனி பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறேன். //
ReplyDeleteஅங்க போய் ஏன் பழுது பார்க்கறீங்க... பழுது நீக்குங்க...
வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் வாருங்கள்... அறிமுகம் ரசிக்கவைக்கிறது... தொடருங்கள்....
ReplyDeleteall the best STARJEN
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்....போட்டோ அம்மூருலயா எடுத்தீங்க.....?
ReplyDeleteஏன்னா அங்கதான் இதுமாதிரி ஸ்டுடியோ பேக்ரவுண்ட் இருக்கும். அதான் கேட்டேன்...
வாழ்த்துக்கள் !!
ReplyDeleteவருகைதந்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅக்பர் @ நன்றி
ராஜூ @ நன்றி
ஆடுமாடு சார் @ நன்றி
பிரபாகர் @ நன்றி
சைவகொத்துப்பரோட்டா @ நன்றி
முனைவர்.இரா.குணசீலன் @ நன்றி
துபாய் ராஜா @ நன்றி
றமேஸ்-Ramesh @ நன்றி
T.V.ராதாகிருஷ்ணன் @ நன்றி
கடையம் ஆனந்த் @ நன்றி
ராமலக்ஷ்மி @ நன்றி
சேட்டைக்காரன் @ நன்றி
Sivaji Sankar @ நன்றி
SUREஷ் (பழனியிலிருந்து) @ நன்றி
இராகவன் நைஜிரியா @ அண்ணா வணக்கங்கண்ணாவ்
விஜய் @ நன்றி
இராமசாமி கண்ணண் @ நன்றி
க.பாலாசி @ நன்றி
padma @ நன்றி
கண்ணா.. @ இந்த போட்டோ சவூதியில எடுத்தது.
Mrs.Menagasathia @ நன்றி
இங்கிட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் தம்பி !
வாழ்த்துகள்! ஸ்டார் ...
ReplyDeleteவாங்க வாங்க எங்க அருமை ஸ்டார்ஜன் அசத்துங்க கலக்குங்க காத்து இருக்கோம் உங்க ரசிகப் பட்டாளம்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஷேக் வாழ்த்துகள் ...
ReplyDeleteவருகை தந்து வாழ்த்துக்கள் தெரிவித்த
ReplyDeleteஅண்ணன் கோவி.கண்ணன்
ஜமால்
தேனக்கா
வசந்த்
ஆகியோருக்கு மிக்க நன்றி.
வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteவலைச்சரத்தின் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்தின் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்துக்கள் தெரிவித்த
ReplyDeleteகார்த்திகைப் பாண்டியன்
சே.குமார்
ஆகியோருக்கு மிக்க நன்றி.
அருமையான அறிமுகம் ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅருமையான அறிமுகம் ஸ்டார்ஜன் அண்ணே
ReplyDeleteஅறிமுகமே கலகலக்குது. வருக! வருக! வருக!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன்..:))
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைதந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட
ReplyDeleteமின்மினி
கட்டபொம்மன்
சித்ரா டீச்சர்
வானம்பாடிகள் பாலா சார்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
வருகைதந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட
ReplyDeleteஅனானிமஸ்
ஷங்கர்
சுல்தான் சார்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
தல ஃபோட்டோவுல்லே ஜுப்பரா இருக்கியே, ஸ்டுடியோவுலே எடுத்ததா?
ReplyDeleteஜோரா தொடருங்க வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ,
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே .
வருகைதந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட
ReplyDeleteஅபுஅஃப்ஸர்
நண்டு@நொரண்டு -ஈரோடு
அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
புல் சைஸ் போட்டோவுல்லாம் போட்டு கலக்கறீங்க குரு...
ReplyDeleteநடத்துங்க நட்த்துங்க
ராகவன் நைஜீரியா குசும்பு என்றாலும் ரசிக்க வைத்தது. வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteவாங்க சிஷ்யா பிரதாப்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜோதிஜி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி