Friday, June 18, 2010

விளம்பர இடைவேளை

ஏம்பா மணி நமக்கு ஒட்டுக்கு பணம் வந்திருச்சா?
என்னலே சொல்லுவ அதுக்குள்ளையும் எப்படிவே எலெக்ஷன் வரும்.
அட உனக்கு விஷயம் தெரியாத ஏதோ ஒரு ஊருல எம்.எல்.ஏ செத்துப் போயிட்டாராம் அதான் எலெக்ஷன்லே. சீக்கிரம் போனேன்னா பிரியாணியும் கடிச்சுக்க வெங்காயமும் தருவாகல
அட என்னல நடக்கிங்க?
நீ இங்க போயி பாருல எல்லாம் விளங்கும்ல  
அட ஆக்கங்கெட்ட கூவே அது தமிழ் சினிமா காரவுங்களை தேர்ந்தெடுக்கிற    எலெக்ஷன்ல அங்க போயி உனக்கு புடுச்ச சினிமாரவுகளுக்கு ஓட்டுப் போடனும்ல. இங்கயாவது சுயமா சிந்திச்சு போடுவே 
அப்ப பிரியாணிக் கிடைக்காத?
அடிங்.. உன்னை அடிச்சு பிரியாணி போடனும்ல 
**************************************************
அடியே, அந்த சொம்ப எடுத்துட்டுவா கேப்பையில நெய் எடுக்கணும் 
என்னையா பித்து பிடிச்சமாதிரி ஒளருற?
ஆமாம்டி வெளிநாடுலஇருந்து சில சித்தர்கள் வந்திருக்காங்களாம். அவுங்க கிட்ட சொல்லி கேப்பையிலயிருந்து நெய்ய எடுத்துத்தரச் சொல்லி கேட்கலாம்.
அய்யே! யோவ் வாயா கழுவுயா, அவுக நாம தமிழ் சித்தர்கள்யா பல நல்ல மருத்துவ விஷயத்தை சொல்லிருக்காக அவுக சொன்னா படி சாப்பிட்டாலே கேப்பைலவுள்ள சத்தும் நெய்ல உள்ள சத்து கிடைக்கும்!
*****************************************************
எலே வீடுல தெண்டச் சோற்று தின்கிறனு எவனாவது கிண்டல் பண்ணேங்க குனியவச்சே கும்மிருவேன்ல சொல்லிபுட்டேன். 
அட உடுனே அவன்கிடைகிறான் கோட்டிப் பையன். நீ பம்பரத்தை யாக்கர் போடுண்ணே
டேய், உன்னையும் சேர்த்துதான் சொல்லுயேன்.  பம்பரம் விளையாடுற சின்ன பையல்களோட சேரக்கூடாதுனு அங்க அப்பாத்த சொல்லிருச்சிலே 
அண்ணே அதுஎன்ன வேலைண்ணே! சொன்னா நானும் எங்கப்பன வேலை அனுப்பனு செத்த நேரங்கூட விளையாட விடமாட்டிக்கிறாரு.
டேய் இங்க போயி பாருடா நெறம்ப வேலையிருக்குலே பொழைக்கிற வழிய பாருங்கலே
டேய் சின்ராசு, அந்த செத்த அந்த சொம்ப எடுத்து தாவே
ஏ பாட்டி, உனக்கு எத்தன தொடவ சொல்லிறது, டயரு ஓட்டையில எனக்கு வேலை சொல்லாதனு 
போடா மோச்ச கெட்ட பயலே உங்க அம்மா சொன்னாளாக்கும் இந்த அப்பாத்தளுக்கு குடிக்க தண்ணி தராதனு?
இங்க பாருங்க உங்க பேரன நீங்க திட்டுங்க அதுக்காக வாக்கப்பட்டு வந்த என்னையும் சேர்த்து திட்டாதீங்க,  உங்க மகன்கிட்ட சொல்லி ஒரு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்த எ மகராசே இத பாத்துகிட்ட வீட்டுக்குள்ளே இருப்பாக. எனக்கெதுக்கு பொல்லாப்பு. ஒரு சொம்பு தண்ணியில நான் மளிகை கட்டபோரேன் பாரு,   
*********************************************************
எ சித்தப்பு இன்னைக்கு சூடா என்னயிருக்கு 
வாயா தொர, ஆளவே காணல, இத பாரு வடையிருக்கு போண்டாயிருக்கு பஜ்ஜி அடுப்பிலயிருக்கு,  தூள் பஜ்ஜி போட கொஞ்சம் நேரம் காணும்.
எ சித்தப்பு ஒங்கடைய யாருயா கேட்டது இந்த செய்தியில என்ன சூடாயிருக்குன்னு கேடேன் 
அது என்னமோப்பா கண்ணாடி போடாம ஒன்னு தெரிய மாட்டிக்குது.
பாத்துயிருந்துக்கோ சித்தப்பு வடையில ஓட்ட போட்டு கொள்ளையடிக்கிரனு நாளைக்கே ஓங்கடையில கூட பூட்டி சீல் வச்சு இதுல செய்தி வந்தாலும் வரலாம். 
*********************************************************************
ஏலே மொக்க, இங்க என்னடா பண்ணுறே
நாயக் கடிக்கு மருந்து தேடுறேண்ணே
அட ஊருக்குள்ள நாய்கிட்டை கடிவாங்கினது யாருடா 
கடிச்சது அசுலூரு நாய்ண்ணே!
அது கிடக்குது கடிவாங்கினது யாருடா 
நான்தியா 
அடங்கொன்னியா மொத அந்த நாயா நல்ல வைத்தியர்கிட்டை காட்டுடா புதுசா ஒரு கால்நடை மருத்துவர் ஊருக்குள்ள வந்திருக்காரு அவர்கிட்ட கூட காட்டு.
அப்ப எனக்கு மருந்து?
அதோ ஒரு கிணறு தெரியுது பாரு....[அட ஆளக் காணோம் ]   
எ புள்ள சரசு, நேத்து ஒரு மருந்து கொடுத்தேயில அத சாப்பிட்டதும் எங்க மாமியார் பொழச்சுகிச்சுலே!
என்ன சொல்லுரே அந்த மருந்து உனக்குன்னு தான் பக்குவமா செஞ்சேன். அது அந்த கிழவிக்குனா பன்னிருக்கவே மாட்டேன்ல   
சரி அதவிடு அது போல எங்க ஆத்தாளுக்கும் முடியல கொஞ்சம் அரைச்சுக் கொடுவே 
உங்க ஆத்தாளுக்கா முடியாடி சாமி! நான் மருந்து அரைச்சு கொடுக்க, நீ அந்த கிழவியையும் காப்பாத்த.. வேற வெனையே வேண்டாம். இங்க பாரு அந்த கிழவி உனக்கு வேணாம் ஆத்தாவயிருக்கலாம் எனக்கு அது மாமியாராக்கும்.
நீ சொல்லலைனா போ நான் இங்க படிச்சு தெரிஞ்சுகிறேன் 
****************************************************
என்ன டாக்டர் ஊருக்குள்ள ஒரே கலவரமாயிருக்கு, இன்னைக்கு எப்படியும் ஒரு பத்து பதினஞ்சு பேரு உங்களுக்கு சிக்குவாங்கள்ள!
அட போப்பா எல்லாரும் இத படிச்சு புட்டு என்ன யாரு அடிக்கிறதுன்னு ஒரு கலவரம் வந்திருச்சு.
என்ன சொல்லீங்க டாக்டர், உங்க அடிக்கவா! நீங்க என்ன அவுங்களுக்கு அடிமாடா?
அதுயில்ல நான் மாட்டு டாக்டர்னு கண்டுபிடுச்சுட்டாங்க 
**************************************
எலே பாண்டி, யாருலே இது?
இவுக பட்டணத்தில இருந்து வந்திருக்காக ஏதோ ரிச்சச்சாம்
சரி என்ன கருமமோ யார் வீட்டுக்கு வந்திருக்காக?
நம்ம மாயியண்ணே வீட்டுக்கு 
ஏய் பட்டணத்து காரரே நான் அந்த மாயிக்கு பெரியப்பே முறைதான் என்ன சோலியா வந்திருக்கேக?
வணக்கம் தாத்தா இயற்கை விவசாயத்தைப் பத்தி ப்ராஜெட் பண்ணும் அதான்  வந்திருக்கேன்.
ம்ம்.. விவசாயம் பாக்க போறியா!
அதுயில்ல பெருசு, இவுக ஏதோ போட்ட எடுக்க வந்திருக்காக 
என்னமோப்பா நாங்களே இதையும் இதையும் இதையும் படிச்சுட்டு ஏதோ பொழப்பு நடத்திகிட்டுயிருக்கோம் நீபாட்டுக்கு எதையாவது எடுத்துட்டு போயிராத ஆமாம்.
ஏம்பா கண்டேக்டரே, ஒன்ன பத்தி நெறைய பையலுக சொல்லிருக்காங்க ஒழுங்கா நடந்துக்கோ ஆமாம்.
என்ன பெரிசு! வீடுல சொல்லிட்டு வந்திட்டியா, இப்ப என்னாத்துக்கு கரையிற?
நீ கொடுக்கிற டிக்கட்ட கிழிச்சு கிழிச்சு கொடுக்கிரையாமே நான் இங்க ஏசிபுடுவேன்.
அட பாருடா! யோவ் அது வலைபதிவ யாராச்சும் திருடுனா போடுரஇடம்யா. நீ கொடுததேன்னா மனத்துவாங்க வாங்கிக்கோ 


6 comments:

  1. பொறுப்பான ஆசிரியர்க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அசத்தல் பேச்சு வழக்கில், அருமையான அறிமுகங்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. நகைச்சுவையான, வட்டார வழக்கு
    மொழிகளுடன் அறிமுகங்கள்
    -அசத்தல்.

    ReplyDelete
  4. அன்பின் நீச்சல்காரன்

    அருமை அருமை அறிமுகங்கள் அருமை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன்ச் சீனா

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வித்தியாசமான தேர்வுகள்.. அனைவருக்கும் பாராட்டுக்கள் ...

    ReplyDelete