Sunday, October 31, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சுகுமார் சுவாமிநாதன் ஏழு இடுகைகள் இட்டு அறுபதுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். பல்வேறு துறைகளில் சிறந்த பதிவுகளைத் தேடிப் பிடித்து பல பதிவர்களை அறிமுகம் செய்து - நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்து அறிமுகம் செய்திருக்கிறார். சுகுமார் சுவாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை நவம்பர் முதல் தேதி துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கிளியனூர் இஸ்மத். இவர் கவிதைகள் கட்டுரைகள் சிறு கதைகள் இவரது பதிவுகளீல் எழுதி வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகில் உள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அமீரகத்தில் - துபாயில் ஒரு நகைக் கடையில் கொள்முதல் மேலாளராகப் பணி புரிகிறார். இது வரை நான்கு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.

நிகழ்வுகளின் நிழல்கள் - 6வது அறிவு - கிளிக் கிளிக் என்ற மூன்று பதிவுகளில் எழுதி வருகிறார். கிளியனூர் இஸ்மத்தினை வருக ! வருக ! என வரவேற்று - அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக ! எனக் கூறி - வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். /r

நல்வாழ்த்துகள் சுகுமார் சுவாமி நாதன் / r
நல்வாழ்த்துகள் கிளியனூர் இஸ்மத் / r

நட்புடன் சீனா

என் கடைசி விருப்பங்கள்







வலைச்சரத்தில் கடைசி நாளான இன்று பதிவுகள் எனது கடைசி விருப்பங்களை தெரிவிக்கிறேன். (ஏன்யா இப்படி தலைப்பு வச்சு கொல்றன்னு நினைப்பவர்கள். ஃப்ரீயா விடுங்க...)



எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை பரபரப்பில்லாமல், ஓய்வான நாளில் மனம் அமைதியாய் இருக்கும்பொழுது ரசித்து படிப்பேன். இவரது இந்த பயண கட்டுரையை படித்து பாருங்களேன். 


போஸ்ட் பாக்ஸ்
 பள்ளி செல்லும் தன் குழந்தையின் புராஜக்ட்டுக்காக போஸ்ட் பாக்ஸ் செய்யும் தந்தையாக எழுத்தாளர் சொக்கன் அவர்களின் நிலை


நிலம் வாங்குதல் தொடர்பாக அண்ணாமலையான் அவர்களின் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு 


பணம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கே.ஆர்.பி செந்தில் அவர்களின் தொடர் - பணம்


சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..
சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறுவயது முதலே ரசிக்கும் ரசிகர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் தேவா அவர்களின் பதிவு.


பிளடி இண்டியன்ஸ்
 “பிளடி இண்டியன்ஸ்” ன்னு ஒரு வெள்ளைக்காரன் உங்க கிட்ட சொன்னா உங்களுக்கு எப்படிண்ணே இருக்கும்..அவன சாகடிக்கலாம் போல இருக்கும்லண்ணே..எனக்கு ஏக்கமா இருக்கும்ணே என டச்சிங்கான நிகழ்வை சொல்கிறார் அவிய்ங்க ராசா

ஓஹோ
இவரெல்லாம் எழுதும் பதிவுலகில் நானெல்லாம் கூட எழுத வேண்டுமா என அடிக்கடி என்னை நாண வைப்பவர். அருமையான சிந்தனைகள். அசாத்தியமான எளிமையான நடையில்.

வலைச்சரத்தில் எழுத அழைப்பு வெகு முன்னரே கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த சமயம் பார்த்து இந்த மாதம் முழுவதும் அலுவலக பணிகள் அதிகமாகவே சூழ்ந்து கொண்டது. ஆதலால் குறைவான பதிவுகள் குறித்தே வலைச்சரத்தில் கொடுத்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு எழுகின்றது. ஆயினும் ஏதோ என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இத்தகைய அருமையான வாய்ப்பினை கொடுத்த வலைச்சரம் குழுவினர் அனைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் மற்றும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!


அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை



பிறபல பதிவர்கள்




சினிமா சார்ந்த பதிவர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பதிவிடுபவர்கள் என தனித்தனியே சொல்லி விட்டேன். இன்று எப்படி வகைப்படுத்துவது என யோசித்து குழம்பியதுதான் மிச்சம். ஆகவே பிற வகைகளை சார்ந்த பல பதிவர்கள் குறித்து இன்று அறியத்தருகிறேன். அதுதான் பிற பல பதிவர்கள்!

குசும்பன்
சிலரிடம் நண்பராய் இருப்பது ஆனந்தமாய் இருக்கும். சிலரிடம் நண்பராய் இருப்பது அவஸ்தையாய் இருக்கும். ஆனால் இவரிடம் நண்பராய் இருப்பவர்களுக்கு ஆனந்த அவஸ்தைதான். இவர் தனது பதிவுலக நண்பர்களை எல்லாம் அடிக்கடி கதற கதற கார்டூனாக்குபவர். தெளிவான இலக்குடன் இவர் அடிக்கும் அரசியல், சினிமா கமெண்ட்ஸ் சிரிக்க மட்டும் அல்லாமல் ரொம்பவும் சிந்திக்கவும் வைக்கும்.

எம்.எம்.அப்துல்லா
குசும்பன் போன்ற ஒருவர் உலகில் அவதரித்தால் அவருக்கு ஈடு கொடுக்க இன்னொருவரும் அவதரித்திருப்பார். அப்படிப்பட்டவர்தான் பதிவர் எம்.எம்.அப்துல்லா. ஒண்ணுமில்லை சும்மா என தளத்திற்கு பெயரை வைத்துக்கொண்டு கலந்து கட்டி எல்லாவற்றையும் பற்றி எழுதும் இவரின் பதிவுகள் மென் வாசிப்பு மனோ வசிய வகையை சார்ந்தவை. (அப்படின்னா என்னன்னு கேட்காதீங்க.. புதுபுது வார்த்தையை அடிச்சி விட்டாதான் வர வர பதிவர்னே ஒத்துக்கிறாங்க.. அதான்....) . இவரது நகைச்சுவை பதிவுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


பிரியமுடன் வசந்த்
புதுசு புதுசாய் திணுசு திணுசாய் யோசிப்பதில் பிரியமுடன் வசந்த்தை அடிச்சிக்க முடியாது. ஏதாவது ஒரு வித்யாசமான வடிவத்தில் பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். அதிகமாக டிசைன் செய்வதிலும் கலர்ஃபுல்லாக பதிவுகளை விஷுவல் ட்ரீட்டாக கொடுப்பதிலும் இவருக்கு தணியாத ஆர்வம்.

கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா
நீங்கள் சாதாரணமாய் பார்க்கில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறீர்கள். இன்னொரு நண்பர் ஓடியபடி ஜாக்கிங் போய்க்கொண்டிருக்கிறார்.  அவருடன் பேச நீங்களும் ஓடித்தான் ஆகவேண்டும். பேசி முடித்தபின் நின்று மூச்சு வாங்குவீர்கள் அல்லவா... பதிவர் சித்ரா அவர்களின் பதிவுகளை படிக்கும்பொழுது எனக்கும் இதே போன்றதொரு உணர்வு வரும். பதிவுகளில் எக்ஸ்ட்ரா செட்டிங்க்ஸ் எதுவும் இல்லாமல் அனிச்சையாய் மனதில் பட்டதை கட கடவென சொல்பவர். இவரிடம் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்று உண்டு.... தான் படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் கொடுத்து விடுவார்.

ராஜு
பதிவர் ராஜு அவர்களின் தளத்தில் கொட்டிக்கிடக்கும் கற்பனை கலந்துரையாடல் பதிவுகளை படித்து பாருங்கள்.  மனது லேசாகி எந்த வேலையையும் வயலண்ட் ஆகாமல் சைலண்ட்டாக செய்து முடிப்பீர்கள்.

கார்க்கி
தோழி அப்டேட்ஸ் என தினமும் டிவிட்டரிலும் அடிக்கடி பதிவுலகிலும் இவர் கொடுக்கும் சின்னஞ்சிறிய காதல் கவிதைகளுக்கு நான் ரசிகன். ஒரே தலைப்பில் எப்படி இவ்வளவு விதம் விதமாக கொடுக்கிறார் என தினமும் ஆச்சரியப்படுகிறேன். 

லோஷன்
கிரிக்கெட், கால்பந்து ரசிகரா நீங்கள். நீங்கள் உடனே புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் பதிவர் லோஷன் அவர்கள் நடத்தும் இத்தளம். மிகச்சிறப்பான விளையாட்டு விமர்சனங்களை முன்வைப்பவர். கடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளுக்கான இவருடைய பதிவுகள் என் பேவரைட்.



அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

Saturday, October 30, 2010

பதிவுகல்





பதிவுகள் தெரியும். அது என்ன பதிவுகல்? பதிவில் கல்லா.. என நினைக்காதீர்கள். கல் என்பதை இங்கே கற்றல் என எடுத்துக்கொள்ள வேண்டும். வலைச்சரத்தில் இன்று இணையத்தை குறித்தும், மென்பொருட்கள் குறித்தும், இவை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் நான் அறிந்த பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.





பதிவர் வடிவேலன் அவர்களின் இந்த பதிவில் கணிணியில் நிறுவக்கூடிய இலவச மென்பொருட்கள் குறித்து அறிமுகம் தருகிறார்.. மேலும் இவரது தளம் முழுவதிலுமே இணைய தொழில்நுட்ப தகவல்கள் நிரைந்து கிடக்கின்றன.




இணையத்தில் தொழில்நுட்பத்தில் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையா.. எப்படி நம்மை அப்டேட் செய்து கொள்வது என தெரியவில்லையா.. பதிவர் கிரி அவர்கள் கொடுக்கும் இந்த பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.


மூட்டை மூட்டையாக பயனுள்ள தொழில்நுட்ப சரக்குகள் இந்த தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பிரித்து படித்து பயன்பெறலாம்.


பல மென்பொருட்கள் குறித்த தகவல்களையும், செய்திகளையும் அறியத்தருகிறது இந்த தள பதிவுகள்.


விக்கிபீடியா குறித்த பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் தருவது போல பதிவர் சூர்யகண்ணன் அவர்களின் இந்த வலைதளம் முழுவதிலுமே பயனுள்ள பதிவுகள்தான்.


நமது வலைதளத்தில் சமீபத்திய பதிவுகளுக்கான அனிமேட்டட் விட்ஜெட்டை நிறுவ சொல்லித்தரும் தமிழ் குமார் அவர்களின் இந்த பதிவை படித்து முயன்று பாருங்கள். அட்டகாசமாக இருக்கிறது.



சைபர் சிம்மன் அவர்களது இந்த வலைப்பூ தொழில்நுட்பம் சார்ந்த, இணையம் சார்ந்த பல பல பல அரிய தகவல்களை தந்து கொண்டே இருக்கும். விகடன் வரவேற்பரையிலேயே பாராட்டப்பட்ட தளம் இவருடையது.


நான் கொடுத்திருப்பது வெகு குறைவானவர்களின் அறிமுகங்களே என எனக்கு தெரியும். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தளங்களை பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்தினால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும்.


நாளை சந்திப்போம்





அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை




Thursday, October 28, 2010

படம் காட்டும் பதிவர்கள்





முன்பு பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் வானொலி நண்பர்களுக்கு நன்றி என்றுதான் போடுவார்கள். சமீபத்தில் பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரனில் இணையதள நண்பர்களுக்கும் நன்றி என சேர்த்து போட்டிருந்தார்கள். சினிமா வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் இணைய தளங்களின் பங்கும் கணிசமாக வளர்ந்து வருகிறது. வலைச்சரத்தில் நான்காம் நாளாகிய இன்று சில சினிமா சார்ந்த பதிவுகள் குறித்து அறிமுகம் கொடுக்கிறேன்.

சினிமா பதிவுகள் குறித்து பதிவிடும்பொழுது பதிவர் கேபிள் சங்கர் அவரது வலைப்பூவை விட்டு சொல்ல முடியாது. உடனுடக்குடன் பட விமர்சனங்கள், இளையராஜா இசை ரசிப்பு அனுபவம், சினிமா வியாபாரம் என தொடங்கி பார்க்கிங்கில் பதினைந்து ரூபாய் கொள்ளையடிப்பது வரை சினிமாவை இஞ்ச் இஞ்ச்சாக ரசிப்பவர்.

சினிமாவை விமர்சன பதிவுகளோடு கட்டுப்படுத்தி விடாமல் சினிமா சார்ந்த ஆய்வு கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா..? பதிவர் முரளிக்கண்ணன் அவர்களின் நீரோடை வலைத்தளத்தில் ஏராளமாய் காணலாம். பல்வேறு கால நிலைகளில் தான் அனுபவித்த வெள்ளித்திரையினை வெகு ரசனையாய் கூறுகிறார்.

பதிவுலகின் மற்றுமொரு வசதி நாம் அறிய வாய்ப்பில்லாத பிற மொழி படங்களில் பதிவர்கள் ரசித்து வியந்தவைகள் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவது.

பிற மொழி படங்கள் குறித்து சொல்கையில் பிள்ளையார் சுழி போட வேண்டியது பதிவர் வண்ணத்துப்பூச்சியார் எனப்படும் பட்டர்பிளை சூர்யாவிடம் இருந்து. உலக சினிமா குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகம் எழுதி வருகிறார். இவர் அனுபவித்து சொல்லும்பொழுதே படம் பார்த்த உணர்வு கிடைத்துவிடும்.

பதிவர் ஜெய் இயக்கி வரும் 'பிற மொழிப்படங்கள் தமிழில் தளத்தில்' தான் பார்த்து வியந்த படங்கள் குறித்த விரிவான விமர்சனங்களை உணர்பூர்வமாகவும் ரசனையாகவும் சொல்கிறார்.

பிற மொழிப்படங்கள் குறித்த ஒரு லைப்பரரியாக விளங்குகிறது பதிவர் கீதப்ரியன் நடத்தும் இந்த தளம். விரிவான கதையுடன் கூடிய இவரது விமர்சனங்களை படித்து விட்டு படத்தை பார்த்தால் மொழி புரியாதவர்களுக்கும் எளிமையாக விளங்கும்.

நீங்கள் தீவிர ரஜினி ரசிகரா... ரஜினியை மையமாக வைத்து என்ன செய்தி வெளிவந்தாலும் அது குறித்த ஸ்பெஷல் ரிபோர்ட் இந்த தளத்தில் வந்துவிடும். ரஜினி ரசிகர்கள் ஹோம் பேஜ் ஆகவே செட் செய்துக்கொள்ள கூடிய தளம்.

சினிமா விமர்சனம் படிக்கும்பொழுதே சந்தோஷமாக படிக்க வேண்டுமா.. வேறு வழியேயில்லை நீங்கள் பதிவர் ஜெட்லியின் நீ கேளேன் தளத்திற்குத்தான் செல்லவேண்டும். தியேட்டர் நொறுக்ஸ் என ஸ்பெஷல் இணைப்புடன் லூட்டியாய் விமர்சிப்பதில் இவர் கிங்,

பத்திரிக்கையில் வெளிவராத சினிமா சார்ந்த உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா...? அந்தணன் அவர்களின் அடிக்கடி தளமும் உதயசூரியன் அவர்களின் சுடச்சுட தளமும் இவ்வாறான பல நிகழ்ச்சிகளை சிதறுதேங்காய் போட்டுடைப்பது போல் போட்டு உடைக்கிறது. படித்து சிரித்து வயிறு வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.


மீண்டும் நாளை சந்திப்போம்.


அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

Wednesday, October 27, 2010

கிராபிக் டிசைனிங் கத்துக்கனுமா?




வலையுலகில் அறிவூட்டும் பதிவுகளை பகிர்வோர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறான பதிவுகளுக்கு ஹிட்ஸ் அவ்வளவாக வரவில்லையென்றாலும், இவர்களது பதிவுகள் காலம் கடந்தும் தேடப்படும் கட்டுரைகளாக நிற்கும்.  வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று அறிவூட்டும் பதிவுகளில் முதல்கட்டமாக கணிணி வரைகலையினை கற்றுத்தரும் பதிவுகள் குறித்து அறிமுகப்படுத்துகிறேன்.

கிராபிக் டிசைனர்கள் எனப்படும் வரைகலை பணியாளர்களின் முக்கிய மென்பொருளாக விளங்குவது போட்டோஷாப். இதை வைத்து திருமண ஆல்பங்கள் டிசைன் செய்யலாம், சாலைகளை அலங்கரிக்கும் (!) பிளக்ஸ் பேனர்கள் டிசைன் பண்ணலாம். வலைதளங்களுக்கு, மொபைல் போன்களுக்கு என இன்னும் பல்வேறு தளங்களில் இயங்கும் வரைகலை பணியாளர்களும் இந்த மென்பொருள் குறித்து அறியாமல் இருக்க மாட்டார்கள்.

இதனை நீங்கள் வீட்டிலிருந்தே கற்கலாம். ஒரு குழந்தைக்கு சொல்லித் தருவது போல பதிவர் வேலன் அவர்கள் போட்டோஷாப் குறித்தும் பல இதர கணிணி மென்பொருட்கள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.  அயராத இவரது முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.

எஸ்.கே இயக்கி வரும் மனம்+ வலைத்தளத்தில் அருமையான காரியம் செய்கிறார். அனிமேஷன் சாப்ட்வேரான அடோப் ஃபிளாஷ் குறித்த செயல்முறை கற்றல்களை பதிவிடுகிறார். முயன்று பாருங்கள் மிக எளிதாக இருக்கிறது. இவர் தொடர்ந்து எழுத வேண்டிக்கொள்கிறேன். பல பல பலருக்கு இவரது பதிவுகள் பயன்பட போகிறது.

போட்டோஷாப்பில் புகைப்படங்களை மெருகேற்றுவது குறித்த கலர் கரெக்ஷன் உள்ளிட்ட அருமையான வழிமுறைகளை சொல்லித்தருகிறார் பதிவர் மகேஷ். இந்த டெக்னிக்குகள் குறித்து இவர் குறைவாகவே பதிவிட்டிருந்தாலும் இவை ஆச்சரியப்படுத்தும் அசாதாரண வழிமுறைகள். இவர் இதுபோன்ற பதிவுகளை நிறைய தர வேண்டும் என்பது எனது ஆவல்.

போட்டோஷாப் உள்ளிட்ட இதர கணிணி பயன்பாடுகளுக்கு உதவக்கூடிய அறிவூட்டும் பதிவுகள் கற்போம் கற்பிப்போம் என்பதை கருத்தாக கொண்ட இந்த வலைதளத்திலும் கொட்டிக்கிடக்கிறது. படித்து பயன்பெறலாம்.

கற்றுக்கொள்ள எளிதாகவும், வரைகலையாளர்களுக்கு அவசியமானதாகவும் விளங்கும், அடோப் இன் டிசைன், அடோப் இல்லஸ்ட்டிரேட்டர் போன்ற மென்பொருட்கள் குறித்த செயல்முறை கற்றல் பதிவுகள் அனேகமாய் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்.  தெரிந்தவர்கள் இவை குறித்தும் பதிவிட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வரைகலை பதிவர்கள் யாரையேனும் நான் தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும்..


நாளை சந்திப்போம்


அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

Tuesday, October 26, 2010

பல்லு வௌக்கும் முன்னர் படிக்கும் பதிவர்கள்





வலைச்சரத்தில் இரண்டாம் நாளான இன்று நான் தவற விடாமல் தொடர்ந்து படிக்கும் பதிவர்கள் குறித்தும் அவர்களிடம் எனக்கு பிடித்த பதிவுகள் குறித்தும் அறிமுகப்படுத்துகிறேன்.  காலையில் எழுந்தவுடன் இவர்கள் ஏதாவது பதிவு போட்டிருக்கிறார்களா என பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையே. இவர்களை தொடர்ந்து படிக்கும்பொழுதில் அவர்களுடனே நாம் ஒரு ஹாஸ்டல் ரூம் மேட் போல் வாழும் உணர்வு கிடைக்கிறது.  ஆனால் இது அவர்களுக்கே தெரியாது. வலையுலகில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய விசித்திரமான நட்பு !


கேபிள் சங்கர்
போஸ்டர் கூட ஒட்டாத பட்ஜெட் படங்களை கூட தேடிப் பிடித்து பார்த்து நிறை குறைகளை அலசுவதில் இவருக்கு நிகர் நிகரே. சினிமாவிற்கு அடுத்தபடியாக அவ்வப்போது எழும் சமூக பிரச்சனை மற்றும் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பதிவுகளையும், தான் ரசித்த சாப்பாட்டு கடைகள் குறித்தும், பயண அனுபவங்கள் குறித்தும் சுவையாக பகிர்பவர்.


ஜாக்கி சேகர்
நம் குடும்பத்துள் ஒருவரை போன்ற உணர்வினை தரக்கூடிய பதிவுகளை தருவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. தான் பார்த்து ரசித்த பிற மொழி படங்கள் பலவற்றை தரம் பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இவரது நோஸ்டால்ஜியா வகை பதிவுகள் பல அருமையான டாபிக்குகளில் இவரது வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு சென்னைவாசியாய் சென்னையின் நிறை குறைகளை சுவைபட இவர் சொல்வது அழகு.


ஆதிமூலகிருஷ்ணன்
வாழ்வதற்கான முதல் காரணம் ரசனை என ஒரு ரசிகனாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பும் இவரது பதிவுகள், நம் வாழ்வில் காண்பனவற்றின் அழகான பிரதிபலிப்பாக இருக்கும். ஆஹா.. இப்படியும் ரசனையாக சொல்ல முடியுமா என ஆச்சரியங்களை ஏற்படுத்துபவர்.


பரிசல்காரன்
நிகழ்வுகளை சொல்வதை நகைச்சுவையாகவும் சிம்பிளாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் சொல்ல முடியுமா.. இவரால் முடியும்.  வார்த்தைகளோடு இவர் விளையாடுவது எப்பொழுதுமே எனக்கு ஆச்சரியம்தான்.  அன்றாட நிகழ்வுகளை அழகாக தொகுக்கும் இவரது டைரிக்குறிப்பு ஸ்டைல் பதிவுகளை ஒருமுறை படித்தாலே இவருக்கு விசிறியாகிவிடுவோம்.

உண்மைத்தமிழன்
சினிமா உலகினர், அரசியல் உலகினர் கூட அறிந்திராத தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்ட கவர் ஸ்டோரியோடு விரிவாய் தருவதில் இவர் வல்லவர். 

சரவணகுமரன்
சுவாரஸ்யமான கட்டுரைகள் இவர் வலைப்பூ எங்கும் நிறைந்திருக்கிறது, நிகழ்வுகளை மென்மையாய் மெல்லிய நகைச்சுவை இழையோட தருபவர். 


எம்.எஸ்.வி. முத்து
அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சமூக அக்கறை கொண்ட பதிவுகள் நிறைந்தது எம்.எஸ்.வி முத்து அவர்களின் குரல்வலை. இவரது திகில் கதைகளுக்கு ரசிகன் நான்.


நாளை தொடர்கிறேன்..

Monday, October 25, 2010

வரம் தரும் வலைச்சரம்







ஒரு ஆச்சர்யமான உண்மையை சொல்லப்போனால், "என்னடா வலைச்சரத்தில் எழுத நம்மை அழைக்கவில்லையே" என நான் சமீபத்தில்தான் யோசித்தேன்.  நாம் எவை குறித்து நம் எண்ணங்களை செலுத்துகிறோமோ, அவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டு அவைகளை கையில் கிடைக்கபெறுகிறோம் என்கிற பிரபஞ்ச விதிப்படி நான் யோசித்த இரண்டே வாரங்களில் ஆனந்த அதிர்ச்சியாக சீனா ஐயா அவர்களிடமிருந்து மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. 


இரண்டு ஆண்டுகளாக வலைமனை என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறேன். அதிகமாக நகைச்சுவை சார்ந்த பதிவுகளே இருக்கும். முதன் முதலில் ஒரு நாள் ஐ.பி.எல் குறித்து போட்டோ கமெண்ட்ஸ் போடப் போய் அதற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.  மற்ற போதைகளை போல் அல்லாமல் பாராட்டு போதை மனிதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தது. பின்னூட்டங்கள், ஓட்டுகள் எல்லாம் தந்த உற்சாகத்தில் தொடர்ந்து நகைச்சுவை போட்டோ கமெண்டுகள் அதிகம் பதிவிட்டேன். பல நண்பர்களின் அறிவுறுத்தலின்படி இந்த வருடம் அதிகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 


நான்-பிக்ஷன் வகை புத்தகங்களை படிப்பதில் எனக்கு அலாதியான பிரியம். சமீபகாலங்களில் தொடர்ச்சியாக புத்தகங்கள் குறித்து  பதிவிட்டு வருகிறேன். 


வலைச்சர அறிமுகத்தில் எனது வலைப்பூ குறித்த சுட்டிகள் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு பதிவர்களை பற்றி குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.


எனக்கு அறிமுகமான முதல் வலைப்பூ சிங்கப்பூரை சார்ந்த பதிவர் எம்.எஸ்.வி முத்து அவர்களின் குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன். சமூக அக்கறை கொண்ட பதிவுகள், அறிவியல் சார்ந்த பதிவுகள் தருவதில் இவர் நிபுணர்.


பதிவுலகம் பற்றிய விழிப்புணர்வையும், திரட்டிகளில் இணைப்பது போன்ற இதர வலைப்பூ விஷயங்களையும் அறியத்தந்தவர் அண்ணன் கேபிள் சங்கர். ஏதாவது சந்தேகம் என்றால் எப்போது போன் செய்தாலும் விளக்கி சொல்வார். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் புதுசு பழசு என பார்க்க மாட்டார். பல பதிவர்கள் உயரம் செல்ல இவர் ஸ்பிரிங் பேட் போல செயல்படுபவர்.


இனி வலைச்சர அறிமுக பதிவில் எனது வலைப்பூ குறித்த சில சுட்டிகள்.


எனது வலைப்பூவில் எனக்கு பிடித்த பதிவுகள்






சென்னை சூப்பர் கிங் விஸ்வநாதன் ஆனந்த்







மறையவில்லை மைக்கேல் ஜாக்சன்




மறைந்தது நாகேஷ் மட்டுமல்ல




வலைமனை ஹாட் சிப்ஸ்



எனது வலைப்பூவில் அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்






தமிழக அரசு வழங்கும் எந்திரன்





ஐபில் 2010 போட்டோ கமெண்ட்ஸ்




ஜுஜு அனிமேஷனில் சுறா பட விளம்பரம்




சென்னையில் பயங்கரம் - பதிவர்கள் அட்டகாசம்




எந்த அளவிற்கு ஒரு விஷயத்தை பெறுகிறோமோ அதே நேரத்தில் அதை திருப்பியும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் சீரான ஓட்டம் நம்முள் எப்பொழுதும் பொங்கிப் பெருகி பாய்ந்து கொண்டிருக்கும் என்றொரு தத்துவ நியதி உண்டு. நிறைய நண்பர்களின், முகம் தெரியாத வாசகர்களின் ஓட்டுக்களை, பின்னூட்டங்களை, வாழ்த்துக்களை, பாராட்டுகளை பெற்றிருப்போம். ஆனால் அதே அளவு பிறர் குறித்த அறிமுகங்களை, அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய வாழ்த்துக்களை, பாராட்டுக்களை திருப்பிக்கொடுக்க வழிவகை செய்யும் இந்த வலைச்சர வாரம் ஒரு வரம் தரும் வரப்பிரசாதம்.


வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் சீனா ஜயா அவர்களுக்கும், இதர வலைச்சரக்குழுவினர் கயல்விழி முத்துலட்சுமி மற்றும் பொன்ஸ் பூர்ணா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


நாளை சந்திப்போம்.



அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

Sunday, October 24, 2010

நன்றி விசா ! நல்வரவு சுகுமார் சுவாமிநாதன்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற விசா, தனது கடமையினை சரிவர நிறைவேற்றி மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஐந்து இடுகைகள் இட்டு, ஏறத்தாழ அறுபத்தைந்து மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள சுகுமார் சுவாமிநாதனை வருக வருக என வலைச்சரக் குழுவினர் சார்பினில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவர் நினைப்பவை நடப்பதில்லை என மகிழ்கிறார். ஏனெனில் நடப்பவை எல்லாம் நினைத்ததை விட நன்றாகவே நடக்கின்றனவாம். இவர் வலைமனை என்ற பதிவினில் எழுதி வருகிறார். இவருக்கு 235 பதிவர்கள் விசிறிகளாகி, இவரைப் பின் தொடர்கின்றனர். இவர் கடந்த பத்தொன்பது மாதங்களாக ஏறத்தாழ 130 இடுகைகள் இட்டிருக்கிறார். அவற்றில் அதிக இடுகைகள் கிரிக்கெட், ஐபிஎல், சினிமா பற்றியவைதான்.

கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர் ஒரு செய்தித்தாளீல் வரைகலை பணியாளராகப் பணி புரிந்து வருகிறார். பொழுது போக்காக நான் பிக்ஷன் புத்தகங்கள் வாசிப்பதையும் இசை கேட்பதையும் வழக்காமாகக் கொண்டிருக்கிறார்.

சுகுமார் சுவாமி நாதனை வருக! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக ! என மறுபடியும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் சுகுமார் சுவாமி நாதன்
நட்புடன் சீனா


Saturday, October 23, 2010

எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஞாயம்.

சமீபத்தில் மாஜி எம்.எல்.எ ஒருவர் வருமான வரி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் போதைபொருள் வழக்கும் நிலுவையில் உள்ளதாம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் போலீஸிடமிருந்து தப்பித்து சுதந்திரமாக நடமாடியிருக்கிறார். இதில் உச்சம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டு போலீஸின் பிடியிலிருந்து தப்பித்த ஒரு கைதி தொடர்ந்து எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது தான்.
எம்.எல்.ஏ வின் பென்ஷனை நிறுத்த அரசுக்கு அதிகாரமோ சட்ட வழிமுறையோ இல்லையாம்.

அதே சமயம் ஒரு அரசாங்க ஊழியன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டால் அவரது ஊதியம் பென்ஷன் என்று சகலமும் நிறுத்தப்படுகிறது. உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையின் பெயரில் அவர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதே போல் அரசு துறையில் பணியாற்றும் எவரேனும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்.

என் குடும்ப நண்பர் ஒருவர் அரசு ஊழியர். அதிகாரிக்கு கார் ஓட்டியாக பணியாற்றி வந்தார். ஒரு குடும்ப தகறாரில் இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொலை முயற்சி என்றும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். வழக்கு நிலுவையில் உள்ளது. இன்னும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படவில்லை. அதே சமயம் கைது செய்யப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று வாடகை கார் ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் முன்பே அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தின் சட்ட வழிமுறை வகை செய்கிறது.

ஆனால் ஒரு மாஜி எம்.எல்.ஏ குற்ற வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஒழிய அவரது பென்ஷன் தொகையை நிறுத்தி வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லையாம்.

இது இரட்டை குவளை முறையை விட அப்த்தமானதா இல்லையா?

இனி அறிமுகங்கள்:

கம்ப்யூட்டரில் தண்ணீர் வரவைக்க வேண்டுமா?


சுனாமி பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட். ரோஸ்விக் சென்னை வந்திருந்தபோது சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

ஊர்காசு. பழைய நினைவுகளை கிளறும் கவிதை.

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்


வாத்தியார் சொன்னா கேட்டுக்கணும். இந்த இடுகையின் கடைசி வரி எனக்கு புரியவேயில்லை.


லஞ்சம் வாங்க புது டிப்ஸ் ரெடி. லஞ்சம் வாங்குமுன் குளித்து சுத்தமாக இருப்பது நல்லது. காரணம் மாட்டிக்கொண்டால் ஓரிரு நாள் குளிப்பது கஷ்டம் தான்..


தென்கொச்சி சுவாமிநாதன் இல்லாத குறையை தீர்த்துவைக்கும் இவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. கவிதையே கவசம்.அவரைப்பற்றி இன்று ஒரு தகவல்

Friday, October 22, 2010

Popular Among The Popular

நான் ரசித்த சில பிரபலங்களின் இடுகைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். நித்தியானந்தா பற்றிய நித்திய நினைவுகளை சாரு தன் நித்திரையிலும் பிளாகிலும் அழித்துவிட்டதால் அந்த நவரச பதிவுகளை இங்கே அறிமுகப்படுத்த முடியாத கடமை தவறிய பதிவராக நான் வெட்கப்படுகிறேன்.

இவை தற்போது நினைவிலிருந்த பிரபலங்களின் பதிவுகள் மட்டுமே. இன்னும் நான் ரசிக்கும் நிறைய பிரபலங்கள் நிறைய பிரபல பதிவுகள் மிச்சமிருக்கிறதென்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

**********

நான் தொடர்ந்து பலமுறை ஒரு பதிவை வாசித்திருக்கிறேன் என்றால் அது சுஜாதா பற்றி உண்மைதமிழன் எழுதிய இந்த பதிவு தான். உண்மையில் இந்த கட்டுரையை முதல்முறை வாசித்துமுடித்தவுடன் உடனடியாக அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் போல் இருந்தது. அவரது பதிவுகள் நீளமாக இருப்பினும் இதுவரை போர் அடித்ததில்லை.

என் இனிய சுஜாதா

*******

உங்களில் யார் அடுத்த நயன்தாரா என்று வளரும் நடிகைகளான புடவைகட்டிய வெள்ளரி பிஞ்சு தமன்னாவிடமும் , புடவையே கட்டாத புண்ணிய புதல்வி அனுக்ஷாவிடமும் வேறு வழி இல்லாமல் ஸ்ரேயாவிடமும் கேட்டு தொலைத்தபோது எல்லோரும் கோரஸாக அடுத்த நயன்தாரா யாருன்னு தெரியல ஆனா அடுத்த ரமலத் நயன்தாரா தான் என்றார்கள்.



*********

எனக்கு அந்த கதை ஞாபகத்தில் இருக்கிறது. கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறுவன்...ஒரு டெலிபோன்....காண்டம் வாங்கிவிட்டு வருவான்....எப்போது அது எழுதப்பட்டது. தேதி தெரிந்தால் தேடி பார்க்கலாம்.
எஸ்...எஸ்..வந்துவிட்டது. என் நண்பர் ஒருவருக்கு கூட மெயில் அனுப்பியிருந்தேன். சென்ட் ஐட்டம்ஸில் தேடி தேதியை கண்டு பிடித்து பதிவை நெருங்கிவிட்டேன்.
இதோ பதிவு பத்து - பத்து.

*********
சுஜாதா இல்லாத முதல் புத்தாண்டு - 2009. சுஜாதா இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார்?

*********

இந்த பதிவை படித்துவிட்டு நானும் என் நண்பர்களும் மகாபலிபுரத்திலும் திருவான்மியூர் ஜங்க்ஷனிலும் நின்றுகொண்டு ஈ.சி.ஆர்.க்குள் நுழையும் பஸ் ஆட்டோ லாரி கார் இப்படி சகல வாகங்களையும் நிறுத்தி வயது பெண்களை எல்லாம் இறக்கிவிட்டு சமூக சேவையில் ஈடுபட்டோமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது நான் கூட இந்த பதிவை படித்துவிட்டு ஒரு கதை எழுதியிருந்தேன். ஈ.சி.ஆரின் மர்மங்களை ஈஸியாக புரிந்துகொள்ள.

ஐய்யோ நான் லோக்கல் இல்லீங்கோ அதுக்கும் கீழ தர டிக்கெட்!!!

*********

நீ சிரித்தால் சிம்லா என்றேன் தோழியிடம். அவள் கோபித்துக்கொண்டு போய்விட்டாள். பிறகு தான் தெரிந்தது. தோழியின் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அழகிய வடநாட்டு பெண்ணின் பெயர் சிம்லா என்று. இப்போது சிம்லாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் நீ சிரித்தால் காவேரி என்று.


*************

சிலர் எழுத்துக்கூட்டி எழுத ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே மேதாவி எழுத்தாளர் ஆகிவிடவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். வார்த்தை பிரயோகங்கள் பயமுறுத்தும்.
உண்மையான மன உணர்வுகளை பகிரவும் புரிந்துகொள்ளவும் மேதாவித்தனமான மொழி அவசியமில்லையே. காக்கை - நெகிழ்வு.

*************

Wednesday, October 20, 2010

முதலாளிகள் ஒழிக!!!

வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய வீட்டில் எச்சில் பாத்திரம் கழுவுவதை விட அலுவலகங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை அவர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கே அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.

வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதென்பது எனக்கு கடுகளவும் பிடிக்காத ஒன்று. முடிந்தவரை என் துணிகளை நானே துவைத்துக்கொள்வேன் அல்லது எந்திரத்திடம் சமர்ப்பித்துவிடுவேன். பெரும்பாலானவர்களுக்கு வீட்டு வேலைக்காரிகள் மேல் அதிர்ப்தியே மிஞ்சுகிறது. காரணம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதில் தொடங்கி சம்பளம் கடன் வாங்குவது வேலைகளில் பொறுப்பின்மை நம்பகத்தன்மை குறைபாடு என்று ஏராளம்.

என் நண்பர் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்தாள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வாள். வேலையும் ஒழுங்காக செய்வதில்லை. மேலும் சம்பளம் குறித்து அடிக்கடி சண்டை போட்டும் வந்தாள். நண்பரும் மனைவியும் வேலைக்கு போவதால் வேலைக்காரியை நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் ஏதோ ஒரு அல்ப சண்டை பெரிதாகி வாய்ச்சவடாலில் முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நண்பருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வேலைக்கார அம்மையாரின் கணவர் ஏதோ இயக்கத்தில் இருக்கிறார் போலும். தன் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாய் என் நண்பன் மீது பொய் புகார் கொடுத்துவிட்டார்கள். புகார் குறித்து நடைப்பெற்ற கட்டப்பஞ்சாயத்தில் இருபதாயிரம் வரை பேரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறைய சம்பவங்கள். ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள் என்று நாம் கருதும் மேன்மைபொருந்தியவர்களின் அதிகாரம் இப்படி ஓங்குகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு ஆள் வைப்பதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.

அதே நேரம் அப்பாவியாய் பிழிய பிழிய வேலை வாங்கப்படும் வேலைக்காரிகள் சில சமயம் முதலாளியின் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகி வதை படும் அவலமும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது.

வீட்டு வேலை செய்பவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினராய் இருப்பவரை வேலைக்கு அமர்த்தும் போது சங்கத்து விதிகளை மதித்தாக வேண்டும். இல்லையென்றால் என் சங்கத்து ஆளை அடித்தது யார் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் நேர்மையாக உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்களை நான் அறிவேன். என் வீட்டுக்கு பால் போடும் அம்மாவின் மகன் என்ஜினியரிங் படிக்கிறான். அவர்கள் யார் மீதும் பொய் புகார் கொடுத்து ஏமாற்றி பணம் கரந்து தன் மகனை படிக்க வைக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பி தன் அடுத்த தலைமுறையை ஒரு படி மேலே உயர்த்திவிடவேண்டும் என்ற ஒரே முனைப்போடு உழைத்திருக்கிறாள்.சாதித்திருக்கிறாள்.

முன்பெல்லாம் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கு சென்றுவிடுவதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. படிப்புக்கேற்ப ஊதியமும் பதவியும் உயர்த்தி தரப்படுகிறது. ஞாயமான சம்பளம் பாதகமற்ற ஓர்க் கல்சர் என்று பெண்கள் பலரும் இவ்வேலைக்கு வருகிறார்கள்.

சிலர் எழுதக்கூடும் "பெண்கள் சுதந்திரமாக முதலாளி அம்மாவின் ஆடைகளை துவைத்து காற்றோட்டமாக அக்கம்பக்கத்து வீட்டு கதைகள் பேசியபடி கொடியில் உலர்த்தி மகிழ்வதும் முதலாளியின் கழிப்பறையை இனிமையான திரையிசை பாடலை இசைத்தபடி கழுவிவிட்டுக்கொண்டும் திரிந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள் இன்று கண்ணாடி கட்டடங்களுக்குள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இரண்டு கையில் டிரேயை தூக்கிக்கொண்டு போகிற போது அமெரிக்க ஏகாதிபத்திய விலங்கு அவர்கள் கைகளை பிணைத்திருக்கிறது. ".

அடுத்து வீட்டுவேலைக்காரிகள் பற்றிய இலக்கியம் வரும். அதிலே அந்த காலத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாகவும் சொர்க்கமாகவும் பூந்தோட்டமாகவும் இருந்ததாக எழுதி இப்போது கண்ணாடி கட்டிடங்களுக்கு அவர்கள் சுருண்டுவிட்டதாக அழகிய தமிழில் பிழிய பிழிய வடிக்கப்பட்டு வெளிவரும். நிறைய கற்பனைகள் கொடுக்கும் கரு இது. யாரேனும் தொடங்கலாம்.

அமெரிக்க தொழிற்சாலைகள் வரக்கூடாது புதிய தொழில்கூடங்கள் தமிழ்நாட்டில் துவங்கக்கூடாது ஐ.டி. கம்பெனிகளால் விலைவாசி ஏறுகிறது அதனால் எல்லா ஐ.டி. கம்பெனியையும் இழுத்து மூடு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவனுக்கு சொந்தமாக கார் இருக்கிறதா உடனடியாக கார் தொழிற்சாலைக்கு சீல் வை என்று ஒவ்வொருவரும் தொழிற்புரட்சிக்கு எதிராக கிளம்புவார்களானால் வேலைக்காரிகள் இன்னும் பணக்காரர்களின் உள்ளாடையை துவைக்கும் கௌரவமான இந்திய முதலீட்டில் இயங்கும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டிவரும்.

ஒருவர் என்னிடம் சொன்னார். வெறும் ஆறாயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு அந்நிய நாட்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்களாம். அதன் முதலாளி நம்மை பார்த்து "ஆறாயிரம் ரூபாய்க்கு கூட வக்கில்லாம தானே என் கிட்ட வேலைக்கு வந்த?" என்று கேட்டால் நாம் எங்கே கொண்டு போய் நம் இந்திய திருமுகத்தை வைத்துக்கொள்வோம். எல்லோருக்கும் இந்திய அரசாங்கம் வேலையோ அல்லது அலவன்சோ கொடுக்க முடியுமா?

தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டிய நாம் சில சமயம் முதலாளிகளே இருக்கக்கூடாதென்றல்லவா போராடுகிறோம். போபால் விஷவாயு விபத்தில் மிக குறைந்த தண்டனை அதுவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது குறித்து எரிச்சலடைகிறோம். முதலாளிகள் லாபத்தை மட்டுமே தங்களுக்கு வரவாய் வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மேல் கருணை காட்டவில்லை என்று கோபப்படுகிறோம். இனி மேல் முதலாளியே இருக்கக்கூடாதென்று போர்க்கொடி தூக்குகிறோம். அடப்பாவமே. உலகிலேயே மட்டமான சேப்டி ஸ்டாண்டர்ட்ஸோடு இயங்கும் ஒரு மாபெரும் திறந்தவெளி தொழிற்சாலை - இந்திய ரயில்வேஸ். எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள். சொல்லுங்கள். எத்தனை மந்திரிகள் பதவி விலகினார்கள். எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். விபத்து, விபத்து தானே என்று இழப்பீடு வழங்கியதும் பிழைப்பை பார்த்துக்கொண்டு போய்விடுகிறோமே ஏன்? அது பொதுத்துறை. உங்களின் ஆசையும் எல்லாம் பொதுத்துறை ஆகிவிடவேண்டும் என்பது தானே. பிறகு ரயில்வே கக்கூஸ் போல் இந்த தேசமே நாற்றமடிக்குமே பறவாயில்லையா?

போபால் விஷவாயு கசிவு ஒரு விபத்து. ஒரு விபத்துக்கு என்ன காரணமாக இருக்க முடியும். அறியாமையினாலோ அஜாக்கிரதையாலோ தான் விபத்து நேரிடும். அதற்கான தண்டனை வழங்கிவிட்டது நீதிமன்றம். ஆனால் அரசாங்கம் அந்நிறுவனத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்கும் முன்பே விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசித்து அதிக இழப்பீடு வழங்கினால் தான் இந்தியாவில் தொழில் செய்ய முடியும் என்று அக்ரிமென்ட் போட்டிருப்பார்களேயானால் ஞாயமான இழப்பீடுத் தொகை பெற்றிருக்க முடியும். மற்றபடி முதலாளியை தூக்கில் போடு ஓபாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரி என்பதெல்லாம் சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாது.

சட்டத்தையே மாற்றவேண்டும் என்பீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு வேளை நாளை காரில் சென்றுகொண்டிருக்கும்போது எவனாவது வேண்டுமென்றே குறுக்கே விழுந்து இறந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூக்கில் போடுவார்கள். ஞாயம் நீதி நேர்மை வென்றுவிடும்? சமத்துவம் நிலைநாட்டப்படும். சர்வாதிகார சட்டத்தில் தான் அதற்கு சாத்தியமிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரிய உண்மை.

இன்று ஐ.டி. துறை பெரிய புரட்சி என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். நாம் இங்கே செய்வது என்ன? அமெரிக்காகாரன் தின்ற தட்டை மலிவு விலையில் கழுவி வைக்கிறோம்.

இதை கேள்விப்பட்டவுடன் அவர்கள் "இது என்ன மேட்டிமை அதிகார வர்க்கத்தின் கொடுங்கனவு. அமெரிக்கர்கள் தின்ற தட்டை நாம் மலிவு விலையில் கழுவுவதா? உடனடியாக எல்லா ஐ.டி. கம்பெனி மீதும் கல்லெறிந்து அமெரிக்க நிறுவனங்களை அடித்து நொறுக்குவோம் வாரீர் " என்று போராடக்கூடும். அப்படி போராட முன்வரும் போராளியே இந்தியாவில் கழுவ தட்டே இல்லையே அதை பற்றி என்றேனும் யோசித்தாயா நண்பா?

நாம் அயல் நாட்டுக்கு நம் தட்டுகளை அனுப்பவேண்டாம். குறைந்தபட்சம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் அளவிற்கு இந்தியாவில் கழுவ தட்டுகள் இருக்கிறதா?

வீடு கட்டுகிறானே அவனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?
நெசவு செய்பவனுக்கு உடுத்த துணி இருக்கிறதா நோய்களை குணமாக்கும் டாக்டருக்கு நோயே இல்லையே போன்ற சித்தாந்தங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் அடிமைத்தனமும் இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் குறைந்துவிட்டது.

இந்தியாவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்தால் சராசரியான லாபம் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முதலாளிகள் கொளுக்கிறார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? முதலாளிகள் மேல் அல்ல. ரயில்வே டாய்லெட் நாற்றமடிக்க யார் காரணமோ அவர்களே தான் முதலாளிகள் கொளுக்கவும் காரணம்.

அம்பானி வீடு கட்டினால் அவருக்கு எதிராக துப்புவதை விட அவர் வீடு கட்டும் அளவுக்கு பணம் எப்படி சம்பாதித்தார்?நேர்மையாக சம்பாதித்தாரா? குறுக்கு வழியில் சம்பாதிக்கவிட்டது யார்? இனி மேல் இப்படி ஒரு குறுக்கு வழி அம்பாசமுத்திர அம்பானி வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?காங்கிரஸ் அரசு கவிழ வேண்டுமா? அடபோயா.

முதலாளிகளை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பதும் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் "முதலாளிகளுக்கு சொம்பு தூக்கும் மன்மோகன் ஆட்சியில் தான் இந்த அவலம்" என்று வெறும் மனிதர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நம் இந்திய ஜனநாயகத்தில் சட்டத்தில் நடைமுறையில் Frameworkல் எங்கே கோட்டை விடுகிறோம் என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய யாரேனும் போராடுவார்களேயானால் நான் முதல் ஆளாக நின்று அகிம்சை வழியில் கொடி பிடிக்க தயார்.

உண்மையில் வறுமையையும் பிணியும் போக தொழில் முன்னேற்றம் அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அது பெருமளவு களைந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். முதலாளிகளின் சுரண்டலை தடுப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் நம் போராட்டம் ஒளியேற்றும் மெழுகு. இல்லையேல் அதுவே சிதை மூட்டும் கொள்ளி.

அறிமுகங்கள்


பூமி வெப்பமாதல் குறித்து காவேரி கணேசின் பக்கங்கள்


வருடங்களுக்கு கூட தமிழில் பெயர் இருக்கிறது தெரியுமா?


தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும்....

களவாணித்தனமாய் கல்வி விற்போம்/வாங்குவோம் வாருங்கள்.

எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும் - கடிக்க முறுமுறுக்க.

கடவுளெனும் தொழிலாளி - சீரியஸ் போலீஸ்.

Tuesday, October 19, 2010

கள்ளக்காதல் - வலைச்சரம் #2

கள்ளக்காதல் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். காதலென்று வந்த பிறகு கள்ளக்காதல் என்ன நல்ல காதல் என்ன?

அறுபது வயதுக்குட்பட்ட யார் கொலைசெய்யப்பட்டாலும் காவல் துறை கள்ளக்காதல் என்ற கோணத்தில் விசாரிக்க தவறுவதேயில்லை. பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு கள்ள உறவுகளே காரணமாய் இருப்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.

தினத்தந்தியில் தொடர்ந்து கள்ளக்காதல் செய்திகளை விரும்பி வாசிக்கும் டீ கடை டக்கால்டி ரொம்ப வருத்தப்படுகிறார். சமுதாயம் சின்னாபின்னமாகிவிட்டதாம். அழுகிறார். பெண்கள் எல்லாம் ஒழுக்கம் தவறி தொட்டு தாலிகட்டிய கணவனையே கொன்றுவிடுவதாய் வேதனைப்படுகிறார்.

இப்படி வேதனைப்பட்டு புலம்புகிறவர்களை நாம் இரண்டு கோஷ்டிகளாக பிரிக்கலாம்.

1. கள்ளக்காதலை கண்டு புலம்புகிறவர்கள்.
2. கள்ளக்காதலால் விளையும் கொலைகளை கண்டு புலம்புகிறவர்கள்.

இரண்டும் பிரிவுக்கும் கோட்ஸேவுக்கும் காந்திக்குமான வேறுபாடு உண்டு. ஹிட்லருக்கும் மண்டேலாவுக்குமான வேறுபாடு.

கள்ளக்காதலில் ஈடுபடுவர்களை பாவிகள் என்று நீங்கள் கருதினால் நீங்கள் ஒரு வடிகட்டிய பாஸிஸ்டு.

இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கள்ளக்காதல் பற்றி எப்போதாவது பேச முற்பட்டால் முதலில் இந்த இரண்டில் நீங்கள் எந்த கோஷ்டி என்று முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக ஒருவனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அவன் அலுவலகத்தில் ஒரு பெண் (வனிதா) சுமாராகத்தான் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு அவள் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வந்துவிடுகிறது. வரக்கூடாதென்று சொன்னால் நீங்கள் ஒரு பாஸிஸ்டு. வரும். ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கும்போது ஈர்ப்பு வரும். வரவே இல்லை என்றால் நீங்கள் சித்த வைத்திய சாலையை அணுகுவது உசிதம்.

வந்தும் அதன் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு தொடராமல் இருப்பவன் புத்திசாலி. - ஒதுங்கிக்கொள்ளலாம்.

பின்விளைவுகளை சமாளிக்கத் தெரிந்தவன் பாக்கியசாலி. -
இறங்கி கும்மி அடிக்கலாம்.

சரி ஹீரோவுக்கு வனிதா மேல் ஈர்ப்பு. அவள் போகும்போது வரும்போது கவனிக்கிறான். அவளையே பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவளோடு பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இரவில் தன் மனைவியோடு புணரும்போது அவளையே நினைத்துக்கொள்கிறான். இதுவரை ஹீரோவுக்கும் வனிதாவுக்கும் இடையே இருப்பது கள்ளக்காதலா?

நெவர்.

அடுத்து ஒரு படி மேலே. வனிதாவும் ஹீரோவை கவனிக்கிறாள். வனிதா திருமணம் ஆகாதவள். ஹீரோ மேல் அவளுக்கும் ஒரு ஈர்ப்பு வருகிறது. இருவரும் கேபிட்டேரியாவில் சந்தித்து பேசுகிறார்கள். நம்பர் பரிமாறுகிறார்கள். செல்போனில் பேசிக்கொள்கிறார்கள். அவன் அவள் அழகை வர்ணிக்கிறான். அவள் அதையே விரும்புகிறாள். இருவரும் ஒரு நாள் சினிமாவுக்கு போகிறார்கள். அவன் அவளுக்கு பூ வாங்கிக்கொடுக்கிறான். அவளும் அதை ஒரு மனதாக தலையில் வைத்துக்கொள்கிறாள் - திருமணம் ஆன ஆணோடு ஒரு பெண்ணுக்கு என்ன சகவாசம் என்று கேட்பவரா நீங்கள். நீங்களும் ஒரு பாஸிஸ்டு தான்.
தன் மனம் விரும்பிய எந்த ஒரு ஆடவனோடும் இச்சை வளர்த்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.

இப்படியே அவர்களது தொடர்பு வலுவடைந்து தனியாக சினிமா பீச் என்று சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சினி ஞாயிறுகளில் ஹீரோ வனிதாவுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். ஹீரோ வனிதாவை குஷிப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் . இப்போது இது கள்ளக்காதலா? லேசா. லைட்டா?.ஓ.கே.

இனி ஹீரோ மனைவி வனிதா இவர்கள் மூவரும் கள்ளக்காதல் கொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

முதலில் வனிதா கொலைசெய்யப்படுகிறாள். வனிதாவை ஹீரோ அல்லது அவனது மனைவி கொன்றிருக்கவேண்டும். முதலில் ஹீரோ வனிதாவை கொன்றுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

ஹீரோ எதற்காக கொலை செய்வார்?

பொதுவாக இரண்டு காரணங்களுக்காக கொலைகள் செய்யப்படுகின்றன. ஒன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள இன்னொன்று பழி வாங்க.

#1 - பாதுகாப்பிற்காக கொலை செய்தல்.

மனைவிக்கு விஷயம் தெரியாது. ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை வனிதா ஒரு நாள் கண்டுபிடிக்கிறாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறாள். ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் ஹீரோ திருமணமானவன் என்று தெரிந்தும் வனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாரு வற்புறுத்துகிறாள். அதே சமயம் தன்னுடைய இந்த உறவு வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார் ஹீரோ (த்தா...அஞ்சுறாராமா? ஏன் அவ கூட சுத்தும் போது அஞ்சலையா? என்று கேட்பவரா நீங்கள். நீங்கள் ஒரு அறைகுறை பாஸிஸ்டு.கூடிய விரைவில் முழு பாஸிஸ்டு ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது).

அல்லது வனிதா ஹீரோவோடு சுற்றிய புகைப்படங்களை கைப்பற்றி அதை ஹீரோவின் மனைவிக்கு அனுப்பப்போவதாக பயமுறுத்தலாம். பிளாக் மெயில் செய்யலாம்.

இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் ஆபத்தில் சிக்கிவிட்டதாக ஹீரோ உணர்ந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை செய்யலாம்.

இங்கும் ஒரு முரண். பணக்காரர்கள் இதே ரீதியில் கொலை செய்வதுண்டு. ஆனால் தப்பித்துவிடுவார்கள். சட்டம் நம் கையில். ஆனால் ஏழைகள் அழுதபடியே சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கதற கதற தீர்ப்பிடப்படுவார்கள். நாம் தினத்தந்தியில் படித்து (ஒக்கால படுத்த இல்ல சாவு) என்று சபிப்போம்.

மேற்சொன்ன சினாரியோவில் கள்ளக்காதலுக்காக கொலை நடந்ததா? ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை நடந்ததா? ஆபத்தை ஏற்படுத்தியது கள்ளக்காதல் அல்ல. நமது மனது. மூளையை நம்பி வாழாமல் மனதையும் சென்டிமென்டையும் நம்பி ஏமாந்து போகும் தப்பு தப்பாக முடிவெடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன மனம். அந்த மனம் தான் வனிதாவை திருமணத்திற்கு வற்புறுத்த வைத்தது. அவள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அல்லது இதுவரை செய்தது பாவம் என்று ஒதுங்கி வாழ்ந்திருக்கலாம்.

போட்டோவை காட்டி வனிதா மிரட்டியிருந்தால் ஹீரோ என்ன செய்திருக்க முடியும்?

கிரைம். இங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கள்ளக்காதல் என்பது இயல்பான ஒன்று. அதை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியாதவர்கள் தொடர்கிறபோது புத்திசாலித்தனமாக கையாளவேண்டும். கள்ளக்காதல் பற்றிய போதிய புரிதலும் அதன் எல்லைகளும் தெரியாமல் வெறும் மனதைக்கொண்டு தங்களை இயக்கி மூளையை கழட்டி வைத்துவிட்டு செயல்படும் சிலர் இப்படி தங்களையும் எதிராளியையும் அவர்களின் தலைமுறையையும் துயரத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு.

இங்கும் பணம் பிரதானம். ஏழைகள் அறியாமையில் ஏதோ ஒரு ஆத்திரத்தில் படாரென கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் தண்டனை அனுபவித்து தங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கி தங்களை சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்குகிறார்கள்.

முன்பெல்லாம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லிப்பார்த்தார்கள். இப்போது பாதுகாப்போடு உறவுகொள் என்கிறார்கள். கள்ளக்காதலுக்கும் அதே தான். பாதுகாப்போடு உறவு கொள். இல்லையா அதிலிருந்து வெளியே வர கொலை மட்டுமே தீர்வல்ல. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் இல்லை என்று ஸ்லாகிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். அங்கே கலாசாரம் என்ற கன்ட்ராவி கிடையாது. பாதுகாப்பாக கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். அற்ப வீம்புக்கு கத்தியை தூக்கி கோடாரியை தூக்கி கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் ஜெயிலில் வாட நம்மை போல் அயல் நாட்டினர் என்ன முட்டாள்களா?

மேலும் அங்கே இது போன்ற சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ள தீர்த்து வைக்க வழி இருக்கிறது. இங்கே காவல் நிலையத்திற்கு போய்
"அந்த பொண்ணோட நான் தெரியாம தொடர்பு வச்சுகிட்டேன். இப்போ அவ போட்டோ எடுத்து என்ன மிரட்டுறான்னு சொல்லிப்பாருங்க. உங்க நிலைமை அதோ கதி தான்."

எனவே கள்ளக்காதலை இன்னொரு நூறு ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் தவிர்ப்பது நலம். இல்லையேல் பாதுகாப்போடு புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.

என் மனதில் இந்த டாப்பிக் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இப்போ கண்ண கட்டுது. ஆக குட் பை.

டிஸ்கி: இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.

---------------------

அறிமுகங்கள்

1. எனக்கு சத்யராஜ் மிக பிடித்த நடிகர். மிக பிடித்த பேச்சாளர் இல்லை. அவரது நக்கல் நடிப்புக்கு நான் ரசிகன். குறிப்பாக எல்லா வித கேரக்டரும் பொருந்திப்போகிற ஒரு கதாபாத்திரம் அவர். அவரது பெயரில் ஒரு வலைப்பூவா? அதிக பதிவுகள் இல்லாத போதும் இவரது ஆரம்பமே அசத்துகிரது. தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

திரும்பவும் Dr. விஜய்

2.சில முதல்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வதுண்டு. முதல் முத்தம் முதல் காதல் முதல் கன்ட்ராவி இப்படி. ஆனால் இவர் தொகுத்திருப்பது பாடகர்களின் முதல் பாடல்கள். அருமையான இந்த தொகுப்பு வியக்க வைக்கிறது.

பாட்கர்களின் முதல் பாடல்கள்.

3. இந்த பதிவர் ஒரு மாணவி என்று நினைக்கிறேன். இவர் விடுத்த கொலைமிரட்டல் படித்தால் மிரண்டு போய்விடுவீர்கள்.

4.நமீதா திரைவிமர்சனம். ஹாப்பாயில். என்று அதிரடியாக கடையில் அசத்தி வருபவர் கட்ஸ்.

5.மங்குனி அமைச்சரை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபமாக பெண்களின் வாக்குகளை அள்ளும் விதமாக அவர் எழுதிய ஒரு உஷார் பதிவு விழிப்புணர்வு.

6. கிரைம் பிரியரான எனக்கு இவரது துப்பறியும் பதிவுகள் நல்ல தீனி.

அடுத்த பதிவில் சாரு என்ற புதிய பதிவரையும் லக்கிலுக் என்ற கத்துகுட்டியையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.