””செவிக்கில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ.....”” இதுமாதிரி யாரோ சொன்னாங்க ..இருங்க ..இருங்க ..இதை பத்தி கடைசியா சொல்றேன் .. சாப்பாடு ஒரு மனுஷனுக்கு ரொம்ப முக்கியம் ... பசி வந்தால் பத்து இல்லை ஆயிரம் இருந்தாலும் பத்தாது. நமக்கு பேப்பரா முக்கியம் .. நடை பாதை கடைக்கு பத்து போதும் ..இருங்க அடிக்க வராதீங்க ..ஒரு இட்லி ஒரு வடைக்கு போதும் இப்ப உள்ள விலைவாசிக்கு , ஆயிரம் ஸ்டார் ஹோட்டலுக்கு. கூட இப்போ பத்தாது.
உண்னும் உணவை மருந்து மாதிரி சாப்பிடற வரை வியாதி நம்மளை நெருங்காது ஆனா அதே அளவுக்கு அதிகமா சாப்பிட்டா கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆகனும்..தினமும் நாம் சாப்பிடும் அளவு முக்கியமில்லை அதன் சத்து தரம்தான் முக்கியமா இருக்கனும் .குண்டா இருப்பதும் நோய் லிஸ்டில வந்தாச்சு.
சமையல்ன்னு சொன்னா அது நிறைய பேர் இது பெண்களுக்கு மட்டுமேன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க .ஹோட்டல்களில் நூற்றுக்கு 99 பேர் சமையல் ஆண்கள்தான் .ஆனா அதை டேபிள சர்வ் செய்வது பெண்களா இருக்கலாம். வீடுகளில் அப்படியே தலைகீழா இருக்கும் .
இதுல முக்கியமா நாம கவணிக்க வேண்டியது. ஒன்னுதான் அது குடும்பத்தில பெண்கள் செய்யும் சிக்கனமா , சுவையா செய்யும் பக்குவத்துல அவங்க பக்கத்திலே கூட நாம நெருங்க முடியாது..நா ஆம்லட் போட்டா கால் லிட்டராவது எண்னெய் வேனும் . வடை பொறிப்பது மாதிரி இருக்கும் . இதே வீட்டில அழகா சின்னதா ஒரு ஸ்பூனிலேயே ( ஙே..? ) சப்பாத்தி மாதிரி செஞ்சிடுவாங்க . கேட்டாஇப்போ இருக்கிற கொழுப்பு பத்தாதா இன்னும் வேனுமான்னு ஒரு நக்கல் ( அவ்வ்வ்)இது ஆரோக்கியமா..இல்லை கிண்டலான்னே இன்னும் புரியல.
ஓக்கே ..இப்ப வலையில கலக்கும் சமையல் பதிவர்களை பார்க்கலாம்..
சமையல் அட்டகாசங்கள் - என்னுடைய முதல் ஓட்டு இவங்களுக்குதான் ..கிட்டதட்ட ஐந்நூறு விதமான சமைய்ல குறிப்புகள இது வரை குடுத்திருக்காங்க .. யாரும் இது மாதிரி வலையுலகத்தில குடுத்திருக் காங்களான்னு தெரியல.... பேருக்கேத்த அட்டகாசம்..இவங்க செய்யாத ஐட்டமே இல்லை
சமைத்து அசத்தலாம் . குறுகிய காலத்துல வேகமா போய்கிட்டிருகாங்க . சமயத்தில கவிதையும் , கதையும் கூட இலவச இனைப்பா வருது.
CREATIONS - இது விஜிகிச்சனின் சமையல் கூடம் .சிலநேரம் போரடிகாம நமக்கு ஊரையும் சுத்தி காட்டுவாங்க.
என் இனிய இல்லம் - இவங்க சமையல் மட்டும் இல்லாம பெண்களுக்கு தேவையான அத்தனை கலைகளையும் கத்து தரவங்க .என்னுடைய இரண்டாவது ஓட்டு இவங்களுக்கு
SASHIGA எப்பவுமே கிச்சனுக்குள்ளேயே இருப்பங்களோன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் . வித விதமா சமையல் செய்வதில கில்லாடி. என்னுடைய மூனாவது ஓட்டு இவங்களுக்குதான்..
கலைச்சாரல் இவங்களை ஒரு கவிஞரா பார்த்தாலும் அரபி சமையல் வரை கலக்கலா வருது. சமையல் வாசனை ஊரை கூட்டினாலும் , என்னா ஒன்னு பார்ஸல்தான் வரமாட்டேங்குது.. ஹா..ஹா.. :-)
முத்துச்சிதறல் - பலதரப்பட்ட கலைகள் கற்றவர்.. மலாய் குலோப்ஜாமூன் -னை ஒரு ஓவியம் மாதிரி செய்து காட்டியிருக்கிறார் . அமீரகத்தில் நிறைய வருட அனுபவமிக்கவர்.
திவ்யாம்மா முதல்ல கேரட் ஹல்வா குடுத்தவர் கொஞ்ச நாள்ளயே கேரட் இல்லாம குடுத்துட்டார்.. ஆளையே கானோம் ..வாங்க..
தமிழ்குடும்பம் இங்கே போனா நிறைய பேரை பார்க்கலாம்.. சமையல் குறிப்புக்கள் எழுதும் பெண்கள் ஒன்னு கூடும் இடம்
south indian dishes - மலர் விழி எழுதுறாங்க ..ஆனா ஆங்கிலத்துல ..என்னால ஃபைன் , சூப்பர் இப்பிடி பீட்டர் அடிக்க முடியாது .அதானால படிக்கிறதோட சரி..
Priya's Easy N Tasty Recipes - இதுவும் ஆங்கிலத்திலேயே வரும் பதிவுகள்,,ஹி..ஹி.. ஒரு வேண்டுகோள் .தமிழிலும் கூடவே பதிந்தால் நல்லா இருக்கும்
Aparna's Kitchen-- தமிழ்ல எப்படி எழுதனு முன்னு இன்னும் தெரியல அதனால இந்த புத்தம்புது வரவை இந்த தடவை மன்னிச்சிடலாம். ””ஆத்தா வையும் சீக்கிரம் கத்துக்கோங்க “” :-))
நித்து பாலாஇவங்களும் ஆங்கிலத்துலதான் அருமையான குறிப்புக்கள் தராங்க . இவங்க கிட்ட உள்ள சிறப்பு என்னனா .ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஒரு பெண் கலைஞரை பேட்டி எடுத்து அவங்களை அறிமுகப்படுத்துவது.
அம்முவின் சமையல் - நல்லா சமையல் செஞ்சிகிட்டு இருந்தவங்கள மூனுமாசமா கானல ஒருவேளை ஊருக்கு போயிருக்கலாம்
ஆஹா என்ன ருசி... பேரிலேயே ஆஹா என்னே ருசின்னு சொல்ற மாதிரி சின்ன சின்னதா அழகா சொல்லி தறாங்க..நீங்களே பாருங்களேன்.
என் சமையலறையில் -வித்தியசமா ஒரு வெஜிடேரியனுக்காக காளான் பிரியாணி செஞ்சிப்பாருங்க..டேஸ்டியா இருக்கும் .ஆனா நான் சாப்பிட்டதில்லை.
சின்னு ரேஸ்ரி இலங்கையை சேர்ந்த இவரது மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்
என் சமையல் அறையில் - இவங்க செய்யும் சமையல் வித்தியாசமா அதுக்கு சத்து விபரத்தை சொல்லிட்டு போடும் முறையும் அழகா இருக்கும் . பார்லி எலுமிச்சை சாதம். சாப்பிட்டுதான் பாருங்க .திரும்பவும் கேப்பீங்க..
சமையலும் கைப்பழக்கம் - இப்ப இரண்டு மாசமா ஆள கானேம் .இவங்களும் ஊருக்கு போய் இருக்கலாம்
Welcome to Mahi's Space... - பேரை பார்த்து பயப்பட வேனாம் .ஆனா எழுதறது சுந்தர தமிழிலதான் .. . என்னால எப்படியெல்லாம் பயந்து போய் செய்த தயிர் பச்சடி யை பார்த்தா உங்களுக்கே புரியும்..ஹா..ஹா..
இந்த வலையுலகில தேடி பார்த்ததுல ஓரே ஆண் சமையல் பிளாக் வச்சிருக்கிற இவர் செஞ்சது, வெறும் வாசனையிலேயே வயிறு நிறைஞ்சது அது என்னன்னு சொன்னாராஜ இறால் மிளகு வறுவல் (Lobster pepper fry) இத்தனை பெரிய சைஸ்தான் கிடைக்கனும் விலை குறைவா
ஓக்கே இப்ப கேள்விக்கு வருவோம்..செவிக்கு உணவில்லாத போதுன்னா அப்போ..காதுகேக்காத , பிறவி செவிடுக்கு இந்த பழமொழி செல்லாதே...!! ஒரு பழமொழி சொன்னா அது எல்லாருக்குமே பொதுவா இருக்கனும் . இதையெல்லாம் யார்தான் கேப்பாங்களோ . பசி ருசி அறியாது .ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை .. இங்கே சமையல் பதிவர்களை சொல்லிட்டு இதையும் சொல்றேன்னா அதுக்கு காரணம் இருக்கு.
ஒரு தடவை பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..
நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))
மீண்டும் நாளைக்கு சந்திக்கலாம் .
நல்ல சமையலுங்க சாரி சமையல் பதிவுங்க.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை...... உங்கள் மீன் குழம்பு ரெசிபி, டாப்!
ReplyDeleteஜெய், அறிமுகம் சூப்பர். எங்கள் சொந்த பந்தம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி, அசத்திட்டீங்க.
ReplyDelete@@@ DrPKandaswamyPhD --//
ReplyDeleteநல்ல சமையலுங்க சாரி சமையல் பதிவுங்க. //
ரொம்ப நன்றிங்க
@@@Chitra --//
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை...... உங்கள் மீன் குழம்பு ரெசிபி, டாப்! //
வாங்க டீச்சர்... மீன் குழம்பு...ஹி..ஹி..
@@@vanathy--//ஜெய், அறிமுகம் சூப்பர். எங்கள் சொந்த பந்தம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி, அசத்திட்டீங்க.//
ReplyDeleteவாங்க வான்ஸ் ..!! எல்லாமே சொந்த பந்தங்களதானே இந்த உலகத்திலே..ஹி..ஹி..
This comment has been removed by the author.
ReplyDelete//..நா ஆம்லட் போட்டா கால் லிட்டராவது எண்னெய் வேனும் . //
ReplyDeleteலெமன் ஜூசுக்கு எவ்ளோ வேணும்? :))
அன்பின் ஜெய்லானி
ReplyDeleteஅருமை அருமை - நல்லாவே போகுது வலைசரம் - இத்தனை அறிமுகங்களா - நாங்க எப்பப் படிக்கறது - ம்ம்ம் - உழைப்பின் கடுமை தெரிகிறது. ஏற்ற பொறுப்பின் கடமை உணர்ச்சி வாழ்க
நல்வாழ்த்துகள் ஜெய்லானி
நட்புடன் சீனா
@@@Comment deleted
ReplyDeleteThis post has been removed by the author. //
எதுவேனாலும் மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க
இப்படிக்கு
ஜெய்லானி
தலைவர், வருத்தபடாத வாலிபர் சங்கம்
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//
ReplyDelete//..நா ஆம்லட் போட்டா கால் லிட்டராவது எண்னெய் வேனும் . //
லெமன் ஜூசுக்கு எவ்ளோ வேணும்? :)) //
இதுல உப்புன்னு கேள்வி கேக்கனுங்க ஹி..ஹி..
@@@ cheena (சீனா)--//
ReplyDeleteஅன்பின் ஜெய்லானி
அருமை அருமை - நல்லாவே போகுது வலைசரம் - இத்தனை அறிமுகங்களா - நாங்க எப்பப் படிக்கறது - ம்ம்ம் - உழைப்பின் கடுமை தெரிகிறது. ஏற்ற பொறுப்பின் கடமை உணர்ச்சி வாழ்க
நல்வாழ்த்துகள் ஜெய்லானி
நட்புடன் சீனா //
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தான் காரணம் :-)
// உண்னும் உணவை மருந்து மாதிரி சாப்பிடற வரை வியாதி நம்மளை நெருங்காது ஆனா அதே அளவுக்கு அதிகமா சாப்பிட்டா கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆகனும்..தினமும் நாம் சாப்பிடும் அளவு முக்கியமில்லை அதன் சத்து தரம்தான் முக்கியமா இருக்கனும் .குண்டா இருப்பதும் நோய் லிஸ்டில வந்தாச்சு.//
ReplyDeleteசரியா சொல்லி இருக்கீங்க நண்பரே! உணவே நோய் தீர்க்கும் மருந்துன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க நம்ப பெரியவங்க.
இதைப்பற்றி எல்லாம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். நேரம் இருக்கும் போது, நம்ப கடைக்கு வந்து பாருங்க நண்பா!
தலை ஜெய்லானி சமையல் குறிப்பு இதுல இல்ல...
ReplyDeleteமறுபடியும் பெண்களை-அவர்களது சமையலின் ருசியைப் பெருமைப்படுத்தியதற்கும் என் வலப்பூவையும் அதில் குறிப்பிட்டிருந்ததற்கும் என் அன்பு நன்றி!
ReplyDeleteமீன் குழம்பு பிரமாதம்.
அறிமுகங்கள் அசத்தல்
ReplyDeleteஇன்னும் நான் பார்க்க வேண்டிய சமையல் வலைப்பூ நிறைய இருக்கு போல.மீன் புளிக்குழம்பு உங்க ப்ளாக்கில் ரெசிப்பி போடுங்க.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இவ்வளவு சமையல் பதிவர்களா?
ReplyDeleteஇவற்றில் சில மட்டுமே நான் ருசித்து (படித்து) இருக்கின்றேன்.
மற்றவர்கள் சமையல்(பதிவுகளை௦) ருசிக்க வைத்தமைக்கு நன்றிகள்
ஜெய்லானி!
உங்களோட மீன் குழம்பு பதிவு சூப்பர்
உபயோகமான நல்ல அறிமுகங்கள்.உங்க 'சுடுதண்ணி தயாரிப்பது எப்படி?' சமையல் குறிப்புல வராதா :-))))அறிமுகத்தை காணோமே!!!
ReplyDeleteசமையலுக்கு இத்தனை பதிவுகளா. பலரை அறிந்து கொள்ள முடிந்தது.
ReplyDelete//சமையல்ன்னு சொன்னா அது நிறைய பேர் இது பெண்களுக்கு மட்டுமேன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க .ஹோட்டல்களில் நூற்றுக்கு 99 பேர் சமையல் ஆண்கள்தான் .ஆனா அதை டேபிள சர்வ் செய்வது பெண்களா இருக்கலாம். வீடுகளில் அப்படியே தலைகீழா இருக்கும் .//
ReplyDeleteசரியா சொன்னீங்க..
சமையல் பதிவு அருமையா போட்ட . , சரி நம்மள மாதிரி சாப்புட மட்டும் தெரிஞ்சவுங்கள பத்தி எப்ப எழுதப்போற?(யப்பா... யாராவது உடனே ஆணாதிக்கம் , பெண்ணியமுன்னு ஆரம்பிச்சுடாதீங்க , நான் சும்மா தமாசுக்கு போட்டேன் )
ReplyDelete@jai
ReplyDeletethangamaniyoda bloga intro pannathuku nandri, veedu shiftaanthala veetla net illa. ippathan connection koduthu irukom. seekiram varuvaanga
அசத்து மக்கா.
ReplyDeleteஅடேங்கப்பா!! இத்தனை சமையல் குறிப்பு தளங்களா!!
ReplyDeleteபுளிகுழம்பு :))
ஜெய்லானி...@
ReplyDeleteசெவிக்குணவுன்னா... காதுல கேக்க்றதுன்னு அர்த்தம் இல்லய்யா.. அது விசயங்கலை தெரிஞ்சுக்கறதுன்னு அர்த்தம்....உன் புரிதலை வச்சு ஒரு புளிக்குழம்புதான் வைக்க முடியும் எப்படி மீன் குழம்பு வைக்கிறது.........
மத்தபடி பட்டைய கிளப்புர பங்காளி நீ..........சமையல் பத்தி அறிமுகங்கள்.... சூப்பர்ப்!
வீட்டில் சமைத்தால் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.....ஓட்டலில் அந்தக் கட்டாயம் இல்லை... இஃகி! இஃகி!
ReplyDeleteவீட்டில் சமைத்தால் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.....ஓட்டலில் அந்தக் கட்டாயம் இல்லை... இஃகி! இஃகி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.அறியாத சிலரையும் அறிந்து கொண்டேன்.மட்டுமில்லாமல் குறிப்பிட்ட குறிப்பின் லின்க்கையும் சேர்த்துக்கொடுத்து அசத்தி இருக்கின்றீர்கள்.வலைசர ஆசிரியருக்கான உழைப்பு புரிகின்றது.தொடர்க!
ReplyDelete@@@DrPKandaswamyPhD--//
ReplyDeleteநல்ல சமையலுங்க சாரி சமையல் பதிவுங்க //
வாங்க டாக்டர்..!!! கருத்துக்கு நன்றி..
இங்கே சிலரது சமையலை நான் பழகிச் சமைக்கிறேன்.
ReplyDeleteமேலதிகமானவர்களை அறிமுகப்படுத்தினதுக்கு
நன்றி ஜெய்.
இன்னும் நான் பார்க்க வேண்டிய அறிமுகங்கள் நிறைய இருக்கு..அசத்தல் ஜெய்!! அன்னையும் குறிப்பிட்டதற்க்கு மிக்க நன்றி!!
ReplyDeleteஆமா ஆம்லேட் போட கால் லிட்டர் வேணுமா?? மீதி அளவுலாம் சொல்லவேயில்லையே..அதெல்லாம் இதுல சேராதா?? மீன் குழம்பு ரெசிபியும் போடுங்க....
ReplyDeleteniraya nalla blogs-sa arimugapaduthi irukeenka...en blog-gayum intriduce panninathukku rombha thanks..
ReplyDeleteநிறைய சமையல் ராணிகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
ReplyDeleteஅதில் என்னை முதன்மைபடுத்தி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
எல்லோரும் எனக்கு தெரிந்த ராணிகள் தான், ஆனால் இன்னும் விடுபட்டு போன ராணிகள் நிறைய பேர் இருக்காங்க.
ரொம்ப கடுமையான ஆசிரியர் பணி தான்,
ஜெய் டீவில் யாரெல்லாம் அறிமுகமாகிறார்கள் என்று நாளைக்கு பார்க்கலாம்
இவ்வளவு சமையல் வலைப்பூக்கள் இருக்கா?! ஜலீலாக்கா, ஆசியா, மேனகா, கீதா ஆச்சல், விஜி இவங்க சமையல் பக்கங்கள் பிடிக்கும். ரெசிப்பிகளும் பிடிக்கும். இனி மற்ற தோழிகளின் ரெசிப்பியையும் செய்து அசத்திட வேண்டியதுதான் :). ஏன் ஜெய் சுடுதண்ணி செய்யரதெல்லாம் சமையல்ல சேராதா :)
ReplyDeleteசகோதரிகளை பெருமைப் படுத்திய விதம் அருமை பாஸ்!!
ReplyDelete// பசி ருசி அறியாது. ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை.. //
ReplyDeleteஅப்படீன்னா இதுவரை உங்க சாப்பாடெல்லாம்?? ஹி.. ஹி..
-----------------------------------
அப்புறம் ஒன்னு கேடனும்னு நெனச்சேனே.........
இவ்வளவு Siss செய்த அவ்வளவு ரெசிபியில் உங்களுக்கு பிடித்ததில், எதை உங்க தங்ஸ்க்கு, நாட்டுக்கு போயிருந்த போது சமைத்து கொடுத்திருக்கீங்க பாஸ்? சொன்னா நாமும் அத செய்து கொடுத்து சமைத்து.. அசத்தி.. கொடுத்து.. அட்டகாசம்.. பண்ணி, ஆஹா என்ன ருசி ..என்று அவங்களை சொல்ல வைக்கலாம்ல..ஙே..ஹி.. ஹி..
ReplyDeleteஜெய்லானி... உங்க விருந்தை நல்லா
ReplyDeleteச(அ)மைத்திருந்தீர்கள்.
அறிமுகம் செய்ததுக்கு நன்றி! பெரும்பாலான தளங்கள் எனக்கு பரிச்சயமானவைதான். அழகான அறிமுகங்கள்.
ReplyDelete~~~
/பயந்து போய் செய்த தயிர் பச்சடி யை பார்த்தா/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!யாருக்கு பயம்? பயம்னா என்னங்ணா? ஷார்ஜாலே விக்கும்னா ஒரு அஞ்சு கிலோ வாங்கி அனுப்புங்களேன்! கிக்..கிக்..கி!
மக்களே,நீங்க இதைப் பாருங்க..அண்ணாத்தே என்ன சொல்லவராருன்னு நல்லாப் புரியும்.
http://mahikitchen.blogspot.com/2010/09/blog-post_13.html
ஹிஹிஹிஹி!
அறிமுகங்கள் அருமை.
ReplyDelete:(( rendu vaatti ore pinnoottam pathivaanathaala onnai alichchen..
ReplyDeleteசமைத்து அசத்தலாம் ...
ReplyDelete//ஒரு தடவை பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..
ReplyDeleteநான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))//
அடடா இதையெல்லாம் ஜெய்லானி டீவில காட்டறதில்லயா பாய்?
சமையல் பதிவுகள்.. அறிமுகங்கள் சூப்பர்..
ReplyDeleteஎல்லாம் போய் பார்க்கணும்.. :-)
// நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. )//
ஹா ஹா.. நீங்களா சொன்னாத் தான் தெரியும்.. ஓகே ஓகே..
மீன் குழம்பு தான்...!! (மீன் போட்டு புளிகுழம்பு தானே வச்சீங்க...?? என்கிட்டே மட்டும் சொல்லுங்க ஜெய்..)
@@@என்னது நானு யாரா?--
ReplyDelete// உண்னும் உணவை மருந்து மாதிரி சாப்பிடற வரை வியாதி நம்மளை நெருங்காது ஆனா அதே அளவுக்கு அதிகமா சாப்பிட்டா கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆகனும்..தினமும் நாம் சாப்பிடும் அளவு முக்கியமில்லை அதன் சத்து தரம்தான் முக்கியமா இருக்கனும் .குண்டா இருப்பதும் நோய் லிஸ்டில வந்தாச்சு.//
சரியா சொல்லி இருக்கீங்க நண்பரே! உணவே நோய் தீர்க்கும் மருந்துன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க நம்ப பெரியவங்க.
இதைப்பற்றி எல்லாம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். நேரம் இருக்கும் போது, நம்ப கடைக்கு வந்து பாருங்க நண்பா! //
வாங்க சார் ..!!! எவ்வளவோ பாத்தாச்சி இதையும் தொடர்ந்துடுவோம் :-))
@@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
ReplyDeleteதலை ஜெய்லானி சமையல் குறிப்பு இதுல இல்ல. //
இதுல நம்ம அறிமுகம் மட்டும்தானே..!! சொந்த சரக்கு நம்ம சொந்த பிளாக்கில வச்சுப்போம் ஹா..ஹா.. ஓக்கே..
@@@ மனோ சாமிநாதன்--//
ReplyDeleteமறுபடியும் பெண்களை-அவர்களது சமையலின் ருசியைப் பெருமைப்படுத்தியதற்கும் என் வலப்பூவையும் அதில் குறிப்பிட்டிருந்ததற்கும் என் அன்பு நன்றி!
மீன் குழம்பு பிரமாதம். //
வாங்க மேடம் பாராட்டுவதில யாரையும் எப்பவும் குறைவா நினைப்பது இலலை..வருகைக்கு நன்றி
@@@ asiya omar--//
ReplyDeleteஅறிமுகங்கள் அசத்தல்
இன்னும் நான் பார்க்க வேண்டிய சமையல் வலைப்பூ நிறைய இருக்கு போல.மீன் புளிக்குழம்பு உங்க ப்ளாக்கில் ரெசிப்பி போடுங்க.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. //
வாங்க ஆசியாக்கா ..!!ஹா..ஹா..மீன் குழம்பா..க்கி..க்கி..
@@@S Maharajan said...
ReplyDeleteஇவ்வளவு சமையல் பதிவர்களா?
இவற்றில் சில மட்டுமே நான் ருசித்து (படித்து) இருக்கின்றேன்.
மற்றவர்கள் சமையல்(பதிவுகளை௦) ருசிக்க வைத்தமைக்கு நன்றிகள்
ஜெய்லானி!
உங்களோட மீன் குழம்பு பதிவு சூப்பர் //
வாங்க ஐயா...வாங்க .. அந்த் கடைசி வரியையே பிடிச்சிகிட்டு தொங்குறீங்களே..ஹி..ஹி..
@@@அமைதிச்சாரல்--// உபயோகமான நல்ல அறிமுகங்கள்.உங்க 'சுடுதண்ணி தயாரிப்பது எப்படி?' சமையல் குறிப்புல வராதா :-))))அறிமுகத்தை காணோமே!!! //
ReplyDeleteஇல்லைங்க சாரலக்கா..!!! இது மத்தவங்கள பத்தி மட்டும் அறிமுகம் போதுமேன்னுதான் .சொந்த சரக்கை நம்ம மொக்கை பிளாக்கிலேயே வச்சுக்கலாம் ஹி...ஹி..
