Thursday, May 27, 2010

நமக்கு தெரிஞ்ச அரசியல் அறிவியல்

டிகிரி முடிச்ச கையோட சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லி ஷார்ட் ஹாண்ட் ., டைப்ரைட்டிங்., ஹிந்தி பத்தாதுன்னு எம் ஏ பொலிடிக்கல் சைன்ஸ் படிச்சேன் கரஸ்ல.. ரெண்டு வருஷ கோர்ஸ்ல முதல் வருஷமே மணமாயிருச்சு.. மே மாசம் எக்ஸாமுக்கு முதல் நாள் சிறுவயல் பொன்னழகியம்மன் கோவில் திருவிழாவுக்காக கவிஞர் அரு நாகப்பன் நடத்தின கவியரங்கத்துல கலந்துகிட்டேன்,, அநேகமா அதுதான் கடைசி..
அப்ப வந்து எங்க மாமியார் வீட்டு சொந்தக்காரங்க எல்லாம் பார்த்தாங்க..
அதுக்கப்புறம்.. வீட்டுக்காரரோடயே இத்தனை வருஷம் பேசி (படுத்தி) இருக்கேனுங்க..ஹிஹிஹி

அப்புறம் மறுநாள் எக்ஸாம்ல வெஸ்டர்ன் பொலிடிகல் தாட் ., கம்பேரிடிவ் கவர்ன்மெண்ட்னு ஒரே ட்ரை சப்ஜெக்ட் ..சாக்ரடீஸ் ., ப்ளேட்டோ., அரிஸ்டாட்டில்னு.. மார்க்ஸிசமும் லெனினிஸமும் மதுரை காமராஜ் பல்கலைக் கழக நோட்ஸைவிட மற்ற புத்தகங்கள்ல தான் நல்லா தெரிஞ்சுக்க முடியும்.. இம்புட்டுத்தான் நமக்கு தெரிஞ்ச அரசியல்..

இந்த RDX அன்னியன் இன்று ஒரு தகவல்னு சாக்ரடீஸ் பற்றி சொல்றதைக் கேளுங்க..

அரசின் பயங்கர வாதத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் அற்புதங்களுக்காகக் காத்து இருக்கும் ஜெரியின் கவிதை இது..

தேவாவின் இந்த மேதினக் கவிதை அருமை..

என்னடா இது நாய்ப் பொழப்புன்னு அலுத்துக்காம இந்த சாமக் கோடங்கி சொல்றாப்புல நம்ம சுத்தி இருக்குற விஷயங்களில் எப்பிடி வித்யாசம்கொண்டு வர்றதுன்னு சொல்றதை ட்ரை பண்ணுங்க..

ஜெய்லானி எழுதி இருக்காரேன்னு நீலத்திரைப் பிரச்சனைன்னு ஓடிப் போய் பார்த்தா அட அது ஒண்ணுமில்லங்க ஒண்ணு மேல ஒண்ணு எழுதிட்டதுனால காணாமப் போன ஃபைலைக் கண்டு பிடிக்கிறதுதானாம்....ப்ச்.

ரயில் பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. மேலும் கூரியர் சர்வீஸ் பற்றியும் சுவாரசியமா சொல்றார் நம்ம நிஜாமுத்தீன்..

எழுத்தாளர் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற வீடு திரும்பல் மோஹன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்..

டயட் ப்ரோக்ராம் பற்றியும்.,ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட் பற்றியும்., மல்டி லெவல் மார்கெட்ங்க் பற்றியும் சுவையா சொல்றார் என் அன்பு நண்பர் கோபிநாத் முத்துசாமி

சாந்தாவும் இன்ன பிற காதல் கதைகளும் எழுதினவரு அஞ்சரைக்குள்ள வண்டி ஜட்ஜ்மெண்ட் டேன்னு சொல்றாரு...

படிக்கிற புத்தகத்தை அடையாளத்துக்கு மடக்கி வைப்பாங்க சிலர் அது என் அன்புத்தம்பியான மனவிழியானுக்கு தன் காதலியோடதெத்துப் பல் போல மினுக்குதாம்பா .. இருங்க தம்பி கவனிக்கலாம் அப்பா அம்மா கிட்ட சொல்லி..

திருமண நாளையே மறந்திடக் கூடிய கணவர்கள் (அக்கா... மாமாவான்னு கேக்கப் படாது புரிஞ்சுக்கணும் தம்பிஸ்)..இருக்கக் கூடிய (ஹ்ம்ம்ம்) காலத்துல தன் மனைவியைப் பற்றி ரொம்ப உயர்வா தன் திருமண நாளில் பகிர்ந்துக்குறார் சுரேகா...

சௌந்தரோட இந்தக் குறும்பு விலங்குகளைப் பார்த்து ரசிங்கப்பா..

ஓடுங்க ஓடுங்கன்னு ஜெட்லி சொல்றாரேன்னு ஓடினா ருத்ரமாப்பா..
மனுஷன் கிண்டலுக்கே பொறந்தவரு.. தமிழ்ல ருத்ரனுக்கு அப்புறம் என்ன என்ன படம் வரும்னு சும்மா விட்டுக் கழட்டுறாரு..

அகல் விளக்கு கொடுத்த பல்பும் வாங்கிய பல்பும் அழகு ..இதை அவரு மொக்கைன்னு சொல்றாருப்பா..

எங்கள் அன்பு நண்பர் நட்புடன் ஜமாலின் குழந்தை ஹாஜரின் படங்கள் பாருங்கள் ..

