இன்று இவ்வாரத்தில் நான் வலைச்சர ஆசிரியராக பதிவிடும் கடைசி நாள்... (யாருண்ணே அது... "அப்பாட ஒரு வழியா முடிஞ்சது"-ன்னு கொட்டாவி விடுறது?? ). இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நம்ம வீடுகள்-லையும் சரி, ஊர்கள்-லையும் சரி பெரியவங்க தங்களோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவர்களது அனுபவங்கள், பல சமயங்கள்ல நமக்கு பாடமாகவும் அமையும். நம்ம ஈடுபாட்டோட எழுதுகிற, வாசிக்கிற இந்த வலைத்தளங்களிலும் சில பெரியவங்க இருக்காங்க. அவங்களோட பதிவுகளைப் பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்கப்போறோம்.
வலைத்தளங்களில் எழுதுவதற்கு வயதோ, தாம் சார்ந்த துறைகளோ ஒரு தடையே இல்லையென்று நிரூபித்தவர்கள். நாம் இன்பமாக வசிக்க பெரியவர்கள் நமது பக்கத்தில் இருக்கவேண்டும். நாம் இன்பமாய் வாசிக்க இவர்களது பக்கங்களும் நமக்கு கிடைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் வாழ்வில் 50 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள இளைஞர்கள்.
தருமி - இவரை பழம்பெரும் பதிவர் என்றே சொல்லலாம். கடந்த ஐந்து வருடங்களாகப் பதிவுகளை எழுதிவருகிறார். இவரது பதிவுகளை வாசித்துப் பாருங்கள். சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஐயாவின் கட்டுரை ஒன்று சிங்கை மணற்கேணி குழுமத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பெற்றது.
தமிழா...தமிழா.. - எனும் தனது வலைத்தளத்தில் ஐயா ராதாகிருஷ்ணன் அவர்கள், நகைச்சுவையாகவும், வாழ்வியல் நிகழ்வுகளையும் எழுதிவருகிறார். வலையுலகில் அனைவருக்கும் மதிப்பிற்குரிய நண்பராகவும் இருந்து வருகிறார். படித்து மகிழுங்கள்.
பாமரன் பக்கங்கள்... - வானம்பாடிகள் பாலா அண்ணே வலைத்தளத்தைப் பத்தி சொல்லவே வேணாம். மனுஷன் காதல் கவிதையானாலும், கேரக்டர் பற்றி விவரித்தலானாலும் கலக்குவார். இவருடைய நறுக்குன்னு நாலு வார்த்தைக்கும், கேரக்டர்கள் குறித்த பதிவுகளுக்கும் நான் தீவிர ரசிகன். எங்கதான் இந்த வித்தையெல்லாம் கத்துகிட்டு வந்தாரோ!!! :-)
லதானந்த் பக்கம் போயிருக்கீங்களா நீங்க?? தவற விட்டுறாதீங்க. லதானந் அங்கிளோட உவமை கதைகளும், அனுபவப் பகிர்வுகளும் கொங்கு தமிழ்ல... அடேங்கப்பா. குசும்புள்ள ரசனையான ஆளுங்க. மீசைக்கார அங்கிள்... ரோஷமும் பாசமும் ரொம்ப இருக்கும். அனுபவிச்சுப்பாருங்க.
அசைபோடுவது................... - சீனா ஐயா. இவரைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. பதிவுலகம் சார்பாக ஆக்கப்பூர்வமான சில நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன் நிற்பவர். அவர் இந்த தளங்களில் தனது அனுபவங்களையும், தாம் கேட்டு பயன்பெற்ற சொற்பொழிவு சாராம்சங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
75 வயதான இளைஞர், ஓய்வுபெற்ற அறிஞர் ஐயா கந்தசாமியின் சாமியின் மனஅலைகள் படிங்க. நிறைய கதைகள் எல்லாம் சொல்லுவாரு. நமக்கு தாத்தா பாட்டி இல்லாத குறைய தீர்த்து வைக்கிற மசக்கவுண்டன் இவரு... ;-)
முத்துச்சிதறல் - மனோ சாமிநாதன் அம்மையார் எழுதுறாங்க. நிறைய முத்துக்கள் அங்கு கிடைக்கும். வீட்டுக்குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள்-னு கலந்துகட்டி அடிக்கிறாங்க... அருமையா இருக்கும்.
தாராபுரத்தான் - அப்படிங்கிற பேர்ல எழுதுறது நம்ம பொன். பழனிச்சாமி ஐயா. இவரு சின்னப்புள்ளையில கேட்ட கதை, இவருக்கு பொண்ணு பார்த்த கதை... இன்னும் பலப்பல சுவாரஸ்யங்கள். இவர் இயற்கை ஆர்வலரும் கூட. போயி படிச்சுப்பாருங்க இந்த சூறாவளியும் பலமா இருக்கும். :-)
எப்படித்தான் தினமும் இடுகை போடுறாங்களோ... அப்பப்பா கண்ணை கட்டுது சாமி... :-)
என்ன அப்படி பாக்குறீங்க...?? என்னடா இவன் எப்படா முடிப்பான்னா?? பொறுங்க பொறுங்க முடிச்சிட்டேன். கவலையே படாதீங்க. நான் இந்த வாரம் முழுவதும் அறிமுகப்படுத்தின வலைத்தளங்களை படிச்சுப் பாருங்க... எல்லாமே நீங்கள் ரசிக்கும்படியா இருக்கும்னு நான் நம்புகிறேன்.
தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் என்னை ஊக்கப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இங்கு எழுத என்னை அழைத்து பெருமைபடுத்திய சீனா ஐயாவுக்கு மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,
ReplyDeleteஎன்னையும் இளைஞர் லிஸ்ட்டில் சேர்த்ததிற்கு. நன்றாகச்செய்துள்ளீர்கள் உங்கள் ஆசிரியர் வேலையை. பாராட்டுகள்.
:) நன்றி ரோஸ்விக். அருமையான தொகுப்புகள் வாரம் முழுதும்.
ReplyDeleteநன்றி ரோஸ்விக்
ReplyDeleteஇன்னைக்கு எனக்கு 59 வது பிறந்த நாளுங்க தம்பி..மறக்க முடியாத பிறந்த நாளா பண்ணிட்டீங்க...மகிழ்சியா..நலமா..வளமா இருங்கோ..
ReplyDelete//இன்னைக்கு எனக்கு 59 வது பிறந்த நாளுங்க தம்பி..மறக்க முடியாத பிறந்த நாளா பண்ணிட்டீங்க...மகிழ்சியா..நலமா..வளமா இருங்கோ.. //
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் தாராபுரத்தான்
சென்னை பதிவர் சந்திப்பு –தொகுப்பு,புகைப்படங்கள்
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com/
வித்தியாசமான தலைப்பில் கோர்த்திருக்கிறீர்கள். பாருங்கள் என் பெயரை விட்டுவிட்டீர்கள்.. ஹிஹி.!!
ReplyDeleteநல்லா அறிமுகங்கள் ரோஸ்விக்... பெரியவர்களின் அணிவகுப்பு.. தாரபுரத்தான் ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteகூடவே எங்க மனோ அக்காவும், ரொம்ப சந்தோஷம்.
enruum ilamai kunraatha eluththukkalaal thankal karuththukkalai aaniththaramaaka eluthum ilam eluththaalarkal ivarkal enbathu avarkal blog padiththavarkalukku mattume puriyum. vaalththukkkal.
ReplyDeleteஉங்க அறிமுகத்துல எல்லா தரப்பினரும் இருக்காங்க. யாரும் விட்டு போகல.
ReplyDeleteரோஸ்விக். அருமையான தொகுப்புகள்
அருமையான அறிமுகங்கள்,
ReplyDeleteமிகுந்த வேலைப் பணிக்கு இடையில் அனைத்து பதிவர்களையும் படித்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாராபுரத்தான் ஐயா..
ரோஸ்விக்,
ReplyDeleteஒரேயொரு பிழை. TV ராதாகிருஷ்ணன பாருங்க, சின்னக்குழந்தையப் போயி இளைஞர்-ன்னு சொல்லி கலவரப்படுத்திட்டீங்க.
’தாரா’ ஐயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !
தாரா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteரோஸ்விக் வித்தியாசமான அறிமுகங்களுடன் அசத்துகிறீர்கள்!!
ReplyDeleteஎங்கள் யூத் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்:)
ReplyDeleteநன்றி Dr.P.Kandaswamy ஐயா!
ReplyDeleteநன்றி பாலா அண்ணே!
நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா!
நன்றி தாராபுரத்தான் ஐயா!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா! எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
அடடே உகந்த நாளில் தான் உங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
உங்களது ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுக்குத்தான் பெரியவர்கள் வேணுங்கிறது. :-)
தொடர்ந்து வரும் காலங்களிலும் நீங்கள் நல்ல உடல் நலத்துடனும், உளங்கனிந்த உறவுகளுடனும், நிம்மதியான மனநிலையுடனும் சந்தோசமாக வாழ எனது வாழ்த்துகளும், வணக்கங்களும் ஐயா. :-)
நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா).
ReplyDeleteபுகைப்படங்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி காவேரி கணேஷ்.
ஆஹா ஆதி... வாங்க வாங்க. என்னா குசும்பு. :-)
ReplyDeleteநீங்களும் இளம்பதிவர்தான். ஆனா, இன்னும் உங்களுக்கு 50 வயது ஆகலையே சாமி! :-))
நன்றி ஆதி.
நன்றி நாடோடி ஸ்டீபன். :-)
ReplyDeleteநன்றி Jaleela அக்கா. நிறைய பெண்பதிவர்கள் வயதைக் கண்டுபிடிக்க முடியவில்லை... அதனால் இவர்களை மட்டும் அறிமுகம் செய்து மகிழ்கிறேன்.
நன்றி மதுரை சரவணன்.
ReplyDeleteநன்றி தமிழ் உதயம். மகிழ்ச்சி.
நன்றி கே.ஆர்.பி.செந்தில்.
நன்றி சத்ரியன்... TVR ஐயா பேரன் தான் என்னிடம் அவரின் வயதைக் கூறினார். ;-) (ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். நீங்களும் யாரிடமும் சொல்ல வேண்டாம். சரியா??)
ReplyDelete:-)))
நன்றி தேவா சார். ரொம்ப அசத்தமுடியலை... அவ்வளவு அசதி... :-)
ReplyDeleteஏதோ முடிஞ்ச அளவுக்கு...
பாலா அண்ணே அப்படியே வாங்க எல்லாரும் போயி நம்ம யூத் ஐயா வீட்டுல பிறந்தநாள் ஸ்பெசல் பால்பாயாசம் சாப்பிட்டுட்டு வருவோம். :-))
ReplyDelete//நாம் இன்பமாக வசிக்க பெரியவர்கள் நமது பக்கத்தில் இருக்கவேண்டும். நாம் இன்பமாய் வாசிக்க இவர்களது பக்கங்களும் நமக்கு கிடைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் வாழ்வில் 50 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள இளைஞர்கள்.//
ReplyDeleteஉண்மையான கருத்து; ஒப்புக் கொள்கிறேன்.
அதேபோல், "இளைஞர்கள்" என்ற வார்த்தையும்
நிச்சயம் அவர்களுக்கு பொருந்தும்.
சுவையான வலைத்தளங்களைப் பார்வையிட
வாய்ப்பளிக்கும்வண்ணம், அழகான முறையில்
தொகுத்த ரோஸ்விக்குக்கு நன்றிகள்!
நல்ல அறிமுகங்கள் ரோஸ்விக்
ReplyDeleteநல்ல அறிமுகங்களின் தொகுப்பு.
ReplyDeleteதாராபுரத்தான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஆசிரியர் பணியை அருமையாக செய்து முடித்துள்ளீர்கள் ரோஸ்விக் ....உங்கள் அறிமுகங்கள் அருமை ..
ReplyDeleteதாராபுரத்தார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( எங்க அம்முச்சி ஊரும் தாராபுரம் தானுங்க)
பயனுள்ள அறிமுகங்களை தந்தீர்கள். இனிய வாரம். பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல அறிமுக தொகுப்புகள்...தாராபுராத்தான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி NIZAMUDEEN.
ReplyDeleteநன்றி ஜெய்லானி :-(
நன்றி ஸ்ரீராம்.
நன்றி மாதேவி.
நன்றி பத்மநாபன்.
நன்றி manjoorraja.
நன்றி Mrs.Menagasathia
வித்தியாசமான வகைகளில் பதிவர்களைப் பிரித்து எழுதியது நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநான் போட்ட மறுமொழிய வெள்ளக் காக்கா த்க்கிகிட்டு ஓடிப் போச்சு போல இருக்கு - மறுபடி மறுமொழி இப்ப
ReplyDeleteஎன்னாது - எனக்கு 50 க்கு மேலெயா வயசு - அய்யொ அடிக்கடி மறந்து போயிடுது ... ம்ம்ம்ம். இருப்பினும் இளம் பதிவர். பலெ பலே - நன்றி ரோஸ்விக்
நல்வாழ்த்துகள் ரோஸ்விக்
நட்புடன் சீனா
தாராபுரததாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னையும் என் ‘ முத்துச்சிதறலையும்’ பற்றி எழுதியிருப்பதை இன்று தான் பார்த்தேன். தாங்கள் அளித்த ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் இதயங்கனிந்த நன்றி!!
ReplyDeleteநன்றி பின்னோக்கி.
ReplyDeleteநன்றி சீனா ஐயா. (வெள்ளைக்காக்கைய்க்கு உங்க வயசு 50 வயசுக்கு மேலே-ன்னு ஒத்துக்க முடியலை போல)
நன்றி தருமி ஐயா.
நன்றி மனோ சாமிநாதன் அம்மா.
வித்தியாசமான தலைப்பில் கோர்த்திருக்கிறீர்கள். அருமையான தொகுப்புகள் .
ReplyDelete