Friday, September 17, 2010

வானவில் - ஏழு சுவைகள்



சிறுகதை

மனித நேயம் கலந்து ரிஷபன் எழுதும் சிறுகதைகள் அற்புதமாய் இருக்கின்றன. கதை சொல்லியே எதிர் மறை காரக்டரிலும் வருவதுண்டு. 


கட்டுரை 

ரகு எழுதிய இந்த கட்டுரையை வாசித்து பாருங்கள். எவ்வளவு உழைத்து எழுதி உள்ளார்!  சட்டத்தின் சில இருண்ட பகுதிகளை சொல்லும் கட்டுரை இது !

எழுதாமல் இருப்பவர் 

வெளி நாட்டில் இருக்கும் டுபுக்கு தற்சமயம் அதிகம் எழுதுவதில்லை. இவரது நகைச்சுவை படித்து,  சிரிக்காமல் இருக்க முடியாது. இவரது ஆரம்ப கால கட்டுரைகள் அவசியம் தேடி படித்து சிரிக்க வேண்டியவை.

கவிதை பக்கம்

நெல்லையில் வானொலியில் பணி புரியும் தமயந்தி கவிதை, சிறுகதை, சினிமா விமர்சனம் என கலவையாய் எழுதுகிறார். கவிதைகள் சில மனதை தைக்கும். உதாரணத்திற்கு மரணம் குறித்த கவிதை 

புகை படங்கள்

முரளி குமார் பத்மநாபன்..எஸ். ரா ரசிகர்; கவிதை கட்டுரை என கலக்கினாலும் புகை படங்களுக்கென தனி ப்ளாக் வைத்துள்ளார். எழுத்தை போல படங்களும் இவர் மென்மையான மனதை காட்டுகின்றன.

ஹெல்த் பக்கம்

சங்கவி பல்வேறு உபயோகமான மருத்துவ விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். பழங்கள், காய்கறிகள் இவற்றின் பலன்களை எழுதுகிறார். மிக நல்ல முயற்சி

சினிமா பக்கம் 

சேத்தியா தோப்பு என்ற ப்ளாக் சமீபத்தில் தான் பார்த்தேன்.சினிமா குறித்து எப்போதாவதும் பிற கட்டுரைகள் அதிகமாகவும் எழுதுவது தெரிகிறது. தமிழ் படங்களுக்கு வரி விலக்கு பற்றிய இந்த கட்டுரை சிந்திக்க வேண்டிய விஷயம்
தான் !

***
இப்போதைக்கு விடை கொடுங்கள். மறுபடி நாளை சந்திக்கலாம்.. 

20 comments:

  1. நல்லதொரு அறிமுகங்கள் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எழுசுவை அறிமுகங்கள் நன்று.

    ReplyDelete
  3. அன்பின் மோகன் குமார்

    நல்ல அறிமுகங்கள்

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வானவில் அறிமுகங்கள் அருமை நண்பரே!

    இப்போது எழுதாதவர்களையும் அறிமுகம் செய்கிறீர்கள். அறிந்து கொள்ள சௌகரியமாக. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி டம்பி மேவி
    **
    கலாநேசன் : நன்றி
    ***
    சீனா சார்: வணக்கம். நன்றி
    **
    என்னது நானு யாரா? :நன்றி
    **
    நன்றி பத்மா

    ***

    பதிவு வந்த காலை நேரத்தில், அடுத்த ஓரிரு மணிக்குள் ஐந்து நண்பர்கள் வாசித்து மறு மொழி இட்டது மகிழ்வை தருகிறது. தங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நான் ‘சேத்தியாத்தோப்பு’ தமிழன். தங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. நல்ல அறிமுகம்...

    நன்றி மோகன் சார்.....

    ReplyDelete
  10. மோகன்,
    பல்வேறு அறிமுகங்களுக்கு நன்றி. நிறைய பேரைத் தேடி வாசிப்பதில் மகிழ்ச்சி. 'எழுதாமல் இருப்பவர்' என்ற பட்டம் மிகவும் பிடித்திருக்கிறது. சுத்தப் பொய் என்று சொல்லிவிட முடியாது. இத்தகைய சௌகரியம் 'கவிஞர்',
    'சிறுகதை எழுத்தாளர்','கட்டுரையாளர்' போன்ற பட்டங்களில் கிடையாது :)

    அனுஜன்யா

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. மிக நல்ல அறிமுகங்கள் மோகன் குமார்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  13. சித்ரா
    முரளி குமார்
    தமிழன்
    சங்கவி
    அனுஜன்யா
    அன்பரசன்
    ராமலக்ஷ்மி

    அனைவருக்கும் மிக மிக நன்றி

    ReplyDelete
  14. அன்பின் நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  15. பல நல்ல பதிவர்களை எனக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. நல்ல பயனுள்ளப் ப்திவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. புதிய‌ வேலை கார‌ண‌மாக‌ க‌ட‌ந்த‌ சில‌ வார‌ங்க‌ளில் ப‌திவுலக‌ம் ப‌க்க‌ம் வ‌ர‌முடிய‌வில்லை. இன்றுதான் ப‌திவிட்டுள்ளேன்.


    மிக்க‌ ந‌ன்றி மோக‌ன் :)

    ReplyDelete
  18. நன்றி மோகன்...

    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete