நள்ளிரவில் சுடுக்காட்டில்
எரியும் பிணமொன்று
நரம்புகள் இறுகி எழுந்து அமர
அடித்து சாய்க்கும் வெட்டியானாய்
வாழ்வை
சாய்த்துக் கொண்டிருக்கிறேன்..
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றுகொள்ள அழைத்தவுடன் உடனே சம்மதித்தேன்.. ஜாம்பாவான்கள் அமர்ந்த இருக்கையில் இந்த வாரம் முழுதும் நான்.. சீனா அய்யாவுக்கு மீண்டும் நன்றி..
நான் கே.ஆர்.பி.செந்தில் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்து அதன் அரசியல் வெறுத்து சிங்கப்பூர் சென்று கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் கோடிகளை சம்பாதித்து, எல்லாவற்றையும் இழந்து கடன்காரனாகிய ஒரு விசித்திரமான பொழுதில் வாழ்கையை அடையாளம் கண்டவன்.
நட்புகளாலும், துரோகங்களாலும் பின்னப்பட்ட என் வாழ்கையை தூக்கி நிறுத்தியது, இடைவிடா வாசிப்பும், என் மனைவியின் நேசிப்பும்தான். பள்ளி நாட்களில் நண்பர்கள் திருட்டு பட்டம் கட்டி விலக்கி வைத்தபோது என்னை அரவணைத்துக்கொண்டது நூலகம்தான்.
வலைப்பக்கங்களை படிக்கும் வாசகனாக இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்ட என் பால்ய சினேகன் ராஜா O.R.B இப்போது ஏனோ எழுவது இல்லை.
வலைப் பக்கம் ஆரம்பித்த முதல் வருடம் என்ன எழுத என தடுமாறியபோது நான் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்துவிட்டு தொடர்கதை எழுதச்சொன்ன தமிழ்குறிஞ்சி ஆசிரியர் செந்தில் ராஜுக்கு என் வந்தனம்.
சென்னை அண்ணா சாலையில் பாட்டா கடை அருகே அடுத்து என்ன செய்யப் போகிறோம் எனத் திக்கற்று நின்ற ஒரு நண்பரையும், வாழ்கையை துவங்கிவிட்டு தங்கும் இடமற்று தவித்த ஒரு தம்பதியையும், இருந்த பணத்தை எல்லாம் சிங்கள தேசத்தில் தொலைத்துவிட்டு தட்டு தடுமாறிய ஒருவரையும் அரவணைத்துக் கொண்ட என்னை சென்ற வருடம் நவம்பர் 24 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு (குற்றம் புரியாமலே) நான் நான்கு நாட்கள் சிறை வாசம் அனுபவிக்க இவர்களே காரணமாய் இருந்தார்கள் என அறிந்தபோது முகத்தில் அறைந்த மனிதம் என்னை மீண்டும் சிங்கபூருக்கு விரட்டியது. அன்றிலிருந்து இன்றுவரை என்னைத் தினமும் அரவணைப்பது என் எழுத்தும், என்னை வாசிப்பவர்களும்தான்.
இத்தனை நாள் நான் ஒளித்துவைத்த சினிமாவை மீட்டெடுத்த கேபிள் சங்கர் கிடைத்ததும், என் எழுத்தின் தன்மையைக் கொண்டே வாசிப்பின் ஆழத்தை புரிந்து கொண்ட நேசமித்திரன் கிடைத்ததும், என்னைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டிய அப்துல்லா கிடைத்ததும், என்னை தன் பிள்ளையாக பார்க்கும் TVR ஐயா கிடைத்ததும், உரிமையுடன் வாடா தம்பி என அழைக்கும் ஜாக்கி அண்ணனின் பாசமும், பொது வெளியில் விமர்சனம் வைத்தபோதும் ஏற்றுகொண்ட மணிஜியும், என் கதை நேசன் அறிவுத்தம்பி ராஜாராமனும், மிக நெருக்கமான நட்பென உணரவைத்த ரமேஷும், மாப்பிள்ளை பிரியமான வசந்தும், அன்பு தம்பி சௌந்தர் கிடைக்க காரணமானதும் எழுத்தும் வாசிப்பும்தான்.
தொடர்ந்து பின்னூட்ட ஆதரவு அளித்த சகோதரிகள் சித்ரா,ஜெயந்தி, அன்னு, ஆசியா ஓமர், ஹேமா,சாந்தி ஆகியோருக்கும். சகோதரர்கள் கார்த்திக்,சௌந்தர்,சயேத், வசந்த், வாசன் சார், ஜெய்லானி, ரோஸ்விக், மங்குனிஅமைச்சர், கலாநேசன் மற்றும்அவ்வப்போது வந்து பாராட்டும் அனைத்து நண்பர்களுக்கும்.
இந்த வாய்ப்பினை வழங்கி என்னைக் கவுரவித்த சீனா ஐயாவுக்கும் தலை வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள்...ஆரம்பமே அசத்தல்....
ReplyDeleteவாழ்த்துகள் செந்தில்
ReplyDeleteமிக நெகிழ்வான அறிமுக பகிர்வு செந்தில்.
ReplyDeleteவாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான அறிமுகம், செந்தில் சார்..... சோதனைகளால் துவண்டு போகாமல், எதிர் நீச்சல் கற்று மீண்டு வைத்திருக்கும் உங்களுக்கு, இனி வெற்றி முகமே வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் செந்திலண்ணே.
ReplyDeleteமுதல் பதிவே ரொம்ப நெகிழ்வா இருக்கு.
நிரைய பேர அறிமுகப்படுத்தி அசத்துங்க.
வாழ்த்துகள் செந்தில்:)
ReplyDeleteவாழ்த்துகள் செந்தில்.
ReplyDeleteவாழ்த்துக்கள் செந்திலண்ணே.
ReplyDeleteநெருப்பெனச் சுடும் நிஜமான துவக்க வரிகள். அதைத் தொடர்ந்து நெகிழ்வான அறிமுகம். கலக்குங்க செந்தில். வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெகிழ்வான பகிர்வு.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவிஜய்
முயற்சிக்கு உதாரணமாய் நீங்கள். தொடருங்கள். பின் வருகிறோம்
ReplyDeleteஇத்தனைக்கும் பிறகும் எழுந்து நிற்கும் தங்களின் மன தைரியத்திற்குப் பூங்கொத்து!
ReplyDeleteவாழ்த்துக்கள்..நெஞ்சம் நிறைகின்றது.
ReplyDeleteமிக நெகிழ்வான அறிமுக பகிர்வு செந்தில்.
ReplyDeleteவாழ்த்துகள்!
வாழ்த்துகள் செந்தில்! :)
ReplyDeleteநெகிழ்வான அறிமுகம். தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழத்துக்கள் செந்தில்
ReplyDeleteஎழுத்தின் ஆழத்தையும் வீர்யத்தையும் நினைத்த போதே இப்படி ஏதோ ஒன்று உள்ளே இருக்கும் என்று.
ReplyDeleteபராவாயில்லை. அனுபவம் கற்றுக் கொடுக்கும் ஆசான். புரிந்தவனுக்கு வாழப் போகும் வாழ்க்கை. புரியாதவனுக்கு எப்போதுமே ரணம். புரிந்தவர் நீங்கள். வாரம் முழுக்க தொடரப்போகும் உங்களுக்கு வாழ்த்துகள்.
வருக செந்தில்!!!!ஒரு முன்னுரையில் வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொல்லிவிட்டீர்கள்!!
ReplyDeleteகலக்குங்க செந்தில் அண்ணே. நானும் உங்களிடம் கற்றுக்கொண்டது நிறைய. நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் வெற்றி மாலை சூடட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாம்ஸ்(ப்ரொஃபைல் பாத்திட்டேனே)
ReplyDeleteஉங்கள் முதல் பதிவு நெகிழ்வா இருக்கு
ReplyDeleteநீங்கள் பட்ட துன்பம் அனைத்தும் இனி எப்போது வர கூடாது.... அண்ணா
நான் உங்கள் பதிவுகள் இதற்கு முன்பு படித்ததில்லை. ஆனால், இந்த பதிவு நெஞ்சைத் தொடுகிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநெகிழ்ச்சியான அறிமுகம் செந்தில்....! பால் கறக்கும் அந்த அம்மாவின் வெள்ளந்தியான சிரிப்பில்...உங்கள் உள்ளம் வெளிப்பட்டு இருக்கிறது என்பது உண்மை.!
ReplyDeleteஎழுச்சியாய் தொடருங்கள் உங்கள் அறிமுகங்களை.....வாழ்த்துக்கள்!
உறவுகள் மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteகலக்குங்க அண்ணே
வாழ்த்துகள் செந்தில்
ReplyDelete:)
மிக நெகிழ்வான பகிர்வு செந்தில்.
ReplyDeleteவாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா... அறிமுகங்கள் தொடரட்டும்..
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ், அருமையான அறிமுகங்களுடன் தொடங்கியிருக்கீங்க!
ReplyDeleteஅன்பு செந்தில், பத்தியின் ஆரம்பக் கவிதை தலையில் பொட்டென அடித்தது போல் இருந்தது. அதனைத் தொடர்ந்த உங்கள் அறிமுகம், வாழ்க்கையின் சோதனைக்கும் போராட்டத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தை வெளிப்படுத்தியது. மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் செந்தில்
ReplyDeleteநெகிழ்வான அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துகள் செந்தில்!
//வலைப்பக்கங்களை படிக்கும் வாசகனாக இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்ட என் பால்ய சினேகன் ராஜா O.R.B இப்போது ஏனோ எழுவது இல்லை.//
சொந்த ஊர் பரவாக்கோட்டையா?
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
காலம் உங்களை நன்றாக செதுக்கி இருக்கிறது. உங்கள் பக்குவம் எங்களுக்கு தேவை. கற்றுகொடுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாங்க அண்ணே,
ReplyDeleteவாழ்க்கை வசந்தங்களை மட்டுமே
தெளிப்பதில்லையே....
இங்கே கலக்குங்க...
சார், இன்னைக்கு தான் எல்லாம் தெரிந்து கொண்டேன் , சாரி ,
ReplyDeleteவாங்க சார் இனி அடிச்சு ஆடலாம்
இம்... பட்டய கிளப்புங்கள்
உண்மையாகவும் நெகிழ்வாகவும் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்
ReplyDeleteவாழ்த்துகள் செந்தில்.
ReplyDeleteசிறப்பான அறிமுகப் பதிவு.
அன்பின் செந்தில்
ReplyDeleteவாழ்வில் எதிர்நீச்சல் போடும் அத்தனை பேரையும் எனக்கு பிடிக்கும்... அதனால் உன்னையும்..
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள், அசத்துங்க செந்தில்
ReplyDeleteஉங்கள் அறிமுகங்களுக்காக காத்திருக்கிறேன்
வாருங்கள் செந்தில். வாழ்த்துக்கள்... படிக்கும்பொழுது நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்... இந்தவாரம் உங்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாரம் முழுவதும் அதிகம் சிரமமில்லாமல் நிறைய நல்ல இடுகைகளை படிக்க உதவும் சீனா சாருக்கும் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDelete//நட்புகளாலும், துரோகங்களாலும் பின்னப்பட்ட என் வாழ்கையை தூக்கி நிறுத்தியது, இடைவிடா வாசிப்பும், என் மனைவியின் நேசிப்பும்தான்.//
ReplyDeleteவலி மிகுந்த வரிகள்..
அறிமுகமே அசத்துகிறது..
பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நீங்க வாழ்க்கைய அடிவாங்கித்தான் தெரிஞ்சிருக்கீங்க. சிலருக்கு இப்படித்தான் வாய்க்குது. எழுத்து அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteசெந்தில்,
ReplyDeleteவியந்திருக்கிறேன், உங்கள் பயோடேட்டா,கவிதை மற்றும் சில ஆழ்ந்த
பதிவுகளைப் படித்து. எப்படி உங்கள் தளம், இத்தகு வளமாய், எது விதைத்தாலும்
வீரியமாய் வேர் பிடித்து பசுங்கருமையாய் என். சாரல் அறிமுகத்தில் அறிகிறேன்,
காலமும், நிகழ்வுகளும் எப்படியெல்லாம் செதுக்கியிருக்கிறதென. ஏர்முனையால்
ஆழ, அகலமாய், கோடையிலும், வாடையிலும் உழப்பட்ட நல்நிலம்.
தருவாயென கல்லெறிபவருக்கும் கனிதரும் நல்தருவாய்.
தரணியில் வாழ்க சீரும் சிறப்புமாய்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செந்தில்.
ReplyDeleteஓ...ஈழத்துப் பிரச்சனையின் தாக்கம் உங்களோடுமா !
இன்னும் இன்னும் எழுதவேண்டும்
ReplyDeleteஅன்பின் செந்தில்
ReplyDeleteநம் காயத்தை நம் எச்சிலால் ஆற்றிக் கொள்ள விதிக்கப்பட்ட வாழ்வில் வாசிப்பும் வாதையும் பிசைந்த உங்கள் மொழி உங்களை அடையாளம் காண வைத்தது
இந்த அறிமுகமும் பின்புலமும்
முன்னமே உணர்ந்த வலிக்கு வடிவம் கொடுத்த்தாகவே கொள்ளணும்
*****************************
மீளப் பிறந்து கொண்டிருக்கிறோம்
எலும்புகளே சிலுவைகளாக
தருணந்தோறும்
உயிர்தெழுபவன் கடவுள் எனில்
நாமும்
*******************************
என்னுடைய முதல் பதிவைப் படித்துப் பாராட்டி, வரவேற்று பின்னூட்டம் அளித்து என்னை உற்சாகப்படுத்தியது நீங்கள் தான். உங்களின் நட்புக்காக காத்திருக்கிறேன். நான் நண்பர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் என் எழுத்தைத் தாங்க முடியாமல் என் மேல் விழுந்து பிராண்டுகிறார்கள். யாரென்றே தெரியாத நீங்களோ... வழிய வந்து வாழ்த்துகிறீர்கள்... நன்றி நண்பா...
ReplyDeleteall the best
ReplyDeleteஅன்பின் செந்தில்
ReplyDeleteஅருமையான அறிமுகம் - வெளிப்படையான ஒன்று. சந்தித்ததற்கு நன்றி. மதுரை வந்து விட்டேன்.
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
மறவாமல் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி செந்தில்.
ReplyDeleteமீண்டும் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
செந்தில்ராஜ்
ஆசிரியர்
தமிழ்க்குறிஞ்சி