வலைசரத்திற்குள் நுழைந்ததுமே வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கும்
முதல்நாளில் தைரியமூட்டிய பாசக்கார பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றின்னு மட்டும் சொல்லிட்டு போய்விடாமல்...
உங்கள் அனைவருக்கும் ஏதாவது அன்பளிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறேன் அது மின்னூலாக கொடுக்கலாம்னு இருக்கிறேன்...
அது எப்போன்னு கேட்கிறீங்களா? ஏழாம்நாள் அதுவரைக்கும் பின் தொடருங்கள்.
மின்னூல் பிடிஎப்(PDF) பைலில் இருப்பதினால் உங்கள் கணினியில் இடம் சேகரித்து வையுங்கள் நான் கொடுக்கப்போகும் மின்னூல் எவ்வளவு தெரியுமா? முன்னூருக்கும் அதிகமானது.
அதெல்லாம் சரி.. அதென்ன இகுளை புரியாத வார்த்தையாக இருக்கிறதேன்னு எனக்கு தோணுவதைப்போல உங்களுக்கும் தோணும். இதற்குதான் நம் கையில எப்பவும் தமிழ் அகராதி வைத்திருக்கனும். இப்பல்லாம் அகராதி பிடித்தவர்கள் என்னைமாதிரி அதிகமாக இருக்காங்க அதனால நீங்களும் அகராதி வைத்துக்கொள்ளுங்கள். இகுளை என்றால் நட்பு என்னைச் சூழ்ந்த நட்புகளை கொஞ்சம் காட்டப்போறேன்.
என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த மைக் மிக்காலியன் என்ற இளைஞனின் முன்னோர்கள் அர்மீனியா நாட்டைச் சார்ந்தவர்கள். இந்த இளைஞன் சிரியாவில் பிறந்து வளர்ந்து அறபு மொழியை பேசினாலும் இல்லத்தில் அர்மீனிய மொழியைத்தான் தாய்மொழியாகப் பேசுகிறான்.
தங்கள் நாட்டின்மீதும் மொழியின் மீதும் அதீத பற்றுடையவர்களாக அர்மீனியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த இளைஞன் சாட்சியாகின்றான்.
அர்மீனியர்களுக்கும் நமது சென்னையின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக படித்தேன்.1772 ல் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயம் சென்னையில் இருக்கிறது.
இந்த செய்தியை மைக் மிக்காலியனிடம் கூறியதும் மிகுந்த சந்தோசமடைந்து என்னைத் தழுவிக் கொண்டான்.
காரணம் புனிதமேரி தேவாலயம் இந்தியாவில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்தியாவில் எங்கு என்று தெரியவில்லை சென்னையில் இருக்கிறது என்ற செய்தி எனக்கு மகிழ்வைத்தருகிறது நான் சென்னைக்கு வருவேன் என்றான். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிச் சொன்னேன்.
வலைப்பதிவர்கள் ஒவ்வொரு கோணத்தில் தங்களின் படைப்புகளை பதிவுசெய்கிறார்கள் ஆனால் ஒரே தளத்தில் எல்லாவிதமான பதிவுகளையும் பதிவிட்டவரின் பெயருடன் பார்க்கவேண்டுமானால் நீடூர்சீசனில் பார்த்துக் கொள்ளலாம்.
வேறுபாடு இல்லாத வேரான மனிதரிவர் என்பதை நேரில் சந்தித்தபோது விளங்கிக்கொண்டேன்.
சிலருக்கு காடுவாவா என்று அழைக்கும் ஆனால் இந்த இளைஞருக்கு இணையதளம் வாவா என்று அழைத்துக் கொண்டிருக்கிறது நம் அகத்திலும் முகபுத்தகத்திலும் இருப்பார் நீர்மைக் கொண்ட நீடூர் முதியவரை நீங்களும் சந்திக்கதான் வேண்டும்.
பூ ஒன்று புயலானது என்று படித்திருக்கிறேன் ஆனால் இந்த பூ ஒன்றல்ல இரண்டு. இது பூங்காவனம் சஞ்சிகையாக மலர்ந்திருக்கிறது. பொருள்ளவில் ஏழைகளாக இருந்தாலும் இலக்கிய உள்ளத்தில் மகாஇராணிகளாய் தமிழ் இவர்களை வாழவைத்திருக்கிறது. முட்களுக்கு மத்தியில் ரோஜாக்களின் ராஜாங்கம் நடத்துகிறார் ரிம்ஸா. காதல் இல்லாத காலம் இல்லை என்று சொல்லுமளவு காதல் இவர்களின் எழுத்துக்களில் மலிந்திருக்கிறது காதலுக்குதடையாயிருக்கும் கடிகாரம் மீது ரிஸ்னா கடும்கோபம் கொண்டிருக்கிறார் சிறுகதைகளும், கவிதைகளும் இவர்களின் வலைகளில் கொட்டிக்கிடக்கின்றன. இவர்களின் முயற்சி வெல்லும்.
நம் உடலை சேதப்படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று உரிமையுடன் கூறுவது நிலாமலர்கள் நண்பர் ராஜாகமால்.
விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர் மனித உடல்களைப் பற்றிய பல தகவல்களை தந்துக் கொண்டிருக்கிறார்.
இவருடைய கவிதைகளில் எதார்த்தமும் ஞானமும் மிளிரும்.
இறக்கவேமாட்டோம்
என்பதுபோல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பதுபோல்
இறக்கும் மனிதர்கள்
என்று வாழ்க்கையின் வழுக்கல்களை கூறுகிறார்.
நிலவுக்கு மலர்சூட்டி அழகுபார்க்கும் இவர் காதல் என்பது கருத்து பறிமாற்றம் அல்ல என்கிறார்.
இவருடைய வலைக்குள் சென்றால் கதை கவிதை கட்டுரை என பல்சுவையும் நாம் பருகலாம்.
ஒரு எழுத்தாளனின் அவதார் என்ற தலைப்பில் சிறுகதையை எழுதிய ஆசிரியர் மட்டுமல்ல திறமையான குறும்பட இயக்குனர். அமீரகப்பதிவர்களின் சுற்றுலாவை குறும்படமாக மாற்றி அதற்கு அண்ணாச்சி அழைக்கிறார் என்று தலைப்பும் வைத்து வெளியீட்டுவிழாவும் செய்தவர். கவிஞரான இவர் சாருகேசி என்று வலைவிரித்திருக்கும் இவர் கீழைராஸா.
குண்டப்பா மண்டப்பா அப்படின்னா என்னப்பா? வேறென்ன நகைச்சுவைதான் கலக்கி இருக்கிறார் நிஜாம் பல்சுவை பக்கங்கள். பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமிக்கவர்.
நாகூர் மண்வாசனையில் 1929 ல் எழுத்துலகில் பிரவேசித்த இஸ்லாமிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜூனைதாபேகத்தின் அறிமுகம் படிக்ககிடைத்தது. அதுமட்டுமின்றி தமிழில் வெளியான முதல் சிறுகதை நாவல்கள் என பலதகவல்களை உள்ளடக்கி இருக்கிறார்.
வலைதளங்களில் இதுபோன்ற அறியாவிசயங்களை அறியமுடிகிறது அதற்காக வேண்டியே இப்படி வலைச்சரத்தில் ஒவ்வொரு பதிவரும் பவனி வருவது வரவேற்கத்தக்கது ஐயா சீனா அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
எனது நண்பர் பரிந்துரைத்த வலை இது சென்று பார்த்தேன் இரு வரிகளில் இதயத்தை துளைக்கும் தோட்டாக்கள்
இது ஈழத்தமிழர்களின்
கண்ணீர்...
நீங்கள் குடைப்பிடித்தே
செல்லுங்கள்.!
என்கிறாள் தமிழினி.
இரண்டாம் நாளை கடந்துவிட்டேன் நாளை ஞானத்தை தொடுவேன்!
எஸ். ராவைத் தவிர எனக்கு எல்லா பூக்களுமே புதிய அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteஅழகிய அறிமுகங்கள்.// நீர்மைக் கொண்ட நீடூர்// பதிவு கண்டு பிரம்மித்தேன்.
ReplyDeleteஅன்பின் கிஸ்மத் - அரிய அழகிய அறிமுகங்கள் - தேடிப் படித்து - சுவைபட இட்ட இடுகை - நல்வாழ்த்துகள் கிஸ்மத் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. தமிழினியின் கவிதை அதிகம் பாதிப்பு தருகிறது :(
ReplyDeleteஅழகாகவும் சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது உங்கள் வலைச்சர பயணம் மேலும் பல ஊர்களைப்(வளைத்தளம்) பற்றிய தகவல்களையும் தாருங்கள்.
ReplyDeleteவித்தியாசமான முறையில் அறிமுகங்கள்.... அருமை.... வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகிய அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் இஸ்மத். பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துகள்.
ReplyDeleteசென்னையில் ஆர்மினியன் தெரு இருப்பதை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.
ReplyDeleteஅநேகமா எல்லாமே புதுசு!!
ReplyDeleteபற்பல புதிய பதிவர்களின் அறிமுகத்தோடு,
ReplyDeleteநீடூர் பெரியவர் அன்பு நீடூர் அலி அவர்கள்
பற்றிய குறிப்பையும் அவர்கள் வலையையும்
இணைப்புக் கொடுத்தது மகிழ்ச்சியளிக்கின்றது.
என்னுடைய நகைச்சுவையையும் அறிமுகப்படுத்தியமைக்கு
நன்றி அண்ணன்!
தொடரும் நல் உள்ளங்கள்
ReplyDeleteகலாநேசன்,
சகோதரி ஸாதிகா,
ஐயா சீனா,
சென்ஷி,
ராஜாகமால்,
சகோதரி சித்ரா,
சே.குமார்,
ஸ்டார்ஜன்,
அரவிந்தன்
ஹுஸேனம்மா,
நிஜாமுதீன்,
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
அழகிய அறிமுகங்கள்...!! :-))
ReplyDelete