Saturday, August 28, 2010

சிக்கு இல்லாத வரிகள்

வார்த்தைகளை பிசைந்து பிசைந்து வாசிப்பவர்களை சிக்கெடுக்க விடாமல் எழுதப்படும் கவிதைகள் வாசிக்கும் போது இதயத்தின் மையத்தில் உட்கார்ந்துகொள்ளும்.

அள்ளிச் சுவைக்கும் போது தித்தித்தாலும், சுவை நீர்த்துப்போன நேரங்களில் பள்ளிடுக்களில் இருந்து நாவில் உதிர்ந்து சின்னதாய் சுவையூடுவது போல், அவ்வப்போது நினைவுகளில் வந்து போய்க் கொண்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதும், வாசித்த பின் சுவைப்பதும் நிறைவான ஒன்று.

சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து
இனிக்க இனிக்க கவிதையெழுதும் ராஜா சந்திரசேகர் அவர்களின்

ராஜா சந்திர சேகரின் கவிதைகள்
எப்போழுதுமே என்னுடைய வாசிப்பின் முதல் வரிசையில் இருப்பவை

அனுபவ சித்தனின் குறிப்புகள் என்று தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் சிந்தனையின் எல்லைகளை நீட்டிக்கொண்டேயிருப்பவை.

அவரே பென்சில் நதி என்ற வலைப்பூவிலும் குறுங்கவிதைகளை தொடர்ந்து படைத்துக்கொண்டிருக்கிறார்.

மிதந்தபடி செல்லும் இசையை வாசித்துவிட்டு, நீண்ட நேரம் பிடித்தது கொஞ்சம் நகர.

00000

வலைப்பூ பெயரையே காகித ஓடம் என கவிதைத் தனமாக கொண்டு எழுதி வரும் பதிவர் பத்மாவின் கவிதைகள் குறிப்பிடத் தகுந்த வாசிப்புக்கு உரியவை.

அம்மா கவிதை வாசிக்கும் போது மனது முழுதும் வலியை நிரப்பிவிட்டுப்போகும் என்பதில் மறுப்பில்லை



00000

எழுத வந்த சிறிதுகாலத்திற்குள் தன்னை நன்றாக அடையாளப் படுத்திக்கொண்டவர் வேலு

Gee Vee என்ற வலைப்பூவில் கவிதைகளையும், பொருள் பொதிந்த சிந்தனை நிரம்பிய எழுத்துக்களையும் சீரான இடைவெளியில் அழகுற படைத்து வருகிறார்.

வக்ரம் கவிதை வக்ரங்களை மிக இயல்பாக அடையாளமிடுகிறது

000000

11 comments:

  1. எல்லாரையும் படிக்கிறேன். நன்றி:)

    ReplyDelete
  2. //சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து
    இனிக்க இனிக்க கவிதையெழுதும்//

    கவிதையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதையான அறிமுகங்கள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி கதிர் சார்

    வசி்ஸ்ட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எத்தனை பேருக்கு வாய்க்கும்

    மீ்ண்டும் என் நன்றிகள்

    ReplyDelete
  6. அறிமுகங்களை அள்ளி தந்திருக்கின்றீர்கள். எல்லா வலைபக்கங்களையும் பார்கின்றேன். நன்றி!

    ReplyDelete
  7. நானா ? நம்ப முடியவில்லை ...
    மிக்க நன்றி சார் .

    ReplyDelete
  8. அன்பு கதிர் உங்கள் கவனிப்பிற்குள் என் கவிதைகள் வந்திருப்பது குறித்து சந்தோஷம்.
    அன்புடன்
    ராஜா சந்திரசேகர்

    ReplyDelete
  9. பென்சில் நதியைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. எல்லோரையும் சந்தித்து ஓட்டும் போட்டாகி விட்டது. நான் தான் சபைக்கு புதிது. அறிமுகப் படுத்தப் பட்டவர்கள் அனைவரும் பதிவுலகில் மூத்தவர்கள்

    ReplyDelete
  11. அனைவரும் என் வாசிப்பிலும் உள்ளவர்கள்... நல்ல பகிர்வு...

    ReplyDelete