இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். நேற்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இன்றைய இரண்டாம் நாளைத் துவக்குகிறேன். மனிதன் என்ற உயிரினத்தைப் பொறுத்த வரை உணர்வு என்பது சாதி, மதம், தேசம், மொழி போன்றவற்றையே முன்னிருத்துகிறது. இவற்றையெல்லாம் கடந்த மனிதம் என்ற உணர்வு அற்றுப் போனவர்களாகவே இச்சமுதாயத்தில் நாம் திரிகிறோம். எது நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு மூன்று வேலை உணவும் இன்ன பிற இத்யாதிகளும் கிடைக்கின்றன.
இன்னொருவனுக்கு கிடைக்காவிடில் அதற்கு நானா பொறுப்ப்பு? என வினா எழுப்பி தப்பிச் செல்பவர்கள் தான் இவ்வுலகில் பெரும்பான்மையினர். இன்னொரு பிரிவினர் இன்னொருவனுக்குக் கிடைக்காத போது கொடுத்து உதவுபவர்கள். இவைத் தற்காலிகமானது. அதை வைத்து இவர்கள் செய்தது சரி என நியாப் படுத்த முடியாது.
அதில் மனிதமிருந்தாலும் சில வினாடிகளில் மறைந்து போகும் ஒன்றாகவே இருக்கிறது. அவனுக்கு ஏன் கிடைக்கவில்லை? என மூலமறிந்து எதிர்க்க இன்று யாருமில்லை. இதுவரை என்னைக் கவர்ந்த சிறுகதைகள் உணர்த்திய உணர்வுகளை உங்களிடம் இன்று பகிரவிருக்கிறேன்.
"மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? " என மனிதத்தியும் மனிதனின் வாழ்க்கையில் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டிய மரங்களைப்பற்றியும் இவர் எழுதியிருக்கும் பதிவு.
"சமூகத்தில் புழக்கத்திலிருக்கும் மூட நம்பிக்கையான பலி கொடுத்தலை மையப் படுத்தி இவர் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ஏனோ என்னை பாதித்தது."
நான் அடிக்கடி சொல்லும் விடயம் தான் கடவுள் என்பது மனிதனுக்குள்ளான ஒரு குணமாக, மனிதமாக இருக்க வேண்டுமே தவிற வேறெவ்வாறும் இருக்கக் கூடாது. அந்த வகையில் இவர் கடவுளை எங்கு கண்டிருக்கிறார் பாருங்கள்.
இன்றைய பணம் தேடும் உலகில் குழந்தைகளின் மனமும், நிலையும் எவ்வாறு இருக்கின்றன? அவர்களின் எதிர் பார்ப்புகள் எப்படிப் பட்டவை என்பதை மீன்களோடு ஒப்பிட்டு அழகாய் விளக்குகிறார் தோழி அன்புடன் அருணா.
கவிதைகள் கலந்து ஒரு பெண்ணிடம் வயப்பட்டு காதலுறுவதை ஒரு அழகான புணைவாகக் கொடுத்திருக்கிறார் "ஆழிமழை" என்ற தளத்தில் எழுதி வரும் வேலா.
ஆசிரியர்களின் வக்கிரங்களுக்க்கு பல குழந்தைகள் பலியாகி கொண்டிருப்பது இப்போதெல்லாம் தினசரி செய்தியாகிப் போயிருக்கிறது. மரியாதைக்குரிய ஒரு ஆசிரியரின் செயல் குறித்து நண்பர் சே. குமார் எழுதிய சிறுகதைதான் இது.
இது ஒரு குட்டிக் கதைதான் ஆனால் ஒரு நல்ல கதை காசு வந்தால் பாசமெல்லாம் தூசாகும். அததப் புரிந்து கொள்ளும் நாள் நிச்சயம் வரும் என்பதை தந்தையையும், மகனையும் வைத்து அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர் பூங்குன்றன்.
வானம்பாடிகள் ஐயா. பதிவுலகில் மரியாதைக்குரிய நபர் இவர். இவரின் இந்த சிறுகதை ஒரு பாட்டியையும், வரதட்சினை பிரச்சினையையும் அழகாய் முன் வைக்கிறது. படித்துப் பாருங்கள்.
நண்பர் ஊடகன் எழுதிய ஒரு அழகிய காதல் கதை. ஆனால் இக்கதையின் கதாநாயகன் வித்தியாசமானவன். இறுதியில் தன் காதலி த்ன்னாலேயே இறந்து போகிறாள் என்பதாய் முடியும் கதை. இவர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை. போபால் பற்றி எழுதுமாறு கேட்டிருக்கிறேன். நிச்சயம் எழுதுகிறேன் என சொல்லியிருக்கிறார்.
இங்கு நான் அறிமுகப் படுத்தியிருக்கும் சிறுகதைகளை எழுதியவர்களும் போபால் குறித்து நிச்சயம் எழுத முன் வருவார்கள் அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.
நன்றி
புலவன் புலிகேசி
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅன்பின் புலவரே புலிகேசி
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை
இன்றிரவுக்குள் படித்து விடுகிறேன் அனைத்தையும்.
நல்ல பதிவர்களின் இடுகைகள்
நல்வாழ்த்துகள் புலிகேசி
நட்புடன் சீனா
இரண்டு பேர்கள் மட்டுமே புதியவர்கள். இணைத்துக் கொண்டேன். அகல்விளக்கு ரொம்பவே கவர்ந்தார்.
ReplyDeleteதொடருங்கள்.
படிக்காத சிறுகதைகள் இன்றே படிக்கிறேன்
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி அண்ணே
வித்தியாசமான பகிர்வு... உங்களுக்கும்.. நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!
ReplyDeleteஅனைவரும் பாராட்ட பட வேண்டியவர்கள் தான் நல்ல தேர்வு நண்பா
ReplyDeleteமுதல் நாளில் வாழ்த்ஹ்டு தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும், இன்றும் தொடரும் அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteநல்ல அறிமுகம் நண்பா..
ReplyDeleteஅக்கரையான பதிவர்களை அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்..
வலைச்சரம் அறிமுகப் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒவ்வொரு கதையாக படிக்க வேண்டும். நல்ல அறிமுகம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅறிமுகபடுத்தியவர்க்கும் அறிமுகபடுத்தப்பட்டவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDelete//மழையாய் பொழிந்திடும் காதல்.-ஆழிமழை//
ReplyDeleteஇதுவரை நான் செல்லாத வலைதளம்...மிக்க நன்றி அறிமுகத்திற்கு...
அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம்....
ReplyDeleteவித்தியாசமான தொகுப்பு. அனைத்திலும் மனித நேயம், நல்லுணர்வுகள் முக்கியமாக கருதப்பட்ட பதிவுகள் - வாழ்த்துக்கள் - சித்திரகுப்தன்
ReplyDeleteஅன்பின் புலிகேசி
ReplyDeleteகாலையில் கூறியபடி - அனைத்து இடுகைகளுக்கும் சென்று, படித்து, மகிழ்ந்து, மறுமொழி இட்டு - வந்துட்டேனே !
நல்வாழ்த்துகள் புலிகேசி
நட்புடன் சீனா
யாராச்சும் சே.குமாரோட மின்னஞ்சல் முகவரி தர இயலுமா
நல்வாழ்த்துக்கள் புலிகேசி...
ReplyDeleteவலைச்சரத்தில் எனது சிறுகதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
வலைச்சரத்தில் நான் அறிமுகமாவது இது நான் காவது முறை என்று நினைக்கிறேன்.
உங்களை கவர்ந்த எனது எழுத்துக்களை சீனா ஐயா உடனே வாசித்து பின்னூட்டம் இட்டுள்ளது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
நீங்கள் அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
வளரும் எங்களை வளர்க்கும் வேறாக வலைச்சரமும் எங்களை கைபிடித்து நடை பழகிக் கொடுக்கும் நட்பாக உங்களைப் போன்றோரும் இருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது.
உங்களது அறிமுகப்படலம் தொடரட்டும்.
நல்வாழ்த்துக்களுடன்,
சே.குமார்
http://www.vayalaan.blogspot.com
நல்ல அறிமுகம்... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம்... வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரின் பதிவுகளும் அருமை . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்
ReplyDeleteவலைச்சரத்தில் எனது சிறுகதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி புலிகேசி!.
ReplyDelete