Monday, April 19, 2010

என் பெயர் செல்வம்

புரியுது..புரியுது மனசுல பெரிய ஆதவன்னு நினைப்பான்னு நீங்க கேக்கிறது புரியுது. இருந்தாலும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல......

நான் முதல்பதிவு போட்டவுடனே யாருமே படிக்காமே, தெரியாம படிச்சவங்களும் நாலு திட்டு திட்டி அனுப்ச்சிருந்தாங்கன்னா உங்களுக்கு இந்த கொடுமையே வந்திருக்காது. இப்ப வருத்தப்பட்டு என்னா பண்றது? டூ லேட் பாஸ்.

நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிட்டு 2 ½ வருஷமா வலையுலகைச் சுத்தி சுத்தி வந்ததுல கற்றதும் அதிகம். பெற்றதும் அதிகம்.

சிறுவர்மலர், பூந்தளிர், ராணி காமிக்ஸ், குமுதம், விகடன், ராஜேஷ்குமார், பாலகுமாரன், சுஜாதான்னு படிப்படியா ஏறுன வாசிப்பனுபவத்தை லிப்ட் மூலமாக ஒரேயடியாக ஏற்றிவிட்டது இந்த வலையுலகம் தான்.

வாழ்க்கை என்பது கற்பதும், பகிர்வதும் என்று கொண்டால் சரியான மீடியம் வலையுலகம் தான். இன்னும் நிறைய கற்றலையும், பகிர்தலையும் எதிர்நோக்கி....

வலைச்சரத்தில் என்னை யாராவது அறிமுகப்படுத்தமாட்டார்களா? என்று ஏங்கியுள்ளேன். இன்று என்னையவே வலைச்சர ஆசிரியராக இருக்கச் சொன்னது சீனா ஐயாவின் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது.

வலைச்சரம் குழுவிற்கும், என்னையும் வந்து படிக்கப் போகும் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.

ஸ்டார்ட் மீஸிக்........

இப்படிக்கு

செல்வம்

16 comments:

  1. வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள் செல்வம்!

    ReplyDelete
  2. நன்றி வெயிலான்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். இனிதே பணி தொடரட்டும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.
    இனிதே தொடரட்டும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் .தொடருங்கள்

    ReplyDelete
  6. வாங்க செல்வம் - வாழ்த்துகள் செல்வம்

    ReplyDelete
  7. //வாழ்க்கை என்பது கற்பதும், பகிர்வதும் என்று கொண்டால்//

    ரொம்ப சரி.தொடருங்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி....குமார், பத்மா,சீனா ஐயா, அமைதிச்சாரல், ஜெய்லானி.

    ReplyDelete
  10. வாங்க செல்வம்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் செல்வம்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் திரு.ஆசிரியர் செல்வம்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் செல்வம்

    தொடருங்கள்..

    ReplyDelete
  14. நன்றி...மின்மினி, ஸ்டார்ஜன், பேரரசன், நிகழகாலத்தில், சொல்லரசன்.

    அன்புடன்

    செல்வம்

    ReplyDelete
  15. முதல் இடுகை நல்லாயிருக்குங்க செல்வம்....

    ReplyDelete