Sunday, August 8, 2010

நல்வாழ்த்துகள் ஷங்கர் = வருக ! வருக பின்னோக்கி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பலா பட்டறை ஷங்கர், தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த 7 நாட்களில் 7 இடுகைகள் இட்டு ஏறத்தாழ 240 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ பல்வேறு தலைப்புகளில் அருமையான இடுகைகள் அளிப்பவர்கள். ஏறத்தாழ 35 இடுகைகள் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அததனையும் முத்தான இடுகைகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள்.

வாரத்தின் இறுதி நாட்களில், இவரது தந்தையார் உடல் நலம் குன்றியது சற்றே இவரது பணியினை முடக்கியது. இருப்பினும் அயராது கடமையைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். இவரது தந்தை பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அருமை நண்பர் பலா பட்டறை ஷங்கர் அவர்களை வாழத்தி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறோம்

நல்வாழ்த்துகள் ஷங்கர்

அடுத்து நாளி துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பின்னோக்கி. இவர் திருச்சிக்கு அருகில் உள்ள கரூரில் பிறந்தவர். 35 வயதான இளைஞர். தந்தையின் அரசுப் பணியின் இட மாற்றங்களீனால் - பல்வேறு ஊர்களில் படித்தவர். கணினிப் பொறியியலாளர். தற்சமயம் சென்னையில் பணி புரிகிறார். மணமாகி ஆறு வயதில் உள்ள ஒரு மகனுக்குத் தந்தை. 122 பதிவர்கள் பின் தொடர 112 இடுகைகள் இட்டிருக்கிறார். பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.

நண்பர் பின்னோக்கியினை வருக ! வருக ! இடுகைகளை அறிமுகப் படுத்துக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் பின்னோக்கி
நட்புடன் சீனா

7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சங்கருக்கு பாராட்டும்.. பின்னோக்கி, முன்னோக்கி வர வாழ்த்தும்..

    ReplyDelete
  3. பாராட்டுக்கள் சங்கர்.வாழ்த்துக்கள் பின்னோக்கி.

    ReplyDelete
  4. வாருங்கள் பின்னோக்கி.... சிறப்பாக செய்ய வாழ்த்துகள்


    சங்கருக்கு நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  5. ஷங்கருக்கு வாழ்த்துகள். வாழ்த்துக்கள் பின்னோக்கி..

    ReplyDelete
  6. சீனா அய்யாவிற்கும், நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    பின்னோக்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.:)

    ReplyDelete
  7. 122 பதிவர்கள் பின் தொடர 112 இடுகைகள் இட்டிருக்கிறார்

    ராம்குமார் இந்த இரண்டு எண்களில் ஒரு மந்திர வித்தை ஏதோ ஒன்று தெரிகிறதே?

    ReplyDelete