Friday, April 30, 2010

கற்றதும் பெற்றதும் - வலைச்சரம் ஐந்தாம் நாள்

வலைப்பூ எழுத வந்த போதில் மற்ற யாருக்கும் கிடைக்காத சிபாரிசுகள், வரவேற்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நல் உள்ளமும் என்னைத் தூண்டி துலங்க வைத்தது. திரும்பத்திரும்ப அவர்களின் பெயர்களைச்சொல்வது அவர்களைச்சங்கோஜப்படுத்தும். ஆகவே, அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் மட்டும் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!

வலையில் வந்த புதிதில் வலைப்பூக்களைப் படிப்பது, கருத்துரைகள் எழுதுவது, ஓட்டுப்போடுவது இதெல்லாம் குறித்து எந்த அனுமானமும் இல்லை. முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தான் தமிழ் மணம் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். தமிழ்மணத்தில் இணைந்த போதிலும், எனது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைப்பூவை மட்டும் படித்து தயங்கித்தயங்கி பின்னூட்டமிடுவேன். அப்போது, சகோதரி! நாங்களும் வலைக்குப் புதியவர்களாய் இருந்து பழையவர்கள் ஆனவர்கள் தான் என்று எனது தயக்கத்தை உடைத்தெரிந்த வலையுலகச்சகோதரர்கள் இவர்கள்.

1. கிளியனூர் இஸ்மத் அண்ணன் அவர்கள் - http://kismath.blogspot.com/
2.முனைவர் ரத்தினப்புகழேந்தி அவர்கள் - http://mankavuchi.blogspot.com/
3. சகோதரர் பலாப்பட்டறை சங்கர் அவர்கள் - http://palaapattarai.blogspot.com/
4. வாழ்க்கை வாழ்வதற்கே பிரபாகர் அவர்கள் - http://abiprabhu.blogspot.com/
5. திருப்பூர் தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் - http://deviyar-illam.blogspot.com/
6. தெக்கிக்காட்டான் பிரபாகர் அவர்கள் - http://thekkikattan.blogspot.com/

முகத்தைப்பாராமல் எழுத்து முகம் அறிந்து அன்போடு உறவு கொண்டாட முடியும் என்று உணர வைத்தவர்கள். வாழ்க வளர்க!

வலை ஆரம்பித்த நாட்களில் சக நண்பர்களின் வலையின் அழகும், அமைப்பும் என்னை ஈர்த்தது மட்டுமல்ல, என்னை பொறாமைப்படவும் வைத்தது.இதெல்லாம் எப்படி செய்கிறார்கள், ஒருவேளை மென்பொருள் நுட்பம் தெரிந்தவர்கள் மட்டும் தான் உருவாக்க முடியுமோ என்று எனக்குள்ளே தர்க்கித்து சோர்ந்த நாட்கள் உண்டு.வலை எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு Gadjet, widget, HTML இதற்கான அர்த்தங்கள் புரியவில்லை.நானே முயன்று கூகிளில் படித்து ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும் எப்படி செயல்படுத்துவது, மாற்றங்களை எப்படிக்கொண்டுவருவது என்று புரியவில்லை. அதற்கு வழிகாட்டிய வலைஞரை உங்களுக்குச்சொல்கிறேன். இது கண்டிப்பாக அறிமுகமில்லை. அவரின் வலையைப்படித்து பயன் பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்ற முறையில் ஒரு நன்றி நவிலலாக இந்தப்பதிவு.

1. சுமஜ்லாவின் இந்த வலையில் டெக்னிக்கல் என்ற தலைப்பில் எழுதியுள்ள தொழில் நுட்பப்பதிவுகளில் புதிய வலைஞர்களுக்கான டிப்ஸில் ஆரம்பித்து, nav bar நீக்குவது, ஓடும் எழுத்துக்களை உருவாக்குவது, இடுகைகளுக்கு சுலபமான இணைப்பு கொடுப்பது, கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் முதலான அத்தனை நுட்பங்களையும் படங்களுடன், எளிமையாக சொல்லித்தருகிறார். சுமஜ்லா! வலைப்பூவில் பூக்கொட்டுவது மட்டும் எப்படி என்று இன்னமும் கைவரவில்லை. http://sumazla.blogspot.com/

என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் பத்து ஓட்டு வாங்குவதற்குள் ஒரு நாளில் பத்து முறை கணினியை உயிர்ப்பித்து, யார் யார் ஓட்டுப்போட்டது என்று பார்ப்பது என் வழக்கம். சில வலைஞர்களின் பதிவுகள் பெறும் ஓட்டுக்கள், பின்னூட்டங்கள் பார்த்து ம்... நிச்சயம் நல்ல பதிவு என்று முடிவு கட்டி படிக்கத்தொடங்கிய வலைப்பதிவுகள்.

1. கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அவர்களின் சிரிக்க வைக்கும்,சமயங்களில்
சிந்திக்க வைக்கும் (!!!) சரளமான கட்டுரைகள் கொண்ட வலைப்பூ
2. அண்ணாமலையான் அவர்களின் நீங்களும் ஹீரோ ஆகலாம் பதிவு
3. ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பூ
4. பாமரன் பக்கங்கள்
5. முத்துச்சரம் ராம லெக்ஷ்மி அவர்கள்

இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. பதிவு சுருக்கம் வேண்டி இத்துடன் முடிக்கிறேன்.நல்ல பல வலைப்பூக்கள் விட்டுப்போயிருந்தால் அதற்குக்காரணம் என் அறியாமையே அன்றி வேறில்லை. நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

13 comments:

  1. பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சாந்தி. உங்கள் பல இடுகைகளை படித்ததுண்டு. தெளிந்த நீரோட்டம்போல் அழகான எழுத்து உங்களது. அறிமுகங்கள் நான் எப்போதும் வாசிப்பவர்கள், ரசிப்பவர்கள். நன்றி.

    ReplyDelete
  3. என்ன அழகாக - நேர்த்தியாக - அறிமுகப் படுத்துறீங்க....... சூப்பர்!
    என் பெயரும் இருக்கே......... ஹையா ............. நன்றிகள் பல......!

    ReplyDelete
  4. பலாபட்டறை சங்கர் மூலமாய் உங்களின் அறிமுகம் கிடைக்க, உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்... என்னை இங்கு சுட்டியதற்கு நன்றி சகோதரி!

    இன்னமும் நிறைய எழுதி உங்களின் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பிரபாகர்...

    ReplyDelete
  5. இயல்பாய் எழுதி இருக்கிறீர்கள்!!!
    அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இதுவரை பார்க்காத எழுத்தாளர்கள் எத்தனையோ பேர்களை இன்று வரையிலும் வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள். ஏறக்குறைய மொத்த வலை உலகத்திலும் 1000 பேர்களாவது எழுதிக் கொண்டுருப்பார்கள் என்று யோசிக்கும் போது இத்தனை பேர்களுக்கும் வலை உலகம் என்பது இல்லாவிட்டால்? அவர்களின் திறமை உள்ளுக்குள்ளே தானே மறைந்து போயிருக்கும். படிப்பை வெறுத்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை ஆர்வத்தை உருவாக்கி வாழ்க்கையை தலைகீழாக மாற்றியதைப் போல ஒவ்வொருவருக்கும் முகம் தெரியாத எவரின் எழுத்துக்களோ, அவர்களின் விமர்சனங்கள், பாராட்டுரைகள் இன்னும் பல பேரை எழுத வைத்துக்கொண்டுருக்கிறது. இயங்க வைத்துக்கொண்டுருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களை இன்னும் முயற்சிக்க வேண்டும் என்று கொண்டு வந்ததில் எனக்கும் கூட சிறிது திருப்தி. தொடரட்டும்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
  8. நல்வாழ்த்துகள் சாந்தி
    நல்ல முறையில் செல்கிறது
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  10. நன்றி சாந்தி.

    தினமணியில் உங்களைப் பற்றிய குறிப்பு வெளியானதைத் தொடர்ந்து, உங்கள் வலைப்பூக்களைத் தேடி வாசித்து வியந்து, அன்றிலிருந்து தொடர்கிறேன். உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்பு சகோதரி என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி...
    தங்களின் உள்ளன்பும்,
    தெளிவான சிந்தனையும்,
    உணர்வுகளின் ஓசையை
    உள்ளபடி
    எழுத்துவடிவம் கொடுக்கும்
    உங்களின் பாணிதான்
    பல
    தமிழ்ஆர்வலர்களை
    நட்பாய் பெற்றுக் தந்துக்கொண்டிருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உங்கள் எழுத்துக்கள் வாசிப்பவர்களை வசீகரிக்கும் எழுத்துக்கள். வலைச்சரத்தில் அழகாய் தொடுத்துள்ளீர்கள் உங்கள் பதிவுகளை வாழ்த்துக்கள் சாந்தி லெட்சுமணன்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete