ஒவ்வொரு முறையும் தமிழ்மணத்தில் சில அறிவிப்புகள் வரும். கண்களை இடுக்கிக் கொண்டு அந்த சிறிய எழுத்துக்களை படிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். தெரியாத பல புதிய வார்த்தைகள். மற்ற அத்தனை திரட்டிகளிலும் விளம்பரங்கள் உண்டு. ஆனால் இன்று வரைக்கும் தமிழ்மணம் தளராத மனமாய் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் திரு. செல்வராஜ். ஆனால் செல்வராசு என்று தான் எழுதுகிறார்.
இவருடைய தளம் எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. முடிந்தவரைக்கும் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதி வரும் எனக்கு இவருடைய இடுகையில் எழுதியுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் இவர் பயன் படுத்தும் தமிழ் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வேதியியல் துறையைச் சார்ந்தவர். தள வடிவமைப்பும் மிகச் சிறப்பு. கடைசியாக எழுதியுள்ள தலைப்பு மட்டுமே சற்று ஆதங்கமாய் படைத்துள்ளார்.
இவர் கிராமத்துவாசியாக வாழ்க்கையைத் தொடங்கி தொடர் உழைப்பினால் இன்றைய உச்சத்தை தொட்டுள்ளார். இவர் எழுதும் நடை என்பது சமகாலத்தில் எவரின் தளத்திலும் பார்க்காத ஒன்று. ஆர்ப்பாட்டம் இல்லாத அக்கறையான ஒவ்வொரு சிந்தனைகளும் ஏராளமான ஆச்சரியத்தை உருவாக்கும். அரசியல் முத்தமிழ் காவலர் அல்ல. மொழி வளர்க்கும் உண்மைத் தமிழன்.
தமிழ் படித்தால் சுய வாழ்க்கைக்கு சோறு போடுமா? இவருக்கு கற்ற தமிழே சோறும் போடுகிறது. மற்றவர்கள் உணர வேண்டிய அளவிற்கு சுய ஒழுக்கத் தையும் போதித்தும் உள்ளது. நான்கு தலைப்புகள் எழுதி விட்டு கூட்டமாய் வந்த ஈ மொய்க்கவில்லையே என்று கருதாமால் தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டுருப்பதற்கே முதல் வணக்கத்தை சொல்ல வேண்டும். சமகாலத்தில் ஆங்கிலத்தை நோக்கி படையெடுக்கும் அத்தனை மனிதர்களும் படிக்கப்பட வேண்டிய தளம் இது. கிராமத்தில் தொடங்கிய இவரின் பயணம் இன்றும் நம்மால் மறந்து போய்க் கொண்டுருக்கின்ற தமிழ் மொழியின் வேர்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார். தள வடிமைப்பு, எளிமை, சுருக்கம், நோக்கம் என்று எல்லா விதங்களிலும் முதன்மையான முக்கிய மனிதராகத் தெரிகிறார். வலை உலகம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரையிலும் இவரால் படைக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக் கடன் பட்டவர்கள்.
தனது பெயரையே கல்பனா சேக்கிழார் என்று வைத்துள்ளார். நூலகத்தில் யாராலும் தொடப் படாமல் தூசி அடைந்த பொக்கிஷம் போல இவரின் இடுகை இருக்கிறது. முழுக்க ஆய்வுக் கட்டுரையாகவே படைத்துள்ளார். கல்லூரியில் தமிழ் மொழி பயிலும் நண்பர்களுக்கும், குறிப்பிட்ட விசயங்களைத் தேடி அலைபவர்களுக்கும் இவரின் உழைப்பு நிச்சயம் பலன் அளிக்கும்.
இவர் இடுகை தொழில் நுட்பத்தையும் அவஸ்யம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இடுகைக்கு ஆடம்பர அலங்காரம் தேவையில்லை, ஆனால் அதுவும் முக்கியமானதே. வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதரவையும் பெற்ற உங்கள் போன்றவர்களின் பணி தேங்கி விடக்கூடாது. தமிழர்களால் போற்றப் பட வேண்டிய தமிழ்மகள்.
இவர் சிலப்பதிகாரத்தை மட்டும் தான் படைக்கவில்லை. ஆனால் அதற்குச் சமமான உழைப்பு அத்தனையும் இவர் இடுகையில் உண்டு. சுவராஸ்யம், எளிமை, தமிழ் குறித்த மற்ற தளங்கள், உலக அறிவு, என்று தொடங்கி இவரும் ஒரு பிரபல்ய வட்டத்தில் இருப்பதால் இவரின் உழைப்பு அத்தனையும் சரியான பாதையில் பயணித்துக் கொண்டுருக்கிறது. தீராநாதி, காலநதி போல வற்றாத வளம் கொழிக்கும் இவர் தமிழ்நதி.
சுசீலா என்ற பெயரே தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானதே. குரலால் நம்மை மயக்கியவரைப் போலவே இவரும் தன்னுடைய இலக்கியம் முதல் அக்கறையான நிகழ்வுகளைப் படைத்து நம்மை வாசிக்க வைப்பதே தனிச்சிறப்பு. இவர் வெகுஜன எழுத்தாளரும் கூட. பக்கவாட்டில் தெரியும் தலைப்புகளை தேர்ந்தெடுக்க உருவாக்கிய அமைப்பும் மிகச் சிறப்பு.
சமீபத்தில் நடந்த தமிழ் மொழிக்காக நடத்தப்பட்ட மாநாடு குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சிந்தனைகள் தோன்றியிருக்கும். உபி என்று தெரியாமல் அது குறித்து கேட்கப் போய் ஆளப்பிறந்தவர் கடைசியில் ஆத்திரப்பட்டே விட்டார்.
ஆனால் தமிழர்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ள கலைஞரைப் போலவே மாநாட்டில் கலந்து கொண்ட பத்ரி அவர்கள் எழுதிய இந்த தலைப்பும் அதன் பின்னோட்டமும் பார்த்து இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டே இருந்தேன். தமிழ்மணம் காசி கூட குமுறியிருந்தார். அவர் சொல்வதில் நியாயம் இருந் தாலும் கூட இதை நான் இங்கு சராசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு இருப்பதால் ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இந்த தலைப்பிற்கு வந்த பின்னோட்டங்கள் முழுமையும் நீங்கள் படித்தால் பொதுவான மனித குணாதியங்களையும் உணரமுடியும். இந்த வலைதளம் ஒரு கலைக் களஞ்சியம். உணர்பவர்களுக்கு உத்தமம்.
சங்ககால இலக்கிய காதல் நமக்கு இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தாமரையின் காதல் வரிகள் உங்களை மயக்காமல் இருக்குமா?
உங்கள் வருகைக்கு நன்றி.
சங்ககால இலக்கிய காதல் நமக்கு இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தாமரையின் காதல் வரிகள் உங்களை மயக்காமல் இருக்குமா?
உங்கள் வருகைக்கு நன்றி.
அன்பின் ஜோதிஜி
ReplyDeleteஅருமை அருமை - தமிழார்வலர்களை அறிமுகப் படுத்திய சிந்தனை நன்று - நல்ல அறிமுகங்கள்
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஅருமை...ஜோதிஜி.
இன்றையப் பதிவர்கள் தகவல்கள் அத்தனையும் அருமை.
ReplyDeleteஅதிலும் இந்த வரிகள்....//நூலகத்தில் யாராலும் தொடப் படாமல் தூசி அடைந்த பொக்கிஷம் போல ...//
அட !!!!
எங்கூரில் ரெண்டு வருசத்துக்கு ஒரு புத்தகம் வெளியே போகாமல் இருந்தால் அதை நூலகத்தில் இருந்து எடுத்துருவாங்க:(
நல்ல வேளை. இணையத்தில் அப்படி இல்லை. தேவைன்னா எடுத்துப்படிக்க முடியுது.
ஜாதகம் மாதிரியேதான் எனக்கு இந்த ‘தமிழ் ஒன்லி’ மேட்டரும். நான் என்ன தலைப்பு வைக்கனும்னு எனக்கு சொல்லித் தந்தவங்களாச்சே...
ReplyDeleteஇப்படியே எழுதினா எப்படி கும்மியடிக்கிறது???
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி என் தேடலில் இவர்களை வெளிச்சம் போட்டதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎனக்கு ஏலவே அறிமுகமானவர் குணா மட்டுமே...
அறிமுகங்களுக்கு நன்றி...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அருமையான பதிவு. நல்ல அறிமுகங்கள். துளசி கோபால சொல்வதை போல தான் எங்க ஊரிலும் நடக்கிறது.
ReplyDeleteநல்ல அருமையான பதிவு. நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஜோதிஜி உங்கள் வாசிப்பு வியப்பூட்டுகிறது. இவ்வளவு பேர் இன்னின்ன சார்ந்து இயங்குகிறார்கள் என்பதாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்
ReplyDeleteவணக்கம் சீனா அவர்களளே, துவக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteநன்றி கலாநேசன்.
துளசி கோபால்
ஊர்லேயும் சரி, இங்கேயும் கூட 70 சதவிகித புத்தகங்கள் இப்படித்தான் இருக்கிறது. வருபவருக்கு தேட போறுமையில்லை. உள்ளே இருப்பவர்களும் அதிக அக்கறையும் இருப்பதில்லை. தரையில் இடம் இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களைப் பார்த்த போது தான் இந்த மாநாடு குறித்து அதிகம் யோசிக்க வைத்தது. சென்னையில் வேறு இப்போது ஒன்று கட்டிக் கொண்டுருக்கிறார்.
பாலா இந்த வார்த்தை உங்ககிட்டேயிருந்து வரனும்ன்னு எதிர்பார்த்தேன். ஹைய்யா.................
றமேஸ் உங்களைப் போலவே தேடலின் முடிவு இவர்கள். குணாவுக்கு நன்றி.
கண்ணகி உங்கள் தொடர்வாசிப்புக்கு நன்றி, ஐயா ராதாகிருஷ்ணன் உங்களுக்கு என் வணக்கம்.
வாங்க குமார்.
ReplyDeleteகண்ணன், அடுத்து வரும் தலைப்பில் இந்தியாவில் தமிழ்நாட்டில் வலைதளத்தில் எழுதிக் கொண்டுருப்பவர்களைப் பார்த்தால் மிரண்டு போய்விடக்கூடும்.
எப்படியே கன்னித்தமிழ் இணையத்தில் கன்னியாக இருக்க வாய்ப்புண்டு போலிருக்கு.
பாலா கோபப்படப் போகிறார்.
விஜி நீங்கள் சொல்வது அமெரிக்காவிலா? வருகைக்கு நன்றி.
கலக்குங்க ஜோதிஜி, வலைச்சர வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவு வந்தவுடனேயே படித்தேன். அவர்களின் பதிவுகளுக்குள் கொஞ்சம் மூழ்கிவிட்டேன்.
ReplyDeleteஅருமையான வாசிப்பு உங்களுடையது.
ஒவ்வொரு அறிமுக வலைத்தளங்களும் உங்கள் வாசிப்பின் ஆர்வத்தை சொல்கிறது. உண்மையிலேயே பொக்கிஷங்கள். உங்கள் அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. நன்றி...!
ReplyDeleteஅண்ணே தொடர்ந்து அசத்துறீங்க.. பாராட்டுக்கள்.. இவர்கள் அனைவரும் நான் தொடர்ந்து படிப்பவர்கள்.. தாமரையின் வரிகளில் மயங்கத்தான் வைக்கிறார்..
ReplyDeleteவித்தியாசமான நல்ல அறிமுகங்கள். பலரது பதிவுகள் பிரம்மிக்க வைக்கிறது.
ReplyDeleteஅன்பார்ந்த ஜோதிகணேசன்,
ReplyDeleteரா.கி.ரங்கராஜன் என்ற முதுபெரும் எழுத்தாளர் தனது கதை புத்தக முன்னுரை ஒன்றில், "எழுதத் தெரிய வேண்டுமென்றால் முதலில் பிறரின் எழுத்துக்களை பொறுமையாக படிக்கத் தெரிய வேண்டும்" என அவரின் தந்தை சிறுவயதில் அறிவுறுத்தியதாக எழுதியிருந்தார். அந்தவகையில் தாங்கள் பலரின் எழுத்துக்களை படித்து அவற்றை மனதிற்குள் வகைப்படுத்திக் கொண்டு முன் வைத்திருக்கிற விஷயம் அருமை. நான் ஐந்தாறு முறை வெகுஜனப் பத்திரிகையான தினமணியில் நடுப்பக்க கட்டுரைகள் எழுதி பிரசுரமாகியுள்ள போதிலும், இடுகையில் எழுதத் துவங்குவதற்கு முன்னால் பலரை படித்து விட்டு பின்னர் எழுத துவங்குவது சாலச்சிறந்தது என்ற எண்ணத்தை பல இடுகைகள் தோற்றுவித்துள்ளது. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ஒவ்வொரு வலைதளமும் பொறுமையாக படித்து பின்னூட்டம் இட வேண்டிய தளங்கள்- அதே போல் பல விபரங்களை, யார் எப்படி எழுதுகிறார்கள் என்பதை அறியவும் உதவும் தளங்கள். இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (21/07/10) நாளிதழில் படித்த ஒரு சுவாரசியமான கணக்கெடுப்பு புள்ளி விபரம் பல இளைஞர்கள் தினமும் இணைய தளங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் வலம் வருகிறார்கள். குறிப்பாக பிளாக்கர் எனப்படும் வலைதளங்களில் பலர் உலா வருவதுடன் குறைந்தது அரை மணி நேரம் பார்க்க, பதில் எழுத செலவழிக்கிறார்கள். தொடரட்டும் ஆசிரியப்பணி - சித்திரகுப்தன்
ஆசிரியரே நீங்கள் எனக்கு கொடுத்ததை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றேன்.
ReplyDeleteகார்த்திக் ரொம்ப என்னை பயமுறுத்துறீங்க. ஒரு வேளை நாளை நீங்களும் இதில் ஆசிரியாக வரும் போது இன்றைய உங்களின் தேடல் அப்போதைககு பலருக்கும் உதவியாய் இருக்கக்கூடும்...
தமிழ் அமுதன் உங்கள் வெளிப்படையான பாராட்டுரைகள் நான் அறிந்ததே.
ரமேஷ் உங்கள் வளர்ச்சி பெருமைபடத்தக்கது.
எழுதத் துவங்குவதற்கு முன்னால் பலரை படித்து விட்டு பின்னர் எழுத துவங்குவது சாலச்சிறந்தது
ReplyDeleteநன்றி தோழரே.....
திரைப்பட கவிஞர் கபிலன் சமீபத்தில் சொன்னது.
சில சமயம் வரிகள் வந்து விழாமல் தடுமாற்றம் உருவாகும். நம்முடைய கம்பராமாயணத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டி விடுவேன்.
அடுத்த ஒரு மாதத்திற்கு பிரச்சனையே இருக்காது.........
நன்றி உங்கள் அக்கறைக்கு.
தங்கள் அறிமுகம் அருமை..
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அன்பரே..
அருமைத் தமிழினியர்களைத் தேடிப்பிடித்து
ReplyDeleteஅவையில் அமரவைத்ததற்கு
உங்களுக்கு மனமார்ந்த
நன்றிகள்!
