இந்த வாரம் முழுவதும் இங்கு வலைச்சர ஆசிரியராய் எழுத என்னை அழைத்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்து என் பதிவுகளைப் பற்றிய அறிமுகத்தை தொடர்கிறேன்.
இணையங்களில் சுற்றித் திரியும் போது நமது வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. நாமும் எழுத வேண்டும் என்ற, எண்ணில் புதைந்திருந்த ஆவல் மீண்டும் மேலெழும்பியது. வலைப்பதிவர் கிரி என்னுடன் தற்சமயம் பணிபுரிந்து வருகிறார். அவருடன் ச்மூக செயல்பாடுகள், சினிமா குறித்து உரையாடும்போது வலையுலகில் அவை குறித்து நடைபெறும் காரசாரமான விவாதங்களை எனக்கு அறியத்தருவார்.
அவரிடம், ”நானும் இது போல் எழுத வேண்டும். ஆனால், இந்த BLOG தொடங்குவது குறித்து தெரியாது” என்றேன். அவர் www.blogger.com குறித்து எடுத்துரைத்தார். அவருக்கு எனது நன்றிகள்.
நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு திசையை நம் எழுத்து காட்ட வேண்டும் என்ற நோக்கிலே இதற்கு “திசைகாட்டி” எனப் பெயரிட்டேன். நல்ல கருத்துக்களையும் பதிய ஆரம்பித்தேன். இது போல் கருத்து சொல்லி எழுதும் பலரை என் காதுபடவே சிலர் “பெருசா கருத்து சொல்ல வந்துட்டானுக. அப்படி என்னத்தை கிழிக்கப் போறானுக” என்று சொன்னதில், நானும் தயங்கி அவ்வப்போது மொக்கைப் பதிவுகளும் இட ஆரம்பித்து விட்டேன்.
இருப்பினும், அதிகமான வாக்குகள், பின்னூட்டங்கள், பின் தொடர்பவர்கள் எனும் கணக்கில் என்றும் ஆர்வம் இருந்ததில்லை.
நான் எழுதிய முதல் பதிவு “புது உலகம் இந்த பதிவுலகம்" - ஆனந்த விகடனில் குட் பிளாக் பகுதியில் பரிந்துரைக்கப்பட்டது.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தவறுகள் குறையும் என்ற என் கருத்தை ”தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?”- ல் பதிவு செய்துள்ளேன். பெரும்பாலானோர்க்கு இதில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்.
உறவுகள் குறித்து “மரணம் இணைக்கும் உறவுகள்” - ல் பதிந்துள்ளேன். வாசித்துப் பாருங்களேன்.
இன்றைய காலக்கட்டத்தில் தேவையில்லாத சில காரணங்களால் திருமணங்களை தள்ளிப்போடுகின்றனர். இது குறித்து இரண்டு பாகங்களாக, ”தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?”, “தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?-2” எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரை, சிங்கப்பூரில் பதிவர்கள் இனணந்து இயங்கிவரும் “மணற்கேணி” என்ற குழுமத்தினரால் தொகுத்து வெளியிடப்பட்ட நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் குறித்து கிடைத்த தகவல்களை தொகுத்து மூன்று பாகமாக “பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...
” எனும் தலைப்பில் பதிந்துள்ளேன்.
செல்வம் சேர்த்தலும், அதை முறையாகக் காத்தலும் குறித்து “செல்வாக்கில்லா செல்வம்...” - ல் பதிந்துள்ளேன். வாசித்துப் பயன்பெறுங்களேன்.
ரயில் பயணம் பலருக்கும் பிடித்த ஒன்று. எனது அனுபவங்களையும் தொகுத்து ரயிலின் மீதான காதலை “ரயில் - தாலாட்டும் மற்றொரு தாய்...” பதிவில் சொல்லியிருக்கிறேன்.
மேலே நான் குறிப்பிட்ட பதிவுகள் மற்றுமன்றி, என்னுடைய பிற பதிவுகளையும், கவிதைகளையும், மொக்கைகளையும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
என் பதிவுகளைப் பற்றிய அறிமுகம் இத்தோடு நிறைவு பெறுகிறது. வரும் நாட்களில் இன்னும் பலரின் உபயோகமான, ரசிக்கக் கூடிய வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
தோழர் ...
ReplyDelete"பனி உருக்கி உலகளிக்கும் நம் பணி " அபாயக் கட்டுரையில் நீங்கள் தனி மனிதனுக்கு தெரிவித்திருக்கும் பத்து கட்டளைகளும் அனைவரின் பின்பற்றுதலுக்குரியது ; அவசியம் செய்ய வேண்டியதும் .
கருத்தரங்குகள் , தீர்மானங்கள் ,ஆராய்ச்சிகள் ,பெருந் தலைகளின் உச்சி மாநாடுகள் யாவற்றையும் விட தனி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நீங்கள் சொன்ன பத்து கட்டளைகளை கடை பிடித்தாலே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியும் .
வருகிறேன் தோழர் ... வாழ்த்துக்கள் !
நல்ல பெயர்காரணம்...
ReplyDeleteதொடருங்கள்.
வெல்கம் ரோஸ்விக் !!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்.
ReplyDeleteவாருங்கள் ரோஸ்விக்.
ReplyDeleteவந்து கலக்குங்க ரோஸ்விக்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்...
ReplyDeleteவாருங்கள் ரோஸ்விக்.
ReplyDeleteவந்து கலக்குங்க ரோஸ்விக்..
ReplyDeleteகலக்குங்க ரோஸ்விக்
ReplyDeleteவாங்க ரோஸ்..
ReplyDeleteரோஸ்விக்!!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் தலைவரே... தொடருங்கள்....
ReplyDeleteவலைச்சரத்தைச் சிறப்பாகச் சிறப்பிக்க வாழ்த்துகள்!!
ReplyDeleteஎனது வலைத்தளத்தை சென்று வாசித்தமைக்கும், இங்கு பின்னூட்டியதற்கும் மிக்க நன்றி தோழர் நியோ.
ReplyDeleteநன்றி முத்துலெட்சுமி அக்கா.
நன்றி மகேஷ் அண்ணா.
நன்றி ராமலக்ஷ்மி அக்கா.
நன்றி தமிழ் உதயம்.
நன்றி நாடோடி ஸ்டீபன்.
நன்றி அஹமது இர்ஷாத்.
ReplyDeleteநன்றி ஜெஸ்வந்தி.
நன்றி ஜீவன் அண்ணா.
நன்றி தேன் அக்கா.
நன்றி ஜெய்லானி.
நன்றி தேவா சார்.
நன்றி பாலாசி.
நன்றி ஹூசைனம்மா அக்கா.
வாழ்த்துக்கள் ரோஸ்விக்!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துகள் ரோஸ்விக்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்!!
ReplyDeleteவருக, வருக, வாழ்த்துக்கள் ரோஸ்விக்
ReplyDeleteவலைச்சர ஆசிரியராக இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ரவிச்சந்திரன் அண்ணா
ReplyDeleteநன்றி ஹேமா
நன்றி Mrs.Menagasathia
நன்றி ஸ்ரீராம்.
நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்