Thursday, September 9, 2010

கதை சொல்லியும் கைத்தொழிலும்

வாழ்நாள் முழுதும் குழந்தையாகவே இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும், பணத்தை, பாசத்தை, துரத்தி துரத்தி ஓய்ந்து போவதற்கு பதில். என் நினைவு தெரிந்து நிறைய பேர் எனக்கு கதை சொல்லிருக்காங்க, என் அப்பச்சி, ஆத்தா, தாத்தா, ம்ம்ம் நானே ரொம்ப நல்லா கதை சொல்லுவேன், ஒரு கதையை மாதக்கணக்கில் விளம்பர இடைவெளியுடன். என் குழந்தைகளும் கதை சொல்லுவதிலும் கேட்பதிலும் ஆர்வமுடையவர்கள். இப்போது இருக்கும் நிறைய குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பே அமையாமல் போகிறது, அவசர உலகில் இழக்கும் நிறைய விசயங்களில் முக்கியமானது இந்த குழந்தைப்பருவம் தொலைந்து போவது. நான் விளையாடிய தாயம், கில்லி, பனிரெண்டாம் கல், நொண்டி, பூப்பறிக்க போகும் விளையாட்டுகள் இப்போது நகர் புறங்களில் பார்க்கவே இல்லை. குழந்தைகள் தரையில் அமர்வதை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இன்று குழந்தைகளுக்கான சில தளங்களை பார்க்கலாம், இவற்றில் பெரும்பான்மை நீங்கள் அறிந்திருக்கலாம்.

சிறு வயதில் எல்லாமே சந்தோசம்தான், பார்க்கும் யாவுமே மனதில் பதியும் வயதில் பாட்டு பதியாதா? கற்றலின் மிகச்சிறந்த வழி பாட்டுதான். பரஞ்சோதி அவர்களின் இந்த இரு வலைப்பூக்களும் குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் என்று மிக அருமையான தொகுப்பு. சிறுவர்பாடல் , சிறுவர்கதை
படித்து உங்கள் கருத்தை அங்கேயும் முடிந்தால் பதியுங்கள்.

சின்ன வயதில் எப்பவும் என் ஆத்தா மடியில் படுத்து கதை கேப்பேன், இப்போது நினைத்தாலும் அந்த மிருதுவான புடவையும், அதன் வாசமும், முடி கோதும் விரலும் நான் இழந்ததின் வீரியம் சொல்லும், அதே போன்ற
ஒரு பாட்டிகதை இது . நான் சமீபத்தில் ரசித்து படித்த வலைப்பூ இதுதான். ருக்மணி பாட்டியின் கதைகள் இப்போது நானும் காப்பி அடிக்கிறேன்.

குழந்தைகளின் ஆரோக்கியமே நமக்கு நிம்மதி தரும் விசயம், ஒரு சிறு துவளல் கூட மனதை கஷ்டப்படுத்திவிடும். ஆரோக்கிய குழந்தை வளர்ப்பைப்பற்றி அம்மாக்கள் கூறும் அறிவுரை, அனுபவ பாடம், உணவு முறை, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, குறை மாத குழந்தைகள் பராமரிப்பு, பெற்றோர் கடமைகள், குழந்தைகளின் விருப்பங்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விவாதங்கள், எங்க அம்மாக்களின் வலைப்பூ , பேரண்ட்ஸ் க்ளப் ஆகிய இரு வலைப்பூக்களிலும் பகிரப்படுகிறது. அம்மாக்கள் வலைப்பூ அம்மாக்கள் மட்டுமே எழுதுகிறோம், பேரண்ட்ஸ் க்ளப் அப்பாக்களும் எழுதிகிறார்கள். அனுபவ பாடமாக நிறைய பதிவுகள் இருப்பதால் எதேனும் ஒரு கேள்வி எழும்பினால் கூட பதில் உடனே கிடைக்கும்.


கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்வது குழந்தைகளை ரசனை உடையவர்களாக மாற்றும், கைவினைப் பொருட்கள், சிறிய சித்திரம் வரைவது, வர்ணம் தீட்டுவது, என்று எக்கச்சக்க கலைகள் பரந்து விரிந்து உள்ளது. அவற்றில் சிலவற்றை கற்றுத்தரும் வலைப்புக்கள் இது.

தர்ஷினி கற்றுத்தரும் இந்த கைவேலைகள் படங்கள் மூலம் விளக்கப்படுவதால் புரிந்து கொள்ள எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது. பெயிண்டிங்கில் பெரும்பாலான வகைகளை காணலாம், பாட் பெயிண்டிங், காபி, கோன், இலையில் பெயிண்டிங், பேப்பர் ஆர்ட், தஞ்சாவூர் பெயிண்டிங் என்று நிறைய வகைகளை கற்றுக்கொள்ளலாம். கலைகளை கற்பது பொழுது போக்கல்ல, அவை வருங்காலத்தில் மிகப்பெரிய வியாபார சந்தையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். விலை கொடுத்து ஒன்றை வாங்குவதை விட நம் கையால் செய்த பொருளுக்கு மதிப்பு அதிகம் தானே.

நீங்களும் செய்யலாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தொகுப்பு பதிவு, துணிகளில் மணிவேலை, மெஹந்தி, போட்டா ஃப்ரேம் என்று இதில் இல்லாத விசயங்களே இல்லை, குழந்தைகள் கையால் ஒரு வாழ்த்து அட்டை செய்ய வையுங்கள், அது முடிந்ததும் அவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்த்தால் அதற்கு இணை எதுவும் இருக்காது.

என்றும் புதிதாக எதாவது ஒன்று கற்றுக்கொண்டிருந்தால், வாழ்க்கை மிக ரசனையுடன் அமையும் என்பதற்கு மாற்று கருத்து இருக்காது. சின்ன நுணுக்கமான வேலைகள் கற்றுக்கொள்வது குழந்தைகளின் மனரீதியான ஆற்றல், நினைவாற்றல், பொறுமை, அழகுணர்ச்சி, மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் திறன், எல்லாவற்றையும் விட ஒரு திருப்தியான மனநிலை, பொருளாதாரம் கையாளும் திறன் எல்லாவற்றையும் வளர்க்கும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாம். நன்றி

17 comments:

  1. //இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாம்.//

    நம்பிக்கை இல்லன்னா சந்திக்காமயா இருக்க போற.. ..ஏன் பில்டப்.. எழுதினோமா போனோ ம்மான்னு இல்லாம தினமும் சந்தீஈஈஈஈப்போமா ன்னு?!!

    ReplyDelete
  2. ம்ம்க்கும் இங்கயாவது கும்மி அடிக்காம சீரியஸா இருக்கலாம்னா விட மாட்டியே...ஒரு விளம்பரம்...

    ReplyDelete
  3. எனக்கு உண்மையிலயே பயன்படக்கூடிய நிறைய சுட்டிகள் நன்றி :))

    நீங்க எப்பிடி திரும்பினாலும் கவிதாக்கா கேட்ட போடுறாங்களே :)))))

    ReplyDelete
  4. :) கண்ணா அறியாத புள்ளை பாவம் விட்டுடுவோம்

    ReplyDelete
  5. விஜி மேம் அற்புதமான வலைத்தளங்கள்

    நன்றி அறிமுகத்திற்கு!!!!

    ReplyDelete
  6. //கண்ணா அறியாத புள்ளை பாவம் விட்டுடுவோம் //

    பார்றாஆ??

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்லஅறிமுகம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  10. அறிமுகங்கள் எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு!

    இது விளம்பர நோக்குலே எழுதப்பட்டதா?

    கவிதா எனக்கு சொல்லவே இல்லே:)

    சரி, விஜி பதிவு நல்ல முறையிலே வந்திருக்கு!

    ReplyDelete
  11. சந்திப்போமா என்கிற வார்த்தை பிரிச்சனையாகும்ன்னு நான் அப்பவே யோசிச்சேன்:)

    கவிதாவே பிட்ட போட்டுடாங்க:)

    அப்பாடா ஒரு பிரிச்சனை சுமுகமா முடிஞ்சி போச்சு :)

    ReplyDelete
  12. நன்றி சக்தி :)

    நன்றி கவிதா உன் ஆரதவுக்கு :)

    நன்றி சித்ரா :)

    ReplyDelete
  13. நன்றி சரவணனகுமார் :)

    நன்றி மதுரை சரவணன் :)

    நன்றி வாலு :)

    ReplyDelete
  14. நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

    நன்றி ரம்யா :) கவிதாவா.. விடு அவ்வளவு வொர்த் இல்லை :)

    ReplyDelete
  15. நல்ல பதிவு, அறிமுகங்கள்!
    சிரத்தை எடுத்து செஞ்சிருக்கிய!
    நல்லா இருக்கு!
    வாழ்த்துகள்!

    ReplyDelete