இரு கண்விழித்து யாம் எழுந்த காலைப் பொழுதினில் எமக்கு முன்னரே எழுதிருந்த சுயம் சொல்லியது இன்று முகமூடியற்ற வெளிப்பாடு வேண்டுமென்று.....! கனத்திருக்கும் நெஞ்சம் அதில் கனலாய் வெளிப்படும் எண்ணங்கள் இவற்றையெல்லாம் பதிவாய் மாற்றும் வித்தை தெரிந்த வித்தகர்களை, வாசிப்பாளனின் இதயம் கிழிக்கும் எழுத்தாளானை அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை வழங்கிய காலத்திற்கும், வலைச்சரத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி...இன்றைய நாளின் அறிமுகங்களை...உங்களுடம் பகிர விழைகிறேன்...
" சதி செய்த விதியின் ஆட்டத்தால் புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரி மயோ மனோவின் வலைப்பக்கத்தில் தவறி விழுந்த நான்... பற்றிய நெருப்பாய்...பாரதிதாசனின் கூற்றுப் போல இருப்புக் கூட்டின் கதவு உடைத்து வெளி வந்தேன். வாழ்க்கையில் வாழ முடியும்...வார்த்தைகளில்......முடியுமா? யோசிக்கிறீர்களா.....தோழர்காள்...? இந்த வலை நுழைந்து பாருங்கள்.... நெருப்பாய் எரியும் இந்த வலைப்பூ...!
வலைப்பூக்களில் நெருப்பெரிய வேண்டும் அதில் தீமைகள் எரிந்தே போகாட்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். ஆத்ம விசாரணையோடு கூடிய முற்போக்குச் சிந்தனைவாதி, புரட்சியோடு, பொதுவுடமை, பெண்ணுரிமை, காதல், அரசியல் என்ற பன்முகச் சிந்தனைவாதி கே.ஆர்.பி.செந்திலை வாசிக்க தவறிவிடாதீர்கள்.
தவறவிட்டு தவறவிட்டு வாழ்வில் எங்கோ வந்து சேர்ந்த மக்களுக்காக எழுத்தறிவிக்கும் இறைவனின் பணியில் ஈடுபட்ட தோழி ஜெயந்தி...அதை பாடினியாரில் திறம்பட எழுதி எழுத்தறிந்த மக்களுக்கும் விழிப்புணர்வு கொடுத்து நீங்களும் முடிந்த வரை கற்றுக் கொடுங்கள் என்று சொல்லாமல் சொன்னாரே...! கண்கள் பனிக்கவைத்த இவருக்கு இவருக்கு உங்கள் வாசிப்புதானே விருது....!
விருதுகள் என்பவை ஊக்குவிக்கும் ஒரு கேட்டலிஸ்ட் என்று சொல்லக்கூடிய வினையூக்கிகள். நல்ல பயனுள்ள கருத்துக்களையும் கூறிக்கொண்டு சக பதிவரையும் ஊக்குவிக்கும் ஒரு தாய்மையினை இயல்பாக கொண்டிருக்கும் ஜெய்லானி ....தானே அறியாமல் ஒரு சமுதாய நற்பணி செய்து வருகிறாரே...இவரின் விருதுகள் எத்தனையொ பேர் மனதை ஊக்குவித்திருக்கிறதே...! இவரின் பணியே ஒரு கவிதைதானே.....!
கவிதைதானே...யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தில் எழுதாமல்...கவிதைகளுக்குள் உணர்வை ஒளித்துவைத்து வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்கும் தோழி ஷம்மி முத்துவேல் உடனடியாக அனைவர் கவனத்திற்கும் வரவேண்டிய ஒரு படைப்பாளி இவரின் கவிதை உணர்வுகளை முடிந்த வரை சுவாசியுங்கள்!
சுவாசிப்பது போல அனிச்சையாய் நம்மைச் சுற்றி நிகழும் நிகவுகளை கோர்வையாக்கிப் பார்த்து படிப்பினைகளுக்கு உயிரூட்டும் வித்தை தெரிந்த செல்ல நாய்க்குட்டி..! தொடர்கதைகளை அடுக்கி அடுக்கி கூடவே படிப்பினைகளையும் சொல்லத் தெரிந்த வித்தகர். இவரின் எல்லா பதிவகளும் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையாகாது.
மிகையாகாமல் இருக்கும் எல்லாம் அழகாக இருக்கும் என்று மிகைப்பட்ட எல்லாம் புறம் தள்ளிவிட்டு வெறுமையில் கவிதை செய்திருக்கும் தம்பி ஜீவன் பென்னி ! வலையுலகத்தில் தமது சிக்ஸர்களை அடிக்கத்துவங்கி இருக்கும் காலம் இது....! உங்களின் பார்வைகள் பதிய வேண்டிய பக்கம் இவருடையது.
இவருடையது அவருடையது என்று பிரித்தெடுக்க முடியாத தாய்த்தமிழை...என்னுடையது என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய சிறப்புக்குரிய முனைவர் குணசீலனை அறியாதவர் யாரும் இருக்க இயலாது. புற நானுறையும் அக நானுறையும், நன்னூலையும் என்னைப் போன்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து எம் தாய்த்தமிழின் இனிமையினை அகிலமெல்லாம் இருக்கும் நம் இனம் அறிய கதைக ளோடு...இலக்கணமும் சேர்த்து படிப்பிக்கும் இவர்... அனைவருக்கும் தமிழ் ஆசான். இந்த வலைப்பூவை சொடுக்குங்கள்…....தமிழன்னை உங்களைத் தாலாட்டுவாள்!
தாலாட்டு என்பது நாம் அறிந்த ஒரு இசை வடிவம்...சரி வரி வடிவம் தாலாட்டுமா?... தாலாட்டும்... தமிழ் அமுதன் என்ற ஜீவனை நீங்கள் பருகும் போது கண்டிப்பாய் தாலாட்டும். ஒரு கிளர்ந்தெழுந்த மனோ நிலையிலேயே அமுதன் எழுதுவதாக எனக்குபடுகிறது. பல படைப்புகள் செய்தவர் என்றாலும் மீண்டும் ஒருமுறை இவரின் கண்ணாடியில் போய் அனுபவ அறிவென்னும் முகம் பாருங்களேன்….!
பாருங்களேன் இந்த மகாராஜனை ஒரு சூப்பர் கலக்கல் வலைப்பூவின் சொந்தக்காரர். அது அது என்றில்லாமல் ஒரு பன்முகப்பட்ட பார்வை கொண்டவர். நல்ல வெயிலுக்கு நடுவே ஒரு தென்னந்தோப்பும் ஒரு சிறு நீரோடையும் கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இவரது படைப்புக்கள். வேலை விட்டு வீடு திரும்பி அயர்ச்சியில் இருக்கிறீர்களா...? தட்டுங்கள் மகராஜனின் எண்ணச்சிதறலை...உங்களின் பார்வையின் வழியே ஓய்வு உங்களுக்குள் பரவும் அதிசயம் நிகழும்!
அதிசயம் தான் தன்னுடைய பெயர் சொல்லாமலேயே மாதம் ஒரிரு பதிவுகள் என்றாலும் அது நம்மை சரியாக நிறைவாக்கிச் செல்ல அமைதி அப்பாவால் முடிகிறது என்பது அதிசயம்தான். சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்....வாசித்தூப் பாருங்கள் அவர் மாற்ற முயல்வது எல்லாம் சதி செய்யும் விதியின் ஆட்டத்தைதான்......! "
செவி கொடுப்பீர் எம் மக்காள், வலை நுழைந்து பதிவர்களை ஏற்றம் செய்குக.....! விலைமதிக்க முடியா மணிக்கங்கள் வலைப்பூவினுள் மறைந்திருந்து உம்மின் வலி தீர்க்கும், வழி காட்டும், வெறுமையகற்றும், வெஞ்சினம் போக்கும்....எல்லாவற்றுக்கும் மேலாய் நல்ல நட்பு சமைக்கும்.
