Sunday, July 25, 2010

வெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)

குரு வணக்கத்தில் தொடங்கி ஆறு போல் நகர்ந்து இன்று விடைபெறும் நேரம்.

நான் வாசிக்கும் பலரும், என் இடுகையில் எழுதும் எழுத்துக்களை ஆதரித்த வர்களும், புதிய முகங்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த வலைச்சர பணியில் நல்ல அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. அன்பென்ற சவுக்கால் என் விவேகத் தை அதிகமாக்கிய சீனா அவர்களுக்கு முக்கிய நன்றி.தினந்தோறும் செய்தி ஓடையின் மூலமாகத்தான் தேவியர் இல்லத்தை படிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுருக்கிறது. அவர்களுக்கும், இந்த நேரத்தில் மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
எனக்குள்ளும் இன்று வரையிலும் ஏராளமான இருள் அப்பிக்கிடக்கிறது. மூளையில் இருக்கும் ந்யூரான்களில் எனக்கு முன்னால் வாழ்ந்த தலைமுறை களின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இறை வெறுப்பு, இறை மறுப்பு என்று வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அனுபவங்கள் கொடுத்த பாதிப்பில் இன்று இறை என்பது இப்போதும் தேடலாகத் தான் இருக்கிறது. நடிகர் சிவகுமார் போலவே கோவிலுக்கு செல்வதை விட என்னுள்ளேயே தேடிக்கொண்டு இருக்கின்றேன். கோவிலுக்குச் சென்றாலும் அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் மொத்தமாக யோசிக்க வைக்கின்றது.

அச்சத்தை உருவாக்கி பிழைப்பு நடத்தும் மனிதர்களையும், வெளியே கை ஏந்திக்கொண்டு பிழைக்க வழியில்லாமல் வாழும் மனிதர்களையும் தான் ஆதங்கமாய் பார்க்க வைக்கின்றது. இந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும், சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.

எதையும் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் குறைந்த பட்சம் அமைதி கிடைக்கலாம். அடுத்த மனிதனைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?

அதைத்தான் இருவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம், வெறுப்பு, குழுமனப்பான்மை, குறுகிய நோக்கம் போன்ற அத்தனையும் தூக்கி எறிந்து பார்த்தாலும் இருவரின் படைப்புகள் மூலம் என்னையும் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். என்னால் நீக்க முடியாத இருள் என்பது என் குழந்தைகளுக்காவது வராமல் இருக்க வேண்டும்.

நான் கடந்த ஒரு வருடத்தில் வலைதளத்தில் வாசித்த பல ஆக்கபூர்வமான கட்டுரைகளுக்கு மத்தியில் இந்த பெண்மணி எழுதிய கட்டுரை என்னுள் சாகும் வரைக்கும் ஞாபகத்தில் இருக்கும். இதைவிட எளிமை சிறப்பு என்று என்னால் வேறு எதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. உணர்ந்தவர்களால் படைக்கப் பட்ட படைப்பு என்பது எப்பொழுதுமே என்பது சகாவரம் பெற்றது.

மதநம்பிக்கை உள்ளவனின் எண்ணத்தில் இந்த வால்பையன் அடுத்த சம்மட்டி அடிகள் எவராலும் மறுக்க முடியாது.

"எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்க ளுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சி கிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத் திற்கு எள் ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!"
திருப்பூரில் பணம் கொழுத்தவர்களின் மத்தியில் வாழும் வாழ்க்கையில் பயமே அறியாதவனின் வாழ்க்கை தேவியர்கள் அறிமுகமானதற்குப் பிறகே அத்தனை பயமும் வந்தது. எழுதத் தொடங்கிய பிறகே மொத்த விவேகமும் வந்துள்ளது. சீனா போன்றவர்களால் இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.

வலைச்சரம் ஆசிரியர் பணி என்பது எத்தனை முள்படுகை போன்றது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். வலைச்சரம் தமிழ் மண மணிமகுடத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் வாசிப்பு அனுபவத்தை தேடிக் கொண்டு இருப்ப வர்களுக்கு இந்த தளம் வாழ் நாள் பொக்கிஷம்.

இலங்கை குறித்து நான் கொடுத்த தலைப்புகள் போல என்னால் நூறு அற்புத தளங்களை சுட்டிக்காட்ட முடியும். மற்ற தலைப்புகளைச் சுட்டிக் காட்ட எனக்கு உதவிய நண்பர்கள் போல் இல்லாமல் நானே உணர்ந்துபடித்த தளங்கள் அது. ஆனால் அத்தனையும் இங்கு சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகம் உண்டு. பல நண்பர்களின் தளங்களையும் சுருக்கம் கருதி என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை.

நான் எழுதிய ஈழம் குறித்த கட்டுரைகள் இன்று வரைக்கும் பலருக்கும் தேட லாய் இருக்கிறது. எட்டு வருடங்கள் மீதம் உள்ள ஈழ வரலாற்றை இப்போது என்னுடைய மதிப்புக்கு உரியவர் கொடுத்த தாக்கத்தால், உதவியால் புத்தகத் திற்கான வேலைகள் நடந்து கொண்டுருக்கிறது.

அந்த புத்தகம் இதுவரையிலும் வெளியில் சுட்டிக் காட்டப்படாத ஈழ மக்களின் சமூக வாழ்க்கையை சுட்டிக்காட்டும். இது குறித்து எழுதிய முதல் வருட இறுதி கட்டுரை இது.
தேவியர் இல்லம் இடுகையை உருவாக்கித் தந்த நாகா மூலமாக இந்த நல்ல பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் என் எழுத்துலக வளர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை காட்டு வலையுலக குருஜீ ராகவன் நைஜீரியாவுக்கு (பின்னூட்ட சுனாமி நன்றி கார்த்திகை பாண்டியன்)என்னுடைய குரு வணக்கம்.

ஏழு நாட்களும் தொடர்ந்து வந்து வாசித்த, பின்னூட்டமிட்ட, ஓட்டு அளித்த, பாராட்டிய, எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. படங்களை தந்த 4தமிழ்மீடியாவுக்கும் நன்றி.

ஜோதிஜி

தேவியர் இல்லம். திருப்பூர்

23.07.2010

நாம் தமிழர்

47 comments:

  1. நன்றாகச் செய்துள்ளீர்கள், ஜோதிஜி. பாராட்டுகளும் வாழ்த்துக்களும். குறிப்பாக அந்தப் பெண்மணியின் வலிகள் கண்ணீரை வரவழைத்து விட்டன. ஏழ்மை என்பது கொடியது.

    ReplyDelete
  2. சிறப்பான வாரம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  3. உங்களுக்கு அறிவு தேடல் நிறைய இருக்கு. கனமான வாசிப்பு. கனமான சிந்தனை.

    உங்கள் புத்தகங்கள் வெளி வர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமை. அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் ஜோதிஜி,

    மிக சிறப்பான வாரம். நான் படிக்காத பல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

    தோழி சங்கரி அவர்களின் கட்டுரையை படித்து மனம் கனத்து விட்டது. நான் கடந்த பல வருடங்களாக எனது பாஸ்டன் AIMS India (http://new.aimsindia.net/) நண்பர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் பல கிராமப்புற கல்வி மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். கடந்த சில தினங்களாக நானும் என் மனைவியும் விவாதிப்பது இந்தியாவில் கழிப்பறை விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது என்று. என் பக்கது வீட்டு நண்பர் பைலட் இந்திரநில் அவருடைய தொண்டு நிறுவனத்தின் (http://www.isonfund.com/ison_hygiene.htm) சார்பில் அவருடைய சொந்த மாநில மேற்கு வங்காளத்தில் கிராமங்களில் கழிப்பறை வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். இதே மாடலில் என் கிராமம் வெட்டிக்காட்டில் செய்ய வேண்டும் என்ற செயல் திட்டதில் இப்போது இறங்கியுள்ளேன். என் மனைவி இந்தியா கழிப்பறை பிரச்சினை பற்றி சமீபத்தில் அவருடைய வலைப்பதிவில் எழுதிய இடுகை:
    http://geetha-ob.blogspot.com/2010/07/toilet-training.html

    கழிப்பறை பிரச்சினை இந்தியாவில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை:(

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  6. சிறப்பான வாரம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  7. சிறப்பான வாரம் அண்ணே.. மிக்க மகிழ்ச்சியும்.. பாராட்டும்...

    ReplyDelete
  8. அன்பின் ஜோதிஜி

    நன்று நன்று - நல்லதொரு வாரம் - அழகாகச் சென்றது - ஏற்படுத்திய தாக்கம் நன்று. நல்வாழ்த்துகள் ஜோதிஜி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. அன்பின் ஜோதிஜி

    நன்று நன்று - நல்லதொரு வாரம் - அழகாகச் சென்றது - ஏற்படுத்திய தாக்கம் நன்று. நல்வாழ்த்துகள் ஜோதிஜி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. சிறப்பான வாரம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  11. anaiththum padithen. arumai ji. GREAT WORK.:-)

    ReplyDelete
  12. கடினமான வலைச்சர ஆசிரியர் பணியை வெகு சிறப்பாக, சிறந்த அறிமுகங்களுடன் செய்தீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வேறென்ன... அதே வார்த்தைகள் தான்... மிகச் சிறப்பான வாரம். :) கலக்கிட்டீங்க :)

    ReplyDelete
  14. ஜோதிஜி...உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் சொற்கள்...சங்கரி எழுதியதை முன்பே படித்திருக்கிறேன்.ஒரு பெண்ணின் வலியை வலிக்குமாறு வெளிப்படுத்தியிருந்தார்...

    . சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.
    எதையும் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் குறைந்த பட்சம் அமைதி கிடைக்கலாம். அடுத்த மனிதனைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா? [Image]
    அதைத்தான் இருவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம், வெறுப்பு, குழுமனப்பான்மை, குறுகிய நோக்கம் போன்ற அத்தனையும் தூக்கி எறிந்து பார்த்தாலும் இருவரின் படைப்புகள் மூலம் என்னையும் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். என்னால் நீக்க முடியாத இருள் என்பது என் குழந்தைகளுக்காவது வராமல் இருக்க வேண்டும்.

    வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்..வால்பையன், வினவு தளம் உண்மைகளை உண்மையாகவே சொல்கிறது..அவ்ர்களுக்கு என் வணக்கங்கள்.

    தமிழ்மணத்தின் மகுடத்தில் வராவிட்டால் என்ன....நாங்கள் உங்களைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறோம்...

    ReplyDelete
  15. மிகவும் அருமையாக எழுதிவிட்டீர்கள்,மிகசிறப்பான அறிமுகங்களுடன் கொடுத்த பணியை நிறைவு செய்தீர்கள்.இனி உங்கள் அறிமுகங்களையும் தொடர்ந்து படிப்போம்.மகிழ்ச்சி

    ReplyDelete
  16. தமிழ்மணம் நட்சத்திரம் ஆகும் நாள் தொலைவில் இல்லை..தொட்டுவிடும் தூரம்தான்..வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. இந்த பதிவில் சுட்டிய வரிகள் தன் நம்பிக்கை தரும் படி, ரசிக்கும் படி இருந்தது. ஒரு வார உழைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நிறைய தெரிந்துகொண்டேன் இந்த வாரத்தில்

    மிக்க நன்றி தல :)

    ReplyDelete
  19. அன்பார்ந்த ஜோதிகணேசன்,
    ஒரு வார ஆசிரியர் என்ற கனமான பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறீர்கள். நட்போடு தோளில் தட்டி பாராட்டுக்கள். அறிமுகப் படுத்திய தளங்கள் அனைத்தும் அருமை. 7 நாட்களில் தங்களின் குரு வணக்கம் முன்னுரையும், 7ம் நாள் நன்றியுடனான முடிவுரையும் நடை பிரமாதமாக இருந்தது. தங்களின் ஈழம் தொடர்பான பதிவுகள் புத்தகமாக வர இருப்பது கேட்டு மகிழ்ச்சி. அதே போல் திருப்பூர் பனியன் தொழில் குறித்த இடுகைகளையும் தொகுத்து புத்தகமாக்கினால் திருப்பூருக்கு புதிதாய் நுழைபவர்களுக்கு உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது என் கருத்து. எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் ஒரு சிறந்த பழக்கம் அவருக்கு வரும் வாசகர் கடிதங்களை சேர்த்து வைத்துக் கொண்டு அதில் எவை அவரை பாதித்ததோ அவற்றை தனது ஒவ்வொரு புத்தகத்திலும் சிலவாக பதிவு செய்வார். அது போல தாங்களும் உங்கள் புத்தகத்தில் மேற்கொள்ளலாம் என்பது எனது அன்பான கருத்து - வலைதளம் நல்ல நட்புகளை உருவாக்கித் தருகிறது. அந்த வகையில் உங்களை தவிர இந்த 7 நாள் அறிமுகங்களில் சிலரை தேர்வு செய்து அவர்களிடமும் தங்களைப் போலவே தொலைபேசியிலும் தொடர்புகொள்ளும் நட்பை வளர்க்க ஆசை. - வாழ்த்துக்களுடன், தோழமையுள்ள - சித்திரகுப்தன்

    ReplyDelete
  20. சிறப்பாக, தனித்துவத்துடன் நல்ல அறிமுகங்களை தந்து இருக்கீங்க... பாராட்டுக்கள்!

    பொன்மொழிகளும் படங்களும் தொகுத்த விதமும், அருமை.

    ReplyDelete
  21. பல பின்னூட்டத்தின் மூலம் இட்ட புத்தகக் கோரிக்கை செயல்படுத்தப்படுவது கண்டு மகிழ்ச்சி. அருமையான பல பதிவுகளைப் படிக்க காரணமாகிவிட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  22. வணக்கம் கந்தசாமி ஐயா. உங்களின் ஒவ்வொரு ஆக்கமும் வளர்ந்து கொண்டுருப்பவர்களுக்கு முன்னோடியானது. தொடங்கி வைத்தமைக்கு நன்றி. இந்த ஏழ்மையில் மக்களை வைத்து இருக்க முடிந்த காரணத்தால் தான் இன்றைய அரசியல் வியாதிகள் செய்யும் மொத்த நாதாரிதனங்களும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

    கலாநேசன் உங்கள் அக்கறைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    அறிமுகமாகி கார்த்திக் அதிக நெருக்கமாகி விட்டீர்கள். இதே இந்த ஆசிரியர் பணி உங்களையும் நோக்கி ஒரு நாள் வரும். உங்களின் தேடல் அதற்கு உறுதுணையாய் இருக்கட்டும்.

    றமேஸ் உங்கள் தொடர்வாசிப்பு என்றும் நன்றி.

    ReplyDelete
  23. ரவி

    உங்கள் எழுத்துக்களை பார்த்தவுடன் நான் பலவற்றையும் புரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள விடங்கள் நான் எதிர்பார்த்தது தான். உங்களைப் போன்றவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நல்லது நடக்கட்டும். அதற்கு முன்னால் கல்விப் பணியில் உங்கள் மாவட்ட மாணவர்களுக்கு உதவ முடிந்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் மன உளைச்சல் உருவாகாமல் இருக்கலாம். காரணம் அரசியல் வியாதிகள் அதில் தலையிட முடியாது. சென்னையில் இருக்கும் மனித நேய அறக்கட்டளை சைதை துரைசாமி போன்றவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டுக்குத் தேவை. நாம் நம்முடைய உரிமையை பெற் முதலில் சரியான பதவிகளில் அமர வேண்டும். இல்லாவிட்டால் கடைசி வரைக்கும் மற்ற மாநில நண்பர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

    வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  24. //அந்த புத்தகம் இதுவரையிலும் வெளியில் சுட்டிக் காட்டப்படாத ஈழ மக்களின் சமூக வாழ்க்கையை சுட்டிக்காட்டும்.//

    You too, Jothiji? :(

    ReplyDelete
  25. குமார், செந்தில் உங்கள் தொடர் வாசிப்புக்கு அக்கறைக்கு நன்றி.

    சீனா அவர்களே இப்போது தான் மூச்ச சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

    இதற்கு முன்னால் வந்தவர்கள் இந்த அளவிற்கு உங்களை தர்ம சங்கடப்படுத்தி இருக்க மாட்டார்கள். ஆனால் மகனே புகுந்து விளையாடு என்று அமைதியாய் இருந்தமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  26. வெறும்பய நன்றி

    சங்கர் அத்தனையும் படித்தேன் என்பதை படிக்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி.

    தமிழ்உதயம் என் பார்வையில் ஒரு வருடத்தில்நீங்கள் பெற்ற வளர்ச்சி அதிசயப்படக்கூடியது. இப்போது வலைதள அத்தனை தொழில் நுட்பத்தையும் கற்று இன்று வரையிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதே முதல் ஆச்சரியம்.

    என்னுடைய பார்வையில் வலம்புரி ஜான் சுகி சிவம் போல நீங்கள் வலம்புரி சிவம்.

    தமிழ் நீங்கள் கற்றுக் கொடுத்தது. முழுமையாக என்னைத் தெரிந்த நான் இனிமேல் வேறென்ன சொல்ல முடியும்?

    கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தாலும் உங்கள் பணி தொடர வேண்டும்.

    ReplyDelete
  27. கண்ணகி

    வேர்ட்ப்ரஸ் ல் எழுதிய அதிகப்பிரசங்கித்தனமான கட்டுரைகள் முதல் இன்று வரையிலும் என் மேல் ஆழ்ந்த அக்கறை காட்டும் உங்களுக்கு நன்றி.

    எழுத முடியுமா?
    எழுதவும் வருகிறது?
    படிக்க வைக்க முடியுமா?
    படிப்பவர்களை படுத்தாமல் எழுத
    வேண்டும்?
    இனிமேல் சுருக்கமாக எழுத கற்றுக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ள வைத்ததே உங்களைப் போன்றவர்கள் தான்.

    கண்ணகி நன்றி.

    ReplyDelete
  28. கண்ணகி வலைச்சரம் தமிழ் மணி மகுடத்தில் வர வேண்டும் என்பதே என் ஆசை.

    ReplyDelete
  29. கார்த்திகேயன் வலைச்சரம் ஆசிரியர் பணி உங்களுக்கு வரும் போது இனிமேலாவது மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து தல பாலாவுக்கு பரிந்துரை செய்கின்றேன்.

    ஓட்டம் பிடிப்பது இங்கிருந்தே பார்க்க முடிகிறது......... அட நில்லுங்க தல.

    ReplyDelete
  30. மோகன் குமார் ரசிக்க கூடிய வகையில் இருந்த உங்கள் நல்ல விமர்சனத்திற்கு நன்றி.

    யோகேஷ் இன்னும் நீங்கள் சுடுதண்ணி போல பல சிறப்பான உயரம் அடைய என்னுடைய வாழ்த்துகள்.

    தோழருக்கு

    உங்கள் அக்கறைக்கு நன்றி. ஈழப் புத்தகத்தில் அந்த எண்ணம் எனக்கு உண்டு. நன்றி.

    ReplyDelete
  31. சித்ரா பாளையங்கோட்டையில் இருந்து இன்று அமெரிக்கா வரைக்கும் சென்ற உங்கள் உயரமும் உங்கள் ஜாலியும் நான் அறிந்ததே. உங்கள் அறிமுகத்திற்கும் தொடர்வாசிப்புக்கும், ஆழ்ந்த அக்கறைக்கும் நன்றி.

    பின்னோக்கி உங்கள் ஆ பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. ரதி

    உங்கள் வருகைக்கு நன்றி.

    சுதந்திரத்திற்கு முன்பு சேனநாயகா பதவிக்கு வந்தது முதல்

    இலங்கை என்ற தீவு விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு உருவானது?

    ஆண்ட மன்னார்கள் முதல் அடங்கிப் போன மனிதர்கள் வரைக்கும்.

    உரிமைக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த போதிலும் கை நழுவிய வாய்ப்புகள்.....

    இது போன்ற பல விடயங்கள் நான் படித்த வரைக்கும்........

    ஒன்று ஆய்வுக்கட்டுரை போல இருக்கிறது.

    அல்லது படிப்பவர்களை விரட்டும் நடையில் இருக்கிறது.

    அல்லது புத்தகத்தை காசாக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டு உள்ளது என்பது என்று என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    அத்தனையும் கவனத்தில் கொண்டு ஒரு சராசரி வாசகன் அந்த புத்தகத்தை படிக்கும் போது அவன் மனதில் மொத்தமாக இலங்கை குறித்து மாயபிம்பங்கள் உடைபட வேண்டும்.
    ஏன்? எதற்கு? எப்படி? மூன்றும் முடிந்தவரைக்கும் அவனாகவே ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

    எவராலும் முடியாது? நன்றாகவே தெரிந்து இருந்த போதிலும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று நான் நிணைத்த நோக்கத்தை பதிப்பக தலைவர் கூட ஒத்துக் கொண்டதே எனக்கு கிடைத்த அங்கீகாரம்.

    காரணம் பரபரப்பான எந்த சம்பங்களும் அதில் இருக்காது. வலியைத்தான் உணர முடியும்.

    தொடர்வாசிப்பில் இருந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் ரதி.

    ReplyDelete
  33. தோழர் சங்கரியின் நாப்கின் கட்டுரையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வினவை உங்கள் பார்வையில் எடுத்துச் சொன்னமைக்கு மகிழ்ச்சி. வலைச்சர அனுபவ பகிரலுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. ஜோதிஜி...உங்கள் வாரத்தை புதிய அறிமுகங்களால் நிரப்பி இலக்கிய வாரமாய்,நகைச்சுவையும் கலந்து இனிய வாரமாக்கினீர்கள்.இனி தேவியர் இல்லத்தோடு தொடர்வோம்.நன்றி.

    ReplyDelete
  35. ஜோதி அண்ணே.. வலைச்சரத்தில் உங்களுடைய இந்த‌வாரம் ரொம்ப அருமையாக அமைந்தது. எங்களுக்கு புதுபுது தகவல்களும் பல புதிய பதிவர்களை குறிப்பிட்டிருந்தீங்க.. ரொம்ப நன்றி.. உங்களுக்கு மீண்டும் இதுபோல ஒருவாரம் அமைந்தால் எங்களுக்கு பல தகவல்களும் நல்ல விசயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

    ஜோதி அண்ணனின் வாரம் ரொம்ப அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு
    என்றும் அன்புடன்

    உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  36. சிறப்பானதொரு வாரத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி! விரைவாக நேரில் சந்திப்போம்!!

    ReplyDelete
  37. //பாலாவுக்கு பரிந்துரை செய்கின்றேன்.//

    ஐயா..., வலைச்சரம் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சது? ஏன் இப்படி??? எதுவா இருந்தாலும்.. சீனா சார் கிட்ட பேசி தீர்த்துக்கங்க. பாவம் அவர்!!!

    ------

    இதுவரைக்கும்.. ஒரு வாரம் தொடர்ந்து வலைச்சரம் வந்ததில்லை. அல்லது எந்த வெப்சைட்டையுமே தொடர்ந்து ஒரு வாரம் பார்த்ததில்லை. என்னோட சைட் உட்பட.

    அந்தப் பெருமை, பாக்கியம் எல்லாம் உங்களுக்கே! :) :)

    ======

    நீங்களும் கடவுள் மேட்டரில் நம்ம ’ஜாதி’யா!!! :) :)

    ReplyDelete
  38. ஒரு வாரம் போனதே தெரியலைங்க தல!!

    வாழ்த்துகள்!!!

    உங்க புத்தகத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  39. பாலா

    கோவி கண்ணன் துளசிதளம் மற்றும் இலங்கை சார்ந்த பல பதிவுகளை தேடலுடன்
    நான் படித்துக் கொண்டே இருந்தாலும் ஏற்கனவே உள்ளே நிரம்பி வழியும்
    ஆதங்கத்தையும் அத்தனையும் போக்குவது உங்கள் நக்கல் நையாண்டிகளே.

    நகைச்சுவை தளங்களைத் தான் இப்போது அடிக்கடி விரும்பி படிக்கின்றேன்.
    இங்கு தேவியர்களுக்கு நகையும் சேர்க்க முடியவில்லை. வயது ஆகிக் கொண்டுருப்பதால்
    சுவையையும் குறைக்க வேண்டியதாய் உள்ளது.

    எத்தனையோ பாராட்டுக்கள் எனக்கு கிடைத்தாலும் நீங்கள் தொடர்ச்சியாக வந்ததும்
    புத்தகம் குறித்த உங்கள் அக்கறைக்கு நன்றி. புத்தகம் எப்போது உங்கள் கையில் கிடைக்கிறதோ அப்போது விஜய் படத்திற்கு கொடுத்த அய்யோ விமர்சனம் போல் தாக்கி விடக்கூடாது

    ஆமாமாமாமாமாமாமா.........................

    ReplyDelete
  40. மிக்க நன்றி தல!

    சிறப்பான வாரமாக அமைந்தது!

    ReplyDelete
  41. இதென்ன ஊர்ல இல்லாத அக்ரமமா இருக்கு. இது அருணா?

    அப்படி அமைதியா போயிட்டா நாங்க விட்டுடுவோமா?

    ReplyDelete
  42. //
    இதென்ன ஊர்ல இல்லாத அக்ரமமா இருக்கு. இது அருணா?//


    வார முதல்நாள் என்பதால் கொஞ்சம் ஆணி தல!

    ReplyDelete
  43. பொள்ளாச்சியில வாக்கப்பட்ட காதலியை எதிர்பார்ப்பது போல் உங்களுக்ககாக காத்து இருந்தேன்(?)

    முதல் நாள் உங்களுக்கு ஆணி

    இங்கே 365 நாளுமே லாடம் தான்.

    ReplyDelete
  44. மிகவும் சிறப்பான வாரம் வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  45. இன்றுதான் மொத்தமாகப் படித்தேன் அற்புதமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. ஏதேனும் புதியதாக எழுத ஆசைப்பட்டு வலையுலகக் கடலில் விழுந்த சிறு நீச்சல்காரன்

    அற்புதம். நன்றி நீச்சல்.

    ReplyDelete
  47. இந்த ஏழு நாட்களும் அருமையாக உங்கள் வலை ஆசிரியர் பணியைச் சிறப்பாகச் செஞ்சு முடிச்சுருக்கீங்க.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete