Friday, October 15, 2010

வடை புராணம்

எவ்வளவு பணம் பொருள் அறிவு இருந்தாலும், உணவு என்பது மனிதனுக்கு அடிப்படைத் தேவை. நம் இந்திய உணவு வகைகளைப் போன்ற சமச்சீரான உணவு பழக்க வழக்கங்களை எந்த cuisineகளிலும் கண்டதில்லை.

வடை மாலை சாற்றுதல், விஷேஷங்களுக்கு வடை செய்யுதல், காலை/மாலை சிற்றுண்டிக்கு வேறேதும் இல்லை என்றால் வடை செய்வது சுலபமான மாற்றாக இருக்கிறது .... என்று வடை தென்னிதியர்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் இல்லியோ... கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷ வரலாறு கொண்ட வடை.

கி.பி.920-ஆம் வருஷம் தேதியிடப்பட்ட கன்னட புத்தகமான சிவகோட்யச்சர்ய என்ற நூலில் இட்லி மற்றும் வடை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதன் பிறகான கி.பி.1130-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருத புத்தகமான மானசலோல என்ற புத்தகத்திலும் வடை தயாரித்தல் குறித்த குறிப்பு இருக்கிறது. இடைச்சங்க காலங்களான கி.பி.100-300-ஆம் ஆண்டுகளில் இட்லி-வடை முதற்கொண்டு மீன் வகைகள் வரை சமைத்து உண்டதை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக "தேமல பட்டுவா" என்ற சிங்களத் தமிழர் உருவாக்கிய உணவென்றும் நம்பப்படுகிறது.

வடை போச்சே என்ற வருத்தம் கொள்ளாமல் வடைகளைச் செய்து மனசார உண்டு களித்து, இந்த லிங்க்குகளில் இருக்கும் மற்ற சமையல் குறிப்புக்களையும் சமைத்துப் பார்க்கலாம். நல்ல நல்ல குறிப்புக்கள் உள்ளவை இந்த சமையல் வலைத்தளங்கள்.
முளைகட்டின சன்னா வடை
தவலை வடை
பருப்பு வடை
தயிர் வடை
மெது வடை
கார்த்திகை வடை
காராமணி வடை
உளுந்து வடை


10 comments:

  1. வடை என்றதும் ஓடி வந்தேன்.

    ரெண்டெழுத்து சமாச்சாரங்கள் பல நம் 'விருப்பம்' லிஸ்டில் இருக்குங்க:-)

    ReplyDelete
  2. நன்றி துளசி அம்மா. இன்னும் விரிவாக எழுதனும்னு ஆசைதான். :-( வீடு அலுவலகம் என்று எல்லாப் பக்கமும் வேலைச் சுமை.. :-(

    ReplyDelete
  3. ஆஹா வடையில் இத்தனை வகையா????

    ReplyDelete
  4. புதிய சமையல் தளங்கள்

    நல்ல அறிமுகங்கள்!!!

    ReplyDelete
  5. வடை பிடிக்காதவர்கல் யாரும் கிடையாது, வித்யா வடை புராணம் அருமை.

    ReplyDelete
  6. எனக்கு தெரிந்த தோழிகள் அறிமுகப்படுத்தியதில் சந்தோஷம்.

    ReplyDelete
  7. அன்பின் விதூஷ் வடையில் இத்தனை வகைகளா அத்தனைக்கும் இடுகை அறிமுகங்களா - பலே பலே ! கடும் உழைப்பு போல - நல் வாழ்த்துகள் விதூஷ் நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அன்பின் விதூஷ் வடையில் இத்தனை வகைகளா அத்தனைக்கும் இடுகை அறிமுகங்களா - பலே பலே ! கடும் உழைப்பு போல - நல் வாழ்த்துகள் விதூஷ் நட்புடன் சீனா

    ReplyDelete
  9. நிஜமாக வடை புராணம் அருமை.ஒருசேர ஒரே இடத்தில் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete