பின்னூட்டங்களின் மூலம் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
நிறங்கள் எத்தனையோ
குணங்களும் அத்தனை.
கலவையின் போது சதவீதத்தின் அடிப்படையில் நிறங்கள் சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட வேறு வேறு நிறங்களையும் குணங்களையும் பெறுவது போலவே நம் பதிவர்களும் அவர்களின் பதிவுகளும். மலைத்துத்தான் போகின்றேன் . வாருங்கள் இன்றைய அறிமுகங்களுக்குச் செல்வோம்.
அகல்விளக்கு பெயரைப்போலவே அவரது எழுத்துக்களும் வாசகனுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியவை. வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். வசனக் கோவில் என்ற சிறுகதையில், அமானுஷ்ய சம்பவங்களின் மூலம் நம்மை பயமுறுத்துகிறார். இவரது கவிதைகளும், கட்டுரைகளும் அழகாகவும் அருமையாவும் இருக்கின்றது.
சிங்கக்குட்டி. கலவையான தளம். கதவைத்திறங்கள் கண்டிப்பாக காற்று வரும் இந்தப் பதிவில் "எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது." அது என்னன்ன தெரிஞ்சுக்க அந்தப் பதிவ படிங்க மற்றும் பழைய கதை புதிய பார்வை இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.
வீரபாண்டியன் இந்திய ஆட்சிப் பணித்துறை இவர் அதிகமா எழுதுவது இல்லையென்றாலும் எழுதிய பதிவுகள் அனைத்தும் நல்லாயிருக்குங்க. ஐஏஎஸ் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றவுடன் தனக்கிருந்த மன நிலையை அழகான வார்த்தைகளால் விவரிச்சிருக்கார்.
ப்ரியமுடன் ரமேஷ் பேருக்கு முன்னாடியே ப்ரியத்த வச்சிருக்கார். சிறுகதைகள், திரைப்படங்களுக்கான விமர்சங்கள் மற்றும் கவிதைகள் என்று படிப்பதற்கு நிறைய இருக்கின்றது. கண்ணீர் துள்ளல் இந்தப் பதிவ நான் ரெகமண்ட் செய்கின்றேன்.
curesure4u இது ஆயுர்வேத மருத்துவத்தளம். ஒருவரே வெவ்வேறு மருத்துவ தலைப்புகளில் நான்கு தளங்களில் எழுதுகின்றார். மூலிகைகள் மற்றும் அதன் புகைப்படங்கள் என்று அறியனவற்றை தொகுத்து அளித்துள்ளார். தன் வேலைப்பளுவிற்கு இடையிலும் தொடர்ந்து இடுக்கைக்கள் எழுதுகின்றார். இது அனைவருக்கு தேவையான பயனுள்ள ஒரு தளம்
அலுவலகப்பணியின் காரணமாக காலையில் பதிவிட முடியவில்லை நண்பர்களே. மீண்டும் நாளை சந்திப்போம்.
இன்னிக்கு கலவைல வந்தவங்க எல்லோரும் எனக்கு தெரிஞ்சவங்கதான் ..
ReplyDeleteபடிச்சிருக்கேன் .. நல்ல கலவை ...
நல்ல கலவை ...
ReplyDeleteநண்பர் ரமெஷை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பாஸ்
ReplyDeleteநல்லதொரு கலவை. அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
இன்றைய கலவையும் அருமை...
ReplyDeleteவீரபாண்டியன் அவர்களைப் பற்றி இன்றுதான் அறிகிறேன்...
நல்ல அறிமுகங்கள்... நன்றி நண்பா... :)
nalla arimugangal nallairukku
ReplyDeleteதம்பி..... இன்றைய அறிமுகங்கள் சூப்பர்......
ReplyDeleteஏண்டா டக்கு டக்குனு....எழுதுறியே.. 5 நிமிசத்துல....எப்டி.. ! சூப்பர்....பா!
இன்றும் அறிமுகங்கள் அருமை..!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி :-))
நல்ல அறிமுகங்கள்
ReplyDeletevariety - நல்ல அறிமுகங்கள்!!!
ReplyDeleteநல்ல தொகுப்பு! அறிமுகங்கள் அருமை!
ReplyDeleteகலவை நல்ல சுவைதான்! நல்லா கலக்கிக் கொடுங்கள்!!
ReplyDelete