Tuesday, November 9, 2010

சுயம்

இந்த வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயாவுக்கும், வரப்போகின்ற நாட்களில் ஆதரவு தரப்போகும் என் பதிவுலக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அறிமுகத்துக்குள் செல்கிறேன்.


என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.  அறிமுகத்தை சீனா ஐயாவே செய்து விட்ட படியால் நேராக (என் பதிவின்)அறிமுகங்களுக்கு செல்கின்றேன்.



என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்த வேளையில் முதலில்  என்னிடமிருந்த புகைப்படங்களைப் பதிவாக்கி முதல் அடியினை எடுத்து வைத்தேன்.  ரொம்ப சுலபமான வழி இதுவாகத்தான் இருக்கக்கூடும்.  புகைப்படங்கள் சிறப்பானவையோ இல்லையோ ஆனால் இந்தப்பதிவு மனதுக்கு நெருக்கமானது.


நெருக்கு நேராக பேசிக்கொள்ளும் போது ஒருவருக்கொருவர் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய இக்காலத்தில் என் நண்பர் ஒருவர் அலைபேசியில் ஒன்று சொல்லப்போக நான் ஒன்று செய்யப்போக என்று இந்தப்பதிவும் எனக்குப் பிடித்தமான ஒன்று.


அங்காடித்தெருவின் பாதிப்பில் எழுதப்பட்ட அனுபவப் பதிவு.  கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என்று நிறைய பேர் சொல்வார்கள்.   எனக்கு அதனுடைய அர்த்தம் நான் இங்கு வேலைப்பார்த்த போதுதான் தெரிந்தது. 


ஓட்டு போடுறது மிக முக்கியமான ஜனநாயகக் கடமை.  பதினெட்டு வயசு பூர்த்தியாகி முதன் முதலா ஓட்டு போடப்போகின்ற ஒருவனோட மனநிலையை கதையாக்கி பார்த்த என்னோட கன்னி முயற்சி  இந்த சிறுகதை.


இப்புடியே போய்க்கிட்டிருந்த பதிவுலகத்துல தீடீர்னு புயலடிச்சது மாதிரி நானும் கவிதை எழுத ஆரம்பித்தது ஒரு விபத்துதான்.  கவிதைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் படிக்கும்போது கிடைக்கும் நிறைவைவிட, நாமே எழுதிப் பார்க்கும் போதும், அதை மற்றவர்கள் பாரட்டும் போதும் கிடைக்கும் உணர்வு  அருமையானது.  மகிழ்ச்சி என்கின்ற தலைப்பில் நான் எழுதிய இந்த கவிதை எனக்குப் பிடித்தமான ஒன்று.

சுயாபுராணம் இத்தோடு முற்றும்.

நாளை முதல் பல நல்ல பதிவுகளையும், புதிய பதிவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்ய எண்ணம் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

சமீர் அகமது.மு

16 comments:

  1. வரவேற்கிறேன் நண்பரே...

    :)

    ReplyDelete
  2. வரவேற்கிறேன் நண்பரே...

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அண்ணா ., நீங்க கலக்குங்க ..!!

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. அன்பின் ஜீவன்பென்னி - அறிமுக - சுய அறிமுகம் - அத்தனையும் பார்த்து, படித்து பின் மறு மொழி இடுகிறேன் - தற்போதைக்கு வெறும் உள்ளேன் ஐயா தான் - சரியா - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. வருக. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சமீர்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சமீர்.... உங்கள் பெயர் காரணம் தந்து இருக்கலாம்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  11. வணக்கம் நண்பா...
    இப்பொழுதுதான் உங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது....
    தொடர்கிறேன் உங்களை... வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  12. நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. வருக! வருக! நட்ச்த்திர வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. ஜீவன்! கலக்குங்க!

    ReplyDelete
  15. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்(கொஞ்சம் லேட்டாயிட்டு) :)

    ReplyDelete