__/\__
அருமையாக தமிழ் ஆர்வலர் வலைப்பூக்களை அறிமுகம் செய்தீர்கள்,இதில் இருவரை படித்து வருகிறேன்,குணசீலன் மற்றும் எம்.ஏ.சுசீலா,இனி அனைவரையும் படிக்க முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஅருமை ஜோதிஜி
ReplyDeleteதனித்துவமான அலசல்கள்.
குமார் ஜெராக்ஸ், உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.
ஆரம்ப காலத்தில் அங்கு இருந்த விளம்பர வாசகம் இன்றும் பிரபலம்.
"இங்கு எல்லா மொழிகளிலும் ஜெராகஸ் எடுக்கப்படும்".
அது போலின்றி,மிகையில்லாத
அறி(ய)முகங்கள்
குணா இன்னும் பல படிகள் நீங்கள் மேலேறி உயர வாழ்த்துகள். தினமலர் தினமணி கூட உங்களை பெருமை படுத்தி விட்டது. உங்கள் உழைப்புக்கு வேறென்ன வேண்டும்?
ReplyDeleteவருக அண்ணாமலை. ரசித்த குறியீடு.
நன்றி கார்த்திகேயன்.
பெருசு......
என்னை கொல்லாதீங்க.... ஏற்கனவே இரவுப்பறவைன்னு ஒருத்தரு இப்படித்தான் என்னை திண்டாட வைத்துக் கொண்டுருந்தார். இப்ப நீங்க. இத்தனை ரகஸ்யமா உங்களை வைத்துக் கொண்டு தடுமாற வைப்பது நியாயமா?
திருப்பூருக்குள்ளேயா இருக்கீறீங்க. அல்லோ ரமேஷ் இவர் யாருன்னு பார்க்கக்கூடாதா?
இன்று தமிழ் தேடும் படலமா !இரா.குணசீலன்,தமிழ்நதி பக்கங்கள் தவிர மற்றையவைகள் புதியவைகளே.
ReplyDeleteநன்றி இனிய வண்ணத் தமிழுக்கு !
இப்படிப்பட்ட தமிழ் பதிவர்களை இதுவரை அறியாததில் வருத்தம்
ReplyDeleteதங்களால் அறிமுகம் ஆனதால் சந்தோசம் :)
கலக்குங்க :)
//எப்படியே கன்னித்தமிழ் இணையத்தில் கன்னியாக இருக்க வாய்ப்புண்டு போலிருக்கு.//
ReplyDeleteஅதாவது... ‘கற்பு’ன்னு ஒரு மேட்டர் இருக்குன்னு சொல்லுற ஆணாதிக்க, பார்ப்பனீய, பாஸிஸ பிற்போக்குவாதி நீங்க!!!
அப்படித்தானே??!!
பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கப்பா போனீங்க?? இவரை வந்து குமுறுங்க.
[இன்னிக்கு வேற இடம் கிடைக்கலை]
மிகவும் பெருமையாக இருக்கிறது அறிமுகங்கள் அனைவரையும்
ReplyDeleteபார்க்கும் பொழுது . வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக .
//"இங்கு எல்லா மொழிகளிலும் ஜெராகஸ் எடுக்கப்படும்".
ReplyDelete//
=))))
அருமையான அறிமுகங்கள் ஜோதிஜி:).
நன்றி சங்கர்.
ReplyDeleteதமிழ்
நீங்க போட்டுள்ள அழும் பொம்மை போலத்தான் பெருசு என்னைப் போட்டு படாயாய் படுத்தி கலக்கிட்டுருக்றார்.
என் வலைத் தளம் குறித்துத் தாங்கள் எழுதிய பதிவை இன்றுதான் கண்டேன்.
ReplyDeleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி.
வணக்கம் சுசிலா அம்மா.
ReplyDeleteஉங்களுக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகளும்.