ஹி...ஹி... மறுபடியும் நான்தானுங்க! ஒவ்வொருத்தர் ஒரே நாளிலேயே பல பதிவுகள் போடும்போது இவர் மட்டும் ஒரு பதிவு போடறதுக்கே ஏன் இப்படி கஷ்டப்படராருன்னு யோசிக்கிறீங்களா? அதுதான் புரியாத புதிர்.
ஓகே, இன்றைய பதிவு புதிர்கள் பற்றியது. பொதுவாகவே, இந்த உலகமே பல ஆச்சரியங்களை தன்னுள் கொண்டதுதான். பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைத்த பாடில்லை. அதனால் தானோ என்னவோ, பலர் புதிர்களையும் அதன் விடைகளையும் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் புதிர்கள் பற்றி யாரெல்லாம் பதிவிடுகிறார்கள் என்று தேடியதில் சிக்கியவர்கள் விவரம் இதோ:
யோசிங்க-ன்னு ஒரு ப்ளாக். அதில எத்தனை புதிர்கள்-னு இந்தப் பக்கத்துல பாத்துக்குங்க!
கண்மணி
இவங்க ரொம்ப அருமையா புதிர்கள் போடறாங்க. படங்களை வைத்துப் புதிர் இப்படின்னா, ட்ரூடுல்ஸ்-னு ஒண்ணு சொல்றாங்க, சூப்பர்!
ராம்சுரேஷ்
இலவசம்-ன்ற வலைப்பூவில குறுக்கெழுத்து புதிர் படித்தேன். அருமை.
எங்கள் ப்ளாக்
இந்த வலைப்பூவில பலவகைப் புதிர்களையும் படிக்கலாம். குறுக்கெழுத்துப் புதிர், சினிமா புதிர் ரெண்டுமே நல்லா இருக்குது, படிச்சுப் பாருங்க!
மாதவன்
இவரோட இந்தப் புதிர் அறிவுபூர்வமா யோசிக்கிறவங்களுக்குத்தான் புரியும். (என்னது, எனக்கு புரியுதாவா? அவ்......!) இந்தப் புதிருக்கு விடை இங்க இருக்கு!இவரும் படப் புதிர் எழுதியிருக்கார்.
எல்லாம் சரி, நானும் புதிர் பத்தி ரெண்டு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க!
புதிர் ஒன்று
புதிர் இரண்டு,
என்னைப் பத்திகூட எழுதிட்டீங்களா நன்றி..
ReplyDeleteஎங்கள் ப்ளாக் தவிர அனைத்தும் எனக்கு புதிது. எல்லா புதிர்களும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை; தொடருங்கள்!
ReplyDeleteஅன்பின் பெசொவி
ReplyDeleteஇன்னிக்கு புதிர் பத்தின இடுகையா
எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்
சரியா
நல்வாழ்த்துகள் பெசொவி
நட்புடன் சீனா
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteகலக்குங்க..
ReplyDeleteஎல்லாமே எனக்கு புதுசு..
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை, எங்கள் அறிமுகத்துக்கு...!
ReplyDeleteBest wishes!!!! :-)
ReplyDeleteபெசோவி தாமதாக வாழ்த்துகள் சொல்கிறேன். முடிந்த வரைக்கும் தொடர்ந்து படிக்கிறேன்மா.
ReplyDeleteஉங்கள் பெயரே ஒரு புதிர்; அதை எப்போது விடுவிக்க போகிறீர்கள்?
ReplyDeleteநன்றி
ReplyDelete