அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பின்னோக்கி அவர்கள், ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில், முழு ஈடுபாட்டுடன், நிறைவேற்றி. மன மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் இவ்வாரத்தின் ஏழு நாட்களிலும், நாளுக்கு ஒன்றாக, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 120 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் அறிமுகப் படுத்திய துறைவாரியான இடுகைகள் அனைத்துமே அருமையானவை. தேடிப் பிடித்து, படித்து, ரசித்து, சுட்டிகளுடன் அறிமுகப் படுத்தி உள்ளார். பெரும்பாலான அறிமுகங்கள் இது வரை அறிமுகப் படுத்தப் படாத அறிமுகங்களே ! நல்லதொரு பணியினை, நல்ல விதமாக நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறும் நண்பரை நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினரின் சார்பில் பெருமை அடைகிறேன்.
நாளை 16 ஆகஸ்டு 2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சே.குமார் அவர்கள். இவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் எழுதி வந்தாலும், தற்பொழுது சில காரணங்களினால் ஒரே பதிவினில் இடுகைகள் இட்டு வருகிறார். இவர் தேவகோட்டையைச் சார்ந்தவர். எங்கள் மதுரையில் பெண்ணெடுத்தவர். கணினித் துறையில் பட்டம் பெற்று - அபுதாபியில் கணினித்துறையில் பணி புரிபவர். இவரை வருக ! வருக ! அறிமுகப்படுத்துக பதிவர்களை ! இடுகைகளை ! என நல்வாழ்த்துகள் கூறி வரவேற்பதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றிகள் சீனா சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சே.குமார். வருக. வெல்க
நல்வாழ்த்துக்கள் பின்னோக்கி.
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி ஐயா...
நாளை காலை முதல் சரம் தொடுக்கிறேன்.
நன்றி.
உங்கள் மதுரை எங்கள் காரைக்குடி அருகே தேவகோட்டையா?
ReplyDeleteஆகா அடுத்த குமாரு வாங்க வாங்க.
வாழ்த்துக்கள் குமார்.
ReplyDeleteதாங்கள் செய்துவருவது மிகப்பெரிய, பெருந்தன்மையான பணி. அதற்குத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! நண்பர் சே.குமார் இன்னும் பல பொக்கிஷங்களைத் தருவார் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஸ்ரீ....