சமயமில்லை என்று நகராமல் சமயம் ஒதுக்கி உம்மின் விழி திறப்பீர்...! மெலிதாய் மனம் திறப்பீர்...! எழுத்துக்களின் மூலம் உம்முள் இறங்கும் அனுபவத்தை கிரகித்து....அதன் சுகத்தில் அறிவின் வெளிச்சத்தில்..ஆனந்தத்தில் சற்று நேரம் இமைபிரிக்க மறந்து... நெஞ்சோரம் தேக்கிவைத்த விசயஞானத்தின் சாரத்தை உம்மோடு கரையச்செய்து....அன்னம் பிரிக்கும் பால் போல...வார்த்தை சக்கைகளை புறம்தள்ளி...அனுபவக்குப்பைகளையும் காற்றில் பறக்கவிட்டு உணர்வாய் எஞ்சி நிற்கும் மிச்சத்தில்...கிறங்கி...கிறங்கி.... கிறங்கி மலர் தொலைந்து நிறையும் வாசம் போல் உம்மில் வாசனைகள் கொள்வீர்...தெளிந்ததொரு...வாழ்வு கொள்வீர்....எம் தோழர்காள்!
வெல்க நாடு !வெல்க நாடு!
வெல்க வெல்கவே…!
வீர சங்க நாதம் கேட்டு...
செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே
வெல்க வெல்கவே! வெல்க வெல்கவே...!
அப்போ.....வர்ட்டா...........!
அசத்தல்னா. கலக்கீட்டிங்க. தொடருங்கள்
ReplyDeleteஎன் அறிமுகத்திற்கும்.. மற்ற நண்பர்களின் அறிமுகத்திற்கும் என் வந்தனம்...
ReplyDeleteஅறிமுகம் நல்லாயிருக்கு. அறிமுகத்துல புரட்சி கலந்த மாதிரி இருக்கு உங்கள் வரிகளில்.
ReplyDelete@@@ கே.ஆர்.பி.செந்தில்--//என் அறிமுகத்திற்கும்.. மற்ற நண்பர்களின் அறிமுகத்திற்கும் என் வந்தனம்..//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
'வித்தியாச வியாழனில்' இந்த அழகான தமிழ் இடுகையை படித்தவுடனே பாராட்ட தோன்றியது. . அறிமுகம் செய்துள்ள பதிவர்களில் ஒரு சிலர் மட்டுமே எனக்கு புதியவர்கள் என்றாலும் இன்றைய வாசிப்புக்கு நல்ல தீனி தந்தமைக்கு thanks
ReplyDeleteஒவ்வொரு பதிவருக்கும், நீங்கள் கொடுக்கும் அறிமுகம் நல்லா இருக்குதுங்க, தேவா .... பாராட்டுக்கள்!
ReplyDeleteபின்னூட்டம் தராவிட்டாலும் உங்கள் அறிமுகங்களை எப்போதும் பார்க்கிறேன்.அலசி எடுத்த திறமையான பதிவாளர்கள்.
ReplyDeleteநன்றியும் பாராட்டும் தேவா.
அன்பின் தேவா
ReplyDeleteமுதல் மூன்று இடுகைகளுக்கும் இவ்விடுகைக்கும் எவ்வளவு வேறுபாடுகள். அருமை அருமை - பன் முகம் காட்டும் தேவா வாழ்க ! இவ்விடுகையில் அறிமுகப் படுத்தி இருக்கும் பதிவர்கள் எனக்குப் புதியவர்கள். சென்று ரசிக்கிறேன்
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள். எங்க செந்தில் அண்ணனின் அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் தேவா
ReplyDeleteதமிழ் அமுதனைச் சுட்டும் சுட்டி சரியாக வேலை செய்ய வில்லை. ஒரு சாய்கோடு அதிகம் உள்ளது இறுதியில். சரி செய்யவும்.
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
அருமை வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html
கே.ஆர்.பி.செந்தில் பற்றி உண்மையான அறிமுகம் நன்றி தேவா அண்ணா
ReplyDeleteஅண்ணா உங்க எழுத்துக்களில் ஒரு வேகம், நெருப்பு இன்று தெரிகிறது , அனைவரையும் அறிமுகப்படுத்திய விதம் ரொம்ப அழகு தீயாய் தெறிக்கிறது ...மிக்க அருமை அண்ணா, நல்ல எழுத்தாளர்களுக்கு இது போன்ற அறிமுகம் தேவை அண்ணா...நீங்க கலக்குங்க அண்ணா ...
ReplyDeleteasathal dheva
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள் நண்பரே! தொடருங்கள்..
ReplyDelete//இந்த வலை நுழைந்து பாருங்கள்.... நெருப்பாய் எரியும் இந்த வலைப்பூ...!
ReplyDeleteவலைப்பூக்களில் நெருப்பெரிய வேண்டும் அதில் தீமைகள் எரிந்தே போகாட்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். //
//அரசியல் என்ற பன்முகச் சிந்தனைவாதி கே.ஆர்.பி.செந்திலை வாசிக்க தவறிவிடாதீர்கள்.
தவறவிட்டு தவறவிட்டு வாழ்வில் எங்கோ வந்து சேர்ந்த மக்களுக்காக எழுத்தறிவிக்கும் இறைவனின் பணியில் ஈடுபட்ட தோழி ஜெயந்தி...//
//கண்கள் பனிக்கவைத்த இவருக்கு இவருக்கு உங்கள் வாசிப்புதானே விருது....!
விருதுகள் என்பவை ஊக்குவிக்கும் ஒரு கேட்டலிஸ்ட் என்று சொல்லக்கூடிய வினையூக்கிகள். நல்ல பயனுள்ள கருத்துக்களையும் கூறிக்கொண்டு சக பதிவரையும் ஊக்குவிக்கும் ஒரு தாய்மையினை இயல்பாக கொண்டிருக்கும் ஜெய்லானி ....//
மிக்க அருமை அண்ணா ....கலக்கிட்டீங்க போங்க
புதிய புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் விதம் அருமை தேவா. ஒரு காலத்தில் சுவற்றில் எரிந்த பந்தாய் நான் எழுதிய பல கவிதைகள் திரும்பி வந்துக்கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எழுதும் எழுத்தாளர்களுக்கு அனைத்து இணையத்திலும் சிறப்பான முன்னுரிமை அளிக்கிறார்கள். அந்த விடயத்தில் நீங்கள் வெற்றிப்பெற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,, வாழ்த்துக்கள் தேவா...
ReplyDeleteவிஜய் சொன்னதை நான் வழிமொழிகிறேன்
ReplyDeleteஒரு அறிமுகம் முடியும் வார்த்தை
அடுத்த அறிமுகம் அதே வார்த்தை தொடர்கிறது. கலக்கல்.
வலைப்பூ.
வலைப்பூக்களில்,
தவறிவிடாதீர்கள்.
தவறவிட்டு
விருது.
விருதுகள்
கவிதைதானே.
கவிதைதானே.
சுவாசியுங்கள்
சுவாசிப்பது
மிகையாகாது
மிகையாகாமல்
இவருடையது
இவருடையது
தாலாட்டுவாள்!
தாலாட்டு
பாருங்களேன்
பாருங்களேன்
அதிசயம்
அதிசயம்
கலக்கல் எழுத்து நடை மிகவும் அருமை தேவா அண்ணா
valakkam pola kalalli irukkeenka anna...!!!
ReplyDeleteஇந்த நடையும், அறிமுகவிதம் நல்லாயிருக்குங்க தேவரே... அதிகபட்ச புதியவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.. நன்றி...
ReplyDeleteஅறிமுகவுரை நன்றாகவுள்ளது நண்பரே..
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமை எண்ணி மகிழ்ந்தேன்..
நன்றி.
அன்பின் தேவா
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.. அனைவரையும் சென்று பார்க்கிறேன்.
வாழ்த்துகள் தேவா
அன்புடன் உங்கள் ஸ்டார்ஜன்.
அந்தாதி முறையில் அருமை.தேவா..
ReplyDeleteமாம்ஸ்... நல்லாருக்கு... அறிமுகம்..
ReplyDeleteஅனைத்தும் அருமை..! என்னையும் இணைத்ததற்க்கு நன்றி தேவா..!
ReplyDeleteகுறைவாகவே இணையக் கடலில் நீந்தும் எனக்கு பல நல்ல பதிவர்களை படிக்க உதவிய உங்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி தேவா. அந்தாதி சூப்பர். எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்கிறீங்க.
ReplyDeleteசும்மா நல்ல பதிவுன்னு சொல்லாம.. நீங்க விளக்கி இருக்கும் விதம் அருமை..புதுமை.. :-)))
ReplyDeleteநன்றி..
அறிமுகம் செய்ததற்கு நன்றி. கொஞ்சம் லேட்டாப் போச்சு. மன்னிக்கவும். கதை என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை பதிவாக்குகிறேன். அதற்கு வரவேற்ப்பு அளித்தால்மகிழ்வேன்.
ReplyDelete