Monday, October 4, 2010

நான் யார் தெரியுமா?

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

நான் வித்யா சந்திரசேகரன். Scribblings என்ற வலைத்தளத்தில் கிறுக்கி வருகிறேன். 2006ஆம் ஆண்டு இறுதியில் என் தம்பி சில வலைத்தளங்களின் லிங்க் கொடுத்து படிக்கச் சொன்னான். நீயும் வேணும்னா ஒன்னு எழுதுன்னு சொல்லி உங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டான்:)

2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி இந்தப் பதிவுலக்கு சனிப் பெயர்ச்சி ஏற்பட்டது. ஆசை, ஆர்வம், பொழுதுபோக்கிற்காக பதிவெழுத வந்து மூன்று வருடங்களாகிவிட்டது. அந்தக் கதை இங்கே. இந்த மூன்று வருடங்களில் பதிவுலகம் எனக்கு மறக்க முடியாதப் பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. மனிதர்களை, மனங்களை, சுழல்களை புரிந்துக்கொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது.

முதன் முதலில் யூத்புஃல் விகடனில் என் பதிவு வந்தபோது ஏற்பட்ட சந்தோஷம், சென்ற வாரம் என் தளத்தை அறிமுகம் செய்திருந்த தேவதை இதழைப் பார்த்தபோது இரு மடங்கானது. என் கிறுக்கல்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரமும் ஊக்கமும் உற்சாகத்தை அளிக்கின்றன. இது தான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரையறைகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதுவேன். முக்கால்வாசி பதிவுகள் அனுபவப் பகிர்வுகள்தானென்றாலும், சினிமாவும், மொக்கை போடுவதும் பிடித்தமான விஷயங்கள். சீனா ஐயா என்னை தொடர்பு கொண்டு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்கவியலுமா எனக் கேட்ட போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது. கண்டிப்பா சார்ன்னு சொல்லிட்டாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறல் இருந்துட்டுதான் இருக்கு. என்னதான் பயங்கரமா படிச்சு எக்ஸாம் எழுதினாலும் ரிசல்ட் வர்ற வரைக்கும் ஒரு டென்ஷன் இருக்குமில்லயா. அந்த மாதிரி ஒரு மனநிலையில் இருக்கேன்.

இந்த வாரம் முழுவதும் நோ அழுவாச்சி, நோ கவுஜை, நோ செண்டிமெண்ட், நோ அரசியல், நோ காதல். அப்ப என்னதான் பண்ணப்போறன்னு கேக்கறீங்களா? மொக்கை, சூர மொக்கை, மரணமொக்கை, சிரிக்க வைக்கும் அனுபவப் பகிர்வுகள், ஆட்டம் பாட்டம், சினிமா, அப்படியே போஜன்ம்ன்னு ஒரு மசாலா வாரத்துக்கு தயாராகுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நாளை சந்திப்போம். வர்ட்டா:)

45 comments:

  1. //நான் யார் தெரியுமா?//

    தெரியாதுங்க....கேக்கும் போதே பயம் பயம்மா இருக்கு... உடம்பு எல்லாம் நடுங்குது..

    ஸ்ஸ்ஸ்ப்பா காலங்காத்தல முடியலடா சாமீஈஈஈ :)))))

    //மனிதர்களை, மனங்களை, சுழல்களை புரிந்துக்கொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது.//

    ம்ம்ம்ம் எனக்கும் :(( :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வித்யா !! கலக்குங்க..!! :))

    ReplyDelete
  3. தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. vallthukkal. mokkaigalai padikka kathirukirom

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வித்யா :)

    ReplyDelete
  6. தெரியலையேம்மா.. நீங்க நல்லவரா? கெட்டவரா?
    டொண்டடொண்டட்யிங்......டொண்டடொண்டட்யிங்.. ஃபீல் பண்ணி படிக்கவும்.

    ReplyDelete
  7. நல்வரவு வித்யா.

    நோ கவிதை?

    ஆஹா......சூப்பர்:-)))))

    ReplyDelete
  8. வாழ்த்துகள் வித்யா !!

    ReplyDelete
  9. //நான் யார் தெரியுமா?//

    தெரியாதுங்க....கேக்கும் போதே பயம் பயம்மா இருக்கு... உடம்பு எல்லாம் நடுங்குது..

    ஆமாங்க ஆமாங்க

    வாழ்த்துக்கள் வித்யா

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வித்யா :))

    ReplyDelete
  11. //எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது.//
    நானும் அதில் சொதப்பிருக்கேனே!!

    ஆமா..! வலைச்சரமுன்னா சும்மாவா? ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்க.
    விளாசுங்க.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ரைட்... ஸ்டார்ட் மியூசிக்...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துகள்!! கலக்குங்க!!

    (BTW, உங்க தம்பி இன்னும் வலையில இருக்காரா?) ;-)))

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் வித்யா !! கலக்குங்க..!!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் வலைசர ஆசிரியரே!!!!

    ReplyDelete
  18. மொக்கையா போட்டு எங்களை மீளா சந்தோஷத்தில் ஆழ்த்த போகின்றீர்கள் தெரிந்து விட்டது!!!

    ReplyDelete
  19. //பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது.//

    எல்லாரையும் கரடிங்கன்னு சொன்னதுக்கு கடும் கண்டனங்கள். :))

    இப்படிக்கு
    இன்னோரு கரடி :p

    வாழ்த்துக்கள் வித்யா :))

    ReplyDelete
  20. ஸ்ஸ்ஸ்ப்பா, அடுத்த வாரம் யாருன்னு தெரிஞ்ச இன்னும் டெர்ரர் ஆயிடுவீங்க ஆமா... .ஜாக்கிரதை...

    ReplyDelete
  21. valthukkal

    - m.m.abdulla

    ReplyDelete
  22. valthukkal

    - m.m.abdulla

    ReplyDelete
  23. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விதூஷ்

    ReplyDelete
  24. முதன் முதலில் யூத்புஃல் விகடனில் என் பதிவு வந்தபோது ஏற்பட்ட சந்தோஷம், சென்ற வாரம் என் தளத்தை அறிமுகம் செய்திருந்த தேவதை இதழைப் பார்த்தபோது இரு மடங்கானது

    ரொம்ப சந்தோஷம் மா

    ReplyDelete
  25. நீயும் வேணும்னா ஒன்னு எழுதுன்னு சொல்லி உங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டான்:

    நல்ல மனசு

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் வித்யா :)

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் வித்யா

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் நண்பரே இந்த வார ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக அமைவதற்கு !

    ReplyDelete
  29. வாழ்த்துகள் வித்யா

    ReplyDelete
  30. கலக்குங்க வித்யா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் வித்யா..

    ReplyDelete
  33. கலக்குங்க, வித்யா.
    அடவான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள்.......வாழ்த்துக்கள்.......லேட்டா வந்தாலும்....லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல.....காத்துக்கிட்டிருக்கேன்வித்யா......ஐ லைக் இட்.......காமெடிக்கு இணையேது வித்யா, வாங்க....

    ReplyDelete
  36. அட வித்தியாசமான வித்யா,தொடருங்கள்..

    ReplyDelete
  37. ஆஹா லேட்டா வந்தாலும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கறேன் வித்யா.

    கலக்குங்க

    ReplyDelete
  38. ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  39. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் வித்யா!

    தொடர்ந்து ஒரு கிழமைக்கு கலக்குங்கள்!

    ReplyDelete
  40. வலைச்சரம். இது என்ன? எனக்கு ஒரு cccf கொடுங்களேன் !

    ReplyDelete
  41. வாங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் மேடம்..!!!

    ReplyDelete