நண்பர்களே இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். முதல் நாள் நீங்கள் கொடுத்த பின் ஊட்டத்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.
தமிழ்...
நம் மொழி... அது செம்மொழி..!
இன்று நாமெல்லாம் வலை என்னும் வசந்தத்திற்குள் தமிழால் உறவுகளாய் கட்டுண்டு கிடக்கிறோம். நம் தமிழ் மொழியில் எத்தனையோ அறிஞர்களை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் தமிழ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் என்றால் அது மிகையாகாது. பதிவர் அறிமுகத்துக்கு முன்னர் அவர் பற்றி சில வரிகள்.
(தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர்)
தமிழ் தாத்தா உ.வே.சா. (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர்) அவர்கள் 1855 பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் திரு. வேங்கட சுப்பையர் என்னும் இசைக்கலைஞருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதில் தமிழையும் இசையையும் கற்றுத்தேர்ந்த உ.வே.சா. அவர்கள் தனது 17வது வயதில் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் ஆசிரியராய் இருந்த 'மகாவித்வான்' தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரத்திடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்று தமிழறிஞர் ஆனார்.
கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராக தனது தமிழ்ப் பணியைத் துவங்கிய உ.வே.சா அவர்கள் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தார். தனது வாழ்நாளின் இறுதிவரை ஓலைச்சுவடிகளை தேடிப்பிடித்து அவற்றை பகுப்பாய்ந்து அச்சேற்றினார். செய்யுள், புராணங்கள் என ஓலைச்சுவடிகளாய் இருந்த தொன்னூறுக்கும் மேற்பட்ட இலக்கியங்களை புத்தகமாக்கியவர் நம் தமிழ்தாத்த அவர்கள். இதற்காக இவர் வாழ்நாளில் பெரும்பகுதியை ஓலைச்சுவடி தேடி ஊர் ஊராக அலைவதிலேயே செலவிட்டார்.
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்றவை உ.வே.சா. பதிப்பித்த நூல்களில் முக்கியனவை.
தமிழே மூச்சாக வாழ்ந்த தமிழ்தாத்தா உ.வே.சா. அவர்கள் 1942, ஏப்ரல் 28ல் தனது 84வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
சரி நண்பர்களே... தமிழுக்காக வாழ்ந்த பல முத்துக்களில் ஒரு முத்துக் குறித்து பார்ததோம். இனி வலைப்பூ ஆரம்பித்து தனது எண்ணங்களை பிரதிபலிப்போர் மத்தியில் தமிழுக்காக வலைப்பூ வைத்திருக்கும் நண்பர்கள் சிலரைப்பற்றி இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன். குறிப்பாக நான் பகிரும் நண்பர்களின் ஏதாவது ஒரு பகிர்வை மட்டும் பகிராமல் அவர்களது வலைக்கு இணைப்பு கொடுக்கிறேன். வலைக்கு சென்று வாசியுங்கள்.
'இலக்கிய சமூகத் தேடல்களின் பயணத்தில் எழுத்தும் வாசிப்பும் இருகண்கள்' என்று சொல்லும் முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் "சங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை. சங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்" என்று தமிழ் மீதான தனது தீராக் காதலை வெளிப்படுத்துகிறார். இவரைப் பற்றி வலைப்பதிவில் பலமுறை நண்பர்கள் பகிர்ந்திருக்கலாம். தமிழ் என்று வரும்போது இவரை நினைக்காமலிருக்க முடியவில்லை.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
'தமிழ் மொழியின், தமிழரின் பண்பாட்டு வேர்களைத்தேடும்........ இலக்கிய வலைப்பதிவு.' என்று கூறும் திருச்செங்கோடு கே.எஸ். ஆர். கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் இரா.குணசீலன் "இலக்கியங்கள் சுட்டும் வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கி தம்வாழ்வில் பயன்படுத்தும் போது….ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவும்!" என்கிறார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
'அறிவுயாவையும் பயிற்சியால் வெல்லலாம்' என்று சொல்லும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்பனா சேக்கிழார் அவர்கள் தனது ஏறுதழுவுதல் என்ற இடுகையில் "சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது ஏறு தழுவுதலில் முல்லை நிலத்து வாழ்ந்த ஆயர் மரபில் வந்த இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளமையைக் காணலாம்.இலக்கண நூல்களும் முல்லை நில மக்களின் தொழில்களுல் ஒன்றாக ஏறுதழுவுதலைக் குறிப்பிட்டுள்ளன." என்கிறார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
பத்ரி சேஷாத்ரி என்ற தனது பெயரையே வலைப்பூவுக்கு வைத்திருக்கும் இவர் தமிழ் சம்பந்தமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். கல்வெட்டுச் செய்திகளில் நாகபட்டினம் தொடர்பான விபரங்களை அருமையான பதிவாக இவர் தந்துள்ளார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
ஸியேஸ் வித் ஜனா என்ற தளத்தின் சொந்தக்காரர் ஜனா, தமிழ் பக்தி மொழி என்பது தவறு உணர்வுகளின் மொழி என்று சொல்லுங்கள் என்கிறார். மேலும் அனைத்துத் துறைகளிலும் தேடல் உள்ளவன் என்று சொல்லுவதில் பெருமை கொள்ளவும் செய்கிறார் இந்த தமிழ்க்காதலர்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
கேவலம் ஒரு பெண்ணுக்காக சென்னை செந்தமிழ் மறந்தேன் என்கிறார்களே இவர்கள் தமிழர்களா என்று வருத்தப்படுகிறார் எண்ணங்களும் எழுத்துக்களும் தமிழ்தான் என்று சொல்லும் நாகர்கோவிலில் பிறந்த தமிழன் எட்வின், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்..ஆமாம்; இல்லையென்று சொல்லவில்லை அதோடு வந்த மொழியையும் வாழ வைக்கும் எங்கள் தமிழகம்...இது எப்படி இருக்கு? என்று கேட்கிறார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
இயன்றவரை தமிழினத்திற்காக உழைப்பது என்று சொல்லும் அரியாங்குப்பம் சீ.பிரபாகரன், உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, என்ற எண்கள் தமிழ் எண்களே என்று அடித்துச் சொல்கிறார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
செந்தமிழும் நா(ள்) பழக்கம் என்று சொல்லும் சிங்கப்பூர் கோவி.கண்ணன் "காலம்... எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும்" என்பதோடு நின்றுவிடாமல் பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதால் தமிழ் வாழ்ந்துவிடுமா? இல்லை வளர்ந்துவிடுமா? என்றும் கேட்கிறார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. என்று சொல்லும் பழூர் கார்த்தி, தனது பழூரானின் பக்கத்தில் தூய தமிழ் சொற்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று கேட்கிறார். அவரது கேள்வி நியாயம்தானே?
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
******
'வீதியில் இறங்காமல் விடியாது எதுவும்' என்று சொல்லும் 'தமிழ் வீதி' ச.தமிழ்ச்செல்வன், மெல்லச் சாகும் மொழிகள் என்னும் இடுகையில் தமிழ் அழிந்து விடவில்லை.வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் பாரதியும் உ.வே.சா.வும் பேசிய அதே நம்பிக்கையான தொனியில் நம்மால் இன்று பேச முடியுமா? என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
இவரது பதிவுகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
நண்பர்களே நான் பகிர்ந்த நண்பர்களின் வலைப்பூவிற்கு சென்று படித்து மறவாமல் பின்னூட்டம் இட்டு வாருங்கள். நாளை கவி(தை) ஊர்வலத்தில் சந்திக்கலாம்.
நட்புடன்
சே.குமார்.
சோதனை மறுமொழி.
ReplyDeleteமுதல் ஓட்டு நான் தான்! முதல் பின்னூட்டமும்!
ReplyDeleteசெந்தமிழ்ப் பதிவா!
ReplyDeleteபடித்துவிட்டு வருகிறேன்!
ReplyDeleteதிரு சே.குமார்
ReplyDeleteமிக்க நன்றி.
அன்பின் குமார்
ReplyDeleteஅருமையான் இடுகை - நற்றமிழ்ப் பூக்களை நறுமணத்துடன் அறிமுகப் படுத்திய செயல் நன்று - ஏற்கனவே படித்தது என்றாலும் மறு படியும் சென்று படிக்கத் தூண்டும் அறிமுகங்கள்
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் குமார்.. :-))
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் குமார்.. பகிர்வுகள் அருமை.. என் அம்மா சுசிலாம்மாவும் இருக்காங்க.. நன்றீ
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
விஜய்
அருமையான அறிமுகங்கள். வாழ்க தமிழ்!
ReplyDeleteசெந்தமிழ் பதிவுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
ReplyDeleteஅருமையான அறிமுகம்
ReplyDeleteபல தமிழ் தளங்களும் நண்பர் ஜோதிஜி மற்றும் பிறர் அறிமுகப்படுத்தியவைதான் என்றாலும் தமிழுக்கு தமிழ் தாத்தா உவேசா வைப்பற்றி பல வரிகளுடன் துவக்கிய விதத்தால் இன்றைய தமிழ் அறிமுகம் அனைத்தும் நல்ல வாசனையாக இருந்தது, தொடர்கிறேன் வாழ்த்துக்களுடன்
ReplyDeleteமிக்க நன்றி.நல்ல முயற்சி.பாராட்டுக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்க தமிழ்... வளர்க தமிழ்.
ReplyDeleteஅன்பின் சீனா ஐயா,
ReplyDeleteதமிழ் தளங்களை தேடியதில் கிடைத்த தளங்கள் கிடைத்தவை இவைதான். ஏற்கனவே அறிமுகமானவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நினைப்புடனே பதிவிட்டேன். அடுத்த அறிமுகங்களில் புதியவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
வாங்க சம்பத்...
ReplyDeleteஉண்மைதான் கவிஞர்கள் கிடைக்கும் அளவிற்கு தமிழ் பதிவுகளை மட்டும் வெளியிடுவோர் கிடைக்கவில்லை. தமிழ் பேராசிரியர்கள் மட்டுமே தமிழ் எழுதுவது போல் எனக்குத் தோன்றுகிறது.
வாங்க தேவன் மாயம்...
ReplyDeleteவாங்க கோவி. கண்ணன்...
வாங்க ஆனந்தி...
வாங்க வித்யா...
வாங்க தேனம்மை அக்கா...
வாங்க விஜய்...
வாங்க் சித்ரா மேடம்...
வாங்க செந்தில்...
வாங்க மேனகா மேடம்...
வாங்க சக்தி...
வாங்க தமிழ்ச்செல்வன்...
வாங்க அன்பரசன்...
அனைவருக்கும் நன்றிகள்.
என் பதிவைச் சுட்டிய உங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDeleteஎனது எழுத்துக்களையும் மதித்து சுட்டி அளித்தமைக்கு நன்றிங்க குமார்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.. அனைவரையும் சென்று படிக்கிறேன்.. வாழ்த்துகள் குமார்.
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள். சிலர் ஏற்கனவே பாரிச்சயமானவர்கள். மற்றவர்களையும் படிக்க வேண்டும்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவணக்கம் குமார் வாழ்த்துகள். வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நண்பரே.
ReplyDeleteதங்கள் ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.
நல்ல தமிழ்ப்பதிவுகளுக்கு மீண்டும் செல்வதற்குத் தூண்டிய நண்பருக்கு மிக நன்றிகள்!
ReplyDeleteபல பதிவர்களை எனக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteவெங்கட்.
வாங்க சுசிலாம்மா...
ReplyDeleteவாங்க எட்வின்...
வாங்க ஸ்டார்ஜன்...
வாங்க சிநேகிதன் அக்பர்....
வாங்க சின்ன அம்மணி மேடம்...
வாங்க முனைவர் கல்பனா மேடம்...
வாங்க முனைவர் குணசீலன்...
வாங்க அண்ணாமலை...
வாங்க வெங்கட் நாகராஜ்...
உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
எம்.ஏ.சுசீலா எனக்கு புதியவர். கண்டிப்பாக படிக்கவேண்டும்.
ReplyDeleteஎம்.ஏ.சுசீலா எனக்கு புதியவர். கண்டிப்பாக படிக்கவேண்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் குமார்..
ReplyDeleteவாங்க பின்னோக்கி...
ReplyDeleteவாங்க சரவணன்...
உங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
தாங்கள் ‘அறிமுகம்’ செய்வதால், பதிவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி.