பயணங்கள் - நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய சமாச்சாரம். பெரும்பாலான தமிழர்களுக்கு அப்படி இருப்பதில்லை. நெடும் தொலைவு பயண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பயணக்கட்டுரைகள் அக்குறை தீர்த்து வைக்கும். இன்று பயணக்கட்டுரைகள் நிறைந்த வலைப்பூக்களை காண்போம்.
பயணம் என்றால், வலையுலகில் நினைவுக்கு வருபவர் துளசி அம்மாவாகத்தான் இருக்கும். இவங்களோட வலைத்தளத்திற்குள் நுழைந்தால் போதும். கன்னியாக்குமரியில் இருந்து வாகா பார்டர் வரை, நியூசிலாந்தில் இருந்து தாய்லாந்து வரை, ஒரு பைசா இல்லாமல் உலகைச் சுற்றி பார்த்துவிடலாம். பார்த்த ஒரு விஷயம் விடாமல், கேட்ட ஒரு விஷயம் விடாமல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகவல் ரீதியில் ஒரு முழுமையான அனுபவத்தை, அம்மாவின் பதிவுகள் கொடுக்கும்.
சர்வேசன் அடிக்கடி ஊர் சுற்ற மாட்டார். எப்ப காசு செலவழிக்க தோணுதோ, அப்ப மட்டும் போவாரு. :-) ஆனா, எப்பலாம் போறாரோ, அப்ப எல்லாம் நமக்கு தரமான கண்ணில் ஒத்திக்கிற மாதிரியான படங்கள் கிடைக்கும். இங்கே, இவர் அலாஸ்காவில் எடுத்த படங்கள் இருக்கிறது. அலாஸ்காவை மட்டுமல்ல, பல்லாவரத்தையும் அழகா படம் பிடிப்பாரு.
பதிவர் சௌந்தர், சென்னையில் இருந்து வத்தலக்குண்டு பக்கமிருக்கும் ஒரு கோவிலுக்கு காரில் சென்ற அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறார். வாசித்தால், நாமும் அவருடைய குடும்பத்துடன் சென்ற வந்த உணர்வு கிடைக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற வந்த அனுபவத்தை, பதிவர் சிதம்பரநாதன் அவருடைய வலைப்பூவில் பதிவிட தொடங்கியிருக்கிறார். இப்போது தான் தொடங்கியிருக்கிறார். வாருங்கள், நாமும் சேர்ந்து கொள்ளலாம்.
அதேபோல், பதிவர் சிவா அவர்கள் திருநெல்வேலி சீமையை சுற்றிக்காட்ட போகிறார். அதற்கும் தயாராகுங்கள்.
வெங்கட் நாகராஜ், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த சென்ற ரயில் பயண அனுபவத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறார். பயணங்களின் போது, அவர் சந்தித்த வித்தியாசமானவர்களைப் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷபீக் அவர்கள் குற்றாலத்தின் அருமை பெருமைகளை இப்பதிவில் பட்டியலிட்டு இருக்கிறார். கூடவே, குற்றாலம் சென்றால் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். குற்றாலம் செல்லும் முன்பு, வாசித்துவிட்டு செல்ல வேண்டிய பதிவு.
இப்படி எல்லோரும் அவுங்கவுங்க பயண அனுபவங்களை சொன்னது போல், உறவுக்காரன் அவர்கள் உலக அமைதிக்காக தொடர் பயணம் மேற்கொண்ட ஒரு பெண்மணியை பற்றி இப்பதிவில் சொல்லியிருக்கிறார். அந்தம்மா அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ என நாடு விட்டு நாடு, நடை நடை’ன்னு நடந்திருக்காங்க.
சேகுவரா பல்வேறு நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட உலக பயணங்கள் மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.
இங்கு பார்த்ததுபோல், பயணங்கள் என்பது புது இடங்களை காண்பது என்பதில் இருந்து உலக மக்களின் நன்மை என்ற வகையில் வரை முக்கியத்துவம் பெறுகிறது. இதை படித்துவிட்டு, எங்காவது சென்று வரலாம் என்று தோன்றுகிறதா? அது போதும் எனக்கு.
நாளை உங்களை கவரும் இன்னொரு வகை மலர்களுடன் சந்திக்கிறேன். டாடா... பை... பை...!!!
.
அட! துளசிதளத்தை(யும்) இந்தப் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றிங்க.
ReplyDeleteபயணமலர்கள் தலைப்பே அருமை
ReplyDeleteமிக நல்ல அறிமுகங்கள். பயணக் கட்டுரைகள் எழுதுபவர்கள் இங்கே குறைவுதான்! அறிமுகங்களுக்கு நன்றி!
ReplyDeleteமிக நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteமலர்கள் கலக்குகின்றன.. வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே. மற்ற சுட்டிகளையும் படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteநன்றி.
வெங்கட்.
nice travel
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி!
ReplyDeleteபயணக் கட்டுரைகள் எழுதும் கிளியனூர் இஸ்மத் அண்ணன் அவர்களின் வலைப்பூ இது:
http://kismath.blogspot.com/
அன்பின் சரவண குமர
ReplyDeleteஅருமை அருமை = பயண மலர்கள் அருமை - இத்த்னை பேர் எழுதுகிறார்களா - பயனக்கட்டுரைகள். பலே பலே
நல்வாழ்த்துகள் சரவணகுமர
நட்புடன் சீனா
நன்றி துளசி கோபால், புதுகைத்தென்றல், எஸ்.கே., சே.குமார், இந்திரா, வெங்கட் நாகராஜ், ரமேஷ், அன்பரசன், நிஜாமுதீன், சீனா ஐயா...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று தான் நேரம் கிடைக்கப்பெற்று பார்த்தேன். பயணம் சம்பந்தப்பட்ட நிறைய வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். எல்லாமுமே புசுசு! அருமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கண்டிப்பாகச் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteபடித்துக் கொண்டு வருகையில் ஒரு இன்ப அதிர்ச்சி. உறவுக்காரன் வலைப்பக்த்தில் நான் எழுதி இருந்த Peace Pilgrim பற்றிய பதிவையும் அறிமுகம் செய்திருப்பதைப் பார்த்தப்போது. நன்றி நண்பரே! ஆனந்தம் அடைகிறேன்.
எப்படி ஒரு ஆச்சரியத்தை தருகிறார்கள் அப்பா இந்த வலைசரத்துக்காரர்கள்! :-))
இதையும் பார்த்திடுவோம்
ReplyDelete