எடையைக் குறைங்கப்பான்னு சொன்ன மருத்துவர் இவரு.. இப்போ எழுதுறாரா வேற எதிலயும்னு கேட்டுச் சொல்லுங்கப்பா.. ஒரே மாயமா இருக்கு ...

உணர்வ பூர்வமான எங்க பிரியமுடன் வசந்த் சொல்றாரு காக்காய பிடிக்க முடியாதுன்னு

ஆர் வி சரவணன் பாக்கியராஜ் படங்களை வச்சு ஒரு சிறுகதை ட்ரைண்ணி இருக்காரு ..ஏன் சார் ஞானப் பழத்தை விட்டுட்டீங்க,, அது சரி கல்யாணமானா ஆகவேண்டியதுதான்குறீங்களா

அன்புடன் அருணா எனக்கு மட்டும் ஏனிப்படின்னு கேக்குறாங்க அவங்களுக்கு ஒரு நியாயப் பூங்கொத்து...

மாதேவி சமையல் எக்ஸ்பர்ட்டா இருக்காங்க.. சொதின்னு சொல்றங்க் விதம்விதமா ... நான் ஸ்டூன்னு செய்வேன்.. இதையே

பாஸிவ் ஸ்மோக்கிங் என் சொல்லப் படும் தன் செயலின்றி புகைத்தல் அபாயம் பற்றி சொல்றாரு..டாக்டர் எம் கே முருகானந்தம்..

அருகம் புல்லோட மகிமை பத்தி சொல்றாங்க தோழி தன்னோட ஆன்மீகத்துல..

நர்ஸரி ரைம்ஸோட ஔவையாரை வச்சு பிரசன்னா போட்ட மொக்கையோட இன்னிக்கு ஜூட் ஆகிக்கிறேன் பா.. அய்ய அது நான் இல்லை எல்லாரும் பிரசன்னாவைப் பிடிங்கப்பூ..

20 comments:

  1. உங்க சுயசரிதை நல்லா இருக்குங்க. இருபது வருஷத்துக்கு முந்திய பெண்ணின் வாழக்கைய சொல்லுது.

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள் அக்கா

    ReplyDelete
  3. கலக்கல்..... எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  4. அனைவரும் அசத்தல் அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  5. இப்பவெல்லாம் வலைச்சரம் ரெண்டு வாரம் ஒரு ஆசிரியரோட செயல் படுதா!? நல்ல முன்னேற்றம்!

    ReplyDelete
  6. சுஜாதா பெயரைப் பார்த்ததும் அங்க போய்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்களோடு...... நானுமா!!!
    நன்றி அக்கா! தொடருங்கள்; தொடர்வோம்!!!

    ReplyDelete
  8. ரெண்டாவது வாரமும் அசத்துறீங்க.

    கலக்கலான அறிமுகங்கள். தொடருங்க அக்கா.

    ReplyDelete
  9. ஆ...இன்னைக்கி என் பேருமா!!!!!! வாழ்க தேன் அக்கா!!!!.

    ரசித்ததை ருசியா சொல்லியிருக்கீங்க..அருமை

    ReplyDelete
  10. நன்றி ரமேஷ்

    நன்றி LK

    ReplyDelete
  11. நன்றிடா சித்து


    நன்றிடா மேனகா

    ReplyDelete
  12. அட வால் பையனா வந்து வாழ்ட்தி இருக்கார் முதல் முறையா வந்ததுக்கு நன்றி..


    நல்லா இருக்கான்னுசொல்லுங்க வால் பையன்..என் சகோதர சகோதரி., நண்பர் வட்டத்துல முதல் முறையா வந்து இருக்குறீங்க..!!!

    ReplyDelete
  13. நன்றீ ராம்

    நன்றீ நிஜாம்

    ReplyDelete
  14. நன்றீ அக்பர்

    நன்றி ஜெய்லானி

    ReplyDelete
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete
  16. //அட வால் பையனா வந்து வாழ்ட்தி இருக்கார் முதல் முறையா வந்ததுக்கு நன்றி..


    நல்லா இருக்கான்னுசொல்லுங்க வால் பையன்..என் சகோதர சகோதரி., நண்பர் வட்டத்துல முதல் முறையா வந்து இருக்குறீங்க..!!!//


    என்னாங்க இது இப்படி தூக்குறிங்க, நான் சாமான்யன் தாங்க! உங்க அளவுக்கு கூட எனக்கு வாசிப்பனுபவம் இல்லைங்க!, நீங்க பார்த்து என்னை வாழ்த்தனும்!

    ReplyDelete
  17. கலக்கிடீங்க தேனம்மை. ரெம்ப நன்றி. நானும் சீக்கிரம் களத்துல குதிக்கிறேன்(பதிவு போடறத சொல்றேன்).

    ReplyDelete
  18. நன்றி வால் பையன்.. நன்றி கோபி

    ReplyDelete
  19. நீங்க எழுதினப்ப பாக்கலங்க... இப்போதான் பார்க்கிறேன்...! மிக கலக்கலான அரிய ஒரு தொகுப்பு! எல்லா பதிவர்களையும் ஒரே கொட்டில்ல அடச்ச பெருமை உங்களத்தான் சேரும் தாயி....! ஹா ஹா ஹா...!


    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. அறிமுகத்திற்கு மிக்க நன்றி தேன் அக்கா!!!

    ReplyDelete