வாழும் நாட்களின் பிரதிகள்
எழுதும் வார்த்தைகள்தான்
ஏதோ ஒரு தருணத்தில்
என் பிரதி உங்களை
நேசித்தது எனில்
பூரணமாகும் என்
வாழ்வும் ..
சென்ற அறிமுகங்களுக்கு பின்னூட்டம் இட்டு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... சென்ற பதிவுகளில் திருத்தம் மேற்கொண்டபோது அதில் சில தவறுகள் வந்துவிட்டன.. நாளை சரி செய்து விடுகிறோம்..
இன்று கட்டுரைகள் மற்றும் சமுதாய சிந்தனைகள் பற்றி எழுதும் பதிவர்களை பற்றிய பார்வை ..
வினவு தளம் ரௌத்ரம் பழகியவர்கள், இவர்கள் போன்ற மிகச் சிலராவது இருப்பதால்தான் நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தெரிய வருகிறது..
லீனா மணிமேகலை,திருப்பூர் தியாகு மற்றும் சந்தன முல்லை விவகாரத்தில் இவர்களின்மேல் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், எப்போதும் இவர்களின் ஆதரவாளன் நான்..இவர்களின் இந்த கட்டுரை பாருங்கள்..
நாம் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான வலைத்தளம் அழியா சுடர்கள் . தமிழின் முக்கியமான படைப்பாளிகளை அவர்தம் படைப்புகளுடன் அறிமுகப் படுத்துகிறார்கள்.. நாம் அறியப்படாத படைப்பாளி சம்பத் இந்தக் கதை உங்கள் மனசில் தங்கும் ..
தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதி கணேசனின் வலைப்பூ நிறைய விசயங்களை அலசுகிறது.. அவரின் இந்த கட்டுரையின் தலைப்பே வித்தியாசமானது..
கலையகம் கலை எழுதும் கட்டுரைகள் அனைத்தும் உலக அலசல்கள்.. கால் சென்டர் பற்றிய இந்த கட்டுரை ஒரு விரிவான உண்மை..
பெண்ணியம் வலைபக்கமும் நான் விரும்பி படைக்கும், வலைப்பக்கம் நல்ல சிந்திக்கவைக்கும் கட்டுரைகள் நிறைய வரும், காலுடைந்த ஆட்டுக்குட்டி பற்றிய கவிதை உயிரோட்டமானது..
ஆண்டாள் மகன் சற்று அபூர்வமாய் எழுதும் சிந்தனைவாதி... கி.ரா வின் ஒரு படைப்பை கதை சொல்லியிருக்கிறார்..
அடர் கருப்பு காமராஜ் கட்டுரைகளுடன் கதையும் எழுதக் கூடியவர்.. இந்த கதையில் வரும் பெண் எவ்வளவு தெளிவான கேள்விகளுடன்.. ஆனால் நிலைமை ..
பத்திரிகையாளர், கட்டுரையாளர், வன இலாகா அதிகாரி என பன்முகம் கொண்ட லதானந் படைத்த வளம் தரும் வலைபூக்கள் ..
இயக்குனர் கற்றது தமிழ் ராமின் காட்சி உலகம் அசாத்தியமானது, யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை அரங்கேற்றலாம், தகுதி இருப்பின் உடனே வெளியிடுகிறார்கள்..லெட்சுமி அம்மாவின் இந்த கதை அவசியம் படிக்க வேண்டும் ..
ரிஷபன் மீனாவின் வலைப்பக்கம் சென்செக்ஸ், முயலாமை, தாய்லாந்து பயணம், தோல் பைகள் தயாரிக்கும் முறைகள் என பல்வேறு தளங்களில் பார்வை இருக்கும்... தோல் பைகள் இனி வாங்க யோசிக்க வேண்டும் ..
பி.கே.பி யின் வலைபக்கத்தில் தற்போதிய முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கங்கள்.. இப்போதெலாம் மாதம் ஒருமுறைதான் எழுதுகிறார்.
நீங்கள் பணக்காரர் ஆகவேண்டுமா அதன் அடிப்படை விதிகளை பற்றிய கோட்பாடுகளை வாரன் பப்பெட் சொல்லியிருக்கிறார்.. உளறுவாயன் ( ஏன் இந்த பேரு ) அவர்களின் பதிவில் பாருங்கள் ..
மதுரை சரவணின் சிந்தனைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.. அவசியம் படித்து கலந்துரையாட வேண்டிய பதிவுகள்.. கல்வி பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்பட வேண்டியவை..
தோழர் தியாகுவின் செம்மலர் கட்டுரைகள் நான் தொடர்ந்து வாசிப்பவை.. மருந்துகள் பற்றிய இந்த கட்டுரை நல்ல ஆய்வு..
வேர்களைதேடும் முனைவர் இரா.குணசீலனின் தமிழாய்வு.. தமிழின் சிறப்பு..
உணவு உலகத்தில் சுத்தம் சோறு போடுகிறது..
சிந்தனை பற்றிய அறிமுகங்களில் பிரபலமான நிறைய பதிவர்களின் பெயர்களை இணைக்க வைத்திருந்த குறிப்புகள் என் கணினியில் அழிந்து விட்டதால் நினைவில் இருந்த சிலரை மட்டும் அறிமுகப் படுத்த முடிந்தது..
நாளை புதிய பதிவர்களுடன் வருகிறேன்..
இதில் பலர் எனக்குப் புதியவர்கள். அறிமுகங்களுக்கு நன்றி அண்ணே...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி ...
ReplyDeleteஅத்தனையும் அற்புத
ReplyDeleteஅறிமுகங்கங்கள் !
சில அறிமுகங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்திருக்கிறார்கள் :)
ReplyDeleteவினவுக்கே அறிமுகமா ???
:)
அடிச்சு ஆடுங்க !!!
ஆகா ஆகா செந்தில் - தேடிப் பிடித்து அறிமுகப் படுத்துகிறீர்கள் - நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ...நண்பரே.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅத்தனையும் அற்புத
ReplyDeleteஅறிமுகங்கங்கள் !
செந்தில் அண்ணா நீங்க ரொம்ப நல்லவரு(என்னை மாதிரி). வினவு மேல் கோவம் இருந்தாலும் அறிமுகப் படுத்தி இருக்கீங்களே.
ReplyDeleteஅழியாச்சுடர்கள் அறிமுகத்துக்கு நன்றி செந்தில்
ReplyDelete- நாகர்கோவில் ராம்
உங்களிடம் இம்மாதரியான அறிமுகங்களை நான் எதிர்பார்த்தேன். தொடருங்கள் நண்பரே. அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஎனக்கு தெரியாத அறிமுகம் அண்ணா பார்கிறேன்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்; நன்றி செந்தில்.
ReplyDeleteசில புது வரவு அதையும் பாத்துடுவோம் தல
ReplyDeleteசில அறிமுகங்கள் எனக்கும் புதிது பார்த்து விடுவோம்..
ReplyDeleteபல மாதங்கள் கழித்து வலையுலகம் வந்திருப்பதால் அனைவரும் புதிய அறிமுகம் தான் எமக்கு
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!
அற்புத
ReplyDeleteஅறிமுகங்கங்கள் !
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். செந்தில்.. மோட்டிவேசனலான.. உளறுவாயன் போன்ற தளங்கள் எனக்கு புதுசு....
ReplyDeleteமிக்க நன்றி செந்தில்!
அறிமுகங்களுக்கு நன்றி !!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :-)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி செந்தில். இந்த தளத்தில் அறிமுகமாவது நான்காவது முறை. ஓன்றே ஒன்று பயந்து கொண்டுருந்தேன். ஆனால் நீங்கள் அவரையும் அறிமுகப்படுத்தி விட்டீர்கள். வடை போச்சு. இன்னும் எட்டு நாள் கழித்துப் பாருங்கள்.
ReplyDelete