விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!
மருத்துவ பக்கம்
என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது
கட்டுரை
நண்பர் வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்தவர். தற்சமயம் டில்லியில் உள்ளார். டில்லி பற்றி அறிமுக படுத்தி அவர் எழுதும் பதிவுகள் தலை நகரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுபவை..
எழுதாமல் இருப்பவர்
நண்பர் ஆதி மனிதன் அவ்வபோது எழுதி வருபவர். டாக்டர் சொக்கலிங்கம் ஒரு முறை பேசியது பற்றி அவர் எழுதிய பதிவு அருமையானது. நண்பர் ஏனோ தற்போது அதிகம் எழுதுவதில்லை.. ஆதி மனிதன்.. எங்கிருந்தாலும் மீண்டு(ம்) வாங்க ..
ஆன்மீக பக்கம்
வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை சொல்லும் ப்ளாக் இது. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் எளிய முறையில் காண கிடைக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பதிவுகள் சில இங்கு உள்ளன. வாசியுங்கள் ..
புதிர் பக்கம்
அவ்வபோது புதிர் போடுகிறார் மாதவன்.. இந்த புதிரை வாசித்து பாருங்கள்
புத்தக விமர்சனம்
செ. சரவண குமார் நெகிழ்வான எழுத்துக்கு சொந்தக்காரர்.. தான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்து நம்மோடு பகிர்வார்.. அப்படி ஒரு பகிர்வு.. ஜெய மோகன் புத்தகம் குறித்து...
***
இந்த ஏழு நாட்களும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த வலைச்சரம் குழுவிற்கும், குறிப்பாக சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.. ஒரு வாரம் வாசித்த உங்களுக்கும், பின்னூட்டம் இட்ட , வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுவது.. உங்கள் அன்பு நண்பன் .. மோகன் குமார். வணக்கம் !!
அன்பின் மோகன் குமார்
ReplyDeleteஅருமையான முறையில் பணியாற்றி விடை பெறுகிறீர்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள்
அனைத்து அறிமுகங்களும் புதுமையாக - தேர்ந்தெடுக்கப்பட்ட அறிமுகங்கள்
நட்புடன் சீனா
இந்த ஏழு நாட்கள்.. சிறப்பான அறிமுகங்கள்.. பதிவுகள். வாழ்த்துக்கள்!! இதுவரை சென்றிராத சில தளங்களையும் அறிந்தேன், நன்றி.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு வாரமும் குறித்து வைத்து படிக்க வேண்டிய தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி குமார்.
ReplyDeleteவலைச்சரத்தில் எனக்கும் ஒரு அறிமுகம். நன்றி நண்பரே. மற்ற பதிவுகளையும் படித்து விட்டு உங்களுக்கு மடல் எழுதுகிறேன்.
ReplyDeleteவெங்கட்
ஏழு நாட்கள் சென்றதே தெரியவில்லை.
ReplyDeleteபல்வேறு பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
நன்றி சீனா ஐயா; தங்களின் அன்பிற்கும் அழைப்பிற்கும்; இது ஒரு நல்ல + இனிய அனுபவமாக இருந்தது
ReplyDelete**
நன்றி ராம லட்சுமி
**
நன்றி கலா நேசன்.
***
ஜோதிஜி: தங்களின் கமெண்ட் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி
**
வெங்கட் நன்றி விரைவில் டில்லியில் சந்திப்போம் என நினைக்கிறேன்
அமைதி அப்பா: மிக நன்றி
***
மோகன் குமார் அவர்களே!
ReplyDeleteநன்றி நண்பரே! இந்த ஏழு நாட்களும் நல்ல நல்ல பதிவுகளை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்.
குடியை மறக்கடிக்க இயற்கை மருத்துவம் எப்படி பயன்படுகிறது என்று நான் எழுதிய பதிவை பற்றியும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி நண்பரே!
வாழ்க உங்களின் தொண்டு!
நல்ல அறிமுகங்கள். பல நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்றாலும் படித்திராதவையும் படித்தறிந்தேன்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி மோகன்.
ReplyDeleteகடந்த ஒரு வாரமாக பதிவுகளை படிக்க இயல வில்லை மன்னிக்கவும்.
என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப் படித்தியமைக்கு நன்றி. அலுவல் நிமித்தமாக வெளியூர் சென்றதால் இரண்டு நாட்களாக வலைப்பூ பக்கம் செல்ல இயலவில்லை. அப்போதுதான் பார்த்தேன்..
ReplyDeleteஒரு வார காலமாக பல பயனுள்ள பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகம் செய்துள்ளீர்கள். அதற்கும் நன்றி.
சிறப்பான அறீமுகங்களுக்கு நன்றி. நல்ல பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteபடிச்சுட்டு இருக்கேன்...
எல்லா அறிமுகங்களும் அருமை. நன்றி.
ReplyDelete