@@@அமைதிச்சாரல்--// உபயோகமான நல்ல அறிமுகங்கள்.உங்க 'சுடுதண்ணி தயாரிப்பது எப்படி?' சமையல் குறிப்புல வராதா :-))))அறிமுகத்தை காணோமே!!! //
ReplyDeleteஇல்லைங்க சாரலக்கா..!!! இது மத்தவங்கள பத்தி மட்டும் அறிமுகம் போதுமேன்னுதான் .சொந்த சரக்கை நம்ம மொக்கை பிளாக்கிலேயே வச்சுக்கலாம் ஹி...ஹி..
@@@ தமிழ் உதயம்--//
ReplyDeleteசமையலுக்கு இத்தனை பதிவுகளா. பலரை அறிந்து கொள்ள முடிந்தது. //
இன்னும் இருக்குதுங்க ..கொஞ்சம் குறைச்சுக்கலாமுன்னுதான் வருகைக்கு ரொம்ப நன்றி.
இந்திரா--//சமையல்ன்னு சொன்னா அது நிறைய பேர் இது பெண்களுக்கு மட்டுமேன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க .ஹோட்டல்களில் நூற்றுக்கு 99 பேர் சமையல் ஆண்கள்தான் .ஆனா அதை டேபிள சர்வ் செய்வது பெண்களா இருக்கலாம். வீடுகளில் அப்படியே தலைகீழா இருக்கும் .//
ReplyDeleteசரியா சொன்னீங்க..//
ஆமாங்க ..உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@மங்குனி அமைசர்--//
ReplyDeleteசமையல் பதிவு அருமையா போட்ட . , சரி நம்மள மாதிரி சாப்புட மட்டும் தெரிஞ்சவுங்கள பத்தி எப்ப எழுதப்போற?(யப்பா... யாராவது உடனே ஆணாதிக்கம் , பெண்ணியமுன்னு ஆரம்பிச்சுடாதீங்க , நான் சும்மா தமாசுக்கு போட்டேன் ) //
வாய்யா மங்கு.. அதை நம்ம பிளாக்கில போட்டிடலாம் ஹி..ஹி..வருகைக்கு நன்றி
@@@ LK --//
ReplyDelete@jai
thangamaniyoda bloga intro pannathuku nandri, veedu shiftaanthala veetla net illa. ippathan connection koduthu irukom. seekiram varuvaanga //
ஓக்கே பாஸ் புரியுது..பொருமையாவே வரட்டும் :-))
@@@ LK --//
ReplyDelete@jai
thangamaniyoda bloga intro pannathuku nandri, veedu shiftaanthala veetla net illa. ippathan connection koduthu irukom. seekiram varuvaanga //
ஓக்கே பாஸ் புரியுது..பொருமையாவே வரட்டும் :-))
@@@Jey --//
ReplyDeleteஅசத்து மக்கா. //
வாய்யா ஜே..ரொம்ப நன்றி வருகைக்கு :-))
@@@Jey --//
ReplyDeleteஅசத்து மக்கா. //
வாய்யா ஜே..ரொம்ப நன்றி வருகைக்கு :-))
@@@சைவகொத்துப்பரோட்டா --//
ReplyDeleteஅடேங்கப்பா!! இத்தனை சமையல் குறிப்பு தளங்களா!!
புளிகுழம்பு :)) //
வாங்க பாஸ்..!! ஹி..ஹி.. வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ dheva --//
ReplyDeleteஜெய்லானி...@
செவிக்குணவுன்னா... காதுல கேக்க்றதுன்னு அர்த்தம் இல்லய்யா.. அது விசயங்கலை தெரிஞ்சுக்கறதுன்னு அர்த்தம்....உன் புரிதலை வச்சு ஒரு புளிக்குழம்புதான் வைக்க முடியும் எப்படி மீன் குழம்பு வைக்கிறது......... //
வாங்க பாஸ் என் குணம் தெரியாதா என்ன..? ஹய்யோ..ஹய்யோ..
// மத்தபடி பட்டைய கிளப்புர பங்காளி நீ..........சமையல் பத்தி அறிமுகங்கள்.... சூப்பர்ப்! //
வருகைக்கு ரொம்ப தாங்ஸ் வாத்யாரே..!!
@@@ தேவன் மாயம்--//
ReplyDeleteவீட்டில் சமைத்தால் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்..... ஓட்டலில் அந்தக் கட்டாயம் இல்லை... இஃகி! இஃகி! //
வாங்க சார்.. சிரிச்சா அப்புறம் தாய்குலங்கள சண்டைக்கு வந்துடுவாங்க ஹி..ஹி...
@@@ ஸாதிகா--//நல்ல அறிமுகங்கள்.அறியாத சிலரையும் அறிந்து கொண்டேன்.மட்டுமில்லாமல் குறிப்பிட்ட குறிப்பின் லின்க்கையும் சேர்த்துக்கொடுத்து அசத்தி இருக்கின்றீர்கள்.வலைசர ஆசிரியருக்கான உழைப்பு புரிகின்றது.தொடர்க! //
ReplyDeleteவாங்கக்காவ் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ ஹேமா --//
ReplyDeleteஇங்கே சிலரது சமையலை நான் பழகிச் சமைக்கிறேன்.
