முதல் மூன்று நாள் படைப்புக்களை வெளியிட்டதற்கும் இன்று வெளியிடுவதற்கும் இடையே நிறையவே மனம் மாற்றமடைந்து இருக்கிறது. நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்வது ஒரு ஆத்மார்த்தமான பணி என்று என்னால் உணர முடிகிறது.
அறிமுகம் செய்யப்பட்ட புதிய பதிவர்களின் வலைப்பக்கங்களுக்கு நமது வாசகர்களும், சக பதிவர்களும் படையெடுத்துச் சென்று பின்னூட்டமிடல், தொடரல் என்று படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வுகளும் என் செவிக்கும் பார்வைக்கும் வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய் இருப்பது கண்டு நான் என் மனம் மேலும் உள் நோக்கிப் பயணிக்கிறது. படைப்புகளின் பிறப்பிடம் எது...?
அற்புதமாய் கவிதை சமைக்கிறது, கட்டுரையாய் கட்டியணைக்கிறது, ஒவ்வொருவரின் அனுபவத்திலும் ஒவ்வொரு விதமாய் வந்து ஒரு முகம் காட்டி படிப்பினையை கொடுக்கிறது, இந்த அனுபவத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து....உடம்பில் ஏறி அமர்ந்த உற்சாகம் சொடுக்கிய சாட்டையில் எங்கோ எட்டிப் பறக்கிறது மனம்.....! ஆனந்த ஒரு அனுபவமாய் போனது இந்த பணி....இதிலும் ஒரு காதலுணர்வு இருக்கிறது. ஆமாம் நல்ல படைப்புகளைக் கண்ட மனம் நாட்கள் கடந்து தன் காதலியைக் கண்டது போல குதிக்கிறது. பாரதி சொன்னது உண்மைதான்.....
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
வாருங்கள் உங்களையும் தலைமையின்பத்துக்குள் அழைத்துச் செல்கிறேன்......
ஒரு மழையின் பயணத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள் இவர். இவரின் தலைப்பே நம்மை தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அமைதிச் சாரல் ....மடிகனத்த மேகங்கள் சுமையிறக்கச் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றனவாம். கவிதை செய்யும் பொழுதுகளில் எல்லாமே உயிர் பெற்று விடுகிறது என்பதை வாசிக்கும் போதே நம்மால் உணர முடியும்.
இவரை பாருங்கள் ஒரு கதை எழுதி அதில் ஒரு கருத்து சொல்லி....கருத்தில் சிந்திப்பை கரைத்து நமக்கு பார்வைகளுக்கு கொண்டு வருகிறார். ரொம்ப எதார்த்தமான கதை ஆனால் மிகப்பெரிய உண்மையை தன்னுள் புதைத்துவைதிருக்கிறது. இவர் வைத்திருக்கும் விளக்கம்
மெளனங்களின் மொழிபெயர்ப்பு....!தலைப்பே...கவிதைதான் ஆனால் நிஜத்திலும் அதைத்தான் இவர் செய்கிறார்.
இயல்பினை எழுதுவதும் இயல்பாக எழுதுவதும் சூழலை மனதுக்குள் கொண்டு வருவதும் ஒரு தேர்ந்த எழுத்துக்கான குணாதிசயங்கள். வினையூக்கி என்றால் வினையில் பங்கு பெறாது அந்த செயலை துரிதப்படுத்தும். இந்த வினையூக்கின் கதைகளும் ஆச்சர்யமாய் அந்த செயலைத்தான் செய்கின்றன். உங்களுக்குள் செலுத்திப்பாருங்கள் இந்த வினையூக்கியை அற்புதமான வினைகள் நடக்கும்.
பணம் சம்பாரிச்சு பணத்தை சாப்பிட முடியுமா? இந்த கேள்வியை நேரே கேட்டால் என்ன கேள்வி இது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த கதை படித்துவிட்டு கேட்டால் அட ஆமாங்க..என்று தலையை சொறிவீர்கள்.... ஹாய் அரும்பாவூர் சினேகமாய் தோளில் கைபோட்டு பேசுவார்....சென்றுதான் பாருங்களேன் இவரின் தோட்டத்துக்கு.
சிந்திக்க கூட நேரமில்லாமல் ஓடும் இந்த டீசல் நாகரிகத்தில் நாம் இழந்தது எவ்வளவோ இருக்கிறது. எல்லா ஆதங்கங்களையும் ஒன்று திரட்டி தனது வலைப்பக்கத்தில் வைத்திருக்கிறார் இந்த வெள்ளை மனமும் சிவப்பு சிந்தனையும்
கொண்ட தோழர். வாசித்த பின் நீங்களே கூறுவீர்கள் இவர் வெள்ளை மனதுக்குச் சொந்க்காரர் என்று.
மாறிப்போய் விட்டது எல்லாமே...! பயன்பாடுகள் எதிர்மறையாகவும் உருவான நோக்கமும் மறந்து போய் சென்று கொண்டிருக்கின்றன என்று தன் சிறு கதையின் மூலம் சொல்லவருகிறார். வாசித்து வாசித்து அந்த வாசிப்பு கொடுத்த உத்வேகத்தில் வார்த்தைகள் இவரிடமிருந்து தெரித்து விழுந்திருக்கின்றன். பட்டிக்காட்டான் என்று சொல்லும் இவர் தன்னடக்கம் கொண்டிருந்தாலும் எழுத்துக்கள் மிரட்டுகின்றன.
நிறைய படித்து நிறைய சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் பன்முகப்பட்ட பரிமாணங்களை எடுக்கிறார்கள். உன்னைத் தேடி நான் என்று தலைப்பிட்டு தமது சிந்தனைகளை செதுக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இவர். பெண்ணியம், சமத்துவம், ஆன்மீகம் என்று பல களங்களை தொட முயல்கிறார். சிந்தனைவாதியான இவரின் எழுத்து நம்மையும் கூடவே சிந்திக்க வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கருத்துக்களை கூறுபவர்கள் கூறட்டும், கவிதை எழுதுபவர்கள் எழுதட்டும் நான் சினிமாக்களை விமர்சிக்கிறேன் என்றூ கீத்துக் கொட்டாய்
என்ற வலைப்பூ நடத்தும் தோழர் நினைத்திருக்கக்கூடும் ஆனாலும் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, தமிழ் என்று தரம் பிரித்து அறிமுகம் செய்கிறார் தோழர். திரைப்படம் பற்றிய அறிவுக்கு சொடுக்கியே ஆக வேண்டிய ஒரு தளம்.
இந்த தம்பி எழுத ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆனால் இப்போதுதான் தன்னுடைய முத்திரையை பதிக்க ஆரம்பித்து இருக்கிறார். புன்னகைதேசம் என்ற பெயரில் அன்பால் இதயங்களை வெல்லத்துடிக்கும் வேகமாய் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி. இவரின் உயிரை வாசியுங்கள் கண்டிப்பாய் வேலை வேலை என்று அலையும் மனிதர்களுக்கு ஒரு விழிப்புணர்வைh கொண்டுவரும்.
சமையல், கவிதை, கட்டுரை என்று அனைத்தையும் பற்றிய பதிவுகளை இட்டு அன்பால் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு போனவர் இவர். பன்முகப்பட்ட சிந்தனையுடன் கூடிய படைப்புகளை நம் கண்களுக்கு விருந்தாக்கியவர்...இவரின் சில கவிதைகளை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கிக் கொள்வதை யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று.
இயன்றவரை.. நல்ல படைப்புகளை இனங்கான முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த நாளின் மிகுதியான உங்களின் சந்தோசத்திற்கு இந்த வலைப்பூக்களும் கண்டிப்பாய் வலு சேர்க்கும்.....
அப்போ வர்ட்டா...!
அசத்தல் அறிமுகங்கள்னா. கலக்கிட்டீங்க.
ReplyDeleteஇயன்றவரை.. நல்ல படைப்புகளை இனங்கான முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ReplyDelete..... nice work, Deva!
இந்த நாளின் மிகுதியான உங்களின் சந்தோசத்திற்கு இந்த வலைப்பூக்களும் கண்டிப்பாய் வலு சேர்க்கும்.....
..... sure. :-)
தூள் கெளப்புறீங்க தேவா - அட்டகாசமான அறிமுகங்கள்
ReplyDeleteநல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
இன்றைய அறிமுகங்கள் சிறப்பானவை.. பாராட்டுக்கள் ..
ReplyDeleteரொம்ப கஷ்டப்பட்டிருகீங்க தல. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில அறிமுகப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றி சார், பதிவு எழுதுரதுக்கு பதிவுலக நண்பர்கள் பல பேர் என்னை உற்சாகப்படுத்தியிக்காங்க சார், அவர்களுக்கு என் நன்றிகள் பல. மேலும் பதிவுலகில இருக்கிற சீனியர்கள் கொடுக்கிற ஆதரவு பிரமிக்க வைக்குது. தொடர்ந்து உங்ககிட்ட நல்ல பேர் வங்குவேன் சார்.
ReplyDelete//அற்புதமாய் கவிதை சமைக்கிறது, கட்டுரையாய் கட்டியணைக்கிறது, ஒவ்வொருவரின் அனுபவத்திலும் ஒவ்வொரு விதமாய் வந்து ஒரு முகம் காட்டி படிப்பினையை கொடுக்கிறது, இந்த அனுபவத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து....உடம்பில் ஏறி அமர்ந்த உற்சாகம் சொடுக்கிய சாட்டையில் எங்கோ எட்டிப் பறக்கிறது மனம்.....! ஆனந்த ஒரு அனுபவமாய் போனது இந்த பணி....இதிலும் ஒரு காதலுணர்வு இருக்கிறது. ஆமாம் நல்ல படைப்புகளைக் கண்ட மனம் நாட்கள் கடந்து தன் காதலியைக் கண்டது போல குதிக்கிறது.//
ReplyDeleteஅருமையான வரிகள் ...கண்ணை மூடி எங்கோ சென்றது போல ஒரு உணர்வு உங்கள் வரிகளில் இருக்கிறது, வார்த்தைகளை தேடி தேடி அழகாய் இணைத்து இருக்கிறீர்கள், அறிமுக பதிவர்களை தேடியும், அவர்களின் படைப்புகள் எவை சார்ந்தவை என்று அறிந்து அதற்க்கு ஏற்ற்றார் போல் வார்த்தைகள் தொகுத்து மிக்க அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் ...வாழ்த்துக்கள் அண்ணா , நீங்க கலக்குங்க அண்ணா
புதியவர்களும் இருக்கிறார்கள் பார்த்து விடுவோம். கலக்கல் பாஸ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான வரிகள் ...கண்ணை மூடி எங்கோ சென்றது போல ஒரு உணர்வு உங்கள் வரிகளில் இருக்கிறது, வார்த்தைகளை தேடி தேடி அழகாய் இணைத்து இருக்கிறீர்கள்,
ReplyDeleteஉங்கள் அறிமுகம் எல்லாம் வித்தியாசம் இருக்கு பதிவுலக ஹீரோ தேவா கலக்கல்
Good job done!
ReplyDeleteஅன்புள்ள தேவா....
ReplyDeleteஎனது பதிவுகளை நீங்க அறிமுகப் படுத்திய விதம்....
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு..!!
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குதுங்க.. :-)))
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!
தேவா.. எப்பவும் போல லேட் என்ட்ரி தான் இன்னிக்கும்...
ReplyDeleteசாரி சாரி.. ஆனா வந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி.....!!
ஒரு வார அறிமுகங்களும் பார்த்தேன்...
வித்தியாசமான முறையில்..கலக்கி இருக்கீங்க..
முதல்ல நாள் பெயரிலயே கலக்க ஆரம்பிச்சிடீங்க..
எல்லா அறிமுகங்களும் சூப்பர்..சூப்பர்.. சூப்பர்..!!
உங்க உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்..!!
வாழ்த்துக்கள் பல.. உங்களுக்கு..!! :-)))
அருமையா அறிமுகப்படுத்தியிருக்கீங்க... ஆறுநாளும் போனதே தெரியவில்லை. படைப்புகள் அருமை.. அறிமுகங்களை இன்னும் அருமை...
ReplyDelete//நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்வது ஒரு ஆத்மார்த்தமான பணி என்று என்னால் உணர முடிகிறது.//
உண்மைங்க தேவா...
vijay said
ReplyDeleteஅருமையான வரிகள் ...கண்ணை மூடி எங்கோ சென்றது போல ஒரு உணர்வு உங்கள் வரிகளில் இருக்கிறது, வார்த்தைகளை தேடி தேடி அழகாய் இணைத்து இருக்கிறீர்கள், அறிமுக பதிவர்களை தேடியும், அவர்களின் படைப்புகள் எவை சார்ந்தவை என்று அறிந்து அதற்க்கு ஏற்ற்றார் போல் வார்த்தைகள் தொகுத்து மிக்க அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் ...வாழ்த்துக்கள் அண்ணா , நீங்க கலக்குங்க அண்ணா
i repeat the same.valththukkal kalukkunga thambi
June 26, 2010 10:18:00 AM GMT+05:30
அருமையான அறிமுகங்கள் தேவா . எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteintha sinna payalaiyum arimukam panni vachathukku nanri deva anna...,
ReplyDeletewww.punnakaithesam.blogspot.com
அறிமுகம் அருமை மாம்ஸ்...
ReplyDelete//அருமையான வரிகள் ...கண்ணை மூடி எங்கோ சென்றது போல ஒரு உணர்வு உங்கள் வரிகளில் இருக்கிறது, வார்த்தைகளை தேடி தேடி அழகாய் இணைத்து இருக்கிறீர்கள், //
இவர்கிட்ட எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க மாம்ஸ்... அநியாயத்துக்கு உசுப்பேத்துறாரு...... :))))
அசத்தல் அறிமுகங்கள்..
ReplyDeleteஎல்லாருக்கும் வாழ்த்துக்கள்..
அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம் ...!! கலக்குங்க அண்ணா .!!!
ReplyDeleteமிகவும் அருமை தேவா
ReplyDeleteஎல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்
அறிமுகத்துக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் விதம் நல்லாருக்கு.
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteதங்களின் பணிக்கு எனது வணக்கங்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகபடுத்தியதற்கு என் பணிவான நன்றிகள்.
nice boss
ReplyDeleteNice work Deva.
ReplyDeleteஅருமையான பகிர்வு. நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDelete