Saturday, October 2, 2010

புத்தக மலர்கள்

மனித வாழ்க்கையையே புரட்டி போடும் சக்தி படைத்தவை புத்தகங்கள் என்று நாம் அறிவோம். ஆனால், எல்லா புத்தகங்களையும் நம்மால் வாசிக்க முடிவதில்லை. எல்லா புத்தகங்கள் பற்றியும் நமக்கு தெரிவதில்லை. நமக்கு உதவ வலையுலகில் இருக்கும் சிலரை இன்று பார்ப்போம்.

ஆர்வி தான் வாசிக்கும் புத்தகங்கள் பற்றி எழுதுவதற்காகவே, இவ்வலைப்பூவை தொடங்கியுள்ளார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையை பற்றியும், அதை பற்றிய தனது எண்ணங்களையும், மற்ற எழுத்தாளர்கள் இப்புத்தகத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்றும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஆர்வி.

இன்னும் சிறிது நாட்களில், சுஜாதாவின் மொத்த எழுத்துக்களும் பல்ஹனுமனின் இத்தளத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன். அந்தளவுக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது தவிர, மேலும் பலவித சுவாரஸ்யக்கட்டுரைகளை இவர் சேர்த்து வைத்துள்ளார்.

வாசிப்பின் மேல் தீராத தேடல் கொண்டவர் கார்த்திகைப் பாண்டியன். தேடி தேடி சென்று, புத்தகங்களை வாங்கி வாசிப்பார். வாசிக்கும் புத்தகங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொள்ள மறக்க மாட்டார். எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி” வாசித்து இவர் எழுதிய பதிவு இங்கே.

புத்தகங்கள் வாசிக்கும் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வதற்காகவே, இத்தளத்தை வைத்திருக்கிறார் கிருஷ்ணபிரபு. தமிழ்மகனின் ‘செல்லுலாயிட் சித்திரங்கள்’ புத்தகம் பற்றிய அவருடைய பார்வையை, இப்பதிவில் பதித்துள்ளார்.

நான் வாசிக்க நினைத்து, வாசிக்காத பல புத்தகங்களை வாசித்து, அதை பற்றி தனது தளத்தில் எழுதியிருக்கிறார் பிச்சைக்காரன். பாலகுமாரன் பற்றி பல பதிவுகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சாருவின் ’ஸீரோ டிகிரி’ புத்தகத்தின் விமர்சனம் இங்கே.

பதிப்பாளர் குகன் பல கட்டுரைகளை எழுதுவதோடு, அவ்வப்போது தான் வாசிக்கும் புத்தகங்கள் பற்றியும் எழுதி வருகிறார். புத்தகங்கள் மீதான ஆர்வம், இவரை பதிப்புத்துறை வரை கொண்டு வந்துள்ளது. நிலாரசிகன் எழுதிய ‘ஒரு பட்டாம்பூச்சியின் கனவு’ கவிதை நூலின் மேலான இவருடைய பார்வை இங்கே இருக்கிறது.

வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ வாசித்து, அதன் சாரத்தை இங்கு வடித்துள்ளார் ஷஹி. இது தவிர, மேலும் பல புத்தகங்களை குறித்து இவருடைய தளத்தில் காணலாம்.

சோழ வரலாறைப் பற்றி தான் வாசித்ததை, இங்கு நமக்காக பகிர்ந்திருக்கிறார் பதிவர் ஹரிபாண்டி ரங்கசாமி. சோழர்கள் பற்றி சுருக்கமாக தெரிந்துக்கொள்ள, இப்பதிவு உதவும்.

இந்தியர்கள் ஆடும் உளவியல் ஆட்டத்தை பற்றி கூறும் ஒரு ஆங்கில புத்தகத்தை இப்பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் பத்மகிஷோர். விமர்சனம், இப்புத்தகத்தை வாங்கி வாசிக்க தூண்டும் வண்ணம் இருக்கிறது.

தஞ்சை பிரகாஷ் கதைகள் எனும் கதைத்தொகுப்பை வாங்கி வாசிக்குமாறு இங்கு பரிந்துரை செய்திருக்கிறார் கோபி. எழுத்தாளரை பற்றியும், கதைகளை பற்றியும் சிறப்பாக இப்பதிவில் அறிமுகம் கொடுத்திருக்கிறார்.

புத்தகங்கள் மனிதனுக்கு அறிவையும், மனமுதிர்ச்சியையும் கொடுக்க உதவுபவை. உங்களுக்கு அவற்றை நாடி செல்ல நேரமில்லையென்றாலும், அவற்றின் பலனை கொண்டு வந்து சேர்க்க இவர்களை போன்ற பதிவர்கள் இருக்கிறார்கள்.

நாளை சந்திப்போம்.

6 comments:

  1. நண்பா! இன்னைக்குப் புத்தக மலர்களாலே தொடுக்கப்பட்ட மாலையா? அறிவுப் பசிக்கு அதிகம் அதிகமாகவே விருந்துப் படைச்சிருக்கீங்க. எல்லா பதிவுகளையும் போய் படிக்கணும்னு ஆவலை தூண்டறீங்க. படிச்சிடறேன்.

    வாழ்த்துக்கள் + நன்றிகள் நண்பா!

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  3. அறிமுகங்கள் அனைத்தும் அருமை.அப்பப்பா எத்தனை பதிவுலக பிரபலங்கள்.என் பார்வையை இன்னும் விரிவு படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. இன்றைய கால கட்டத்தில் புத்தகங்கள் வாசிப்பது குறைந்து விட்டது. இணையத்தில் இதுபோன்ற விஷயங்கள் கிடைக்கும்போது அந்த குறை கொஞ்சமாவது தீரும். அறிமுகங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. தஞ்சை பிரகாஷ் - வெகு நாட்களாகத் தேடிவருகிறேன்.. அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி நண்பா..

    ReplyDelete
  6. நன்றி வசந்தகுமார், அன்பரசன், asiya omar, எஸ்.கே., கார்த்திகைப்பாண்டியன்...

    ReplyDelete