மேலதிகமானவர்களை அறிமுகப்படுத்தினதுக்கு
நன்றி ஜெய். //
வாங்க குழந்தை நிலா..!! கருத்துக்கு ரொம்ப நன்றி
@@@ Mrs.Menagasathia --//
ReplyDeleteஇன்னும் நான் பார்க்க வேண்டிய அறிமுகங்கள் நிறைய இருக்கு..அசத்தல் ஜெய்!! அன்னையும் குறிப்பிட்டதற்க்கு மிக்க நன்றி!!//
வாங்க அக்கா..!!
//ஆமா ஆம்லேட் போட கால் லிட்டர் வேணுமா?? மீதி அளவுலாம் சொல்லவேயில்லையே..அதெல்லாம் இதுல சேராதா?? மீன் குழம்பு ரெசிபியும் போடுங்க....//
ஹி..ஹி.. இந்த வாரம் பொருங்க நிறைய வந்து கேள்வி கேக்கிறேன் ஹா..ஹா.. வருகைக்கு ரொம்ப நன்றிங்க..
@@@ Nithu Bala--//
ReplyDeleteniraya nalla blogs-sa arimugapaduthi irukeenka...en blog-gayum intriduce panninathukku rombha thanks. //
வாங்க மேடம் ..வருகைக்கு ரொம்ப நன்றி
@@@Jaleela Kamal --//
ReplyDeleteநிறைய சமையல் ராணிகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
அதில் என்னை முதன்மைபடுத்தி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
எல்லோரும் எனக்கு தெரிந்த ராணிகள் தான், ஆனால் இன்னும் விடுபட்டு போன ராணிகள் நிறைய பேர் இருக்காங்க.
ரொம்ப கடுமையான ஆசிரியர் பணி தான்,
ஜெய் டீவில் யாரெல்லாம் அறிமுகமாகிறார்கள் என்று நாளைக்கு பார்க்கலாம் //
வாங்க ஜலீலாக்கா..!!!உங்கள் தொடர் உக்கத்துக்கு ரொம்ப நன்றி..:-)))))
@@@Jaleela Kamal --//
ReplyDeleteநிறைய சமையல் ராணிகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
அதில் என்னை முதன்மைபடுத்தி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
எல்லோரும் எனக்கு தெரிந்த ராணிகள் தான், ஆனால் இன்னும் விடுபட்டு போன ராணிகள் நிறைய பேர் இருக்காங்க.
ரொம்ப கடுமையான ஆசிரியர் பணி தான்,
ஜெய் டீவில் யாரெல்லாம் அறிமுகமாகிறார்கள் என்று நாளைக்கு பார்க்கலாம் //
வாங்க ஜலீலாக்கா..!!!உங்கள் தொடர் உக்கத்துக்கு ரொம்ப நன்றி..:-)))))
சிறப்பான் அறிமுகங்கள். படிப்பத்ற்கே நேரம் போதவில்லை எப்படி தொகுத்தீர்கள்.
ReplyDeleteஉங்கள் கடின உழைப்பு பாராட்டுகுரியது.
@@@ kavisiva--//
ReplyDeleteஇவ்வளவு சமையல் வலைப்பூக்கள் இருக்கா?! ஜலீலாக்கா, ஆசியா, மேனகா, கீதா ஆச்சல், விஜி இவங்க சமையல் பக்கங்கள் பிடிக்கும். ரெசிப்பிகளும் பிடிக்கும். இனி மற்ற தோழிகளின் ரெசிப்பியையும் செய்து அசத்திட வேண்டியதுதான் :). ஏன் ஜெய் சுடுதண்ணி செய்யரதெல்லாம் சமையல்ல சேராதா :)
வாங்க ..கவி.. இதுல என்னுடையது எதையும் போடும் ஐடியா இல்லை ..மற்றவங்களை சந்தோஷப்படுத்தினாலே போதுமே..!! :-)) வருகைக்கு ரொம்ப நன்றி
@@@ எம் அப்துல் காதர்--//
ReplyDeleteசகோதரிகளை பெருமைப் படுத்திய விதம் அருமை பாஸ்!! //
வாங்க மக்கா ..சந்தோஷம்..
//// பசி ருசி அறியாது. ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை.. //
அப்படீன்னா இதுவரை உங்க சாப்பாடெல்லாம்?? ஹி.. ஹி..//
நான் என்னைக்கும் பசிக்கு மட்டுமே சாப்பிட்டு வருகிரேன் ருசிக்காக சாப்பிடுவதில்லை.... :-)))
-----------------------------------
//அப்புறம் ஒன்னு கேடனும்னு நெனச்சேனே......... //
ஒன் எக்ஸ்டிரா அலவ்டு கேளுங்க ..ஹா..ஹா..
//இவ்வளவு Siss செய்த அவ்வளவு ரெசிபியில் உங்களுக்கு பிடித்ததில், எதை உங்க தங்ஸ்க்கு, நாட்டுக்கு போயிருந்த போது சமைத்து கொடுத்திருக்கீங்க பாஸ்? சொன்னா நாமும் அத செய்து கொடுத்து சமைத்து.. அசத்தி.. கொடுத்து.. அட்டகாசம்.. பண்ணி, ஆஹா என்ன ருசி ..என்று அவங்களை சொல்ல வைக்கலாம்ல..ஙே..ஹி.. ஹி..//
பாஸ் ...தொழில் ரகசியத்தை வெளியே சொல்லும் ஐடியா இல்லை ஹி..ஹி..((என்கிட்டயேவாஆஆஆஆ)) வருகைக்கு ரொம்ப நன்றி..
@@@ NIZAMUDEEN --//
ReplyDeleteஜெய்லானி... உங்க விருந்தை நல்லா
ச(அ)மைத்திருந்தீர்கள்.//
கருத்துக்கு மற்றும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க
@@@Mahi--//அறிமுகம் செய்ததுக்கு நன்றி! பெரும்பாலான தளங்கள் எனக்கு பரிச்சயமானவைதான். அழகான அறிமுகங்கள். //
ReplyDeleteவாங்க மஹி...சந்தோஷம்..
~~~
///பயந்து போய் செய்த தயிர் பச்சடி யை பார்த்தா/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!யாருக்கு பயம்? பயம்னா என்னங்ணா? ஷார்ஜாலே விக்கும்னா ஒரு அஞ்சு கிலோ வாங்கி அனுப்புங்களேன்! கிக்..கிக்..கி! //
கொரியர்க்கு அட்ரஸ் தெரியலையாம் எல்லாம் ரிடர்ன் ஆயிடுச்சி :-((
//மக்களே,நீங்க இதைப் பாருங்க..அண்ணாத்தே என்ன சொல்லவராருன்னு நல்லாப் புரியும்.
http://mahikitchen.blogspot.com/2010/09/blog-post_13.html
ஹிஹிஹிஹி! //
அடப்பாவிங்களாஆஆஆஆ..எனக்கே ரிடர்னாஆஆஆஆஆஆஆ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-))
@@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.//
சந்தோஷம் ஷேக்..வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//
ReplyDelete:(( rendu vaatti ore pinnoottam pathivaanathaala onnai alichchen..//
வாங்க ..!!வாங்க..ஒன்னும் பிராப்ளமில்லை..:-))) வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@ கே.ஆர்.பி.செந்தில் --//
ReplyDeleteசமைத்து அசத்தலாம் ...//
வாங்க பாஸ்..கரெக்ட்.. வருகைக்கு ரொம்ப நன்றி
@@@அன்னு --//
ReplyDelete//ஒரு தடவை பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..
நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))//
அடடா இதையெல்லாம் ஜெய்லானி டீவில காட்டறதில்லயா பாய்? //
வாங்க அன்னு..!!இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஒன்னு ஒன்னா போடலாமுன்னு இருக்கேன்..:-)).வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@Ananthi--//சமையல் பதிவுகள்.. அறிமுகங்கள் சூப்பர்..
ReplyDeleteஎல்லாம் போய் பார்க்கணும்.. :-)//
வாங்க..!!வாங்க..!! பொருமையா போய் பாருங்க
// நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. )//
ஹா ஹா.. நீங்களா சொன்னாத் தான் தெரியும்.. ஓகே ஓகே..
மீன் குழம்பு தான்...!! (மீன் போட்டு புளிகுழம்பு தானே வச்சீங்க...?? என்கிட்டே மட்டும் சொல்லுங்க ஜெய்..) //
ஹா..ஹா.. நீங்க ஒரு ஆளே போதும் போல இருக்க என்னை கலாய்க்க..:-)) வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ஒ.நூருல் அமீன்--//
ReplyDeleteசிறப்பான் அறிமுகங்கள். படிப்பத்ற்கே நேரம் போதவில்லை எப்படி தொகுத்தீர்கள்.
உங்கள் கடின உழைப்பு பாராட்டுகுரியது. //
வாங்க சார்..!! சந்தோஷம் .சிறிய முயற்சிதான் காரணம்..வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
நல்ல அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஎன்னையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நன்றிஜெய்லானி.
@@@ அப்துல்மாலிக்--//
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி //
வாங்க மாலிக்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி
@@@மாதேவி--//
ReplyDeleteஅறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.
என்னையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நன்றிஜெய்லானி. //
வாங்க மேடம்..சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி..
ரெண்டு பிளேட் மீன் கொழம்பு பார்சல்ல்ல்ல்!
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி
ReplyDelete@@@ பன்னிக்குட்டி ராம்சாமி--//
ReplyDeleteரெண்டு பிளேட் மீன் கொழம்பு பார்சல்ல்ல்ல்!//
வாங்க சார்..!! இதோ ரெடியா இருக்கு ..உங்கள் வருகைக்கு நன்றிங்க
@@@ தமிழ் குடும்பம் --
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி..//
வாங்க ..வாங்க..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கு நன்றிங்க
நன்றி ஜெய்லானி...ஆமாம் ..ஊருக்குதான் போயிருந்தேன்....வலைச்சர வாழ்த்துகள்..சற்றே தாமதமாக...
ReplyDeleteபார்க்காத பல வலைப்பூவின் முகவரி தந்திருக்கிங்க நன்றி... அதில் எனது வலைப்பூவையும் இணைத்தமைக்கு நன்றி .. எனது முகவரியில் சிறிது பிழை..
ReplyDeletehttp://en-iniyaillam.blogspot.com/
இது தான் நான் குறிப்புகள் தரும் வலை முகவரி