Monday, October 11, 2010

யமராஜன் பராக்

என்ன யமன் யாருன்னே தெரியாதா? உங்க பேச்சுக் கா வுட வேண்டியதுதான். என்னை யாருன்னு நினைச்சீங்க? ம்ஹூம்... தெரியும் சேதி.... முதல்ல போயி அதெல்லாம் படிச்சு முடிச்சுட்டு வாங்க. இந்த வாரம் முழுக்க நான் எழுதறதையெல்லாம் பாடம் பண்ணணும். வாரக் கடைசீ நாள்லே பரிட்சை.. சரியா ஒப்பிக்கலை... நங்..நங்... ந...ங்.......னு தலைலே கொட்டி அரை ஆழாக்கு நெத்தம் கொட்ட வச்சுருவேன் ஜ்ஜ்ஜ்ஜாக்கிரதை....

என்று கண்ணாடியை பார்த்து சொல்லிவிட்டு, அப்படியே திரும்பி சும்மா சிவாஜி கணக்கா சிரித்துக் கொண்டே, சிலுப்பிக் கொண்டு, மூக்கு வளைந்து இருக்கும் தங்கக் கலர் ஷூ போட்டுக் கொண்டு நடக்கிறார் யமன்.

ஊஞ்சலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்து இந்த வாரம் முழுக்க உருளப் போகும் தலைகளை எண்ணிக் கொண்டிருந்த யமபத்னி "இஃதென்ன இப்படி கிளம்பிட்டேள்ன்னா?" என்று கேட்டாள்.

"சகதர்மிணி.. யமி" என்று யமன் அழைத்தது ஆயிரம் பூனைகள் ஒரு சேர சிணுங்கியது போல இருந்தது.

அப்படியே போய் யமபத்னியின் காலுக்கு அருகே அமர்ந்து கட்டை விரலுக்கு சொடுக்கு எடுத்தார். "இதோ பார்ரா கண்ணு... இதோ இப்படி போயிட்டு அப்படி வந்துருவேன். சரிய்ய்யா?" என்று லைய்சாய் கெஞ்சினார்.

"அதான் எங்க போறேள்ங்கறேன்?"

"தோ பாரும்மா... நம்ம புள்ளையாண்டான் சித்ரன் இருக்கானோல்யோ.. அவன் தமிழ் ரைம்ஸ் படிக்கற இடத்தில்தான் பிரகலாதனும் ஹிந்தி ரைம்ஸ் படிக்கிறானாம்... அவனுக்கு பிறந்தநாளாம் பாரு... பிள்ளையார் வேற வரானாம். இவனும் போவேன்னு ஒரே அடம்... பேரண்ட்ஸ் க்ளப் ஹால்லதான் மீட்டிங்"

"ம்..." என்று கர்ஜித்தாள் யமி.

"அவன் அப்பா பெரிய பணக்காரன். ஏதோ ஒருவாரத்துக்கு பாட்லக் விருந்து வச்சு இருக்கா.. சிவனார் கூட அவருக்கு ரொம்ப பிடிச்ச கங்கையோட வராராம்... உன் பேரழகுக்கு அங்கல்லாம் போனா கெளரவக் கொரச்சல். அதான் நானே சித்ரனைக் கூட்டிண்டு போயிடலாம்னு...."

"அப்போ இங்க யாரு சமைப்பதாம்.. நவராத்திரி வேற... நேக்கு பட்டுப் பொடவை கட்டிக்கவே நாள் ஆயிடும்" என்று முறைத்தாள் யமி.

"யமி யமி.. ப்ளீஸ்-மா... ஒரு வாரம் தானே... அது வரைக்கும் நீ ஆசைப் பட்டா மாதிரியே கொலைத் தொழிலை நீயே பார்த்துக் கொள்... நான் தலையிடவே மாட்டேன்... சரியா.. நான் அங்கேர்ந்து சாப்பாடு கொண்டுவந்து தினோம் தந்துடறேன்.. டீல் ஓக்கேவா..."

"சரி சரி...எப்டியோ போங்கோ.. ஒரு நாள் வரலேன்னாலும் தொலைச்சுபுடுவேன் தொலைச்சு"

யமன் வாசலை நோக்கி ஓடுகிறார். அங்கே எல்லோரும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...

மூச்சிறைக்க அவர்கள் பின்னாடியே யமனும் ஓடிக்கொண்டே "என்னாச்சு என்னாச்சு? எங்க ஓடறீங்க? அப்போ விருந்துக்கு யாரும் வரப்போறதில்லையா?"

ஒருவர் யமனிடம் மெதுவாக "நாளைக்குள் இடத்தையே காலி பண்ணிடுங்க... உங்களை விடக் கொலைபாதகி ஒருத்தி இங்கே ரவுண்டு கட்டி சாவடி அடிக்கப்போறாளாம்" என்று பொங்கி வரும் கண்ணீரோடு சொன்னார்.

யமன் உடனே "உமக்கென்ன ஓய்.. பேன் இருந்தாக்கூட வழுக்கி விழுந்துரும்... எனக்குத்தான் கஷ்டம்... பிய்த்துக் கொள்ளும்போது வலிக்குமே...?" என்று சலம்பிக் கொண்டே அமர்ந்தார் யமன். கிரீடம் கூட தன்பாட்டுக்கு உருண்டு ஓடிக்கொண்டிருந்தது. தெறித்து ஓடுபவர்களைப் பராக் பார்த்தவாறே "நாளைக்கு என்னவாகுமோ" என்ற கவலையோடு அமர்ந்திருந்தார் யமன்.

Note: I am Traveling....will respond at about 5 PM today

17 comments:

  1. வாழ்த்துகள் விதூஷ். கலக்குங்க.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் விதூஷ். கலக்குங்க.

    ReplyDelete
  3. விதூஷ்... பாசமிகு அண்ணன் எமன் அப்படின்னு நா கூட ஒன்னு எழுதியிருக்கேன்... மக்களின் மேலான கவனத்திருக்கு சுட்டி இங்கே...
    http://mannairvs.blogspot.com/2010/08/blog-post_12.html

    ReplyDelete
  4. வாழ்த்துக்க்ள்
    பகோடா பேப்பர் வித்யா.

    ReplyDelete
  5. ஆஹா............ யம்மி யமி !!!!

    நல்லா ஒரு கலக்குக் கலக்கிட்டுத்தான் போகப்போறீங்க !!!!

    ஜமாய் யமி ஜமாய்:-))))

    ReplyDelete
  6. வரும்போதே பூகம்பம் கிளப்பிகிடு வர்றீங்க.. போகப்போக எப்படி இருக்குமோ... ;-)))

    ReplyDelete
  7. வித்தியாசமாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் விதுஷ்.

    ReplyDelete
  9. வித்தியாசமான அறிமுகம்! வாழ்த்துக்கள்... யமி --- நல்லாருக்கு!!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் விதூஷ்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் விதூஷ்.

    ReplyDelete
  12. வருக விதூஷ்.

    ReplyDelete
  13. அழகான வாய்ப்புக்கு நன்றிகள் சீனா சார்.

    இரண்டு நாள் பயணம் முடிந்து நேற்று மாலைதான் வீடு திரும்பல். வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றிகளும் அன்பும்.

    அன்புடன்
    விதூஷ்

    ReplyDelete
  14. வாங்க, வந்து கலக்குங்க

    ReplyDelete
  15. வாழ்த்துகள் விதூஷ்.

    ReplyDelete