Saturday, October 23, 2010

எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஞாயம்.

சமீபத்தில் மாஜி எம்.எல்.எ ஒருவர் வருமான வரி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் போதைபொருள் வழக்கும் நிலுவையில் உள்ளதாம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் போலீஸிடமிருந்து தப்பித்து சுதந்திரமாக நடமாடியிருக்கிறார். இதில் உச்சம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டு போலீஸின் பிடியிலிருந்து தப்பித்த ஒரு கைதி தொடர்ந்து எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது தான்.
எம்.எல்.ஏ வின் பென்ஷனை நிறுத்த அரசுக்கு அதிகாரமோ சட்ட வழிமுறையோ இல்லையாம்.

அதே சமயம் ஒரு அரசாங்க ஊழியன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டால் அவரது ஊதியம் பென்ஷன் என்று சகலமும் நிறுத்தப்படுகிறது. உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையின் பெயரில் அவர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதே போல் அரசு துறையில் பணியாற்றும் எவரேனும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்.

என் குடும்ப நண்பர் ஒருவர் அரசு ஊழியர். அதிகாரிக்கு கார் ஓட்டியாக பணியாற்றி வந்தார். ஒரு குடும்ப தகறாரில் இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொலை முயற்சி என்றும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். வழக்கு நிலுவையில் உள்ளது. இன்னும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படவில்லை. அதே சமயம் கைது செய்யப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று வாடகை கார் ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் முன்பே அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தின் சட்ட வழிமுறை வகை செய்கிறது.

ஆனால் ஒரு மாஜி எம்.எல்.ஏ குற்ற வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஒழிய அவரது பென்ஷன் தொகையை நிறுத்தி வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லையாம்.

இது இரட்டை குவளை முறையை விட அப்த்தமானதா இல்லையா?

இனி அறிமுகங்கள்:

கம்ப்யூட்டரில் தண்ணீர் வரவைக்க வேண்டுமா?


சுனாமி பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட். ரோஸ்விக் சென்னை வந்திருந்தபோது சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

ஊர்காசு. பழைய நினைவுகளை கிளறும் கவிதை.

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்


வாத்தியார் சொன்னா கேட்டுக்கணும். இந்த இடுகையின் கடைசி வரி எனக்கு புரியவேயில்லை.


லஞ்சம் வாங்க புது டிப்ஸ் ரெடி. லஞ்சம் வாங்குமுன் குளித்து சுத்தமாக இருப்பது நல்லது. காரணம் மாட்டிக்கொண்டால் ஓரிரு நாள் குளிப்பது கஷ்டம் தான்..


தென்கொச்சி சுவாமிநாதன் இல்லாத குறையை தீர்த்துவைக்கும் இவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. கவிதையே கவசம்.அவரைப்பற்றி இன்று ஒரு தகவல்

11 comments:

  1. இப்புடியும் நடக்குமா..??? இம்முறை அறிமுகமும் பிரயோசனமானவை நன்றிகள்...

    ReplyDelete
  2. புதிய தகவல்கள்!

    ReplyDelete
  3. அன்பின் விசா

    அறிமுகங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகல் விசா - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் விசா

    அறிமுகங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. தங்கள் சொல்லிதான் இந்த தகவலை அறிந்தேன். தாங்கள் சொல்லியபடி இரட்டை குவளை முறையைவிட கேவலமானது இது...நல்ல தகவல்...
    (கம்யூட்டரில் தண்ணீர் வரவழைக்க என்கின்ற எனது பதிவினை இணைத்தமைக்கு நன்றி சீனா சார்...தங்கள் உதவிக்கு நன்றி)
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. சரியா சொன்னீங்க..........

    ReplyDelete
  7. சரியா சொன்னீங்க..........

    ReplyDelete
  8. புருனே நாட்டுல சுல்தான் மட்டும் எந்த வித சட்டத்துக்கும் உட்படமாட்டார் அப்படின்னு படிச்சிருக்கேன். அது போல தான் இது. நம்ம நாட்டு சட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு ஆதாயமா இருக்கறதை மாற்றி அமைச்சாலே பல வகைகள்ல முன்னேறிடும் நாடு. வழக்கம் போல நல்ல கருத்தும், நல்ல தொகுப்பும். தேன்க்ஸ் ண்ணா.

    ReplyDelete
  9. அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  10. அட எனது பதிவும் குறிப்பிடப்பட்டிருக்கே! நன்றி விசா. :-)

    ReplyDelete
  11. சரியான ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க... இங்க சட்டம் பலவிதமா தகுதிக்கு தகுந்த மாதிரிதானே பயன்படுத்தப்படுது... கேவலமா...

    ReplyDelete